Posts

Showing posts with the label பெட்ரோல்

20 தேதி போராட்டம்

Image
இருபதாம் தேதி முதல் எல்லா பெட்ரோல் பங்குகளும் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். இவர்களுடய கமிஷன் தொகையான   ஏற்றி கொடுக்க வேண்டும் என்றும், புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதிக்க கூடாதென்றும் பெட்ரோல் பங்க் வைத்திருப்போர் சங்கம் முடிவெடுத்து, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்லா பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களிலும், கொள்முதலும், விற்பனையையும் நிறுத்தி வைக்கப் போகிறார்கள். இவர்களுடய கோரிக்கைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் அது பொது மக்களை பாதிக்கும் என்று இருக்கும் போது அதற்கான எதிர்விளைவுகளை யோசித்து இவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் இல்லையென்றால் எவ்வளவு விஷயங்கள் பாதிக்கும். ஒரே நாளில் எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும், பொது மக்களுக்கு எவ்வளவு விதமான கஷ்டங்கள். சக்கரம் கட்டி சுழலும் காலத்தில் மொபிலிட்டி என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போராட்டம் இந்தியாவின் மொபிலிட்டியை முடக்கும் விஷயமாகவே தெரிகிறது. நமது மத்திய அரசும், இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ...