பொய் சொல்ல போறோம் - விமர்சனம்
இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும் ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு சமயத்தில் தான் என்ன வேலை செய்தேன் என்பதை அவர் ஒரு ரவுடிக்கு விளக்க அவன் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டி பக்கத்து ரவுடியிடம் சீரியஸாக” வாத்தியாராம்” என்று சொல்வதை பார்த்துவிட்டு நெடுமுடி வேணுவின் ரியாக்ஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.) அவர் ஓரு நிலத்தை ஹனிபாவின் மூலம் தன் சேவிங்ஸ் அத்த்னையும் போட்டு வாங்குகிறார். அதில் தன் கனவு இல்லத்தை கட்ட நினைக்கிறார். ஆனால் வீட்டை கட்ட பூமிபூஜை போடப் போகும்போது அந்த இடத்தில் சுவர் ஏற்றி அந்த இடம் பேபி என்பவருக்கு சொந்தமானது என்று போர்டு மாட்டப்பட்டு இருக்க, அதுக்கு ஓரு சுனாமி ரவுடி காவலாய் இருக்கிறான். அந்த இடம் அவருக்கு மீண்டும் வேண்டுமானல் மேலும் பதினைந்து லட்சம் பணம் கேட...