Posts

Showing posts with the label short film

கொத்து பரோட்டா - 27/07/15

Image
சுஜய் கோஷின் அகல்யா நிறைய பேரின் கண்களை, வியாபாரத்தை திறக்கும் விஷயமாகியிருக்கிறது. நெடு நாளாய் நான் சொல்லிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் மீடியாவைப் பற்றிய ப்ராஜெக்டுகள் அதெல்லாம் நடக்குமா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அட.. ஆமாமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர ராமாயண அகலிகை கதையை மிக சுவாரஸ்யமான திரில்லராய் மாற்றியதோடல்லாமல், ராதிகா ஆப்தேவின் கண்களையும், உடலையும், மிக அழகாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். முடிவை என்னால் முதலிலேயே உணர முடிந்தாலும், அதை சொன்ன விதத்தில் மேக்கிங்கில் அட்டகாஷ். பல புதிய கதவுகள் திறக்கப் பட இருக்கின்றன.

குறும்படம் - Love Chemical

Image
 எந்த ஒரு மொழியும் இல்லாத படம். அருமையான மேக்கிங், சினிமாட்டோகிராபி, ஷாட்ஸ் என்று டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். வாழ்த்துக்கள் சுஜீத் சைன்.

குறும்படம் - ஒரு படம் எடுக்கணும்..

Image
நளனின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. வழக்கம் போல மிக இயல்பான நகைச்சுவை இப்படத்திலும் உண்டு. கருணாவின் இயல்பான நடிப்பும், ரியாக்‌ஷன்களும் இண்ட்ரஸ்டிங். நளனும் இப்படத்தில் நடித்துள்ளார். முதல் படமென்பதால் இருக்கும் அமெச்சூர்தனங்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் சுவாரஸ்யம். சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்

Image
சமீபத்தில் பார்த்த அருமையான குறும்படம் இது. மேக்கிங்கில் ஆகட்டும், டெக்னிக்கலாய் ஆகட்டும் அசத்தியிருந்த படம். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு தேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் போல் மிளிர்கிறது. தேனி முருகனின் நடிப்பும், பின்னணியிசையும், மிக இயல்பாய் மனசுக்குள் பூக்கும் சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். நிச்சயம் ஒரு ஃபீல் குட் குறும்படம். படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்.

குறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.

Image
கொஞம் யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த லிங்க் இது. இனிது இனிது ஆதித் நடித்திருந்தார். எனக்கு இவரின் நடிப்பு பிடிக்கும். விஜய் டிவியில் காதலர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பப்பட்ட குறும்படம். சின்னச்சின்ன நிகழ்வுகளுடன், தெரிந்த விஷயமானாலும் சுவாரஸ்யமாய் சொல்லியிருந்தார்கள். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயத்தின் எக்ஸிக்யூஷன் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். அல்லது விஜய் டிவியின் ஸ்லாட்டுக்காக கொஞ்சம் இழுத்து சொல்ல முயற்சித்திருப்பதாகக் கூட இருக்கலாம். அதனால் காதலிக்கும் அவனுக்குமான ஊடல் காட்சிகளில் ரப்பர் ஆகியிருக்கிறதை தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் சுவாரஸ்யமான குறும்படம். http://www.youtube.com/watch?v=o9akj7ku-Lw&feature=related http://www.youtube.com/watch?v=-lbvQ1q9S3w&feature=fvwrel சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம் - முண்டாசுப்பட்டி

Image
திருப்பூர் ராம் என்கிற இளைஞரை முதலில் பார்த்த போது எதுவும் பேசமலேயிருந்தார். பின்பு இரண்டே இரண்டு நடிகர்களை வைத்து பின்னணியெல்லாம் 2டியில் வரைந்து ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். சின்ன நாட் தான் ஆனால் சுவாரஸ்யமான, நுணுக்கமான 2டி வரைகலையில் அசத்தியிருந்தார். அதன் பின்பு சில கதைகளை பற்றி போனில் பேசுவார். இவரின் கலைஞர் டிவி பயணம் மிக அருமையாய் ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேறிக் கொண்டே வந்தது. அதில் உச்சம் என இந்த குறும்படத்தை சொல்ல முடியும். 1980 நடக்கும் கதை. ஃபீரியட் குறும்படம். அதிலும் வழக்கமாய் நகைச்சுவை என டயலாக்கால் கொல்லாமல், சின்னச் சின்ன  பாடிலேங்குவேஜில், முக்கியமாய் நடிகர் ஒருவரை தங்களுடய பொணம் மாடலாய் மாற்ற, ஒரு சின்ன பிஜிஎம்மில் காட்டும் மாண்டேஜுகள் அட்டகாசம். இவர் எடுத்த படங்களிலே இந்த முண்டாசுப்பட்டி முதன்மையான படம். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு. இப்படத்தின் ஒளிப்பதிவு முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.

குறும்படம் - The Plot

Image
The Plot. தமிழ் குறும்படம் தான். அஸ்வின் ஷரவணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படம் கருத்தளவில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எனும் பழிவாங்கும் கதையாய் இருந்தாலும், ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும், பின்னணியிசையிலும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள். உங்கள் பார்வைக்கு... சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம் – மிட்டாய் வீடு

Image
இப்படமும் ஏற்கனவே கொத்து பரோட்டாவில் அறிமுகப்படுத்தியதுதான். நாளைய இயக்குனர் முதல் பகுதியில் பைனலில் கலந்து கொண்ட படம். பாலாஜியிடம் ஒரு ப்ள்ஸ் என்னவென்றால்  அவரின் திரைக்கதைகள் பெரும்பாலும் கொஞ்சம் க்ளாஸாக, நகைச்சுவை ஊடுருவியபடி இருக்கும் அதில் இப்படமும் தவறவில்லை. அதற்கு அந்த ஓப்பனிங் சீனே சாட்சி. அருமையான கான்செப்ட். க்யூட் எண்ட். நிச்சயம் எல்லோரும் பார்த்து என்ஜாய் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

குறும்படம்- போஸ்டர்

Image
கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம்- கானல் நீர்

Image
ஏற்கனவே நான் கொத்து பரோட்டாவில் போட்டதுதான். சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டப் படம்.  ரொம்ப சிம்பிளான நேரேஷன். பிரிட்டோவின் மனதை வருடும் பின்னணியிசை. சாய்குமாரின் மிகையில்லாத நச் ஒளிப்பதிவு. ரெஜினா, அதித்யாவின் நல்ல நடிப்பு. இயல்பான வசனங்கள் என்று மனதை கொள்ளை கொள்ளும் இந்த சிம்பிள் லவ் ஸ்டோரியை ரம்யா இயக்கியிருக்கிறார். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்

Image
அப்துல்லா சிவா டேனியல். நான் சிறுகதையாய் எழுதி கல்கியில் வெளிவந்தது. பின்பு மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலும் வெளியானது. அதை குறும்படமாய் தன்னுடய கால் இறுதி போட்டிக்கு எடுக்க கேட்டார் ரவிக்குமார். சிறுகதையை திரைக்கதையாய் மாற்றி எழுதிக் கொடுத்தேன். மிக அருமையாய் படமாக்கி கால் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவி. உங்கள் பார்வைக்காக.