Thottal Thodarum

Jan 3, 2011

கொத்து பரோட்டா-3/01/11

எல்லாரும் வந்திருங்க..
Final Layout1 நாளை மாலை 6.00 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவிருக்கும் மீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீட்டிற்கு மறக்காம, அங்க வேல இங்க வேல என்று சொல்லாம அத்தனை பேரும் வந்திரணும். ஆமாம் சொல்லிப்புட்டேன்.  பேராசிரியை திருமதி. பர்வீன் சுல்தானா புத்தகதை வெளியிடுறாங்க.சிறப்பு அழைப்பாளர்கள் இயக்குனர் திரு. சீனு இராமசாமி, ஒளிப்பதிவாளர் திரு. செழியன், பேராண்மை ஒளிப்பதிவாளர் திரு சதிஷ்குமார், நடிகர் வாசகர் திரு. ஆர்.மோகன் பாலு,  இவர்களுடன் பதிவர்கள் அப்துல்லா, யுவகிருஷ்ணா, ஆதிமூலகிருஷ்ணன், விதூஷ் வித்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை பற்றி பேசுகிறார்கள். முக்கியமாய் பல புதிய பதிவர்கள் வந்திருக்காங்க. அவங்க எல்லாரையும் சந்திக்க நான் உள்பட பல பேர் ஆர்வமாயிருக்காங்க.. அதனால.. நிச்சயம் வந்திருங்க.. என்ன..? உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&amp
இந்த வார சந்தோஷம்
2010
ஆண்டில்  அலெக்சா ரேங்கிங்கில் 59,000. லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், என்று தொடங்கி இதோ மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தோடு  மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டிருப்பது, தமிழ் பதிவுலகில் ரெண்டாவது இடம். என்று பல சந்தோஷங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணமான நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு. நீங்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. இவ்வளவு அன்புக்கு நான் என்ன பிரதிபலன் செய்துவிட முடியும்?. என் சந்தோஷத்தை உங்கள் சந்தோஷமாக கொண்டாடி வாழ்த்தும்  உங்களுக்கு என் நன்றிகள் பல. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&amp
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பொறுப்பாசிரியராக பணியாற்றும் ஊஞ்சல் இதழில் பதிவுலகை பற்றிய எழுத நான்கு பக்கங்கள் ஒதுக்கியுள்ளார். இம்மாத இதழிலிருந்து எழுதுகிறேன். நான் படித்து ரசித்த பதிவுகளை பற்றிய விவரத்தோடு அந்த பதிவுன் லிங்கோடு எழுதியிருக்கிறேன். அவ்வகையில் பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன், கார்க்கி, தண்டோரா மணிஜி, சுவாமி ஓம்கார், பட்டர்ப்ளை சூர்யா  போன்ற  பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். தொடர்ந்து நிறைய நண்பர்களின் சிறந்த பதிவுகளை படித்து எழுதுவேன். பதிவர்களுக்காக பக்கங்களை ஒதுக்கி எழுத அழைத்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார பேட்டி
ஆஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்பில் சென்ற ஆண்டு தமிழ் சினிமா பற்றி கானா பிரபா பேட்டி எடுத்து ஒளிபரப்பினார். அதன் ஒலிப்பதிவு இதோ.. உங்களுக்காக. நன்றி கானா…

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார ப்ளாஷ்பேக்
தேசாப்… இந்தியாவெங்கும் ஒன்று இரண்டை பாட்டாய் போட்டு கலக்கி எடுத்த படம். மாதுரி தீக்‌ஷித்துக்கு பெரிய மார்கெட்டை ஏற்படுத்திய படம். என்று பல பெருமைகளை பெற்றிருந்தாலும். மனதை உருக்குமொரு மெலடியான இப்பாடலை யாராலும் மறுக்க முடியும். நிதின் முகேஷுக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுத்த பாடல். இந்த சோகயா.. ஏ.. ஜஹான்.. Soothing melody
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&amp
”G” என்றொரு இயக்குனர். சும்மா ஒரு ஆறு பேர் கொண்ட குழுவை கூட்டிக் கொண்டு கேனான் 7 & 5 டி கேமராவை எடுத்துக் கொண்டு ஸ்க்ரிப்ட் கூட இல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அப்படத்தின் பெயர் Ganddu தமிழ் படுத்தினால்  ”சூ” வை குறிக்கும். படத்தை ஃபெஸ்டிவலில் வெளீயிட மிரண்டு போயிருக்கிறார்கள் வெளிநாட்டவர்கள். ப்ளாக் & வொயிட்டில் பெரும்பாலும் காட்சிகளை அமைத்து மிரட்டியிருக்கிறார்களாம். லாஸ் ஏஞ்சல் பெஸ்டிவலில் பரிசை வென்றிருக்கிறது. எப்படியும் அடுத்த வருஷத்துக்குள் இந்திய சினிமாவில் மெயின் ஸ்ட்ரீம் தியேட்டர்களுக்கு வரும் என்கிற நம்பிக்கையோடு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சென்ற வாரம் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தக விமர்சனம் நிகழ்வு இருந்தும் அதில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு முக்கிய பயணமாய் குடும்பத்தோடு போக வேண்டியிருந்தது வருத்தத்துக்குரிய விஷயமாய் இருந்தது. கல்கியின் உதவி ஆசிரியரும், நண்பருமான திரு. அமிர்தம் சூர்யா என் புத்தகத்தை பற்றி மிக சிறப்பான ஒரு விமர்சனம் செய்ததாக சொன்னார்கள். அதை நானும் நண்பர்கள் சொல்லிக் கேட்டேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கும் அவருக்கும் ஒரு கதையினால் தான் நட்பு உருவாயிற்று. அக்கதையை அவர் பத்திரிக்கையில் வெளியிடமாட்டார்கள் என்று விகடனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னதே அவர் தான். அதற்கு பிறகு பத்து கதைகளை அனுப்பி அதில் மூன்று கதைகள் கல்கியில் வெளிவந்திருக்கிறது. அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மாஸ்டர். சரியாக வரும் என்று பட்டால்தான் வாய்ப்பு கொடுப்பார். என் எழுத்துக்களின் வளர்ச்சிக்கு அவரது மறைமுகமான அன்பும் ஆதரவும் முக்கிய காரணம். ஒரு விஷயம் என்னவென்றால்… நானும் சூர்யாவும் இது வரை இரண்டு முறை தான் சந்தித்திருக்கிறோம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார குறும்படம்
அருமையான ஒரு குறும்படம். மிக இயல்பான திரைக்கதை, வசனம், நடிப்பு என்று எல்லா டிப்பார்ட்மெண்டிலும் சிறப்பாக எடுக்கப்பட்ட படம் . முக்கியமாய் க்ளைமாக்ஸ் அபாரம். நளனுடய படைப்புகளில் நான் மிகவும் விரும்பிய படைப்பு இது. நெஞ்சுக்கு நீதி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
புத்தக கண்காட்சி நாளை முதல் ஆரம்பிக்க போகிறது.  அடுத்த வாரத்திலிருந்து பல ஊர்களிலிருந்து வரும் பதிவர்கள், நண்பர்கள் சந்திப்பு அங்கேதான் நிகழும்.  உங்களின் வசதிக்காக, முக்கிய ஸ்டால்களின் வரைபடம்
CBF-2011-Stall-Map_1
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
பெரிய லட்சியங்கள் நாம் தோற்த்துவிடுவோமோ? என்ற அச்சத்தை கொடுக்கும். ஆனா லட்சியமில்லாமை நிச்சயப்படுத்தும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&amp
இந்த வாரம் படித்தது.
நண்பர் ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பிய விஷயம். இண்ட்ரஸ்டிங்.  மீண்டும் எண்டர் கவிதை எழுத வேண்டும் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எழுதியவர் சண்முகசுந்தர் என்கிற பதிவர்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.
புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.
பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,
பெங்களுரைத்/ சென்னை தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.
சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.
பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".
அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்ட  தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,
வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்து விடுகிறது.
செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர்
A little girl walks into her parents' bathroom and notices for the First time, her father's nakedness.
Immediately, she is curious: he has equipment that she doesn't have. She asks, 'What are those round things hanging there, daddy?'
Proudly, he replies, 'Those, sweetheart, are God's Apples of Life.
Without them we wouldn't be here.'
Puzzled, she seeks her mommy out and tells her what daddy has said.
To which mommy asks, 'Did he say anything about the dead branch they're hanging from?'
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment

43 comments:

a said...

தல : சென்னை வந்திறங்குவது 11ம் தேதி அதிகாலையில். விழாவில் கலந்து கொள்ள இயலாது....

விழா சிறப்புற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

கானா பிரபா said...

விழா சிறப்புற வாழ்த்துகிறேன், தொடர்ந்து வானொலிக்கு சினிமா உலக நடப்புக்களைப் பகிர்ந்தமைக்கும்/ பகிரப்போவதற்கும் (;-)) மிக்க நன்றி நண்பா

vinu said...

vaalthukkal bro

Sudhar said...

Tezzab song and Balachander PuthuPuthu Arthangal (KELADI KANMANI) tunes are similar. Superb song and awesome dance by madhuri

Sudhar said...
This comment has been removed by the author.
Sudhar said...

Have u seen Sharukh's Ra.One first look poster ?

pichaikaaran said...

பதிவுலகுக்கு ஒரு மரியாதையை உருவாக்கலில் உங்கள் பங்களிப்பு மகத்தானது

vinu said...

that hindi song vedio doesn't loading bro

Shanthakumar said...

My friend wrote that kavidhai:
ஒரு மென்பொறியாளன் புலம்பல்.

you can find them at http://shunsundar.blogspot.com/2010/08/blog-post.html

சண்முககுமார் said...

வாழ்த்துக்கள்...


இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...!

நர்சிம் said...

வாழ்த்துகள் கேபிள்.

'பரிவை' சே.குமார் said...

விழா சிறப்புற வாழ்த்துக்கள்...

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா ! வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. "ஊஞ்சல் " நான் தவறாமல் படிக்கும் புத்தகம்.
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி.
அபாரம்.

சிவகுமார் said...

தமிழ் பதிவுலகில் ரெண்டாவது இடம்,
சந்தோஷங்கள் தொடர்ந்து வாசகர்கள்,Manathi Muthala Edaam.

தருமி said...

நூலுக்கு வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

தமிழ்மணம் முதல் 100ல் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் கேபிள்..!

குறையொன்றுமில்லை. said...

ஒரே பதிவில் எவ்வளவு விஷயங்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்.
ஊஞ்சல் இதழிலும் வாசகர்களின் மனம் கவர வாழ்த்துக்கள்.பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன், கார்க்கி, தண்டோரா மணிஜி, சுவாமி ஓம்கார், பட்டர்ப்ளை சூர்யா ஆகிய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

புத்தக வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்!

iniyavan said...

வாழ்த்துக்கள் கேபிள்.

Ganesan said...

தலைவா,

தேசாப், சோகாயி பாடல் எனக்கு மிக பிடித்த பாடல்..அதை டேப் ரிக்கார்டரில் போட்டு , அதை கேட்டு, தமிழில் எழுதி பாடியிருக்கிறேன்.

ராத்துயி தோபோ சிங்கே, கருத்தே ஓ கருத்தே சோகாயி..

ஞாபகம் வரவச்சுடீங்களே தலைவா..

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் தலைவா!!

பரிசல்காரன் said...

வாழ்த்துகள்யா... வாழ்த்துகள்!!!

PKPஐ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க.. :-)

மறத்தமிழன் said...

கேபிள்,

புத்தாண்டு மற்றும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் !

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள் தலைவரே.. வந்திருவோம் :-)

ரோஸ்விக் said...

வாழ்த்துகள் கேபிளார்.

இந்த வருடம் உங்கள் இயக்கத்தில் நிறைய படங்கள் வெளிவரவேண்டும். அதற்கும் எனது வாழ்த்துகள்.

சமுத்ரா said...

congrats!

MSKUMAR said...

கோயம்பேடு மற்றும் சென்ட்ரல், எக்மோரில் இருந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை பஸ் அல்லது மின்ரயில் மூலமாக எப்படி அடைவது என்று சொன்னால்/பதிவிட்டால் நலமாக இருக்கும். பல வெளியூர் வாசிகள் ஆட்டோவிற்கு கொடுக்கும் காசில் புத்தகம் வாங்குவார்கள்.
நன்றி

க ரா said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்னா...

Shunmuga Sundar said...

Thanks a lot for giving recognition to my poem in your post :-)

கத்தார் சீனு said...

வாழ்த்துக்கள் கேபிள்ஜி !!!
உங்கள் வெற்றிகள் பெருகட்டும்....தொடரட்டும்....!!!

Dubukku said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சங்கர்.

Dubukku said...

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துகள் எழுத்தாளரே !!!

Philosophy Prabhakaran said...

// 2010 ஆண்டில் அலெக்சா ரேங்கிங்கில் 59,000. லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், என்று தொடங்கி இதோ மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தோடு மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டிருப்பது, தமிழ் பதிவுலகில் ரெண்டாவது இடம். //

எல்லாமே உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசுகள் தான்...

Mahesh said...

Best wishes for ...
MMXI
Book release
Column writing
Top 100 bloggers
Alexa ranking
...
...
...

Best wishes !!!

Rajan said...

DISCOVERY PALACE முகவரி தரவும். அழைப்பிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி உண்டா?

மாணவன் said...

வாழ்த்துக்கள் சார்,

தொடர்ந்து மென்மேலும் சிறக்க வேண்டும்...

Unknown said...

வாழ்த்துக்கள்

Dwarak R said...

Wish you happy year. I wish you become director this year.

many congrats and wishes on your new book.

'Ganddu' is directed by 'Q' Qaushiq Mukherjee :)

SivaG said...

"”G” என்றொரு இயக்குனர்"

Athu "G" ila "Q", Director Quashik Mukherjee. Bengali movie.

Anonymous said...

// அதே போல நண்பர் பதிவர் சிவகுமாருடன் நடந்த சீரியஸான சினிமா பற்றிய கேள்விகள் அதற்கான தர்க்கங்கள் என்று பேசிய விஷயங்கள் இருவருக்கும் உபயோகமாய் இருந்தது. தான் கேட்க வேண்டியதை மிகத் தெளிவாக கேட்டு, சில சமயம் சொல்லி அசத்தினார்.// >>>

என்னைப்பற்றி தாங்கள் எழுதியதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன் சங்கர் சார். புதிதாக ஒருவரை சந்திக்கையில் பார்த்தோம் சென்றோம் என்றிராமால் ஏதேனும் ஒன்றை கேட்டுத்தெரிதல் அவசியம் என்று நினைப்பவன் நான். இந்தப்பதிவில் என் பெயர் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலே மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதைவிட மேலாக இருந்தது.