#Me Too
உலகெங்கும் மீடூ கூக்குரல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது தேவையானதும் கூட. ஏன் லேட்டாய் சொன்னாய் போன்ற கேள்விகளுக்கு பதிலாய், அட்லீஸ்ட் இப்பவாவது சொல்ல வழி பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நேரம். எனக்கு நெருக்கமான தோழிகள் சில பேருக்கு இம்மாதிரியான பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவம் இருக்கிறது. சொல்லியும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கப் பெற்றவர்களிடமிருந்து அடுத்த முறை விலகியும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும், அச்சம்பவத்திலிருந்து வெளிவர இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மீடூ இயக்கம் மூலமாய் அவர்களுக்கு எதிராய் கேள்விகள் எழுப்புவதும், அவர்கள் குரல் வளையை நெருக்க, நினைப்பதும் நாம் நம் சமூகத்துக்கு செய்யும் துரோகம். நம் வீட்டு பெண்களுக்கு இழைக்கும் துரோகமாகும். ஆனால் இதே நேரத்தில் இதை பழிவாங்கும் நடவடிக்கையாய் கையில் எடுக்கும் பெண்கள் இல்லாமல் இல்லை. தாய்மையை போற்றும் இதே இடத்தில் தான் பிறந்த குழந்தையை வீசி எறிவது முதல், கணவனை போட்டுத்தள்ளுவது வரை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ...