Thottal Thodarum

Jan 24, 2011

கொத்து பரோட்டா 24/01/11

சென்ற வாரம் யுத்தம் செய் படத்தின் ப்ரோமஷனுக்காகவும், உலக சினிமா பற்றி பேசவும், வழக்கம் போல் விஜய் டிவியில் கூப்பிட்டிருந்தார்கள். வழக்கம் போல் போயிருந்தோம். அவர்களும் வழக்கம் போல் இரண்டு மணிக்கு வரச் சொல்லிவிட்டு ஆறரை மணிக்கு ஆரம்பித்தார்கள். மீண்டும் வழக்கம் போல் போய்விட்டு வந்து புலம்புகிறேன். ஆனால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாய் இருந்தது. வருகிற குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாகிறது. வாட்ச் இட்.
###########################################
மிஷ்கினிடம் சாருவை பற்றிக் கேட்ட போது சாரு என் நண்பர், நண்பர், இன்னமும் என் நண்பர் என்றார். ஒரு வேளை சேர்ந்திட்டு இவரு நண்பனின் துரோகம்னு புக் போடுறதுக்கும், அவர் நந்தலாலாவுக்குமா ஆட்டம் ஆடுறாய்ங்களோ. அதே போல உலகப் படம் பத்தி கேட்ட போது அவர் சொன்னது தமிழ் நாடும் உலகத்தில தானே இருக்கு என்பதுதான். இதைத்தான் அவருடய நந்தலாலா நிகழ்ச்சியில் சொன்னேன். சேம் பிஞ்ச்
###########################################
பதிவுகளில், பத்திரிக்கைகளில், மாத இதழ்களில்  எழுதுவதை தவிர சில புதிய இணைய இதழ்களிலும் எழுதக் கேட்கிறார்கள். அப்படி புதிதாய் ஆரம்பித்திருக்கும் இணைய தமிழ் இதழான அதீதம் எனும் தளத்திலும் எழுத கேட்டிருந்தார்கள். அதில் பொங்கல் படங்களை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நான் எழுதியிருந்தேன். அது மட்டுமில்லாமல் நல்ல சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சினிமா என்று எல்லா தளத்திலேயும் முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய இரட்டை வேட டெக்னிக் பற்றிய இந்த பதிவு செம இண்ட்ரஸ்டிங்.. உங்களின் படைப்புகள் அதீதம் இதழில் வர அவர்களது மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். முக்கியமாய் இணையத்தில் எங்கும் வெளிவராத படைப்புகளாய் இருப்பது நன்று.atheetham@gmail.com
###########################################
இந்த வார தத்துவம்நல்ல செழுமையான பாசிட்டிவ் எண்ணங்கள் பாசிட்டிவான விளைவுகளை கொடுக்கும்.

நேரம் தான் உலகத்தின் மிக முக்கியமான ஆட்ட நாயகன். ஏனென்றால் அது தான் நாம் காத்திருக்கும் போது அதிக நேரம் போலவும், கொண்டாட்ட களியாட்டகளின் போது விரைவாக ஓடும்.
############################################
அப்பா வீடு ஒண்ணு சீக்கிரம் கட்டுப்பா… என்றான் சின்னவன். இருக்கிற வீட்டிற்கு சரியாக வாடகை கொடுத்தாலே பெரிய விஷயம் என்று மனதுள் நினைத்தபடி சரி என்றேன், மொத்தம மூணு பெட்ரூம், எங்களுக்கு ஒண்ணு, உங்களுக்கு, பாட்டிக்கு, அப்புறம் ஒரு பெரிய கிச்சன், கோயில் மாதிரி கட்டின சாமி ரூம், பெரிய ஹால். அதில பிஸ்2,3, எக்ஸ்பாக்ஸ், ஹோம் தியேட்டர், பெரிய ப்ரொஜெக்டர், பெரியஎல்.ஈ.டி டிவி, அப்புறம் ஒரு ரொமான்ஸ் ரூம். என்றான் அதை கேட்டதும் அதிர்ந்து போய் அதென்னடா அது ரொமான்ஸ் ரூம் என்றதும், “என்னப்பா இது கூட தெரியல.. இந்த ஸ்டார் ஓட்டல்ல கொஞ்சமா லைட் போட்டு நடுவுல சேர் போட்டு ஒருபாய் கேர்ள் பேசிக்குவங்களே அதான்” என்றான். சினிமா
############################################# 
இந்த வார ப்ளாஷ்பேக்
Fools Gardernனின் லெமன் ட்ரீ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அற்புதமான பாடல் வரிகள். எப்போதெல்லாம் கொஞ்சம் டல்லாகிறேனோ அப்போதெல்லாம் இப்பாடலை கேட்டாலோ, பார்த்தாலோ சட்டென புத்துணர்ச்சி வந்த மாதிரி இருக்கும். அவ்வளவு அருமையான பாடல்.
#################################################
இந்த வார குறும்படம்
வீடு
என்கிற இந்த குறும்படம் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படமாய் தெரிகிறது. ஆனால் சுவாரஸ்யமாய் கதை சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
########################################################
இந்த வார விளம்பரம்
####################################################
இந்த வாரக் கொடுமை
22012011092  22012011095
மேலே உள்ள படங்கள் ஏதோ சினிமாவுக்காக எடுக்கப்பட்டவை அல்ல.. கருணாசுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் வேஷம் போட்டு பெரிதாய் ஒட்டப்பட்ட முக்குலத்தோர் புலி என்று கோவையில் நடைபெறவிருக்கும் நிகழ்வின்  போஸ்டர்.. என்ன கொடுமைங்க இது.
###############################################
இந்த வார புத்தகம்
ஓரிரவு ஒர்ரயிலில் என்று சுஜாதா எழுதிய குறுகுறுநாவல் 25 ரூபாய்க்கு கிழக்கில் சல்லீசாய்  போட்டிருந்தார்கள். எப்படி என்னிடம் இல்லாது போனது என்று தெரியவில்லை. குட்டியூண்டு புத்தகம். ஆரம்பம் முதல் படு ஸ்பீடு. க்ளைமாக்ஸை முன்னமே யூகிக்க முடிந்தது, சுஜாதாவின் அத்துனை கதைகளையும் படித்ததன் விளைவாக இருக்கலாம். 

பா.ராகவனின் உணவின் வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமாய் இருக்கிறது. முக்கியமாய் என்னைப் போன்றே உணவுக் காதலரான பா.ரா. அதை எழுதும் பொழுது, சில இடங்களில் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
################################################
இந்த வாரம் படித்தது
ஏதாவது தவறு செய்துவிட்டு
என்னை சமாதானப்படுத்தும்
அழகிற்காகவது
அடிக்கடி தவறு செய் 

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்
பெறாத முத்தத்திற்காக நானும்
தயக்க மூலாம் பூசியபடியே
பேசிக் கொண்டிருக்கிறோமே
எப்போது இந்த தயக்கக்கூட்டை
நீ தகர்ப்பாய்?

எழுதியவர் மணிகண்டவேல் எனும் நம் பதிவர்.
#############################################
அடல்ட் கார்னர்
Good girls loosen a few buttons when it's hot. Bad girls make it hot by loosening a few buttons.
Good girls only own one credit card and rarely use it. Bad girls only own one bra and rarely use it.
Good girls wax their floors. Bad girls wax their bikini lines.
Good girls blush during love scenes in a movie. Bad girls know they could do it better.
Good girls think they're not fully dressed without a strand of pearls. Bad girls think they're fully dressed with just a strand of pearls.
Good girls wear high heels to work. Bad girls wear high heels to bed.
Good girls say, "Don't... Stop..." Bad girls say, "Don't Stop..."
#######################################
கேபிள் சங்கர்Post a Comment

22 comments:

நாரதர் கலகம் said...

வடை வாங்க வந்துட்டோம்ல

Katz said...

;-)

Philosophy Prabhakaran said...

அதீதம் இணைய இதழ் பற்றிய தகவலுக்கு நன்றி... இந்த வாரம் அடல்ட் கார்னர் நிறைய இருக்கு... யாரு பின்னிரவு வரை முழிச்சிருந்து மைனஸ் ஓட்டு குத்துராங்களோ...

க ரா said...

குறும்படம் சான்ஸே இல்ல... செமயா இருக்கு :)

பெசொவி said...

நல்லா இல்லை.
(பாராட்டி போர் அடிக்குது, கேபிள்ஜி)

மாணவன் said...

வழக்கம்போலவே கொத்து பரோட்டா அருமை சார்

கோநா said...

காரம், மசாலா நிறைந்த கொத்து, அதிலயும் கடைசி பஞ்ச் (முந்திரி) பருப்புகள், ப(க)டிக்கச் சுவை, சும்ம்ம்மா... பின்றீங்க cable sankar.

அன்பேசிவம் said...

Just a yellow lemon tree.... :-)

Anonymous said...

///அதே போல உலகப் படம் பத்தி கேட்ட போது அவர் சொன்னது தமிழ் நாடும் உலகத்தில தானே இருக்கு என்பதுதான். இதைத்தான் அவருடய நந்தலாலா நிகழ்ச்சியில் சொன்னேன்.சேம் பிஞ்ச் ///
அப்போ என் நீங்க மிஸ்கின் என்னை பார்த்து காப்பி அடித்துவிட்டார் என்று சொல்லவில்லை.

R.Gopi said...

//கருணாசுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் வேஷம் போட்டு பெரிதாய் ஒட்டப்பட்ட முக்குலத்தோர் புலி//

*********

சங்கர் ஜி

”இளைய தலைவலி” விஜய்யை பராக் ஒபாமா போலவும், அப்துல் கலாம் போலவும் போஸ்டர் அடிச்சு ஒட்டின கொடுமைய பார்த்த நாம் இதெல்லாம் பார்த்து கலங்கிடுவோமா என்ன? சொல்லுங்க ஜி...

அதுக்கு இது எவ்வளவோ தேவலை..

சக்தி கல்வி மையம் said...

மீண்டும் வழக்கம் போல் SUPER..
http://sakthistudycentre.blogspot.com

Ganesan said...

நிறைய தகவல்கள் இந்த வாரம்.

thanks cable.

MANO நாஞ்சில் மனோ said...

//நல்ல செழுமையான பாசிட்டிவ் எண்ணங்கள் பாசிட்டிவான விளைவுகளை கொடுக்கும்.//சரியாக சொன்னீர்கள் மக்கா....

ஆர்வா said...

தல மிக்க நன்றி..

ஆர்வா said...

சின்னப்பையன் ஃபுல் ஃபார்ம்ல இருக்கான் போல.. மீண்டும் ஒரு கதையை படிச்சிட்டானோ??

ஜி.ராஜ்மோகன் said...

கருணாசுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் வேஷம் போட்டு பெரிதாய் ஒட்டப்பட்ட முக்குலத்தோர் புலி.............
இந்த கொடுமை தமிழ்நாட்ட தவிர வேற எங்க நடக்கும் ..........

Unknown said...

ராஜ்மோகன் சொன்ன மாதிரி தமிழ் நாடில இதெல்லாம் சகஜம் அப்பா


ஏதும் அரசியல்ல கருணாசு சேரப்போவதாக இருக்கோ

Anonymous said...

>>> விஜய் டி.வி. கண்டிப்பாக பார்க்கிறேன். யுத்தம் செய்தாலாவது கத்திரி போடமால் இருக்கிறார்களா என்று பார்ப்போம்

Unknown said...

பசங்களின் வீடு கனவை எப்ப நிறைவேற்ற போறோம்ன்னு தெரியல...

Unknown said...

கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!!

Ŝ₤Ω..™ said...

Yellow Lemon Tree.. பழைய நினைவுகளை கிளறிட்டீங்களேண்ணே..

Unknown said...

one more comment about good girls.

good girls go heaven


bad girls go everywere.