Thottal Thodarum

Jan 18, 2011

காவலன்

kavalan அன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு,  
வழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாபம் பார்க்கலாம் என்று நினைத்ததில், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அவரது எண்ணத்தில் மண்ணைக் கொட்டினார்கள். ஏற்கனவே அவருக்கு இருந்த ட்ராக் ரெக்கார்டினால் மேலும் பல ப்ரச்சனைகள் வர, உடனடியாய் ஆளுங்கட்சி மீது தன்னை அழிப்பதற்காக செய்யும் சதி என்று அறிக்கை விட, படத்தின் திரைக்கதையை விட சுவாரஸ்யமாய் யோசித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்கரும், மதுரை அன்பும் என்ன செய்தார்கள், எவ்வளவு முனைப்பெடுத்து விநியோகம் செய்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும். இவ்வளவு பிரச்சனையே இல்லாமல் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு பேசியிருந்தாலே முடிந்திருக்கும். எல்லாவற்றிலும் ரஜினியை பாலோ செய்யும் நீங்கள் ஏன் இதில் மட்டும்?. செய்யும் தொழிலிலேயே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாதவரான நீங்கள் எங்கு அரசியல் கட்சி ஆரம்பித்து பொட்டியை திறப்பது?. வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் லாபமோ, நஷ்டமோ இருக்கத்தான் செய்யும் என்ற போது இவர்கள் கேட்பது ஞாயம் இல்லைதான் என்பது உ.கை.நெ. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுமூகமான தொழில் முறையில் இருக்க இம்மாதிரியான காம்ப்ரமைஸுக்கு வரத்தான் வேண்டும். ஹேராமிற்கு கமல், இருவருக்கு மணிரத்னம், பாபாவுக்கு ரஜினி என்று நீடிக்கும் லிஸ்ட் வந்து கொண்டேயிருக்கும். சரி விடுங்கள் படத்திற்கு வருவோம்.
kaval-vijay-asin-140 மீண்டும் ஒரு க்யூட்டான, இளமை துள்ளும் விஜய்யை காண வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி. அதிலும் காது கிழியும் “டாய்..டாய்” என்பது போன்ற காட்டுக் கத்தல்கள் இல்லாமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

உலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது உங்கள் படம் மூலமாகவே மீண்டும் தெரியும் போது என்ன மாதிரி உணர்வை எனக்கு கொடுத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. ஏற்கனவே குச் குச் ஹோதா ஹே என்ற படத்தின் கதையை.. கொஞ்சம் அங்கு இங்கு மாற்றி, மலையாளத்தில் பாடிகார்டாகி, மீண்டும் அதை நமக்கு தமிழில் பார்க்கும் போது, பேசாம ஒழுங்கா இந்தி ரீமேக்காகவே இருந்திருக்கலாமோன்னு தோணுதுங்கண்ணா.. உங்களுக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்திருக்கும்.

ஆரம்பக்காட்சியில் சம்மந்தமேயில்லாமல்  பாங்காக்கில் அறிமுகமாகும் சண்டைக்காட்சி உங்களது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும். ராஜ் கிரண் பெயர் வைத்த பிள்ளை என்பதற்கு ஒரு கிளைக்கதை வேறு சொல்கிறார்கள். அவருக்கு பாடிகார்டாய் போவதற்கு போலீஸ் ப்ரொடெக்‌ஷன் தேவைப்படும் அளவுக்கு என்ன செய்கிறார் என்ற விளக்கமேயில்லை. கோயில் திருவிழாவில் ஹைஸ்பீடில் நடந்துவருவதை தவிர வேறேதும் முக்கியமாய் செய்ததாய் நினைவில்லை. அவ்வளவு பெரிய ஆள் யார் என்ன என்பதை கூட கேட்காமல் ஒருவனை வேலைக்கு வைப்பதா? என்று கேள்விகளும் எழத்தான் செய்கிறது.

kaval-vijay-asin-188
படத்தின் முக்கிய ஆதாரமே காதல்தான். அப்படியிருக்க, அசினுக்கு உங்கள் மேல் காதல் வருவதுகூட ஒருவிதத்தில் ஓகேதான். வழக்கமாய் உங்கள் சுறாவில் தமன்னாவுக்கு உங்கள் மேல் காதல் வரும் காட்சியை விட இது எவ்வளவோ லாஜிக்கல். சரி அதை விடுங்கள். ஆனால் உங்களுக்கு அசினின் மேல் மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருக்கிறது. காதல் எங்கேயும் இல்லை. நீங்கள் காதலிப்பதோ அம்முக்குட்டி என்கிற போன் பெண்ணை, க்ளைமாக்ஸில் சொல்லும் போது கூட எனக்கு அசின் மீது அம்மாதிரியான எண்ணமே வந்ததில்லை என்று டயலாக் வேறு பேசுகிறீர்கள். அப்படியிருக்க.. படம் பார்க்கும் ரசிகனுக்கு எப்படி நீங்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆவலுடன் காத்திருப்பான்?. குச் குச் ஹோதாஹேவில் ஒரு அழகான கதை ஒன்றிருக்கும் இந்த கேரக்டர்களிடையே..

சாதரணமாக மசாலா படங்களிலேயே நடித்து பழக்கமாகி போயிருந்ததால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவறான கணிப்புங்கண்ணா.. மசாலா படங்களுக்கு ஓகே.. ரொமாண்டிக்கான காதல் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் மேஜிக்காவது இருக்கணும். இதில் ரெண்டும் மிஸ்சிங். காதலர்களுடய எமோஷன் ஏறாமல் யார் நடித்தாலும் ரசிகன் பார்க்க மாட்டான். உங்கள் காதலை அவன் காதலாக உள்ளுக்குள் ஏறினால் மட்டுமே உங்கள் காதல் ஜெயிக்க, அவனும் கதைக்குள் அலைவான். அந்த வகையில் பெரிய லெட் டவுன் தான்.

ரொமாண்டிக்கான படங்களுக்கு இன்னொரு  முக்கியமான விஷயம். இசை. அது இந்த படத்தில் மிஸ்ஸிங். ஒரே ஒரு பாடலான யாரது யாரது க்யூட் மெலடி. மற்ற பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வழக்கமாய் உங்கள் படங்களில் குத்து பாடல் போன்ற நடனப்பாடலான ஸ்டெப்..ஸ்டெப் பாடல் உங்களின் நடனத்துக்காக பார்க்கலாமே தவிர.. வேறொன்றும் ஸ்பெஷலாக இல்லை.

kaval-vijay-asin-220
படத்தில் நான் மிகவும் ரசித்தது உங்களது நடிப்பை. முக்கியமாய் காதல் வயப்பட்டு, அல்லாடும் போது கண்களில் ஒரு பளபளவோடு காட்டும் ரியாக்‌ஷன்களிலும், பாடி லேங்குவேஜில் இருக்கும் லேசான துள்ளலும் அட.. எங்கே போயிருந்தீஙக்ண்ணா என்று கேட்கத் தூண்டுகிறது. நிச்சயம். ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். இம்மாதிரியான கதை சொல்லும் படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்களே அதுக்காக. காதலை சொல்ல அசினிடம் பதட்டத்துடன் சொல்லி பார்க்கும் காட்சி ஏற்கனவே உங்கள் படத்தில் பார்த்திருந்தாலும். இன்னமும் புதிசாய் இருக்கிறது உங்களின் நடிப்பு. வடிவேலுடனான உங்கள் காமெடி பெரிதாய் எடுபடாதது வருத்தமே. அதற்கு வடிவேலின் ரொட்டீன் டெம்ப்ளேட் காமெடியும் காரணமாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கதை விஷயத்திலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல ரொமாண்டிக்கான படம் கிடைத்திருக்கும். அதிலும் க்ளைமாக்ஸில் நீங்கள் விக் வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும் போதெல்லாம் உள்ளுக்குள் நடுக்கம் ஓடுதுங்கண்ணா..
kaval-vijay-asin-312 அசினின் தோழிக்கு எப்போது விஜய் மேல் ஒரு தலையான காதல் வந்தது? அசினுக்கு வேண்டுமானால் விஜய் மீது காதல் வந்திருக்கலாம் ஆனால் விஜய்க்கு அசின் மேல் எப்போது காதல் வந்தது? ஒரு வேளை போன் பேசும் அம்முக்குட்டியின் மேல் உள்ள் காதல் அசின் மேல் ட்ராவல் ஆகும் என்று நினைத்தீர்களா இயக்குனரே? மொத்தத்தில் கொஞ்சமே கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருதால் நிச்சயம் ஒர் சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் அளித்திருக்க முடியும். இப்படத்தின் வெற்றி  தோல்வியை வைத்து, உங்களின் அடுத்த பட முடிவு இருக்குமாயின் நாங்கள் எல்லாம் மறுபடியும் சுறா பார்க்க ஆசையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கென்னவோ. தெலுங்கு ஹிட்டுகளை விட, விஜய்க்கு ஷாருக்கான் நடித்த, பர்தேஸ், தில் தோ பாகல் ஹே போன்ற படங்கள்  ரிமேக்கினால் நிச்சய ஹிட் உண்டு என்று  கடலங்குடி நாடி ஜோசியர் சொல்கிறார். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களால் ஷாருக் போல ஒரு ரொமாண்டிக் கதைகளை கொடுக்க முடியும். என்பது என் நம்பிக்கை.
காவலன் - ஆவரேஜ் ( விஜய் ரசிகர்கள் திருப்திக்காக,,)

Post a Comment

99 comments:

கவனிப்பவன் said...

வலி தெரியாம குட்டு வாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்... இதன அது...

திருந்திடுவாங்க என்ற உங்கள் நம்பிக்கைக்கு ஏன் வாழ்த்துக்கள்....

நல்ல அறிவுரை / விமர்சனம்.......

க ரா said...

naga kannula usi ethura mathri ... baguth acha hai...

MSK / Saravana said...

ரொம்ப கச்சிதமா எழுதியிருக்கீங்க தலைவரே..

தோழி said...

appo padam odidumaanga???

தோழி said...

appo padam odidumaanga???

kanagu said...

நீங்கள் சொன்ன குறைகள் எல்லாம் இருந்த போதும் நான் இந்த படத்தை இரசிக்க முடிந்ததுண்ணா...

அதுவும் விஜயின் நடிப்பு காதல் காட்சிகளில் மிக அருமை. ரூட்டை மாத்துவார் என நம்புவோம் :)

நான் புத்தக கண்காட்சியில் உங்களுக்கு போன் செய்திருக்க வேண்டும்... :( சென்னையில் தானே இருக்கிறோம்ணா.. பாத்துறுவோம் :)

ம.தி.சுதா said...

நீண்ட நாளுக்கப்பறம் விஜயின் ஹீரோயிசம் இல்லாததும் விஜய் நடித்த படமும் வந்திருக்கிறது...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

pichaikaaran said...

டெம்ப்ளேட் படங்களிலிருந்து வெளிவந்ததே பெரிய வெற்றிதான். மசாலா டெம்ப்ளேட்டில் இருந்து தப்பிப்பவர்கள் , அடுத்து நாடுவது கமல் டைப் மேக்அப் டெம்ப்ளேட் படங்கள் . விஜய் அப்படி செய்யாதது ஆறுதல்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் லாபமோ, நஷ்டமோ இருக்கத்தான் செய்யும் என்ற போது இவர்கள் கேட்பது ஞாயம் இல்லைதான் என்பது உ.கை.நெ. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுமூகமான தொழில் முறையில் இருக்க இம்மாதிரியான காம்ப்ரமைஸுக்கு வரத்தான் வேண்டும். ஹேராமிற்கு கமல், இருவருக்கு மணிரத்னம், பாபாவுக்கு ரஜினி என்று நீடிக்கும் லிஸ்ட் வந்து கொண்டேயிருக்கும். //
அண்ணே !நீங்க சொல்லிருக்கற இந்த படங்கள அவங்களே தயாரிச்சது! விஜய் நடிச்ச எந்த படத்தோட தயாரிப்பாளரா அவரே இருந்துருக்காரு சொல்லுங்க! நியாயமா பார்த்தா படத்த தயாரிச்சவங்ககிட்டதானே வாங்கணும்!! விஜய் மேல பழி போடறது என்ன நியாயம் அண்ணே! மத்தபடி நீங்க சொல்லிருக்கறது நான் வழிமொழிகிறேன்!

எல் கே said...

வலிக்காம குட்டுவது இதுதானா?

மொக்கராசா said...

அப்ப படம் ஓடாதா.....ஆனால் விஜயின் தோல்வி அடைந்த படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை.....சரியான விளம்பரம் இல்லை இருந்தால் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் லாபம் பார்க்கலாம்.

Unknown said...

one side review.. :(

வினோத் கெளதம் said...

மற்றப்படங்களை விட விஜய்
படங்களின் மீதான உங்கள் விமர்சனம் சற்று கடுமையாக இருப்பதைப்போல் இருக்கின்றது தல..

gobyDOT said...

நீங்க என்ன தான் கஷ்டபட்டாலும் படம் படு Hit பாஸ்.
உங்கட Blog a மட்டும் பாக்காம web site களையும் பாருங்க.
http://www.24x7newsportal.com/2011/01/kaavalan-movie-hit-kaavalan-movie-hit.html

Unknown said...

ம்...ஹூம் ...

vivek.dgl said...

whom ask this fellow (Vijay) to act in cinema. Please ask him to retire in the cinema field..Still rajini and kamal so many heros are there to entertain the tamil audience. No one (theatre owners) is not willing to release his film. He is belame to Politicians..

I accept your all points buddy

ஆர்வா said...

விஜய்யுடன் பேசுவது போல் எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் வித்தியாசமாக இருந்தது..

ஆர்வா said...

கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் இருப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு தன் எழுத்தின் மீது இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைவிட படிப்பவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையையே குறிக்கும்.. சங்கர் அவர்களுக்கு நம்மீது இருக்கும் அந்த நம்பிக்கையை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கமெண்ட் எழுதியவர் தகர்ப்பாரே என்றால். அது நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அசிங்கம்தானே தவிர வேறொன்றுமில்லை..

பிரபல பதிவர் said...

தல... வெப் பேஜ் லோடு ஆக ரொம்ப டைம் எடுக்குது.... என்னான்னு பாருங்க....

அப்புறம்.... இந்த படத்துக்கு இவ்ளோ நீள விமர்சனமா.... நான் கார்க்கி விமர்சனத்த நம்பி குடும்பத்தோட போயி... விடுங்க... விடுங்க....

விஜய்... சீக்கிரம் சீரியலுக்கு வந்து விடுவார் என்றே தோன்றுகிறது.... ஜெயா டிவியில்.... வந்தா நிறைய சீரியல் ஹீரோக்களுக்கு இருக்கு ஆப்பு....

'பரிவை' சே.குமார் said...

நல்ல அறிவுரை / விமர்சனம்...

//கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் இருப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு தன் எழுத்தின் மீது இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைவிட படிப்பவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையையே குறிக்கும்.. சங்கர் அவர்களுக்கு நம்மீது இருக்கும் அந்த நம்பிக்கையை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கமெண்ட் எழுதியவர் தகர்ப்பாரே என்றால். அது நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அசிங்கம்தானே தவிர வேறொன்றுமில்லை..//

Correct... Vijay Rasikanaga parkkamal vimarsanaththai vimarsanamaga parththal nallathu.

Jana said...

உலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது உங்கள் படம் மூலமாகவே மீண்டும் தெரியும் போது என்ன மாதிரி உணர்வை எனக்கு கொடுத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை

ha ha ha...

எவனோ ஒருவன் said...

மதிப்பிற்குரிய சங்கர் அவர்களுக்கு,

தங்களிடம் இருந்து இப்படி ஒரு தலை பட்சமான விமர்சனத்தை நான் எதிர் பார்க்கவில்லை. படத்தில் இருக்கும் குறைகளை மட்டும் தான் தாங்கள் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். விஜய் மீது தங்களுக்கு என்ன கோபமோ?? முதல் 30 நிமிடங்களைத் தவிர்த்து படம் மிக நன்றாகவே இருந்தது.

ஆடுகளம் ஒரு சிறந்த படம் தான். ஆனால், அப்படம் தராத ஒரு நிறைவை காவலன் எனக்கு தந்தது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தங்கள் விமர்சனத்தை எப்பவும் போற்றுபவன் நான். ஆனால், இப்படி ஒரு தவறான விமர்சனத்தை படித்த பிறகு தங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் எண்ணம் போய்விட்டது.

ஆதவா said...

ஒருசிலரது விமர்சனம் படித்து நம்பி, தியேட்டரில் இரண்டரை மணிநேரம் திணறத் திணற அடிவாங்கி வந்திருக்கிறோம்!!
என்னைப் பொறுத்தவரையிலும் பொங்கல் ரிலீஸில் தர்மான திரைப்படம் ஆடுகளம் மட்டுமே..சிறுத்தை கூட பரவாயில்லை ரகம்!

N.H. Narasimma Prasad said...

Vimarsanam Arumai Anna

Anonymous said...

நடுநிலைமையான விமர்சனம் தான். பாடிகார்ட் படத்தை பார்க்கும் போதே ஒன்னும் ஒட்டவில்லை.வித்தியாசமான விஜய்காக பார்க்கலாம்.

பிரபல பதிவர் said...

// எவனோ ஒருவன் said...
மதிப்பிற்குரிய சங்கர் அவர்களுக்கு,

தங்களிடம் இருந்து இப்படி ஒரு தலை பட்சமான விமர்சனத்தை நான் எதிர் பார்க்கவில்லை.
///


எவனோ ஒருவன்... மதிப்பிற்குரிய சங்கர் அவர்களிடம் இருந்து ஓரு தலை பட்சமான விமர்சனம்தான் வரும்... ஏன்னா வலைபதிவர்களில் ஒரே 'தல' அவர் மட்டும்தான்.....

நீங்க அப்போ களவாணி, ம.அம்பு விமர்சனம்லாம் படிக்கலையா... அய்யோ... அய்யோ.....


இந்த படம் மொக்கைதான்.... ஜீவா, ஜித்தன் ரமேஷ் நடிக்க வேண்டிய கதையில் விஜய்... அதான் படத்தோட பிரச்சினையே..... மேலும் தல சொல்ற மாதிரி லாஜிக் இல்லா மேஜிக் மசாலா படத்தில வேண்ணா எடுபடலாம்.... ஆனா இந்த மாதிரி கதைல ரொம்ப முக்கியம்.... ஒரு பாட்டு மற்றும் க்ளைமாக்ஸ்ல கெட்டப் சேஞ்ச் பண்றாரு பாருங்க... அய்யய்யய்யோ.... வடிவேலு

Anonymous said...

//உலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன்//

>>> போக்கிரிக்கே பொங்கலா??
நேரம்/விருப்பம் இருந்தால் http://madrasbhavan.blogspot.com/2011/01/blog-post_17.html

MANO நாஞ்சில் மனோ said...

மலையாளத்தில் இருந்து சுட்டதுதானேய்யா..............................
இனி போஜ்புரி ரீமேக்கையும் எதிர் பாருங்கள்....

Unknown said...

Intha Padam eppadiyavathu Hit aakiye theranum. So makkale promote pannunga!!(Yen na definitely no adv,or promotional program will be there in Sun group TV channels for this movie)

appa than vijaik erpatta nilamai ini vera hero ku varama irukkum.

Unknown said...

Padam HIT..
your attitude is just to give negative review..(by reading your review anyone can understand..)
i think now-a-days its like a passion..for people like you...to put negative reviews..and comments..all over the net..about VIJAY.(by this you think im a vijay fan..as im..but im telling this in my general opinion)
so..whatever..you saying..is jus made-off...
..this is jus a movie..with love plot mixed with comedy.
And the movie portrayed everything what it as to..show the audience..and The Audience..Got what the Director Wanted to Communicate...in this movie.
thats why the movie is HIT...,and you saying இப்படி இருந்திருந்தால் ,அப்படி இருந்திருந்தால் படம் ஹிட். எல்லாம் இருந்திச்சி..உங்களுக்கு மட்டும் தான் தெரில..பாவம்.
Theatre owners..cliamed a wrong person..who is not the PRODUCER ..Of the movie..
Neenga Avanga ellorum kaasa thirupi koduthaanga nu-solringa..kamal,rajini or mani rathnam..they all are producer of the movie.. and its there own wishes..to give the money or not..,
moreover..there are lots and lots of moives floped..in the history..no one gave money...or the theatre owners didnt claimed..but they just cliamed VIJAY only..to give him the obstacles..,moreover
in this industry.. ITS LIKE A TEAM WORK FROM PRE-STAGE TO RELEASE.. people always tries to be FRIENDLY with EVERYONE..they dont SUDDENLY spoil that..and now its a big question among public..
why theatre owners..SUDDENLY claimed.and giving lots of reasons..to think..which MAKES them to ask...,and everyone in TN knows the truth behind all the obstacles..which causing problems to vijay..
and its not a story as you said//
..,THE STORY IS WHAT YOU CREATING IN THIS REVIEW.
if u are a good writer..know it and write it...illa...summa iru.

Giri Ramasubramanian said...

எத்தைத் தின்றாலும் பித்தம் தீராது போலிருக்கே நம்ம தளபதிக்கு.

Giri Ramasubramanian said...

இந்த அனானி என்றும் புரொபைலை மறைத்து ஒளித்து வைத்தும் பின்னூட்டம் போடுபவர்களை என்னென்பது?

Cable சங்கர் said...

ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிய மாட்டேனென்கிறது. இப்பட விமர்சனத்தில் நான் விஜய்யின் நடிப்பை மிகவும் ரசித்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் அதை நான் ரசிகன் தான் ஆனால் நடு நிலையானவன் என்ற் சொல்லிக் கொள்பவர் கண்ணில் படவில்லை.. அதே போல் விஜய்யிடம் பணம் கேட்டது பற்றியும் நான் ஒரு கருத்தை சொல்லியுள்ளேன். அதுவும் அவங்க கண்ணுக்கு தெரியவில்லை. இப்படி அவங்கள பாராட்டி எழுதினதை அவஙக்ளுக்கு ஆதரவா எழுதுனதே கண்ணுக்கு தெரியாத போது படத்தில என் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை பற்றி ஒரு டுபாக்கூர் பெயர் போட்டு ப்ரோபைல் இல்லாமல் ஐ கம் யூ கோ இங்கிலீஷில் எழுதியிருக்கும் இவரை என்னவென்று சொல்வது?

Unknown said...

Well said karthik.. inga irukkura zandugal periya arivu jeevi nu nenappu

Cable சங்கர் said...

இதோ இன்னொரு பேரு போட்ட அனானி.

Karthik said...
This comment has been removed by the author.
ராஜரத்தினம் said...

எனக்கும் ஒன்று மட்டும் புரியவில்லை. அது எப்படி பின்னூட்டமிட்டவர்களை ridicule செய்ய அவர்களுக்கு english சரியாக எழுத தெரியாததை காரணமாக எல்லா பதிவர்களுமே எடுத்து கொள்கிறார்கள்? அப்பனா சரியாக பேச தெரியாதவர், profile வைத்து கொளாதவர்கள்,ஆங்கிலம் Fluent ஆக இல்லாதவர்களெல்லாம் குறை சொல்லகூடாதென்ற பதிவர்களின் கருத்து எனக்கு மிகவும் ஆச்சர்யமே!

கார்க்கிபவா said...

i come u go என்று கேட்கவில்லை. நான் எனக்கு தெரிந்த தமிழிலே கேட்கிறேன். காவலனுக்கு எதிராக ஆளுங்கட்சியின் ஆதரவோடு எந்த சக்தியும் செயல்படவில்லை என்கிறீர்களா? 10 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பின் பெரிய படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் என்று தானாக முன் வந்து கோரிக்கை வைத்தாரக்ளே. அதில் அரசியல் இல்லை என்கிறீர்களா? விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும் என்கிறீர்களே.. அது யார் யர? உங்களுக்கு எல்லாம் டெஹ்ரியும் என்று சொல்கிறீர்களா?

3 நாட்கள் ஓடிய ஆடுகளம் சென்னையில் 69 லட்சமும், சிறுத்தை 67 லட்சமும் கலெக்ட் செய்ய, காவலன் சனிக்கிழமை மதியம் வந்து 51 லட்சம் கலெக்ட் செய்திருக்கிறது. இதற்கும் ஒரு கணக்கு சொல்வீஙக்ளே. அது உண்மையில்லைதானே?

விஜயின் நடிப்பை பாராட்டியிருக்கிறீர்கள். அதற்காக விஜயை பற்றி முதல் பத்தியில் சகட்டுமேனிக்கு எழுதியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாபாவிற்கு ரஜினி தந்தார். ரைட்டு. குசேலனுக்கு என்ன செய்தார்? பாபா அவரின் தயாரிப்பு. வேறு எந்த படத்திற்கு தந்தார் என்று சொல்லவும். கமல் மன்மதன் அம்பிற்கு எவ்வளவு தந்தார்?

உங்களுக்கு சினிமா தெரியும் அளவிற்கு அரசியல் தெரியவில்லை என்று ஏன் பறை சாற்றுகிறீர்கள்? ஏதோ கலைஞர் குடும்பம் ஒன்றுமறியா அப்பாவிகள் என்பது போன்று சொல்ல வேண்டாம்.

யார் தடுத்தாலும் தளதி ஜெயிப்பார். காவலனின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை அடுத்த வாரம் சொல்லுங்கள்

வருண் said...

***THE STORY IS WHAT YOU CREATING IN THIS REVIEW.
if u are a good writer..know it and write it...illa...summa iru.***

Mr. Karthik: I dont know whether he is a good writer but you are an AWFUL book reviewer! You SUCK big time!

As far as I can see review looks decent and got the comments it deserved. What else you want? LOL

வருண் said...

***பாபாவிற்கு ரஜினி தந்தார். ரைட்டு. குசேலனுக்கு என்ன செய்தார்? பாபா அவரின் தயாரிப்பு. வேறு எந்த படத்திற்கு தந்தார் என்று சொல்லவும். கமல் மன்மதன் அம்பிற்கு எவ்வளவு தந்தார்?***

You really wan to talk about Rajni here?

I suggest you to stick with Vijay and leave rajni here!

வருண் said...

***யார் தடுத்தாலும் தளதி ஜெயிப்பார். காவலனின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை அடுத்த வாரம் சொல்லுங்கள்***

Joke of the YEAR!

Already AaadukaLam has received excellent reviews! LOL

வருண் said...

Karki: YOu better stop comparing Rajni. Rajni resolved the Baba problem. The whole world knows that.

Yes, Pramid sameera bought kuselan for a high price and the movie was brought down by several people. Rajni resolved that problem too. He did his best to resolve the problem.

That is why nobody had any problem during enthiran release!

I dont know what Vijay wants. He needs to adjust with a current political scenario and BE SMART. Even big actore like Rajni and Kamal adjust with politicians. BUt Vijay is thinking of himself too much. He cant outfight all the political power and theatre owners. He needs to behave like "good business man" as he is a Businessman. He makes crores of money from his movies and he is not a "patriot". He is an actor after all!

Anna Nagar said...

you are supporting DMK & SUN TV because of you are expecting from SUN TV for film chance

கார்க்கிபவா said...

varun,

u better read the post and then come to comments. I dint pull rajini here. Its the author who did that. If u can stand for rajini, I have all the rights to support to vijay.

// Even big actore like Rajni and Kamal adjust with politicians.//

ur so called big actors are nowhere near vijaykanth who stand against these mighty politicians.

aadukalam received excellent reviews. OK. So do kavalan. I am talking about collections. Check behindwoods.com. i dint say that kavalan is better than aadukalam.It did well in Box office.

வருண் said...

karki: Today VK's box office power is a HISTORY. Is Vijay competing with him? Or competing with stars who have the bo power, today?

You know how virudhagiri did, right?
VK used to just below rajni and over kamal in B and C centers. That is a history. Let us leave him as a politician now. Vijay is still an actor and a long way to go.

Well, if you think he can outfight the media and political power with this fan-base he got, good luck to him and to you!

Btw, Cable sankar is not "paid off" by sun tv or kalainger, then why do you have a problem with his review? LoL

சீ.கோபிநாத் said...

@ Karki sir,

//I am talking about collections. Check behindwoods.com. i dint say that kavalan is better than aadukalam. It did well in Box office.//

First 2 days vijay fans thana paarthu irupaanga... antha collection vachi yepdi neenga compare panna mudiyum?

கார்த்திகைப் பாண்டியன் said...

சகா கார்க்கிக்கு..
இதை நான் சொல்றது உங்களுக்கு சங்கடமா இருக்கலாம்.. ஏன்னா நான் அஜித் ரசிகன்னு உங்களுக்குத் தெரியும்.. இருந்தும் சொல்ரேன்.. மதுரைல படம் ரெண்டாவது நாளே காத்து வாங்குது.. தங்கரீகல்ல அத்தை பையன் வேலை பாக்குறான்.. ஞாயிரு சாயங்கால ஷோ வெறும் எம்பது பேர்.. அப்புறம் எங்கிட்டு? மொத வார கலெக்‌ஷன் வச்சு சொல்லாதீங்க.. ஞாபகம் இருக்கா? அசல் மொத மூணு நாள் பதினெட்டு கோடி.. அதுக்கு அப்புறம் பிம்பிலிக்கி பிலாப்பி.. அது மாதிரித்தான்.. படம் அவ்வளவா நல்லா இல்லை ஆனா விஜய் கொஞ்சம் மாறி நடிச்சு இருக்கார்.. இதுதான் என்நண்பர்கள் சொன்னது.. சாரி சகா.. மறுபடியும் நம்பி காத்திருப்போம்.. இந்த ரெண்டு பயல்களுக்குமே நம்மள டீல்ல விடுறதுதான் பொழப்பு..:-((

Giri Ramasubramanian said...

@ கார்க்கி

நீங்கள் இத்தரை தீவிர விஜய் ஃபேன்'ன்னு தெரிஞ்சிருந்தா அந்த மொதல் கமெண்ட்டை பாஸ் பண்ணிருக்க மாட்டேன். lolz :) விவாதம் ரொம்பவும் தீவிரமாக அஜித் விஜய் ரஜினி யுத்தமாக மாறுவதாக எனக்குத் தோற்றம் தருவதால் நான் எஸ்கேப்....

...மற்றபடி....

@ராஜரத்தினம்
கமென்ட் பண்றவங்க நீ "நீ எப்டி இப்டில்லாம் சொல்லலாம்'ன்னு வசை மாறி பொழியலாம், ஏக வசனத்தில் கூட பேசலாம் (கேபிளார் மன்னிக்கணும்). ஆனா அவங்க அடையாளத்த சொல்லிட்டு செஞ்சா அது அவங்க கருத்து. இல்லன்னா யாரு அதை மதிக்கப் போறா. அடையாளம் சொல்லாம தொடை நடுக்கத்தோட சொல்லப்படற கருத்துக்கு என்ன மரியாதை தரணும்னு எதிர் பாக்கறீங்க. ஆமாண்டா நான்தாண்டா சொன்னேன், அனுப்புடா ஆட்டோ நானாச்சு நீயாச்சு பாத்துக்கலாம்னு சொன்னாங்கன்னா அவங்களை மதிச்சி பதில் எழுதலாம். இல்லைன்னா "ஐ கம் யு கோ"ன்னு கிண்டல்தான் பண்ணனும்.

கார்க்கிபவா said...

வருண்,
என்ன ஆச்சுங்க? நான் விஜய்காந்த்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பவர் பற்றி எங்கே பேசியிருக்கேன்?

விஜய்க்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கான்னு தெரில. ஆனா தில்லு இருக்கு. அதனால்தான் பணிஞ்சு போகாம இருக்காரு.

கேபிளின் விமர்சனத்தை நான் குரை சொல்லவேயில்லை. ஆனால் ஆளுங்கட்சிக்கு இதில் சம்பந்தமே இல்லை என்று சொன்னதை கண்டிக்கிறேன். சரி, நீஙக்ளே சொல்லுங்க. சன்&நிதி குழுமத்தின் உள்குத்து வேலைகள் எதுவுமே காவலனுக்கு எதிராகாவோ, விஜய்க்கு எதிராகவோ நடக்கவேயில்லை என்கிறீரக்ளா?

கார்க்கிபவா said...

கோபி,
அதனால் தான் அடுத்த வாரம் கலெக்‌ஷன் ரிப்போர்ட் வரட்டும் என்றேன். நான் சொன்னது படத்தை எப்படியாவது வெளியிட விடாமல் செய்ய முயன்றதை எதிர்த்து வெளிவந்து இவ்வளவு நல்ல ரீச் ஆனது என்பதைத்தான்

@கா.பா,
80 பேரா? நன்றி. ஆனா சந்தடி சாக்குல முதல் 3 நாள்ள 18 கோடின்னு சொல்லிபுட்டிங்களே. அது சென்னையிலே பையாவை விட 10 லட்சம் குறைவா வசூல் ஆன படம். கேபிள் வந்து கன்ஃபார்ம் பண்ணுவார் பாருங்க:))

கிரி,
உங்கள நான் எதுவுமே சொல்லலையே!! மேலும் ரஜினி-விஜய் மாற நான் காரணம் இல்லை. அது நியாயமும் இல்லை. நானும் ரஜினி ரசிகன் தான் சகா :)

Cable சங்கர் said...

karki.. இன்று காலை ஜாபர்கான் பேட்டைவிஜயவில் மொத்த டிக்கெட் எவ்வளவுதெரியுமா?.. 92 பேர். அதே காசியில் சிறுத்தைக்கு 317 என்று ரிப்போர்ட் இருக்கு.

இதான் நிஜ நிலமை.. சென்னையை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட கணக்கு. நீ சொல்கிற படி 51 லட்சமே இருந்தாலும் இந்த கருமத்தை கூட கலெக்ட் செய்யலைன்னா விஜய் எதுக்குன்னு கேக்குறேன்.

என்னால நிச்சயமா சொல்ல முடியும் படம் வெளியாகாததற்கு முதல் காரணம் சக்தி சிதம்பரம்.அதை என்னால ப்ரூவ் செய்ய முடியும்..

vinthaimanithan said...

வலையுலகம் என்பது ரசிகர் மன்றங்களின் இன்னொரு வடிவம்தானா? :))))))

shabi said...

VANCHA PUHALCCHI ANI YA ITHU TAMILLA PADICCHURUPPINGALA

ராம்குமார் - அமுதன் said...

படம் தாமதமாக வெளியிடப்பட்டதில் அரசியல் சார்பு இல்லையெனில் ஏன் ஒரு டி.வி சேனலிலும் ட்ரெயிலரோ பாட்டோ போடப்படவில்லை? இதுவரை எப்பொழுதுமே மீடியாவின் செல்லப்பிள்ளையாகத் தானே இருந்திருக்கிறார் விஜய்.... இப்பொழுது மட்டும் ஏன்?

வருண் said...

கேபில் மற்றும் கார்த்திகை பாண்டியன்!

உங்க பின்னூட்டங்களை (with # of people counting) எடுத்துடுங்கப்பா! அதில் உள்ள உண்மைகள் படத்தை இன்னும் பாதிக்கலாம்! :( Let us not bring down the movie this early! :(

வருண் said...

***சரி, நீஙக்ளே சொல்லுங்க. சன்&நிதி குழுமத்தின் உள்குத்து வேலைகள் எதுவுமே காவலனுக்கு எதிராகாவோ, விஜய்க்கு எதிராகவோ நடக்கவேயில்லை என்கிறீரக்ளா?***

நான் அபப்டி சொல்லலைங்க. ஆனால் ஆடுகளம் மற்றும் சிறுத்தையும் "இயற்கை"யாகவே ரொம்ப மொக்கையா அமையாமலப் போயிடுச்சு. அதுதான் பெரிய பிர்ச்சினை! இப்போ ஆடுகளமும்., சிறுத்தையும் இளைஞன் போல வந்திருந்தால், "காவலனை" அடிச்சுக்க முடியாதுதான். Since those movies are OK and they have the media, it is hard to win against them!

Cable சங்கர் said...

யாருங்க சொன்னது இளைஞன் தோல்வின்னு.. இளைஞன் விமர்சனம் வருது..

வருண் said...

***Cable Sankar said...

யாருங்க சொன்னது இளைஞன் தோல்வின்னு.. ***

அப்படித்தாங்க பரவலா பேசிக்கிறாங்க! :)

கரன் said...

Cable Sankar said...
//karki.. இன்று காலை ஜாபர்கான் பேட்டைவிஜயவில் மொத்த டிக்கெட் எவ்வளவுதெரியுமா?.. 92 பேர். அதே காசியில் சிறுத்தைக்கு 317 என்று ரிப்போர்ட் இருக்கு.//

சில திரையரங்குகளில் மாறியும் நடந்திருக்கலாம் தானே?
தகவல்களைத் தரும்போது குறைந்தது ஒருநாள்/சில திரையரங்குகளின் tickets report ஆவது தரலாமல்லவா?
வேறு திரையரங்குகளில் நிலமை வேறு மாதிரியும் இருக்கலாம் தானே?


Cable Sankar said...
//இதான் நிஜ நிலமை..//

ஒரு திரையரங்கின் ஒரு நேர நிலமையை வைத்து இது தான் உண்மை நிலை என்றால்...
இன்னும் ஓரிரு வாரங்கள் சென்றால் தான் உண்மை நிலையை அறியமுடியும், இது தான் உண்மை. ஏனெனில், ஆடுகளம், சிறுத்தை, இளைஞன், காவலன் நான்குமே மோசமான படங்களல்ல.

கீழுள்ள இணைப்பை ஒருமுறை பாருங்கள். இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.
http://fresh.cinesnacks.in/official-report-online-booking-rates-kaavalan-as-no-1.html

*எல்லா (நல்ல) படங்களும் வென்றால் நல்லது தானே.

ராஜரத்தினம் said...

நிச்சயமாக இதில் திமுகவின் வேலை இருப்பதாகவே நான் நம்ப காரணம்.

1. ஜெயலலிதா சந்திப்பிற்கு பிறகுதான் விஜய் அந்த படத்தில் இருந்து நீக்க படுகிறார் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் திமுகவினரா? சன் டீவியா? இல்லை அவர்கள் திமுக சக்க்திகளுக்கு பினாமிகளா? இப்படி எந்த படத்தில் இருந்தாலும் ஒருவர் அதிமுக ஆதரவு காரணம் காட்டி நீக்கபடவைக்கிறார் என்றால் ஏன் அதே காரணம் காட்டி அவரின் படத்தை வெளியிட தடை போடவில்லை என்று நீங்கள் சொன்னால் அதற்கு என்னால் சில காரணங்களை கணிக்கமுடியும்.
1.நீங்கள் திமுக ஆதரவாளர்.
2.உங்களுக்கு அந்த குடும்ப வாரிசுகள் படத்தில் பணி செய்ய வாய்ப்பு இல்லை பணியில் already there.
இந்த சூழ்நிலையில் உங்கள் கருத்து நியாயமானதே.

Cable சங்கர் said...

//என்னால் சில காரணங்களை கணிக்கமுடியும்.
1.நீங்கள் திமுக ஆதரவாளர்.
2.உங்களுக்கு அந்த குடும்ப வாரிசுகள் படத்தில் பணி செய்ய வாய்ப்பு இல்லை பணியில் already there.
//

உங்கள் கணிப்புகளை பற்றி நீங்களே புரிந்து கொள்ள இளைஞன் விமர்சனத்தை படியுங்கள்.

நிச்சயம் நான் அவர்கள் படத்தில் வேலை செய்ய வில்லை. இப்போதைக்கான வாய்ப்பும் இல்லை. நான ஒரு புதிய த்யாரிப்பாளரைத்தான் அணுகியிருக்கிறேன்

மற்றபடி.. இப்படத்தை நான் எங்குமே மொக்கை என்றோ.. மொன்னை என்றோ சொல்ல்வில்லை. எனக்கு தெரிந்த உண்மைகளை சொன்னேன்

@கரன்
எல்லாவற்றையும் இந்த முன்று நாட்களை வைத்து முடிவு செய்ய முடியாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சம் காலம் கடந்த விஷயம். இன்றைக்கெல்லாம் முதல் மூன்று நாட்கள் தான் படத்தின் தலைவிதியை நிர்ணையக்கும் விஷயம். எனக்கு மட்டும் என்ன விஜய் படம் ஓடக்கூடாதுன்னு ஆசையா என்ன..? விஜய்யை நான் ரொம்ப நாளைக்கு பிற்கு ரசிச்ச படம்யா.. இது..

Nat Sriram said...

@கேபிள்
காவலனை விடுவோம். ராஜரத்தினம் பாய்ண்டுக்கு வருவோம். அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்றீங்களே கேபிள். Joyful என்ற சிம்பிளான வார்த்தையை joyfull சிங்கப்பூர் என்று டபுள் L போட்டு ஒரு தொடரே எழுதிவர் தானே நீங்க..ஒரு மரியாதைக்காக யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை தானே அப்போது.
ரெண்டாவது, அவர் கருத்த தானே சாமி அந்த "கார்த்திக்" சொல்றார்...அவர் கூகிள் அக்கௌன்ட் வெச்சுருக்கார், வெச்சுக்கல, தன்ன காமிச்சுக்கல, காமிக்கிறார், How does that matter? எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன். தோ, இன்னிக்கு கார்த்தால கூட பா.ரா சைட்டுல வெறும் பேரோட தான் 'கம்மன்டி'னேன்..அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி "உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..

@கார்க்கி
சிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும்? Simply, Why should he care? "இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு" என்பதென்ன லாஜிக்? இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது? பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு.."டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு? எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்..

@சில நண்பர்களுக்கு
களவானில இருந்தே " மக்களின் ஏகோபித்த கருத்துக்கு மாறாக" விமரிசனம் பண்ணிருக்கீங்க அப்படின்னு அப்போ அப்போ சவுண்ட் வருது. இது கேபிளார் பேஜ். அவர் இடம், அவருக்கு தோணினத எழுதுவர். அவருடைய ரசனையை விமரிசிக்க நாம் யார்? எல்லா படத்தையும் நல்லாருக்குன்னு சொல்ல அவர் என்ன வன்னத்திரையிலையா விமரிசனம் எழுதறார்?

கார்க்கிபவா said...

கேபிள்,

காசியும், விஜ‌யாவும் அருக‌ருகே இருந்தாலும் தியேட்ட‌ரின் த‌ர‌ம் உங்க‌ளுக்கு தெரியும். விஜ‌யாவை விடுங்க‌. உத‌ய‌ம்ல‌ எவ்ளொ பேருன்னு தெரியுமா? ச‌ங்க‌ம் திரைய்ர‌ங்கில் இன்று காலை காட்சிக்கு இதுவ‌ரை புக் ஆன‌து ம‌ட்டும் 200 டிக்கெட். விஜ‌யா தியேட்ட‌ரையும் காசியையும் ஒரே விலைக்கா பொட்டி த‌ராங்க‌? அதுவும் 300 மீட்ட‌ர் தொலைவில் இர‌ண்டு திரையுர‌ங்கில் காவ‌ல‌ன் ஓடுவ‌து, ஒரே தியேட்ட‌ரில் சிறுத்தை ஓடுவ‌தும் தெரியாதா? நீங்க‌ என்ன‌ வேணும்ன்னா ப்ரூவ் ப‌ண்ணுங்க‌.ஆனா ச‌ன் & நிதி குழு விஜ‌ய்க்கு எத்ரிஆ வேலை செய்ய‌ல‌ன்னு சொல்லாதிங்க‌. நீங்க‌ளேதான் விஜ‌ய்க்கு ச‌ன் டிவி ஆப்பு வைக்க‌வே சுறாவ‌ வாங்கிய‌தா சொனீங்க‌. இனிமேல் விஜ‌ய் த‌ன‌து ப‌ட‌த்த‌ ச‌ன்னுக்கு விக்க‌ கூடாதுன்னு அக்ரிமென்ட் போட்ட‌ விஷ‌ய‌த்தையும் சொன்னீங்க‌

கார்க்கிபவா said...

ந‌ட்ராஜ்,

க‌ரெக்ட் . இதையெல்லாம் பார்த்து ஒருவ‌ன் சினிமா பார்க்க‌ தேவையில்லை.ஆனால் இவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ப‌ட‌த்தை ப‌ற்றி ம‌ட்டுமா இருந்த‌து? அத‌னால்தான் நான் அதையெல்லாம் பேச‌ வேன்டிய‌தாகிவிட்ட‌து. மேலும், ஹேன்டிகேப் என்று சொல்ல‌ முடியாது. நீ ப்ள‌ஸ்டூல‌ 600 எடுத்த‌, நான் டெந்த்ல‌ 450 வாங்கினேன் என்றால் அதெல்லாம் கிடையாது 600தானே பெருசு? ஒத்துக்கொங்க‌ன்னு சொல்ற‌ மாதிரி இருக்கு. 2 நாளில் 51 ல‌ட்ச‌மும், 3 நாளில் 69 ல‌ட்ச‌மும் ஒன்றா? அது ப‌ற்றி ந‌ம‌க்கு க‌வ‌லையில்லை. ஆனால் அப்போ காவ‌ல‌ன் தான் இதுவ‌ரை ந‌ன்றாக‌ ஓடிய‌து என்று அர்த்த‌ம்? ப‌ட‌ம் பிடிக்காம‌ல் போவ‌து ரச‌னை சார்ந்த‌து. ஆனால் க‌லெக்ஷ‌ன் என்ப‌து ஒன்றுதான். அதை ஏன் மாற்றி சொல்ல‌ வேண்டும்?

Cable சங்கர் said...

//@கேபிள்
காவலனை விடுவோம். ராஜரத்தினம் பாய்ண்டுக்கு வருவோம். அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்றீங்களே கேபிள். Joyful என்ற சிம்பிளான வார்த்தையை joyfull சிங்கப்பூர் என்று டபுள் L போட்டு ஒரு தொடரே எழுதிவர் தானே நீங்க..ஒரு மரியாதைக்காக யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை தானே அப்போது.
ரெண்டாவது, அவர் கருத்த தானே சாமி அந்த "கார்த்திக்" சொல்றார்...அவர் கூகிள் அக்கௌன்ட் வெச்சுருக்கார், வெச்சுக்கல, தன்ன காமிச்சுக்கல, காமிக்கிறார், How does that matter? எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன். தோ, இன்னிக்கு கார்த்தால கூட பா.ரா சைட்டுல வெறும் பேரோட தான் 'கம்மன்டி'னேன்..அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி "உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..
//

எனக்கு உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு. அதுக்கு முன்னாடி என்னோட Joyfull சிங்கப்பூர் மேட்டரை பத்தி சொல்றேன். தெரிஞ்சே நான் எழுதினதுதான் ரெண்டாவது ”எல்” என் சந்தோசத்தின் உச்சத்தை சொல்ல.. அது பதிவில் இருந்ததுனால யாரும் சொல்லவில்லையா.? இல்லை உங்களை போன்ற விமர்சகர்கள் கண்ணில் பட வில்லையா? என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும்.. உங்கள் விமர்சனத்தையும் வரவேற்கிறேன்.

நிச்சயம் எப்போது பெயர் இல்லாம ப்ரொபைல் இல்லாமல் பின்னூட்டம் போடும் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் சொன்னது போல அக்கவுண்ட் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் இம்மாதிரியான எதிர் பதில்களை சொல்லும் போது மட்டும் புதுசு புதுசாய் வரும் ஆட்களை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அது எனக்கு தெரியாது. இதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் அனானி பெயரில் பதிவு போடவில்லை. தைரியமாய் என் போன் நம்பர் முதற்கொண்டு போட்டுத்தான் பதிவெழுதுகிறேன். ஸோ.. யாரையும் ஒருமையில் திட்டுவது இல்லை. அடிப்படை நாகரீகம் இல்லாதவர்களை நாசுக்காக கிண்டலடிப்பது ஒன்றும் தவறில்லை. இதோ.. நீங்கள் கூட என்னை கிண்டலடித்திருக்கிறீர்கள். ஏன் உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்றால்.. நீஙக்ள் என் பதிவுகளுக்கு நல்லதோ கெட்டதோ உங்கள் கருத்துகளை சொல்லிவரும் வாசகர். அதனால்தா. இன்றைக்கு இதற்காக புதிய ப்ரொபைலை க்ரியேட் செய்து பின்னூட்டம் போடவில்லை...

கார்க்கிபவா said...

//விந்தைமனிதன் said...
வலையுலகம் என்பது ரசிகர் மன்றங்களின் இன்னொரு வடிவம்தானா? :))))))

/

கேபிளின் ப‌திவு ம‌ட்டுமே வ‌லையுல‌க‌ம் என‌ நினைத்தால் அப‌ப்டித்தான். சினிமா ப‌திவ‌ரின் ப‌திவில் வேறு என்ன‌ பேச‌?

Cable சங்கர் said...

மற்ற நண்பர்களுக்காக எழுதிய நட்ராஜ்..

களவாணி படம் பற்றிய என் கருத்தை பற்றிய எதிர்கருத்துகளை இன்ற்ளவிலும் என் பதிவில் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறேன். உங்களுக்குஒரு விஷயம் நான் சுமார் மூன்று பத்திரிக்கைகளுக்கு விமர்சனமும் எழுதுகிறேன்.

Cable சங்கர் said...

கார்க்கி

ஒருவிஷயம் நான் சொல்வதை புரிந்துகொள். நேற்ற்ளவில் படம் கலெக்‌ஷன் குறைந்துதான் உள்ளது. பக்கத்து பக்கத்து தியேட்டர் என்று எடுத்துக் கொண்டால் ஜோதியிலும், காசியிலும்,உதயத்திலும், சைதை ராஜிலும் சிறுத்தை ஓடுகிறது. அதை வைத்துப் பார்க்கும் போது காவலன் உதயம், எஸ்.எஸ்.ஆர். விஜயா.. இந்த மூன்று தியேட்டர்களில் தான். ஓடுது. சிட்டி தியேட்டருக்கு விலையேகிடையாது கார்க்கி.. விஜயா எலலாம் விலை.. அவர்கள் நொந்துபோவது பற்றி உனக்கு தெரியாது..


அப்புறம் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். அநேகமா காவலன் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிதான் வாங்குதுன்னு சொல்றாங்க..:))

Thamira said...

நட்ராஜ் :

சிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும்? Simply, Why should he care? "இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு" என்பதென்ன லாஜிக்? இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது? பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு.."டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு? எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்.. //

ஹைய்யா.. இத நான் சொன்னா காதைக் கடிச்சு வச்சிருவான் கார்க்கி. நல்லா காதுல உறைக்கிற மாதிரி சொல்லுங்க. ஒரு ரசிகனா 'படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை / விஜய் (அல்லது அஜித்) சூப்பரா பண்ணியிருக்காரு, பண்ணலை' இப்படி பேசுடான்னா.. அதவிட்டுட்டு,

"..முதல் நாள் மூணாவது ஷோவுக்கு படம் பார்க்க வந்தவன் 432. இத கேபிள் வந்து ப்ரூவ் பண்ணுவாரு. டிக்கெட் கிடைக்காம வெளிய போனது 13 பேர், நான் விஜயா தியேட்டர் வாசல்லயே உக்காந்து எண்ணுனேன். அவங்க மூலமா வசூல் 28000, அவங்க பப்ஸ் சாப்பிட்ட கணக்குல ஒரு 532, நானே கேண்டீன்காரன்கிட்ட கேட்டேன். முதல் 7 நாள்ல 38 கோடி. இத வெளிய சொல்லமுடியாத சில திரையுலக சக்திகள் (ப்ரொட்யூசர் வீட்டு ட்ரைவர் மாதிரி) கிட்ட விசாரித்தேன். ஆனா அஜித் படம் 37 கோடியே 97 லட்சம் மட்டும்தான். வெற்றி வெற்றி.! தளபதிக்கே வெற்றி.!.."

முடியல.. கேபிள் மாதிரி ஆட்கள் எழுதினா கூட பரவாயில்லை. இவன மாதிரி ஆட்கள் நசுங்குன சொம்பு தூக்கிகிட்டு கூவுறதுதான் ரசிக்கமுடியாமல் போகுது.

யுவகிருஷ்ணா said...
This comment has been removed by the author.
யுவகிருஷ்ணா said...

தேவியில் இன்று மாலை காட்சிக்கு மொத்தமாக 30 டிக்கெட்டுகள்தான் புக் ஆகியிருக்கிறது. இதுதான் காவலனின் 5வது நாள் நிலைமை. (காலை 11.45 நிலவரம்)

இதே ஸ்க்ரீனில் ‘சுறா’வே ஒரு வாரத்துக்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருந்தது :-(

விஜய்க்கு ‘சிறுத்தை’ மாதிரி வெயிட்டான சப்ஜெக்ட் விரைவில் அமைய வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை!

Nat Sriram said...

என் கருத்தை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி கேபிளாரே...சும்மாவா சோக்கா சொன்னாங்க, மேன்மக்கள் மேன்மக்களே-ன்னு...

nagaraj said...

சிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும்? Simply, Why should he care? "இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு" என்பதென்ன லாஜிக்? இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது? பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு.."டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு? எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்..


repeat repaeat

Nat Sriram said...

@lucky
நான் கார்க்கி கிட்ட ட்விட்டர்ல சொன்னது தான்..எனக்கென்னவோ, வேலாயுதத்துல திருப்பி செம பார்முக்கு வந்துடுவாருன்னு தோணுது...

மங்குனி அமைச்சர் said...

இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களால் ஷாருக் போல ஒரு ரொமாண்டிக் கதைகளை கொடுக்க முடியும். என்பது என் நம்பிக்கை.///

கேபிள் சார் விஜய்ய வச்சு நீங்க எதுவும் காமடி கீமடி பண்ணலையே ????? ஹி.ஹி.ஹி.ஹி..............

Giri Ramasubramanian said...

@நடராஜ்


//எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன்.//

இப்பிரச்னை IE'யில் ஸ்டாண்டர்ட்'ஆக உள்ளது. முதல் லாகின் முயற்சி பெரும்பாலும் டர்ர்ர்'தான். இரண்டாம் முயற்சியில் எப்போதும் லாகின் ஆகிறது.

//அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி "உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..//

நீங்கள் என்னைத்தான் குறிப்பிடுவதாகக் கொள்கிறேன்.

மேலே கார்த்திக் மற்றும் சந்திரா செய்திருக்கும் பின்னூட்டங்களின் கடைசி வரியைப் பாருங்கள். என்ன பேச்சு இது? இவர்கள் உண்மையான புரொபைலில் இருந்து எழுதியிருந்தால் இப்படி ஒருமையிலும், எழுதவொண்ணா வார்த்தைகளையும் பிரயோகித்திருப்பார்களா என்பதே என் கேள்வி. அதனால்தான் அப்படி ஏக வசனம் சொல்லி எழுதினேன். நான் மறுபடி மறுபடி அதையே சொல்வேன். சொன்னதிலிருந்து பின் வாங்கமாட்டேன்.

"ஹெலோ நான் மாரிமுத்து பேசறானுங்க, நீங்க செஞ்சது சரியில்லீங்க" என்று யாராவது தொலைபேசினால் அவர்களுக்கு நாகரீகமாக பதில் சொல்லலாம். "ஹலோ எனக்கு பேரு ஊரெல்லாம் கெடையாது. நீ பெரிய அதுவா...இப்டியெல்லாம் எழுதறியே", என்ற அனாமதேய கால்களுக்கு என்ன பதில் சொல்ல சொல்கிறீர்கள். "வைடா போனை" என்றுதான் சொல்ல முடியும்.

இங்கே பதிவர் உலகில் அனானித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்காதவர்கள் மிகக் குறைவு. கேபிளார் போன்ற சீனியர் பதிவர்களை சொல்லவே வேண்டாம்..

பி.கு.:சிலர் "நல்லாயிருக்கு" என்னும் ஒற்றை வார்த்தைப் பின்னூட்டங்களைக் கூட அனானி ரூபத்தில் வந்து கொடுக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

Nat Sriram said...

அய்யயோ, உங்கள எல்லாம் குறிக்கல பாஸ்.
ஆமா, அனானியா புக் போட்டா 'பேய்'(ஒன்) மாதிரி வாங்கறோம். 'முகமுடி'யோட 'இட்லிவடை' சாப்பிட்டு 'கிறுக்கல்' செஞ்சா விழுந்து விழுந்து படிக்கிறோம். அனானியா (நாகரீகமா) எதிர்கருத்து சொன்னா மட்டும் ஏன் வேண்டாம்?

Sinthu said...

ஐயோ! பாவம் கேபிள் ஜி கன்பியூஸ் ஆகிட்டாரு!

இதை தானே அந்த டெயிலரும் கேட்டான். கேபிள் ஜி, வலையுலகத்துக்கு பாஸா அல்லது லூசா எண்டு. (சும்மா தமாசுங்கண்ணா!)

Sundar B said...

his is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்

ANDREW said...

giving average from an antivijay blog itself defines the sucess of kaavalan ;)

hayyram said...

பாடிகார்ட் என்று ஜெட்லீ நடித்த ஆங்கிலப்படம் வந்தது. அதில் நல்ல ஹீரோயிஸம் இருக்கும். பண்றது பண்றாங்க, அது மாதிரி இங்க்லீஷ் படமா பாத்து ரீமேக் பண்ணியிருந்தா விஜய்க்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கும். பாவம் விடுங்க, அவரும் எவ்ளோ தான் முயற்சி பண்ணுவார்.

Super Star Vijay said...

Neenga kodukkira vimarsanam ellam ok. neenga evlo notta solluringale neengale oru padam edunga atha pathu naanga evlo notta solluron paarunga.
appuram ennoru vishayam Vijay paisa kodutharu ma AADHI PADATHODA FLOPKU.
UNGALUKU THERIYALA APPADINA ONE MONTH BACK MAALAI MALAR PAPER PADIKKANANU KETUKIREAN
EN MAIL ID: saran291287@sify.com
naan mail id en koduthan appadina naan onnum address ellathavan illa ma

Super Star Vijay said...
This comment has been removed by the author.
Super Star Vijay said...

Neenga kodukkira vimarsanam ellam ok. neenga evlo notta solluringale neengale oru padam edunga atha pathu naanga evlo notta solluron paarunga.
appuram ennoru vishayam Vijay paisa kodutharu ma AADHI PADATHODA FLOPKU.
UNGALUKU THERIYALA APPADINA ONE MONTH BACK MAALAI MALAR PAPER PADIKKANANU KETUKIREAN
EN MAIL ID: saran291287@sify.com
naan mail id en koduthan appadina naan onnum address ellathavan illa ma
Ennoda peru Saravanan

Cable சங்கர் said...

தாராளமா சரண் அந்த நாளும் நிச்சயம் வெகு விரைவில் வரும்.. அது வரை காத்திருந்து கிழியுங்க..:)

Unknown said...

Naa... Vanakumunga...
Ungaluku eludhura first comment...
Unga blog'a padikkum bothu neenga nalla visayam therinjha aallu'nu theriyudhu.. Vaazthukkal.. Ovvoru line'num nachunu iruku...aana unga maedhaavithanam theriyudhu.. yaarai yeppadi venumunaalum naama pesuna adhu correct'ah irukum'nu oru attitude light'ah theriyudhu...

Namma makkal naeraya comments eludhuvaanga...pugaluvaanga...adhu unga thalaiku aaerama paarthukunga... Nalla irunga...

மதன்செந்தில் said...

உஷப்பா விஜய் ரசிகர்கள் தொல்லை தாங்க முடியல.. பேசாம காவலன்ல நடிச்சதுக்கு விஜய்க்கு ஆஸ்கார் கிடைக்க்கும் எழுதுங்க கேபிள் சார்..

விஜய் ரசிகர்களின் ஏகோபித்த திட்டு வாங்கிய இன்னுமொரு விமர்சனம்

http://narumugai.com/?p=23836

சும்மா.. டைம் பாஸ் said...

Hello Cable I always visit your blog and Jackiesekar's comments before seeing any movie. Both of you speak about many minute things in the film. But the review for this particular movie looks like one sided.well it is you review you have all rights to say anything. And this is my opinion We all know vijay is not acting in LA and you are reviewing his film like a world class film sitting in the Newyork Times office Please review his movies to his and our films standard (except few films) And it would have been nicer if you criticize anyone about their points not about their language, I live with the Anglophones, I normally do not see them criticizing others who can not speak their language properly it is only in our culture some people who are fortunate to learn this language criticize others and make them loose their self-confident please don't do this

ராஜரத்தினம் said...

விமர்சனத்தை வைத்து உங்களை திமுக ஆதரவாளர் இல்லை என்று எப்படி சொல்லமுடியும். உங்களின் பல பதிவுகளை படித்த, என்னால் அதற்கான லிங்க் தரமுடியாது. பதிவு உங்களுடையதுதானே.
நீங்களே படித்து கொள்ளுங்கள்.அதன் காரணத்தால்தான் அதை எழுதினேன். மேலும் கூட கருணாநிதி படத்தை யுவகிருஷ்ணா ஒரு திமுக அல்லகை இதைவிட அதிகமாக விமர்சித்து எழுதுவார். அதற்காக அவர் திமுக அல்லகை இல்லைனு நீங்க சொல்வீங்களா?

கார்க்கிபவா said...

@ஆதி,

ரேணிகுண்டா, ர‌த்த‌ ச‌ரித்திர‌ம் எல்லாம் வ‌ர‌லாறு ப‌டைக்கும் ப‌ட‌ங்க‌ள் என்று சொல்லும் உங்க‌ளுக்கு காவ‌ல‌ன் பிடிக்காம‌ல் போன‌தில் ஆச்ச‌ரிய‌ம் ஏதும் இல்லை. வ‌ன்முறையை காத‌லிக்கும் உங்க‌ளுக்கு காத‌லின் வ‌ன்முறை புரியாம‌ல் போக‌லாம். ஆனால் அந்த‌ ப‌ட‌ங‌க்ளை எல்லாம் போற்றும்போது அது உங்க‌ள் ர‌ச‌னை என்று சொன்ன‌ என் முதிர்ச்சி கூட‌ உங்க‌ளிட‌ம் இல்லாம‌ல் போன‌து ஆச்ச‌ரிய‌ம். என‌க்கு பிடிக்க‌ல‌. அத‌னால் குப்பைதான், ந‌சுங்கிய‌ சொம்புதான் என்னும் பாங்கு உங்க‌ள் முக‌மூடியை கிழிக்கிற‌து. விக‌ட‌னில் 42 மார்க்காம். அவ‌னுங்க‌ என்ன‌ பெரிய‌ டுபுக்குங்க‌ என்று சொல்வீர்க‌ள்.

உங்க‌ள் ஆஸ்தான் த‌ல‌ க‌லைஞ‌ரின் எதிர்ப்பில் வெளிவ‌ரும் ப‌ட‌த்திற்கு வேறு என்ன‌ சொல்ல‌ முடியும் உங்க‌ளால்?

// இவன மாதிரி ஆட்கள் நசுங்குன சொம்பு தூக்கிகிட்டு கூவுறதுதான் ரசிக்கமுடியாமல் போகுது//
சொம்பு த‌ரையில் நிற்க‌ அடிப்ப‌க்க‌ம் த‌ட்டித்தான் இருக்கும். அது ந‌சுங்கிய‌தாக‌ நினைத்தான் ந‌சுங்கிய‌துதான். சொம்பு கிட‌க்க‌ட்டும் பாஸ், உங்க‌ள் நாத்த‌ம் பிடிச்ச‌ ஜ‌முக்காள‌த்தையும் எடுத்துக் கொண்டு அடுத்த‌ ஆல‌ம‌ர‌த்திற்கு செல்லுங்க‌ள். சிறுத்தை க‌ர்ஜிக்கிற‌து என்று ஒரு ப‌ஞ்சாய‌த்தை தொட‌ங்குங்க‌ள்.

Thamira said...

:-))))))))) ஹேஹெஹெ.. பதில் சொல்லிட்டாண்டோய்.!! எங்க திருந்திட்டியோன்னு நினைச்சுட்டேன். நான் சொல்லவந்தது என்ன.. நீ பதிலுக்கு என்ன பண்ணிவச்சிருக்கே பாத்தியா? உனக்கே சிரிப்பா வரலை.? :-)))))))))) ROTFL.!!!!!

கார்க்கிபவா said...

உங்க‌ளையெல்லாம் ம‌திச்சு ப‌தில் சொல்றேன்னு லைட்டா சிரிப்பு வ‌ந்துச்சு ச‌கா.. போங்க‌ போய் இளைஞ‌ன் பாருங்க‌. ந‌ல்லா இருக்காம்.

Unknown said...

One thing i cant understand ..... perception of people varies ,,,, even i heard Mixed reviews for this movie ... i think its a neutral review ...

i think all the anti commands for this review is from die hard vijay fans who luv him a lot(udane naan ajith fan but i like this movie nu comment adikaatheenga bcaus it sounds silly ) ... But pls dont offend others ,,,,

wait and watch .. the future of this movie will be decided in coming days ,,,

intha padathulla niraya minus and plus irukku ,,,

Plus Vijay acting , change of vijays stero type role etc,,,,,

and the minus as cable told ...

Unknown said...

SAD news ... let down at Trichy .,,,,,]


Theatres screened vijays Kavalan were in dull moment ...

check d below link ...






http://www.limata.com/Booking/Ticket3.aspx?Show=15092&MovieID=1276&MovieName=Kaavalan&Company=Kalaiarangam%20A/C%20Dts&CinemaName=Kalaiarangam%20A/C%20Dts&cCharge=20.00&ScreenID=255&Screen=Kalaiarangam%20A/c%20Dts&LocationName=Tiruchy&sDate=01/22/2011&sTime=02:00%20PM&sClassID=299&sClassName=Open%20All&sSeats=50

mani sundaram said...

டுபாகூர் சங்கர்... காவலன் இன்றைய நிலவரம் தெரியுமா? உங்களுக்குத்தான் நிறையா தியேட்டர் அதிபர்களெல்லாம் தெரியுமே, சொல்லிருப்பாங்களே.... அதான் சார் நான் சொல்லறது நீங்க எப்பவுமே ஒரு டுபாகூர் தான்....

Vediyappan M said...

நல்ல விமர்சனம், படம் பார்த்த திருப்தி. செலவு மிச்சம். எல்லாம் சரி படத்தோட இயக்குனர், ஒளிப்பதி பற்றியெல்லாம் சொல்லுவீங்களே? விமர்சனம் முழுக்க விஜய பாத்தே எழுதிறீங்களே எப்படி?

Anonymous said...

Dear Cable Shankar, This is the first time I am visiting your blog. Oru paanai sothukku oru soru patham. And I think its a waste of time. Nadu nilamaiya review pandran endu solreegale thavira seireega illaiye. Vijayna mattum aen evalo veruppa kaaturega. Vaala vidunga pa. I personally recommended this movie for many and they throughly enjoyed the film and I will recommend this to all. Naan vijay fan endatha perumaiya sollika virumbiran. Nadigana nadigana mattum parunga. Arasiyal vendame. Cable, 2 line vijaya pathi nalla solli irukkeega. Antha rendu lineitkaga ungalukku oru kumbidu.

s.mohammed said...

cable sankar ORU MOVIE EDUPATHU EVALO KASTAMNU UNAKU THERIYUM .athai mathiri athai vimarsanam panrathu evalavu easynu ellarkum theriyum.nee enna perusa senchutenu inga vanthu pesure .vijayku karnataka keral mumbai overseas tamilnadunu fans crores kanukil irukanga aana un blogku? yaanai kathukule venumna erumbu poi aatalam aana yaanai mithika venam muchu vitala erumbu irukira idam theriyama poirum . kaavalan averagenu mark podure unaku naan mark podava. un mark itho third rated fellow.