Posts

Showing posts with the label tamil film reveiw

விடியும் முன்

Image
  ரொம்ப நாளாகிவிட்டது இப்படி ஒர் கிரிப்பிங் திரில்லரைப் பார்த்து.  நான்கு பேர்கள், மூன்று காரணங்கள், இரண்டு பேர், ஒரு நாள் என்ற கேப்ஷனே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு ட்ரைலர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிக்கையாளர் காட்சி போட்ட தைரியம் வேறு என்னுள் இருந்த ஆர்வத்தை மேலெழுப்ப.. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்றிரவு கிளம்பிவிட்டேன். 

தீயா வேலை செய்யணும் குமாரு!!

Image
காதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட  குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது.  அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

குட்டிப்புலி

Image
  பக்கத்தூர்காரைங்க மேட்டு தெரு பொம்பளைகிட்ட வம்பு பண்ணான்னு சசிகுமார் அப்பாரு ஊடு பூகுந்து அவனை வெட்டுறாரு. வெட்டிட்டு தப்பிக்கையில மாட்டிகிறாரு. மாட்டினா முவம் தெரிஞ்சிரும்னு கூட வந்தவுக கிட்ட சொல்லி தலைய வெட்டி கொல்ல சொல்லி சாமியா ஊருக்குள்ள இருக்காரு. அப்பாரு மாரியே புள்ளையும் வளரக்கூடாதுன்னு வழக்கமா இந்த மேரி வேஷத்துக்குன்னே பொறப்பெடுத்திருக்கிற என்னைப் பெத்த தாயி சரண்யா நினைக்குது. பொறவு என்ன ஆவும்? அதும் மதுரை பக்கப் படம். வெட்டிக்கு சரக்கடிச்சிட்டு, லந்து பண்ணிட்டு திரிஞ்சிட்டு, ரவுடித்தனம் பண்ணாம அப்புறம் என்ன மதுரைப்படம். அதையேத்தேன் செய்யுறாரு நம்ம சசிகுமாரு. என்னதேன் ரெளடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சாலும் அவர் எம்.சி.ஆர் மாதிரி, நல்லதுக்குத்தேன் திருடுவாரு, பொம்பளைப்புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. நியாயத்துக்குத்தான் அடிப்பாரு. அவருக்கு ஒரு கண்ணாலத்தை செஞ்சி பாத்திரமுன்னு ஆத்தாகாரி தலையால தண்ணி குடிக்கிறா மவன் வேணாங்குறான். என்னடான்னா.. நான் தெனம் ரவுடித்தனம் செஞ்சிட்டு திரியறவன் நாளை பின்ன எனக்கெதாவது ஒண்ணுன்னா என் ஆத்தாகாரி மாதிரி என் பொண்டாட்டி அழுவக் கூடாதுங்...

கெளரவம்

Image
 கெளரவக் கொலைகள் அதிலும் காதலுக்காக செய்யப்படும் கொலைகள் புதிதல்ல. ஜாதி எனும் அழுக்கு மனித மனங்களில் படர ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறது. தீண்டாமை ஒழிப்பு, அது இது என்று ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் தீண்டாமையும், ஜாதியும்  இந்தக் காலத்திலும் ஒழியாமல் இருக்கிறது என்பதை எந்த ஊர், எந்த மாநிலம் என்று சொல்லாமல் கதை சொல்லியிருக்கிறார்கள்.ஊரின் பணக்கார வீட்டுப் பெண் அவ்வூரில் காலனியில் இருக்கும் இன்ஜினியர் பையனுடன் ஓடிப் போய்விட, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பையனின் கல்லூரித் தோழனான சிரிஷ் கண்டறிய முற்படுவதுதான் கதை.

சேட்டை

Image
 ரெண்டு வருடங்களுக்கு முன் ஹிந்தி திரையுலகின் கல்ட் ஹிட் படமான “டெல்லி பெல்லி”யின் தமிழாக்க முயற்சிதான் இந்த சேட்டை. மிக சிம்பிளான கதைதான். ஹன்சிகா ஒரு  ஏர்ஹோஸ்டஸ். தன் தோழிக்கு உதவுவதற்காக வைரம் கடத்தும் ரஷ்யனுக்கு அவனைப் பற்றி தெரியாமல் அவனிடமிருந்து ஒர் பார்சலைலை வாங்கிக் கொண்டு டெலிவரி செய்ய ஒப்புக் கொள்கிறாள். அந்த பார்சலை தன் பாய் ப்ரெண்ட் ஆர்யாவிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்க்க அழைக்கிறாள் அவர்களது திருமண நிச்சயதார்த்த விஷயமாய் பேச. அந்த பார்சலை தன் ரூம் மேட்டான நக்கி சந்தானத்திடம் கொடுத்து  விடச் சொல்ல, அவன் ரோட்டோரம் விற்கும், கண்ட இடத்தில் சொறிந்து விட்டு கொடுக்கும் இலியானா சிக்கனை சாப்பிட்டு விட்டு வயிறு ப்ரச்சனையாகி வீட்டில் கழிந்து கொண்டிருக்கிறான். தன் காதலி வேறு வெளிநாட்டில் செட்டிலான ஒருவரோடு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வரும் பிரேம்ஜியிடம் தனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போனேன் புட் பாய்சன் ஆகிவிட்டது என்று சொல்லி, போகிற வழியில் labபில் தன் ஸ்டூல் டெஸ்ட செய்வதற்கான ச...

சென்னையில் ஒரு நாள்

Image
 ஹிதேந்திரன் எனும் சிறுவனின் உடலுறுப்புகளை ஒரு ஆஸ்பிட்டலிருந்து இன்னொரு ஆஸ்பிட்டலுக்கு துரித கதியில் யாரும் யோசிக்காத நேரத்தில் ஒர் போலீஸ்வேனில் கொண்டு வந்தார்கள்.  உயிருக்கு போராடிய இன்னொரு  உடலில் மாற்று இருதயம் பொறுத்தி உடல் உறுப்பு தானத்தை இன்று பாமரரும் யோசிக்கும் படியாய் செய்த ஒர் விஷயத்தை, மலையாள திரையுலகத்தினர் சில வருடங்களுக்கு முன் அதை அடிப்படையாய் வைத்து ஒர் அழகான, படத்தை எடுத்தனர். அதை தமிழில் எடுப்பதற்காக ராடன் டிவி நிறுவனம் வாங்கி இங்கே தயாரித்திருக்கிறது. வழக்கம் போல மாற்றான் தோட்டத்தில் மணந்தால் தான் நமக்கு தெரியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.

கண் பேசும் வார்த்தைகள்

Image
ஊரில் வெட்டிக்கு சுற்றிக் கொண்டிருக்கும் செந்தில் உருப்படுவதற்காக வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் அவர் எப்படியாவது அந்த ஊர் சிட்டிசன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். ஈஸியாய் சிட்டிசன் ஆக வேண்டும் என்றால் சிட்டிசனான பெண்ணை திருமணம் செய்தால் முடியும் என்பதால் சிட்டிசன் என்று பொய் சொல்லிய இனியாவை தொடர்கிறார். காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது. இன்னொரு பக்கம் இனியாவின் மாமா அவளை இரண்டாவது திருமணம் செய்யச் சொல்லி செய்யும் பயமுறுத்தல்கள். அதுவும் ஊரிலிருந்து. பின்பு என்ன ஆனது எனபது கதை.

பரதேசி

Image
  பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாய் பாலா இலக்கியவாதிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இம்முறை நாஞ்சில் நாடன்.

சில்லுனு ஒர் சந்திப்பு

Image
 விமலுக்கும் ஓவியாவுக்கும் பள்ளியிலேயே காதல். வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள விழைகிறார்கள். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விமல் அமெரிக்காவிலிருந்து வருவதாய் காட்டுகிறார்கள். அங்கே ஓவியா என்றொரு ஜீவனைப் பற்றி ஏதும் சொல்லப்படவேயில்லை. என்னடா இது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தீபாஷாவின் மேல் காதல் கொள்கிறார். இருவர் வீடும் இவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறது. அடக்கமான, கலாச்சார காவலராய் வளர்ந்திருக்கும் தீபாஷாவுக்கு விமலின் ஸ்கூல் காதல் பற்றி தெரிய வர, இருவரும் பிரிகிறார்கள். பிரிவுக்கு பிறகு ஒரு நாள் ஓவியாவை சந்திக்க, என்னவானது என்பதுதான் கதை.

வனயுத்தம்

Image
வீரப்பனின் கூட்டாளிகளுக்கு கருணை மனு நிராகரித்த நேரத்தில் படம் வெளிவந்திருப்பது ஒரு விதத்தில் படத்திற்கு பப்ளிசிட்டியாக அமைய வாய்ப்பிருக்கிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படம் தான் இந்த வனயுத்தம்.

விஸ்வரூபம்

Image
சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam  என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.