”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?”
மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்.. தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீன...