Posts

Showing posts with the label Band Baaja Baarat

Band Baaja Baarat

Image
ரொம்ப நாளாகிவிட்டது I hate Luv storyக்கு பிறகு ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி வகை ஃபீல் குட் படம் பார்த்து. ஒரு ஸ்ட்ராங் மைண்டட் பெண்ணுக்கும், இலக்கில்லாமல் அலையும் பையனும் சேர்ந்து ஒரு ”பிஜி”னெஸ் ஆரம்பிக்கிறார்கள். அது என்ன தெரியுமா? வெட்டிங் ப்ளேனர் எனும் திருமண ஏற்பாட்டாளர்கள் தொழில். வெட்டிங் ப்ளானர் என்றதும் நிறைய பேர் உடனே இது அதே பெயரில் வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று கையை தூக்குவது தெரிகிறது. அலோ.. ப்ளீஸ்.. கொஞ்சம் கையை இறக்குங்கள். இது அதில்லை. ஆங்கில படத்தில் வெட்டிங் ப்ளானர் செய்யும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வந்துவிடும். ஆனால் இங்கே வெட்டிங் ப்ளானர் தொழில் செய்யும் இரண்டு பேர் காதலில் விழுகிறார்கள். வேண்டுமானால் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை கதை மாந்தர் செய்யும் தொழில் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரி கதைக்கு வருவோம் 20 வயது ஸ்ருதி ஒரு ஸ்ட்ராங் மைண்ட் கொண்டவள். ஒரு பெரிய வெட்டிங் ப்ளானர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவள். பிட்டு ஷர்மா ஒர் இலக்கில்லாத, இளைஞன். ஒரு கல்யாணத்தில் ஸ்ருதியை பார்த்துவிட்டு, அவளிடம் இம்பரஸ் ஆகி அவளை நூல் விடும் போ...