Thottal Thodarum

Jan 10, 2011

கொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.

Photo0147 நாலாம் தேதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட புத்தக கண்காட்சியில் நேற்று முன் தினம் முதல்தான் களை கட்ட தொடங்கியிருக்கிறது. ஆனால் ஆரம்பித்த நாள் முதல் "ஜே ஜே"வென கூட்டமிருந்த ஒரு சில கடைகளில் கிழக்கும் ஒன்று. எங்கெங்கு காணினும் சுஜாதா. தலைவன் இறந்தும் எழுத்துலக சூப்பர் ஸ்டார்தான். பெரிய பெரிய இலக்கியவாதிகளின் புத்தகமெல்லாம் 500 காப்பிக்கு போராடும் வேலையில் தலைவன் புத்தகம்  ரீபிரிண்டிற்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பது சுஜாதாவின் எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை. உயிர்மை இம்முறையும் பெரிய பேனர் வைத்திருக்கிறது. சுஜாதாவின் சிறந்த 50 நூல்கள் கிடைக்கும் என்று. மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களின் விளம்பரத்தை விட பத்து மடங்கு பெரியது. நிஜத்தில் அவரது இடத்தைப் பிடிக்க நிறைய தூரமிருந்தாலும்  ஜெ.மோவிற்கும்,சாருவுக்கும் அடுத்த சுஜாதா யார்? என்று ஒரு போட்டி வந்திருக்கிறது போலும். இலக்கியவாதிகள் எட்டாத வியாபாரத்தை இறந்து பின்னால் இலக்கியவாதி என்று ஒத்துக்கொள்ளப்பட்ட தலைவன் வியாபாரத்திலே தெரிகிறது. அதே போல் ஜெமோவின் உலோகம் நன்றாக போவதாய் சொன்னார்கள். என் சினிமா வியாபாரம் கிழக்கில் நேற்று வித்து போச்சு.. அஹா.. வித்து போச்சு என்றார்கள். சந்தோஷம். கிழக்கின் வெற்றிக்கு காரணம் என்னவென்று யோசித்தால் பரபரப்பான டைட்டில்கள், கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் விளம்பரபடுத்திக் கொள்வது, டெடிகேஷனான மார்கெட்டிங். வாங்குற காசுக்கு கொஞ்சம் வேல்யூ, முக்கியமாய் வாங்கும் விலை. ஒரேடியாய் இருநூறு, முன்னூறு என்று வைக்காமல் நூறு, நூற்றிருபது என்று மக்களை வாங்கத் தூண்டும் விலையில்  உள்ள புத்தகங்களும் தான் காரணம் என்று எனக்கு  தோன்றுகிறது. கண்காட்சியில் பாதி புத்தக விற்பனையாளர்கள் இவர்களது புத்தகத்தை வைத்துதான் கடை ஓட்டுகிறார்கள். வியாபாரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
காதலர் தினமிருப்பதாலோ என்னவோ தெரியலை. பிப்ரவரி மாதத்தின் ஆயுள் கூட குறைவுதான்.
வாக்குவாதத்தைவிட வளைந்து கொடுத்துப் போவது சால சிறந்தது.
தோல்வி மட்டுமே ஒரு வேலையை மீண்டும் சிறப்பாகச் செய்ய வாய்ப்பு கொடுக்கும். ஸோ.. தோல்வி நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
மீண்டுமொரு எக்ஸலண்ட் மெலடி. அமீர்கான், மன்சூர்கான் காம்பினேஷனில் ஆனந்த் மிலின்ந்தின் இசையில் அட்டகாச ஹிட். இன்றும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்

அற்புதமான மனதை நெகிழ வைக்கும் குறும்படம். தேசிய விருது பெற்ற படம்.  நலிந்து வரும் கலைகளை வாழ்வாதாரமாய் கொண்டு போராடும் கலைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம். எனக்கென்னவோ படத்தின் க்ளைமாக்ஸ் கொஞ்சமே கொஞ்சம் லெந்தியாகிவிட்டதோ என்ற எண்ணம் இருந்துக் கொண்டேயிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உயிர்மை ஸ்டாலில் சாருவின் ஜீரோ டிகிரியை பதிவை வைத்து ஒரு தொடர் காமெடி நிகழ்வு நடந்ததாக தெரிகிறது. ஒரு குட்டி பதிவர் சந்திப்பே  என் புத்தகங்கள் விற்கும் 176 ஸ்டாலில் நடந்தது, மணிஜி, யாத்ரா, கோபி, எல்.கே, பிலாசபி பிரபாகர், சிவகுமார், நேசமித்ரன், கார்க்கி, நர்சிம், சுரேகா, குகன்,சங்கர், மதார், தினேஷ், மயில் ராவணன். கே.ஆர்.பி.செந்தில், பார்வையாளன் என்று ஒரே கும்மாளம்தான். மும்பையிலிருந்து வாசகர் யூசுப் நேரில் சந்தித்து புத்தகங்களை வாங்கிச் சென்றார். சில பேர் என்னை கிராஸ் செய்யும் போது நின்று யோசித்து, என்னை விசாரித்து, கைகுலுக்கி, பதிவுகளை படித்ததை பற்றி பேசி புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். அருண், ஜெய், ராஜ் போன்ற புதிய நண்பர்களுடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ராஜின் விஸ்தாரமான சினிமா ஆர்வம் இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் கோடார்ட், பெலினியின் படங்களை பற்றி பேசிய விஷயங்கள் சுவாரஸ்யம். கிளம்பும் போது ரொம்ப நாளாச்சு சார்.. சிங்கத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மசாலா படம் பார்த்து என்றார். விசா ஸ்டாலில் ஒரு பெண் என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு, கிளம்பும் போது அருகில் வந்து கேபிள் சங்கர்தானே? என்று கேட்டுவிட்டு அரை மணி நேரம் பேசிவிட்டுச் சென்றார். என் கதைகள் அனைத்தையும் படித்திருக்கிறார். பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறார். பேசிய அரை மணி நேரத்தில் மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தாவை பற்றி இருபது நிமிஷம் பேசினார். க்டந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கண்காட்சி மேலும் புத்துணர்வை கொடுத்திருக்கிறது. நானும் கொஞ்சம் பிரபலம் தான் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெயமோகனின் சில கட்டுரைகள், ஒரிரு சிறுகதைகள் என்று அவ்வப்போது  இணையத்தில் படித்திருக்கிறேன். இப்போது தான் உலோகம் வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். த்ரில்லர் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மெதுவாய்த்தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாய் அந்த ஈழப் பின்னணி நிச்சயம் வரும் காலத்தில் கொஞ்சமேனும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இல்லை ஏற்பாடாவது செய்வார்கள். இருந்தாலும் ஒரு புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறார் ஜெ.மோ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தினம் ரெண்டு புத்தகம் என்று என் கலெக்‌ஷன் ஆரம்பித்திருக்கிறது. ஜொ.மோவின் உலோகம், நரசய்யாவின் கடலோடி, தலைவனின் கரையெல்லாம் செண்பகப்பூ, கம்ப்யூட்டர் கிராமம், சிவந்த கைகள், ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, என்று லிஸ்ட் தொடர்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்காட்சியில் நண்பர் தாமு தன் நண்பருடன் வந்திருந்தார். மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். 1930களிலிருந்து ஆங்கில கிளாசிக் படங்களை கலெக்ட் செய்து வைத்திருக்கிறாராம். என்னுள் இருக்கும் சினிமாக்காரன் முழித்துக் கொண்டான். நிறைய பழைய க்ளாசிக் படங்களை பற்றி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நண்பரே.. ஒரு நாள் உங்க வீட்டிற்கு ஒரு விசிட் இருக்கிறது. உங்கள் டிவிடியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதே போல நண்பர் பதிவர் சிவகுமாருடன் நடந்த சீரியஸான சினிமா பற்றிய கேள்விகள் அதற்கான தர்க்கங்கள் என்று பேசிய விஷயங்கள் இருவருக்கும் உபயோகமாய் இருந்தது. தான் கேட்க வேண்டியதை மிகத் தெளிவாக கேட்டு, சில சமயம் சொல்லி அசத்தினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தோழியும் அவரது கணவரும் வந்திருந்தார்கள். மாலையில் பா.ராவின் கிழக்குக்கு போட்டியாய் ஒரு பெரிய ஜமா 176 நடைபாதையில் ஓடியது.  வந்திருந்த பெரும்பாலான கூட்டம் மால்களில் விண்டோ ஷாப்பிங் போல வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு போனது மிகவும் வருத்தமான விஷயம். இரண்டு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. வந்த கும்பலில் அட்லீஸ்ட் ஒரு 75ஆயிரம் பேர் ஆளுக்கு நாற்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே பெரிய தொகை கிடைக்கும் என்று கார்க்கி ஸ்டாடிஸ்டிக் ரிப்போர்ட் சொன்னார். கடைசி நாள் அன்று கேட்போம். கிழக்கில் புதிய பதிப்பாய் வந்திருக்கும் சில சுஜாதாவின் புத்தகங்கள் விசா பதிப்பகத்தில் கொஞ்சம் சல்லிசாக கிடைகிறது. உ.த. கரையெல்லாம் செண்கப்பூ கிழக்கில் சுமார் 130 விசாவில் 85. மீனாட்சியிலும் நாளை முதல் கிடைக்குமென்றார்கள். நிறைய பேர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தார்கள். சிங்கப்பூரிலிருந்து ராஜ்குமார், சவுதி அரேபியாவிலிருந்து நண்பர் ஒருவர் என்று பல புது முகங்களை இன்று சந்திக்க நேர்ந்தது. புஷ்பா தங்கதுரையின் கதைகள் பழைய பதிப்புகள் பத்து, இருபது ரூபாய்க்கு முழு நாவலே பூம்புகாரில் கிடைக்கிறது. பேயோனின் புதிய புத்தகம் ஆழியில் வெளியாகியிருக்கிறது. லக்கி வாங்கியிருக்கிறார். உயிர்மையில் பார்த்திபன் வந்திருந்தார். சுத்தி எஸ்கார்டெல்லாம் நின்றிருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து எஸ்.ரா வந்திருந்தார். அவரை சுற்றி ஒரு இருபது பேர்களாவது நின்றிருந்தார்கள். ஒருவர் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். சாருவும் அரங்கிலிருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாளை மாலை பதிவர். கவிஞர்.நேசமித்ரனின் “கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” என்கிற கவிதை நூலை உயிர்மையில் வெளியிடப் போகிறார்களாம். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க நண்பர் நேசமித்ரன் சார்பாய் அழைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Photo0148 இயக்குனர் வடிவுடையான். சாமிடா படத்தின் இயக்குனர்.  அப்படம் பெரிதாய் ஓடவில்லை என்றாலும் எனக்கு அப்படத்தின் மேக்கிங் பிடித்திருந்தது. அவரது உதவி இயக்குனர் பவன் என் வாசகர். என்னை இயக்குனர் சந்திக்க விரும்புவுதாக சொன்னார். மிக அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.. உடன் மலையன் பட இயக்குனர் வேறு நடுவில் வ்ந்து கலந்து கொள்ள, சுவையான சினிமா பற்றிய டிஸ்கஷன் நடந்தேறியது. விரைவில் அவரது திரைப்படமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் வெளியாக இருக்கிறது. நிச்சயம் கரணுக்கும், தனக்கும் ஒரு பெரிய ப்ரேக் உண்டாகும் என்கிற நம்புகிறார் வடிவுடையான். இன்னும் கொஞ்ச நாளில் இவரே கூட நடித்தாலும் நடிக்கலாம். அவ்வளவு எக்ஸ்பிரசிவ். இலக்கியத்தில் ஈடுபாடுடயவர் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அடுத்தப்பட டிஸ்கஷனில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்றார். மகிழ்ச்சி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் பெரும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். இன்னொரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் இப்படத்திற்கு வசனம் நம்ம.. பா.ராகவன் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Post a Comment

33 comments:

pichaikaaran said...

பதிவர்கள் அல்லாத சிலர் கூட , உங்களை ஒரு ஸ்டார் போல பார்த்தது , பேசியது ஆகியவற்றை பார்த்தபோது பொறாமையாக இருந்தது . ஹிஹி

ஷண்முகா said...
This comment has been removed by the author.
ஷண்முகா said...

good to know the book fair experiance....but me live in different country we are not able to make out to visit there...

One small request /No One Killed Jessica/ Vimarsanam vendum...

க ரா said...

இந்த வார கொத்து சூப்பர்னா :)

pichaikaaran said...

்: புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்

எல் கே said...

உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி சங்கர். மீண்டும் இந்த வாரம் வருவேன்.

CS. Mohan Kumar said...

Nice.

Glad that my friend is becoming a VIP.

சக்தி கல்வி மையம் said...

உங்க புத்தகம் எல்லாம் 176 - ம் நெம்பர் ஸ்டாலில் கிடைக்குமா...

Cable சங்கர் said...

என் எல்லா புத்தகங்களும் அந்த ஸ்டாலில் கிடைக்கும் நண்பா..

ஜி.ராஜ்மோகன் said...

நம்புங்க தலைவா நீங்களும் பிரபலம் தான் ! பதிவுலகம் வந்ததில் இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம்
அதிகரித்து வருகிறது என்று நினைக்கிறேன்

Unknown said...

//உங்க புத்தகம் எல்லாம் 176 - ம் நெம்பர் ஸ்டாலில் கிடைக்குமா...//

கிடைக்கும் தல...

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் கொத்து.

Unknown said...

//தோல்வி மட்டுமே ஒரு வேலையை மீண்டும் சிறப்பாகச் செய்ய வாய்ப்பு கொடுக்கும். ஸோ.. தோல்வி நல்லது//

ஆகா! இத ஆட்டோ பின்னாடியே எழுதலாமே! சூப்பர் பாஸ்!

Krubhakaran said...
This comment has been removed by the author.
Krubhakaran said...

நான் 8ம் தேதி அன்று புத்தக கண்காட்சியில் உங்களை பார்த்தேன் ஆனால் பேசவில்லை. வாலி அவர்களின் அன்றைய கவியரங்க பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. சுமார் 6.30 நிமிட பேச்சை விடியோ எடுத்தேன் அந்த விடியோ இங்கே

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

Jana said...

கர்ணமோட்சம்... வாவ்... முன்னரே பார்த்து லகித்து நின்றது.
இது பற்றி ஒரு தனிப்பதிவே போட்டிருக்கலாம் அண்ணா.

Wanderer said...

ஜீ!

நரசய்யாவின் 'கடலோடி' எங்கே கிடைக்கும்?

நன்றி!

Ganesan said...

கேபிள்,

நீங்க என்ன வாசகர் கூட்டமே வச்சிருக்கீங்க,உங்கள ஒரு நாளைக்கு 100 கைகள் கை குழுக்குதாமே.

பலூன்காரன் said...
This comment has been removed by the author.
ஜோசப் பால்ராஜ் said...

சென்னை புத்தக கண்காட்சி பற்றி எல்லாரும் எழுதி எழுதி எனக்கு அங்க இல்லாம போயிட்டோமேன்னு வருத்தமா இருக்கு

மென்மேலும் பெரிய பிரபலமாக வாழ்த்துக்கள் அண்ணா.

நல்ல நேரத்துல போட்டிங்க அந்த வொர்க் ஃப்ர்ம் ஹோம் விளம்பரத்த .

முஹம்மது யூசுப் said...

மும்பையிலிருந்து வரவில்லை தலைவரே. இதோ இருக்கிற மடிப்பாக்கத்திலிருந்துதான் :-) மும்பையில் பொட்டி தட்டிவிட்டு இப்பொழுது சென்னைக்கு புலம் பெயர்ந்துவிட்டேன். முதன்முறை எனது பெயர் ஒரு பிரபலம் வாயால் உச்சரிக்கப்படுவதில் உச்சி குளிர்கிறேன். இப்பொழுதுதான் சாரதா ரெட்டியை வாசித்துவிட்டு வந்தேன். மன்னிக்கவும். ஷ்..ர..த்..தா ரெட்டி :-) வீரியமான ஒரு கதாபாத்திரம். சுமாரான அழகுடையவள் என கதாபாத்திரம் கூறினாலும், உங்களது வர்ணிப்பு பேரழகு. ஒரு கேள்வி. கதைநாயகன் பெயர் ”சங்கர்” என இல்லாமல் ”ஷங்கர்” எனக் குறிப்பிடப்படுவதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?

செ.சரவணக்குமார் said...

பட்டயக் கெளப்புறீங்க. வாழ்த்துகள் தல.

மேவி... said...

நபர்களின் பெயர் பட்டியலில் என் பெயரை காணவில்லை .....

இத்தனைக்கும் உங்களது இரண்டு புஸ்தகங்களையும் காசு தந்து வாங்கிருக்கேன் :))))))))

பதிவு நல்லாயிருக்கு

பிறகு பாரதி பதிப்பகத்தில் சுஜாதா நாவலொன்று ரூபாய் 25 /= க்கு கிடைக்கிறது ...1970 களில் வந்தது

கார்க்கிபவா said...

சாருவை சுற்றி ஜனதா தள உறுப்பினர்கள் இருந்ததை சொல்லாமல் விட்டீர்களே

ராகின் said...

ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" வாங்கணும்னு கமெண்ட் போட்டிருந்தீங்க ஜீ.. ஜஸ்ட் ஒரு ரிமைண்டர்..:)

Cable சங்கர் said...

@பார்வையாளன்
நன்றி..

@ஷண்முகா
பார்க்கணும்

@இராமசாமி
நன்றி

@எல்.கே
நன்றி தலைவரே

@மோகன் குமார்
ஹி..ஹி.. நன்றி

@ஜி.ராஜ்மோகன்
யாருக்கு? :))

@சே.குமார்
நன்றி
@ஜீ
போட்டுட்டாபோச்சு.. நன்றி எஸ்.எம்.எஸ் பார்வர்ட் செய்தவர்

@கிருபா
நிச்ச்யம பார்க்கிறேன்

@ஜனா
ஆமாம் ஜனா

@இ.சி.ஆர்
176 ஆண்டாள்திரிஷக்தி புக் செல்லர்ஸிடம் கிடைக்கிறது..

@காவேரி கணேஷ்
இதில என்னவோ இருக்கு..?

@ஜோசப் பால்ராஜ்
வொர்க் பர்ம் ஹோம் மேட்டர் தெரிந்து தான் தேடிப் போட்டேன்

@முஹம்மது யூசுப்

சும்மா.... சரி உங்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

@செ.சரவணக்குமார்
நன்றி

@டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன்

@கார்க்கி
அஹா.. வடை போச்சே

@ராகின்
நன்றி தலைவரே வாங்கிடறேன்.

Unknown said...

potti thattura velai nna enna?

ராஜரத்தினம் said...

//கண்காட்சியில் பாதி புத்தக விற்பனையாளர்கள் இவர்களது புத்தகத்தை வைத்துதான் கடை ஓட்டுகிறார்கள். வியாபாரம்.//

கா..கா..கா...

chandru / RVC said...

எங்களை ஈகிளில் சந்தித்தது பற்றியோ அங்கு விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்தோ எழுதாமைக்கு கண்டனங்கள். அந்த டேபிளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருந்தாலும் சாம்பிளுக்கு ஒன்று.

"ப்ளாக் வச்சுருக்கவன் எல்லாம் ப்ளாக்கர். எழுதுறவனெல்லாம் ரைட்டர் கிடையாது" :))))

Baski.. said...

நரசய்யாவின் "கடலோடி" எந்த ஸ்டால்ல வாங்குனீங்க பாஸ்?

Cable சங்கர் said...

ஆண்டாள் த்ரிசக்தி..176

Anonymous said...

>>>என்னைப்பற்றி தாங்கள் எழுதியதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன் சங்கர் சார். புதிதாக ஒருவரை சந்திக்கையில் பார்த்தோம் சென்றோம் என்றிராமால் ஏதேனும் ஒன்றை கேட்டுத்தெரிதல் அவசியம் என்று நினைப்பவன் நான். இந்தப்பதிவில் என் பெயர் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலே மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதைவிட மேலாக இருந்தது.

Anonymous said...

// @டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன் //

>>> அடுத்த கலைஞர் நீங்கதான்....