உத்தம வில்லன்
SPOILERS AHEAD - கேபிள் சங்கர் இன்னும் சில மாதங்களில் மூளைக் கட்டியால் சாகப் போகும் சூப்பர் ஸ்டாரான ஹீரோ. தன்னுடய கடைசி படமாய் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் ஒர் படம் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறார். அவர்கள் படமாய் எடுக்கும் கதையின் நாயகன் உத்தமன், சாகாவரம் பெற்றவன். என்ன ஒரு ஐரணி. நிஜ வாழ்க்கையில் ஹீரோவை ஹீரோவாக மட்டுமே பார்க்கும் மக்களுக்கு அதன் பின் அவனது வாழ்க்கை, அவன் கடந்து வந்த துரோகங்கள், காதல், பாசம், காமம், வன்மம் என முடிக்க வேண்டிய கணக்குள் ஏராளம் நிஜ வாழ்வில் யாரோ ஒருத்தருக்கு வில்லனாய்த்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் திரையில் வரும் கதையில் உத்தமனாய் ஹீரோயிச வேலை காமெடியாய்.