ரெம்பவும் சந்தோஷமாய் இருக்கிறது. என்னுடய முதல் குறுநாவலும், 22 சிறுகதைகளும் புத்தக வடிவில் வெளிவர இருக்கிறது. கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகம் வெளியாகி 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்பது சிறப்பான விஷயம். ஒரு புதுமுக எழுத்தாளனுக்கு இது மாபெரும் ஆதரவு.
அடுத்து கிழக்கு பதிப்பகத்தினர் வெளியிட்ட “சினிமா வியாபாரம்”. புத்தக வெளியீட்டுக்கு முன்பே ரீபிரிண்டுக்கு போன புத்தகமாய் அமைந்து ஆயிரம் புத்தகங்களை கடந்து பரபரப்பாக விற்றுக் கொண்டுகிறது. இதோ இப்போது என் மூன்றாவது புத்தகம். பிப்ரவரி டூ பிப்ரவரிக்குள் மூன்றாவது புத்தகம். இதெல்லாம் சாத்தியமானது உங்களால்தான்.. முக்கியமாய் பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் ஆகியோரின் ஊக்கத்தினாலும், உற்சாகப்படுத்துதலினாலும் தான் என்பதை மறுக்க முடியாது.
இதோ மீண்டும் ஒரு காதல் கதை என்கிற புத்தக வெளியீட்டின் அழைப்போடு உங்களின் பேராதரவை எதிர்நோக்குகிறேன். திரைத்துறை நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கப் போகும் இந்நிகழ்வை அழைப்பாளர்களோடு மேடையேறி விழாவை நடத்தவிருப்பவர்கள் நம் சக பதிவர்கள் தான். அவர்களின் விவரம் அடுத்த பதிவில்…
பதிவுலக நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்தித் தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
டிஸ்கி: புத்தகம் முன் பதிவு செய்வோர் புத்தகத்துக்கான தொகையான ரூ.90
அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு என்னுடய மின்னஞ்சல் செய்யவும்..sankara4@gmail.com இந்தியாவுக்குள் அஞ்சல் செலவு கிடையாது.
Sanswas Infotech
A/C No. 007705010890
ICICI Bank, KKNagar branch
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Comments
இதையும் படிச்சி பாருங்க
உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்
அவசியம் விழாவிற்கு வருகிறேன்!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
from Manoharan - Pondicherry
தமிழ் மணத்தில் 2 ஆம் இடம். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கீப் இட் அப்.
-அருண்-
சிறப்பான விற்பனைக்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.
இது பாடல் பற்றிய தேடல்!
!
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.