Thottal Thodarum

Jan 12, 2011

Faster

fastercandid-10அண்ணனை கொன்ற கும்பலை பழி வாங்கும்  தம்பியின் கதை. பரபரப்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ட்வைன் ஜான்சன் ஜெயிலிலிருந்து வெளியேறுகிறார். ஹைஸ்பீடில் நடக்கிறார். லோ ஆங்கிள் ஷாட்களில் நடக்கிறார். டாப் ஆங்கிள் ஷாட்டில் கார் கவரை எடுக்கிறார். அமெரிக்க கார்கள் அவர்களின் சினிமாவின் நிலைக்கேற்ப ஹீரோவுக்கென்றால் பத்து வருஷமானாலும் புதிதாய், தொட்டவுடன் கிளர்ச்சியடையும் பெண் போல கருக்காய் கிளம்புகிறது. சைலன்ஸரிலிருந்து சொட்டாய் விழும் எக்ஸாஸ்ட் துளி அட்டகாசம்.
fastercandid-15 திடீரென ராக் என்கிற ஒரு கேரக்டரே செத்துவிட்டதாய் காட்டுக்கிறார்கள். பின் மண்டையில்  சுட்டு செத்தவர் முன் பக்க தாடை வழியாய் வெளியேறி பிழைத்துவிட்டதாய் சொல்கிறார்கள். ஜெயிலை விட்டுக் கிளம்பியவன் நேராக ஒரு ஆபீஸில் போய் ஒருவனை நெற்றி சுட்டுவிட்டு கேமராவை பார்த்துவிட்டு வருகிறான். அப்புறம் போகிற வழியெல்லாம் ஒவ்வொருத்தனாய் போய் கொல்கிறான். போட்டோவும் வீடியோவுமாய் இருப்பவனை பிடிக்க ஒரே ஒரு போலீஸை அதுவும் ஹீரோ கொல்லும் லிஸ்டில் இருக்கிறவன். அவன் மட்டும் போகிறான். என்னா போலீஸ்பா.. க்ளைமாக்சில் மீண்டும் ஒரு முறை பின்மண்டையில் சுடப்பட்டு செத்துப் போய் கண் விழித்து வில்லனை கொல்கிறான் ஹீரோ. இப்பத்தான் புரியுது விஜயகாந்த் எவ்வளவு நல்லவர்னு.. விருதகிரி வாழ்க.. இதற்கு நடுவில் ஒரு டுவிஸ்டுடன் கூடிய காதல் ஜோடி அவர்களுக்கும் ஹீரோவுக்குமான ஒரு லிங்க் வேறு.
fastermtvfallpreview படத்தில் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம் ராக் கொல்ல நினைக்கும் ஆட்களில் ஒருவன் மனம் திருந்தி கிருஸ்துவ போதகராய் இருக்க, அவனை கொல்ல போதனை செய்யும் டெண்ட் கூடத்திற்கு போய் நிற்கும் போது அவன் கண்களில் தெரியும் மிரட்சி, போதனை முடிந்தபின் தன்னை கொல்லச் சொல்லி, பிராத்தனை செய்யுமிடம் நெகிழ்ச்சியானது. அதே போல படு ராவான ஒளிப்பதிவு. படத்தின் மிகப் பெரிய சிறப்பம்சம் நடிக்கவே வராத ராக்கின் நடிப்பு. அருமை. அட்டகாசம்.
Faster – படத்தை விட்டு எவ்வளவு ஸ்பீட்டா வரணுமோ.. அவ்வளவு ஸ்பீடா வந்திருங்க..
கேபிள் சங்கர்
Post a Comment

11 comments:

Unknown said...

மீ த ஃபர்ஸ்ட்டு :))

Speed Master said...

Super

வேங்கை said...

Great Escape

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்.....

vinu said...

me the 5thu naum rowdithaan blog vanthu paarthu purinjukkunga

Philosophy Prabhakaran said...

// அண்ணனை கொன்ற கும்பலை பழி வாங்கும் தம்பியின் கதை. //

அங்கேயும் இதே கதை தானா...

ஜி.ராஜ்மோகன் said...

தொட்டவுடன் சிலிர்க்கும் பெண்ணை போல ..................ஆஹா !ஆஹா !\
பெண்ணும் காரும் ஒன்று தானோ !

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்.

Anonymous said...

அண்ணா, புத்தக கண்காட்சியில லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் எந்த ஸ்டால்ல கிடைக்கும்னு தெரியுமா?? தெரிந்தால் சொல்லவும் ..

pichaikaaran said...

கேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட்சியில் பரபரப்பு

shortfilmindia.com said...

@ezhil
ஓகே

@ஸ்பீட் மாஸ்டர்
@வேங்கை
நன்றி

@நாஞ்சில் மனோ
நன்றி

@ராஜ்மோகன்
ஒவ்வொருத்தருக்கு ஒரு மாதிரி