Posts

Showing posts with the label அம்மா உணவகம்.

கொத்து பரோட்டா -16/12/13

Image
தொட்டால் தொடரும் வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்”  டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு   https://www.facebook.com/ThottalThodarum  ,  https://twitter.com/thottalthodarum   @@@@@@@@@@@@@@@@@@@@@@ ...

கொத்து பரோட்டா-24/06/13

Image
விலையில்லா பொருட்களில் ஆரம்பித்து, மலிவு விலையில் உணவகம் தந்த வெற்றி, மேலும் அம்மாவை அம்மா வாட்டர், அம்மா காய்கறிக்கடை என்று ஆரம்பிக்க வைத்திருக்கிறது. வெளியே விற்கும் பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்படும் மக்களை காப்பாற்றவே இந்த முயற்சி என்று உட்டாலக்கடி அடித்தாலும், அரசின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் விலைவாசி உயர்கிறது என்றால் அதை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில ஆட்சியாளர்கள் தான் செய்ய முடியும். ஆனால் அதை விடுத்து, அரசே அதற்கு மானியம் கொடுத்து மானிய விலையில் கடை விரிக்கிறேன் என்று ஆரம்பிப்பது சரியான வழியாய் தெரியவில்லை. பத்து ரூபாய்க்கு  தண்ணீர் பாட்டில் என்று இன்றைக்கு அறிவித்தாலும், பிற்காலத்தில் அதே தண்ணீரை பிரிட்ஜில் வைத்து மேலு ஐந்து ரூபாய் வாங்கத்தான் போகிறார்கள் அதை நாமும் கேட்காமல் வாங்கிக் கொண்டுதான் வருவோம். நிச்சயம் மற்ற வாட்டர் கம்பெனிக்காரர்களின் லாபியிங்கை அரசு தடுக்க முடியாது. அல்லது முயற்சிக்காது. ஒரு வேளை பஸ் ஸ்டாண்டுகளில் அரசு அம்மா தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் விற்ககூடாது என்கிற மோனோபாலி விஷயத்தை அமல்படுத்தினால் ஓகே ஆகலாம். இது வரை அம்மா ...

சாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்

Image
  செய்தித்தாள்களில், சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும் ஒர் விஷயம் அம்மா உணவகம். ஊருல இருக்கிற கையேந்திபவனையெல்லாம் எழுதுற நீ ஏன் இதை பத்தி எழுதலை? நீ திமுகவின் அல்லக்கை என்றெல்லாம் கூப்பிட்டு சில பேர் கேட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சாப்பாட்டிற்கு இடம் பிடிப்பதற்காக க்யூவில் நிற்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால் கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.