Posts

Showing posts from January, 2025

பிச்சம்மை மெஸ்- நுங்கம்பாக்கம்.

 வழக்கமாய் காதர் நவாஸ் கான் ரோட்டில் இந்த பெயரில் எல்லாம் கடை திறக்கவே மாட்டார்கள். ஏகப்பட்ட குண்டு குழி ரோட்டாகிப் போனதாலோ என்னவோ இப்படியான ஒரு கடைக்கு வழி விட்டிருக்கிறார்கள் போல. 599 ரூபாய்க்கு அன்லிமிடெட் நான் வெஜ் சாப்பாடு என்று கேள்விப் பட்டதிலிருந்து ரொம்ப நாளாக போக ஆசை. கடை திறந்தே ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது என்பது வேறு விஷயம்.  சரி.. கடை முதல் மாடியில் இருந்தது. உள்ளே நுழைந்த மாத்திரத்தில் மசாலாவின் மணம் நாசியில் ஏறி பசியை தூண்டியது.  வெஜ்ஜா நான் வெஜ்ஜா சார் என்றார்கள். யாரைப் பார்த்து என்ன கேக்குறே? என்று அவர்களை ஒரு பார்வை பார்த்தேன். சாருக்கு ஒரு நான் வெஜ் என்று இலை போட ஆரம்பித்தார்கள். நல்ல தலை வாழை இலையில் ஒரு கப்பில் இளநீர் பாயசத்துடன் ஆரம்பித்தார்கள். அடுத்தது மட்டன் சுக்கா. நன்கு வெந்த மட்டன் துண்டுகளோடு கெட்டிக் குழம்போடு இருந்தது சுக்கா. வாயில் வைத்தால் அத்தனை இலகுவாய் ஒரு மட்டன் உள்ளே சென்றது. காரம் மணம், சுவை எல்லாமே செம்ம. அடுத்ததாய் பெப்பர் சிக்கனை வைத்தார்கள். பெப்பரின் காரத்தோடு மட்டும் இல்லாமல் டிரையாவும் இருந்தது. நல்ல சதைப்பற்றுள்ள கோழி போல....