Posts

Showing posts with the label விஜய்

கொத்து பரோட்டா - 18/04/16

Image
தெறி படத்தை பாலிமர் டிவி ஓனர் சென்னையிலிருந்து திருட்டி விடியோ எடுக்கச் சொன்னதாக சொல்லி கோவையில் ஒரு தியேட்டரில் அவர்களது கேமராமேன் படமெடுத்ததாகவும், அதை ரசிகர்கள் கையும் களவுமாய் பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்ததாகவும், இது போல பல வருடங்களாய் பாலிமர் சேனல் செய்து கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார் தாணு. அதை சன் நியூஸ் தொலைக்காட்சி ம்ட்டும் மறுக்கா.. மறுக்கா ஒளிபரப்பியது. வெளியே விசாரித்த போது அவர்கள் தியேட்டர்களில் அரசு அனுமதித்த விலைக்கு மேலே விற்றதை வீடியோ எடுக்க போனதால் நடந்த பிரச்சனை என்றும். பொய்க் குற்றச்சாட்டில் போலீஸார் வீடியோ கேமராவை செக் செய்த போது அதில் படம் ஏதும் இல்லையென்றும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மீடியாவும் பெரிது படுத்தவேயில்லை. ஆனால் சமீபகாலமாய் பாலிமர் டிவி வளர்ச்சி சன் டிவியின் கண்களை உறுத்த, அவர்களை மட்டம் தட்ட செய்த சூழ்ச்சியாகவே தெரிகிறது. இதற்கு பலி கடா தயாரிப்பாளர் தாணு. உடந்தை தயாரிப்பாளர் சங்கம். எவனாச்சும் கையில கேமரா வச்சிட்டு பப்ளிக்கா திருட்டு வீடியோ எடுப்பாங்களா யுவர் ஆனர்.? திரும்பத் திரும்பச் சொன்னா பொய் உண்மையாகிருமா.. இன்னுமா ...

துப்பாக்கி

Image
முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது  உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது. 

வேலாயுதம்

Image
தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.

காவலன்

Image
அன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு,   வழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாப...