Thottal Thodarum

Jan 22, 2011

சொல்லித்தரவா

sollitharava-15 பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்திய அரசின் சலுகைகளில் படித்துவிட்டு வெளிநாட்டில் போய் செட்டிலாகும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.
sollitharava-5 எஸ்.சிவராமன் என்கிற இயக்குனரின் இரண்டாவது படம். இவர் ஏற்கனவே மறந்தேன் மெய் மறந்தேன் என்கிற படத்தை 2006 எடுத்து வெளியிட்டிருக்கிறார். முதல் படத்தில் ஏதும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது. என்ன தான் சொல்ல வந்த விஷயம் ப்ரெயின் ட்ரையின் என்பது போன்ற சீரியஸான விஷயமாய் இருந்தாலும் படம் பூராவும் ஆளாளுக்கு இங்கிலீஷிலேயே பேசிக் கொண்டிருப்பது.. ஒரே காமெடியாய் இருக்கிறது. பின்ன பாருங்க.. கவுண்டர் சீரியஸா அமெரிக்க ஆக்ஸண்டுடன் இங்கிலீஷ் பேசினால் எப்படி இருக்கும்? இதில் இயக்குனர் வேறு காமெடி செய்கிறேன் என்று பட்லர் இங்கிலீஷ் காமெடி செய்கிறார்.
sollitharava-8 மிக அமெச்சூர் தனமான கதை சொல்ல, மேக்கிங், என்று எந்த விதத்திலும் எங்கேயும் பாராட்டி விடக்கூடாது என்பதை கொள்கையாய் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் சீட்டில் உட்கார முடியாமல் தவிக்க வைக்கிறார். சார்.. படமெடுக்கணும்னு ஆசைப்பட்டா.. சொல்லுங்க.. நாங்கல்லாம் இருக்கோம்.. காசை கரியாக்காதீங்க..படத்தில் ஒரே ஆறுதல் பாபியின்  இசையில் வரும் “அழகிய சேலை இழுக்குது ஆளை” என்கிற ஒரு அருமையான மெலடி மட்டும்தான்.
sollitharava-6 நடுவில் வெள்ளைச்சட்டை போட்டிருப்பவர்தான் இயக்குனர். இவரை ஒரு விதத்தில் பாராட்டத்தான் வேண்டும். வெறும் கொண்டாட்டத்திற்கான படங்களாய் எடுக்க நினைக்கும் காலத்தில் பிரையின் ட்ரையின், கரப்ஷன், இளைஞர்கள் அரசியலில் நுழைவது என்பது போன்ற சீரியஸ் விசயங்களை எடுத்துக் கொண்டு, நாலைந்து பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று இம்சிக்காமல் இருந்ததற்காகத்தான். படம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. நன்றி
சொல்லித்தரவா – எதை?
மீண்டும் குறுகிய காலத்தில் 20 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..கேபிள் சங்கர்

Post a Comment

17 comments:

சிவகுமார் said...

நீங்க சொல்லிதான் இப்படி ஒரு படம் வந்தது தெரியும். நிறைய சொல்லி தரவும். இன்று காலை dhobi ghat (அமீர் கான்) படம் செல்கிறேன். விமர்சனம் எதுவும் பார்க்காமல். எப்படி இருக்குமோ?? அடுத்து வந்ததும் புத்தகம் படிக்க வேண்டும். சினிமா வியாபாரம்.

Ding Dong said...

நல்ல வேலை... இந்த மாதிரியான மொக்க படத்துக்கு நான் போகல. எப்போதுமே உங்க விமர்சனம் அதிகமாவே இருக்கும், இந்த படத்தைப் பற்றி உங்களுக்கே எழுத ஒன்னும் கிடைக்கலனு நினைக்கிறேன். பாதி பக்கத்துக்கு படத்தோட ஸ்டில்ஸ் போட்டு மேக்கப் பண்ணியிருக்கீங்க. இதுலேர்ந்தே தெரியுது படத்தோட ரிசல்ட்.

sakthistudycentre-கருன் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

http://sakthistudycentre.blogspot.com/

கே.ஆர்.பி.செந்தில் said...

ஆழமான விசயத்தை தவறாக பிரசென்டேசன் செய்திருக்கிறார்கள் ...

MANO நாஞ்சில் மனோ said...

நல்லபடியான அலசல் சூப்பர்...

புலிகேசி said...

இந்தமாரி படத்துக்கெல்லாம் நீங்க விமர்சனம் போடணுமா?

JOE2005 said...

இந்த இடுகையை படிக்கமுடியவில்லை BLOG COMMENT படிக்கமுடிகிறது .முந்தைய இடுகையை படிக்க முடிகிறது

VISA said...

இந்த படத்துக்கு ஏன் சொல்லித்தரவா? ன்னு பேரு வச்சாரோ?

Jagannathan said...

சொல்லித்தரவா? இப்படி படம் எடுக்காதீர்கள் என்று! - ஜெ.

P.RAGHUVARMAN said...

http://www.rvtamil.co.cc/

வெளங்காத தமிழ் அனானி said...

அமெரிக்காவில் பெரும்பாலான தியேட்டரில் படம் full
இப்பதான் அடிச்சி பிடிச்சி இந்தப் படத்துக்கு ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணினேன். யாருக்காவது டிக்கட் தேவைப்படுதா?

மதுரை சரவணன் said...

padam eduppavarukku advice koduththiruppathu nallaa irukku. vellai sattai kaarar paavam thaan. pakirvukku nanri.

mani said...

சார் அட்லீஸ்ட் அவரு ஒரு படத்த எடுத்து ரிலீஸ் வேற பண்ணிருக்காரு, நீங்க மொதல்ல எடுங்க... கூகுள் காரன் ப்ளாகுக்கு காசு வாங்கினா காணாம போற ஆளுங்க நீங்க.... மொதல்ல சொந்தமா ஒரு ஸ்பேஸ் வாங்குங்க.... அப்பறம் நாளைக்கு பாக்கலாமா

Cable Sankar said...

@sivakumar
டோபிகாட் எப்படி இருந்திச்சு?

@டிங்டாங்
நன்றி

2சக்தி ஸ்டெடி செண்டர்
நன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
அட இப்படி வேறயா?

@மனோ
நன்றி

2புலிகேசி
பார்த்தா போடவானாமா?

@ஜோ
அப்படியா?

2விசா
அவரை கேட்டுச் சொல்றேஎன்

2ஜகன்னாதன்
கரெக்ட்

@வெளங்காத தமிழ் அனானி
எனக்கு வேணாம்

@மதுரை சரவணன்
நன்ரி

@மணி
மணி நீ ஒரு காமெடி பீஸு, கூகுள் காரன் ப்ரீயா கொடுக்கிற இடத்தில ஒழுங்கா ப்ரோபைலையே வச்சிக்க வக்கில்லாதவன் நீ யெல்லாம் பேசவே கூடாது.. என்னை பத்தி இப்பவும் சொல்றேன் உனக்கு தெரியாது..

mani said...

ஹா ஹா ஹா ஹா.... டுபாகூர் உன்ன பத்தி எனக்கு எப்பவுமே தெரிய வேண்டாம்

carrer said...

சொல்லித்தரவா - நல்ல சொன்ன போ

r said...

"சார்.. படமெடுக்கணும்னு ஆசைப்பட்டா.. சொல்லுங்க.. நாங்கல்லாம் இருக்கோம்.. காசை கரியாக்காதீங்க.."

enna seyya sankar. adhuthaan vidhi enbathu. unga thalaila parangimala jothiya pazhuthu paarpathu, manuneethi release pannuvathu ezhuthi irukku. aana indha aalukuu indha maathiri padam edukka kuduthu vechirukku. no point whining! what to do...life is like that!