Thottal Thodarum

Jan 5, 2011

சினிமா வியாபாரம்-2

பகுதி-5
அறுபது டூ ஷீட், நாற்பது ஃபோர் ஷீட், தியேட்டர் வாசல் மற்றும் முக்கிய ஜங்க்‌ஷனில் 20 சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் இல்லாமல் 20 சிங்கிள் ஷீட் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் இல்லாமல் போய்விட்டதா? எப்படி என்றே எங்களுக்கு புரியவில்லை. அதற்கு முன் உங்களுக்கு ஒன்று புரியவைக்க வேண்டிய விஷயம் இந்த டூ, சிக்ஸ், ஃபோர் ஷீட் என்றால் என்ன என்பதை பற்றி.

ஒன்றுமில்லை முப்பதுக்கு நாற்பது என்கிற அளவில் டிசைன் செய்து போடப்படும் போஸ்டருக்கு பெயர் தான் சிங்கிள் ஷீட் போஸ்டர். சிங்கிள் ஷீட் தான் அடிப்படையான அளவு. அதை விட பெரிதாக அடிக்க, இரண்டு, நான்கு, ஆறு என்று இரட்டைப்படையாய் அடித்து ஒட்டுவோம். போஸ்டர் பெரிதாக பெரிதாக படத்தை பற்றிய விளம்பரம் மக்களிடம் போய் சேரும். அதில் முக்கியம் அதன் மேல் ஒட்டப்படும் சிலிப் எனப்படும் செவ்வக பிட் நோட்டீஸ். அது ஒரு ஸ்டாண்டர்ட் சைஸ்தான். போஸ்டரில் படத்தை பற்றி மட்டுமே இருக்கும். அதன் மேல் எந்த தியேட்டரில், எத்தனை காட்சிகள் என்று ஒரு அறிவிப்பு இருக்கும் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் பெயர்தான் சிலிப்.

பப்ளிசிட்டிக்கு மிக முக்கியம் போஸ்டர். பேப்பர் விளம்பரத்துக்கு பிறகு அந்தந்த திரையரங்குக்கு சுற்றுள்ள பகுதிகளுக்கு இந்தப்படம் இந்த திரையரங்கில் ஓடுகிறது என்பதை அறிவிக்க இது முக்கியம். மக்களுக்கு பெரிய படமோ, சிறிய படமோ.. முதல் வாரத்தில் நிச்சயமாய் பத்திரிக்கை பார்த்து தியேட்டரை தெரிந்து கொள்வார்கள். அடுத்த வாரங்களில் மறந்தும் விடுவார்கள். அப்போது தான் போஸ்டர் மிக முக்கியம். போஸ்டர் விளம்பரம்தான் அந்தந்த ஏரியா தியேட்டர்களுக்கான முக்கிய விஷயம்.

ஒரு ஏரியாவில் ஒரு தியேட்டருக்கு மேல் படங்கள் வெளியிடப்படாத நாட்களிலேயே போஸ்டருக்கு அவ்வளவு முக்யத்துவம் இருக்கிறது என்றால். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில், சுற்றுள்ள மூன்று கீலோமீட்டருக்குள் ஒரே படத்தை வெளியிடும் போது நிச்சயம் போஸ்டர் விளம்பரம் முக்கியம்.

எப்படி மனுநீதி படம் செங்கல்பட்டு ஏரியாவில் அசோக்நகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர் என்று சுற்றுள்ள ஏரியா மக்களுக்கு இந்த ஒரே தியேட்டரில் தான் வெளியாகியிருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எங்கள் தியேட்டரில் வெளியிடப்படும் படம் பக்கத்து காசியிலும், சிட்டி பார்டரில் உதயத்திலும், இன்னும் ஒரு ரெண்டு கிலோமீட்டரில் பரங்கிமலை ஜோதியிலும் வெளியாகிறது. அப்போது அவரவர் ஏரியாக்களை சுற்றி போஸ்டர் ஒட்டினால் தான் படம் பார்க்கும் ரசிகர்கள் அவரவர் அருகிலிருக்கும் தியேட்டருக்கு செல்வார்கள். தியேட்டருக்கும் வருமானம் வரும்.

இப்படி பல விதங்களில் முக்யத்துவம் வாய்ந்த போஸ்டர் விளம்பரத்தை பற்றி உணர்ந்துதான் நாங்கள் நூறு போஸ்டர்கள் வாங்கி ஒட்டியும் விளம்பரம் இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சம் விசாரணையை ஓட்டி பார்த்த போது அடங்கொன்னியா இப்படி ஒரு தில்லாலங்கடி இருக்கா? என்று ஆச்சர்யப்பட்டோம்.

ஒவ்வொரு ஏரியவிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு டூ ஷீட், ஃபோர் ஷீட், சிக்ஸ் ஷீட், என்று இடங்களை செலக்ட் செய்து போஸ்டர் ஒட்டுபவனிடன் சொல்லிவிட்டு வந்துவிட்டோம். ஆனால் அதை சரியாக ஒட்டினார்களா? என்று செக் செய்ய தவறிவிட்டோம். ஆம் அவர்கள் அப்படி ஒட்டாமல் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணமே எங்களுக்கு எழவில்லை. தியேட்டர் திறந்த அடுத்த நாள் நாங்கள் போஸ்டர் ஒட்டச் சொன்ன பல இடங்களில் போஸ்டர்கள் இல்லை. சில இடங்களில் அரசியல் போஸ்டர்கள் இருந்தது, சில இடங்களில் கிழிக்கப்பட்டு கிடந்தது. அப்படி இப்படி எண்ணிப் பார்த்ததில் சுமார் நாற்பதுக்கு அதிகமான போஸ்டர்கள் கண்ணில் படவேயில்லை.

வாத்யாரிடம் மிகவும் வருத்தப்பட்டோம்.. இப்படி ஏமாத்துறானுங்களே..? என்று. “இதெல்லாம் சகஜம்ங்க.. ஒரு வாரம் போவட்டும் எப்படி கண்ணுல விரல விட்டு ஆட்டிறலாம்”. எதற்காக இப்படி பண்ணுகிறார்கள்? போஸ்டர் ஒட்டாமல் அதை என்ன செய்வார்கள்? ஒட்டின போஸ்டரை கிழிப்பது ஏன்? போஸ்டர் மூடிட்டாங்க என்பது போன்ற கேள்விகள் ஓடின.

Post a Comment

10 comments:

vinu said...

quite informatica & interesting

Anonymous said...

என்னதான் தொலைக்காட்சி விளம்பரம் குடுத்தாலும்.. போஸ்டர் பார்த்து படம் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளதை மறுக்க இயலாது..

ஜி.ராஜ்மோகன் said...

போஸ்டர் ரொம்ப முக்கியம் தலைவா ! அதனால தானோ நீங்க போஸ்டர பத்தி சிறுகதையே எழுதி இருக்கீங்க !

செங்கோவி said...

போஸ்டரின் முக்கியத்துவம் நன்றாகப் புரிந்தது. நன்றி.

---செங்கோவி
சீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)

மாணவன் said...

போஸ்டர் விளம்பரத்தின் பயன்பற்றி தெரிந்துகொண்டோம் பகிர்வுக்கு நன்றி சார்

பிரபல பதிவர் said...

என்ன சினிமா வியாபாரமா? இல்ல தொடர் கதையா? இப்பிடி சஸ்பென்சா முடிக்கிறீங்க‌

'பரிவை' சே.குமார் said...

போஸ்டர் ரொம்ப முக்கியம்...
தொடர் ரொம்ப சஸ்பென்ஸோட போகுதுண்ணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போஸ்டர் விளம்பரத்தின் பயன்பற்றி தெரிந்துகொண்டோம்

pichaikaaran said...

விறுவிறுப்பா போகுது

ஒரு வாசகன் said...

போஸ்டரில் புதுமை செய்தவர் கலைப்புலி தாணு என்பது சரிதானா? கூலிக்காரன் படத்தின் பூசைக்கு பிரமாண்டமான போஸ்டர் பார்த்தாக ஞாபகம்.