மதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.
இந்த வார்த்தையை ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்கட்சி இவர்களைத் தவிர எல்லோரும் அவ்வப்போது எடுக்கும் ஆயுதம். பெரும்பாலும் அதை ஆயுதமாய் உபயோகிக்காமல் அந்த வாரத்தை கழிப்பதற்காகவும், பத்திரிக்கைகளில் தங்கள் பெயர் அடிபடவும் தான் இதை உபயோகிப்பார்கள். முக்கியமாய் டாக்டர் அய்யா இந்தப் பதத்தை அடிக்கடி உபயோகிப்பார். ஆனால் இவரது மாநாடு நடக்கும் ஏரியாக்களில் அன்றைய தினம் அருகில் இருக்கும் டாஸ்மாக்குகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு குடித்து கும்மாளமிட்டு விட்டுச் செல்பவர்களும் இவர்கள்தான். டாக்டரும் அவ்வப்போது கடைக்கு பூட்டு போடப் போகிறேன், போராட்டம் நடத்தப் போகிறேன் என்று வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை விட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறாரே தவிர தீயாய் வேலை செய்வார் என்று பார்த்தால் அப்படி ஏதும் நடக்க மாட்டேன் என்கிறது. சுமார் பதினாராயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாய் கொடுக்கும் தொழிலை எந்த ஒரு அரசாங்கமும் இழக்க விரும்பாது, அரசுக்கு நிலையான வருமானம் என்பது இத்தொழிலினால் மட்டுமே வரும் பட்சத்தில், இப்பணம் அவர்களின் இலவச, விலையில்லா அயிட்டங்களுக்கு உபயோகப்படுவதுமாய் இருக்கும் காலத்தில் ...