Thottal Thodarum

Jan 7, 2011

சாப்பாட்டுக்கடை

எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. சமீபகாலமாய் ஷூட்டிங்கிலேயே நம்ம சாப்பாட்டுக்கடை முடிந்துவிடுவதாலும், புதியதாய் எங்கேயும் போகாததினாலும். அப்படியே போனாலும் பெரிதாய் என் நாக்கின் சுவையை நாளங்களை சுருதி மீட்டாததாலும் எழுதவில்லை.
Photo0060 கொஞ்ச காலம்  முன்பு பெரம்பூரில் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் ரோட்டில் சர்சுக்கு எதிர்திசையில் ஹைதராபாத் பிரியாணி செண்டர் ஒன்று இருக்கிறது. அதை தாண்டும் போதெல்லாம் என் நாசியில் அந்த பிரியாணியின் மனம் ‘ஜிவ்’வென ஏறும். ஆனால்  எப்போது போனாலும் நல்ல கூட்டமிருக்கும். ஒரு பழைய கட்டிடத்தை அங்கே இங்கே நகாசு செய்யப்பட்ட கடை. ப்ளாஸ்டிங் மோல்டட் ப்ளேட்டுகளில் பிரியாணி சர்வ் செய்கிறார்கள். நல்ல குவாலிட்டியும், குவாண்டிட்டியும் இருக்கிறது. பிரியாணி மட்டுமில்லாமல் சைனீஸ், தந்தூரி, செட்டிநாடு என்றெல்லாம் மெனுகார்டில் போட்டிருந்தாலும் பிரியாணியை தவிர வேறெதையும் மக்கள் சாப்பிட்டதை பார்க்க முடியவில்லை.
Photo0061நல்ல பாஸ்மதி ரைஸில் செய்யப்பட்ட பிரியாணி. பட் ஸ்பைஸி. கூட தனியாய் ஆர்டர் செய்த சிக்கன் 65ஐ கொஞ்சம் தீய்த்து கொடுத்தார்கள். சொன்னவுடன் இல்ல சார் நல்லாத்தானிருக்கு என்று ஆர்க்யூ செய்தார்கள். கடைசியில் அதற்கு காசு கொடுக்க மாட்டோம் என்று போராட வேண்டியிருந்தது வேறு கதை.
Photo0062
பிரியாணியை அங்கு போய் சாப்பிடுவதை விட பார்சல் வாங்கிக் கொண்டு சாப்பிடுவது இன்னும் உசிதமாய் இருக்குமென்று தோன்றுகிறது. டிபிக்கல் நார்த் மெட்ராஸ் சுத்தம்.
கேபிள் சங்கர்
Post a Comment

10 comments:

ஜெட்லி... said...

அண்ணே..இதே பேர்ல triplicane ல ஒரு ஓட்டல் இருக்கு...
பல மாதங்கள் முன்னாடி நானும் நண்பனும் சாப்பிட சென்ற போது
எல்லா ஐட்டத்திலும் உப்பு ஜாஸ்தியா இருந்தது...அதில் இருந்து
அந்த பக்கமே தலை வைக்கிறது இல்லை.....!!

triplicane அமீருநிசா பிரியாணி ட்ரை பண்ணி இருக்கீங்களா??...

Unknown said...

ஒரு நாள் உப்பு கூட இருந்தால் எல்லா நாட்களிலுமே அப்படி இருக்குமா?நானாக இருந்தால் சரக்கு மாஸ்டரிடம் சொல்லி சரி செய்ய சொல்லியிருப்பேன்.எனக்கு பின்னால் வருபவர்கள் நல்ல உணவை ருசித்திருப்பார்கள்.

Jana said...

நேற்றுத்தான் நினைத்தேன். அண்ணர் சாப்பாடுகடை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆயிட்டே என்று..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜெட்லி... said... அண்ணே..இதே பேர்ல triplicane ல ஒரு ஓட்டல் இருக்கு...
பல மாதங்கள் முன்னாடி நானும் நண்பனும் சாப்பிட சென்ற போது
எல்லா ஐட்டத்திலும் உப்பு ஜாஸ்தியா இருந்தது...அதில் இருந்து
அந்த பக்கமே தலை வைக்கிறது இல்லை.....!!

triplicane அமீருநிசா பிரியாணி ட்ரை பண்ணி இருக்கீங்களா??...//

மாமூ இப்போ வீட்டுல உங்க சமையல்தான?

ஜெட்லி... said...

//மாமூ இப்போ வீட்டுல உங்க சமையல்தான?
//

ச்சே...ச்சே...
அது ஏன் எப்ப பார்த்தாலும் என்னை பார்த்து இந்த கேள்வி
கேட்குறீங்க மிஸ்டர் சிரிப்பு போலீஸ்...?

Kathiresan said...

Try Button Briyani @ Asif Brothers, Butt Road Opp to Jumma Masjid Mosque

'பரிவை' சே.குமார் said...

அண்ணே.... சாப்பாட்டுக் கடையில நல்லா சொல்லியிருக்கீங்க. தலப்பாக்கட்டு பிரியாணி மாதிரி இருக்குமா?

Anonymous said...

///டிபிக்கல் நார்த் மெட்ராஸ் சுத்தம்./// கொஞ்சம் குழப்படியா இருக்கே.

Philosophy Prabhakaran said...

// டிபிக்கல் நார்த் மெட்ராஸ் சுத்தம். //

அப்படி என்றால் சுத்தம் என்பது சுத்தமாக இருக்காது என்று கூறுகிறீர்கள்... அப்படித்தானே...

டக்கால்டி said...

@Prabhakaran- சுத்தமாக இருக்கும்... ஆனா இருக்காது...