@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
இந்த வார தத்துவம்
காதலர் தினமிருப்பதாலோ என்னவோ தெரியலை. பிப்ரவரி மாதத்தின் ஆயுள் கூட குறைவுதான்.
வாக்குவாதத்தைவிட வளைந்து கொடுத்துப் போவது சால சிறந்தது.
தோல்வி மட்டுமே ஒரு வேலையை மீண்டும் சிறப்பாகச் செய்ய வாய்ப்பு கொடுக்கும். ஸோ.. தோல்வி நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
மீண்டுமொரு எக்ஸலண்ட் மெலடி. அமீர்கான், மன்சூர்கான் காம்பினேஷனில் ஆனந்த் மிலின்ந்தின் இசையில் அட்டகாச ஹிட். இன்றும்.
இந்த வார குறும்படம்
அற்புதமான மனதை நெகிழ வைக்கும் குறும்படம். தேசிய விருது பெற்ற படம். நலிந்து வரும் கலைகளை வாழ்வாதாரமாய் கொண்டு போராடும் கலைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம். எனக்கென்னவோ படத்தின் க்ளைமாக்ஸ் கொஞ்சமே கொஞ்சம் லெந்தியாகிவிட்டதோ என்ற எண்ணம் இருந்துக் கொண்டேயிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உயிர்மை ஸ்டாலில் சாருவின் ஜீரோ டிகிரியை பதிவை வைத்து ஒரு தொடர் காமெடி நிகழ்வு நடந்ததாக தெரிகிறது. ஒரு குட்டி பதிவர் சந்திப்பே என் புத்தகங்கள் விற்கும் 176 ஸ்டாலில் நடந்தது, மணிஜி, யாத்ரா, கோபி, எல்.கே, பிலாசபி பிரபாகர், சிவகுமார், நேசமித்ரன், கார்க்கி, நர்சிம், சுரேகா, குகன்,சங்கர், மதார், தினேஷ், மயில் ராவணன். கே.ஆர்.பி.செந்தில், பார்வையாளன் என்று ஒரே கும்மாளம்தான். மும்பையிலிருந்து வாசகர் யூசுப் நேரில் சந்தித்து புத்தகங்களை வாங்கிச் சென்றார். சில பேர் என்னை கிராஸ் செய்யும் போது நின்று யோசித்து, என்னை விசாரித்து, கைகுலுக்கி, பதிவுகளை படித்ததை பற்றி பேசி புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். அருண், ஜெய், ராஜ் போன்ற புதிய நண்பர்களுடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ராஜின் விஸ்தாரமான சினிமா ஆர்வம் இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் கோடார்ட், பெலினியின் படங்களை பற்றி பேசிய விஷயங்கள் சுவாரஸ்யம். கிளம்பும் போது ரொம்ப நாளாச்சு சார்.. சிங்கத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மசாலா படம் பார்த்து என்றார். விசா ஸ்டாலில் ஒரு பெண் என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு, கிளம்பும் போது அருகில் வந்து கேபிள் சங்கர்தானே? என்று கேட்டுவிட்டு அரை மணி நேரம் பேசிவிட்டுச் சென்றார். என் கதைகள் அனைத்தையும் படித்திருக்கிறார். பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறார். பேசிய அரை மணி நேரத்தில் மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தாவை பற்றி இருபது நிமிஷம் பேசினார். க்டந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கண்காட்சி மேலும் புத்துணர்வை கொடுத்திருக்கிறது. நானும் கொஞ்சம் பிரபலம் தான் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெயமோகனின் சில கட்டுரைகள், ஒரிரு சிறுகதைகள் என்று அவ்வப்போது இணையத்தில் படித்திருக்கிறேன். இப்போது தான் உலோகம் வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். த்ரில்லர் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மெதுவாய்த்தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாய் அந்த ஈழப் பின்னணி நிச்சயம் வரும் காலத்தில் கொஞ்சமேனும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இல்லை ஏற்பாடாவது செய்வார்கள். இருந்தாலும் ஒரு புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறார் ஜெ.மோ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தினம் ரெண்டு புத்தகம் என்று என் கலெக்ஷன் ஆரம்பித்திருக்கிறது. ஜொ.மோவின் உலோகம், நரசய்யாவின் கடலோடி, தலைவனின் கரையெல்லாம் செண்பகப்பூ, கம்ப்யூட்டர் கிராமம், சிவந்த கைகள், ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, என்று லிஸ்ட் தொடர்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்காட்சியில் நண்பர் தாமு தன் நண்பருடன் வந்திருந்தார். மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். 1930களிலிருந்து ஆங்கில கிளாசிக் படங்களை கலெக்ட் செய்து வைத்திருக்கிறாராம். என்னுள் இருக்கும் சினிமாக்காரன் முழித்துக் கொண்டான். நிறைய பழைய க்ளாசிக் படங்களை பற்றி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நண்பரே.. ஒரு நாள் உங்க வீட்டிற்கு ஒரு விசிட் இருக்கிறது. உங்கள் டிவிடியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதே போல நண்பர் பதிவர் சிவகுமாருடன் நடந்த சீரியஸான சினிமா பற்றிய கேள்விகள் அதற்கான தர்க்கங்கள் என்று பேசிய விஷயங்கள் இருவருக்கும் உபயோகமாய் இருந்தது. தான் கேட்க வேண்டியதை மிகத் தெளிவாக கேட்டு, சில சமயம் சொல்லி அசத்தினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தோழியும் அவரது கணவரும் வந்திருந்தார்கள். மாலையில் பா.ராவின் கிழக்குக்கு போட்டியாய் ஒரு பெரிய ஜமா 176 நடைபாதையில் ஓடியது. வந்திருந்த பெரும்பாலான கூட்டம் மால்களில் விண்டோ ஷாப்பிங் போல வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு போனது மிகவும் வருத்தமான விஷயம். இரண்டு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. வந்த கும்பலில் அட்லீஸ்ட் ஒரு 75ஆயிரம் பேர் ஆளுக்கு நாற்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே பெரிய தொகை கிடைக்கும் என்று கார்க்கி ஸ்டாடிஸ்டிக் ரிப்போர்ட் சொன்னார். கடைசி நாள் அன்று கேட்போம். கிழக்கில் புதிய பதிப்பாய் வந்திருக்கும் சில சுஜாதாவின் புத்தகங்கள் விசா பதிப்பகத்தில் கொஞ்சம் சல்லிசாக கிடைகிறது. உ.த. கரையெல்லாம் செண்கப்பூ கிழக்கில் சுமார் 130 விசாவில் 85. மீனாட்சியிலும் நாளை முதல் கிடைக்குமென்றார்கள். நிறைய பேர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தார்கள். சிங்கப்பூரிலிருந்து ராஜ்குமார், சவுதி அரேபியாவிலிருந்து நண்பர் ஒருவர் என்று பல புது முகங்களை இன்று சந்திக்க நேர்ந்தது. புஷ்பா தங்கதுரையின் கதைகள் பழைய பதிப்புகள் பத்து, இருபது ரூபாய்க்கு முழு நாவலே பூம்புகாரில் கிடைக்கிறது. பேயோனின் புதிய புத்தகம் ஆழியில் வெளியாகியிருக்கிறது. லக்கி வாங்கியிருக்கிறார். உயிர்மையில் பார்த்திபன் வந்திருந்தார். சுத்தி எஸ்கார்டெல்லாம் நின்றிருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து எஸ்.ரா வந்திருந்தார். அவரை சுற்றி ஒரு இருபது பேர்களாவது நின்றிருந்தார்கள். ஒருவர் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். சாருவும் அரங்கிலிருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாளை மாலை பதிவர். கவிஞர்.நேசமித்ரனின் “கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” என்கிற கவிதை நூலை உயிர்மையில் வெளியிடப் போகிறார்களாம். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க நண்பர் நேசமித்ரன் சார்பாய் அழைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இயக்குனர் வடிவுடையான். சாமிடா படத்தின் இயக்குனர். அப்படம் பெரிதாய் ஓடவில்லை என்றாலும் எனக்கு அப்படத்தின் மேக்கிங் பிடித்திருந்தது. அவரது உதவி இயக்குனர் பவன் என் வாசகர். என்னை இயக்குனர் சந்திக்க விரும்புவுதாக சொன்னார். மிக அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.. உடன் மலையன் பட இயக்குனர் வேறு நடுவில் வ்ந்து கலந்து கொள்ள, சுவையான சினிமா பற்றிய டிஸ்கஷன் நடந்தேறியது. விரைவில் அவரது திரைப்படமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் வெளியாக இருக்கிறது. நிச்சயம் கரணுக்கும், தனக்கும் ஒரு பெரிய ப்ரேக் உண்டாகும் என்கிற நம்புகிறார் வடிவுடையான். இன்னும் கொஞ்ச நாளில் இவரே கூட நடித்தாலும் நடிக்கலாம். அவ்வளவு எக்ஸ்பிரசிவ். இலக்கியத்தில் ஈடுபாடுடயவர் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அடுத்தப்பட டிஸ்கஷனில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்றார். மகிழ்ச்சி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் பெரும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். இன்னொரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் இப்படத்திற்கு வசனம் நம்ம.. பா.ராகவன் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உயிர்மை ஸ்டாலில் சாருவின் ஜீரோ டிகிரியை பதிவை வைத்து ஒரு தொடர் காமெடி நிகழ்வு நடந்ததாக தெரிகிறது. ஒரு குட்டி பதிவர் சந்திப்பே என் புத்தகங்கள் விற்கும் 176 ஸ்டாலில் நடந்தது, மணிஜி, யாத்ரா, கோபி, எல்.கே, பிலாசபி பிரபாகர், சிவகுமார், நேசமித்ரன், கார்க்கி, நர்சிம், சுரேகா, குகன்,சங்கர், மதார், தினேஷ், மயில் ராவணன். கே.ஆர்.பி.செந்தில், பார்வையாளன் என்று ஒரே கும்மாளம்தான். மும்பையிலிருந்து வாசகர் யூசுப் நேரில் சந்தித்து புத்தகங்களை வாங்கிச் சென்றார். சில பேர் என்னை கிராஸ் செய்யும் போது நின்று யோசித்து, என்னை விசாரித்து, கைகுலுக்கி, பதிவுகளை படித்ததை பற்றி பேசி புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். அருண், ஜெய், ராஜ் போன்ற புதிய நண்பர்களுடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ராஜின் விஸ்தாரமான சினிமா ஆர்வம் இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் கோடார்ட், பெலினியின் படங்களை பற்றி பேசிய விஷயங்கள் சுவாரஸ்யம். கிளம்பும் போது ரொம்ப நாளாச்சு சார்.. சிங்கத்துக்கு அப்புறம் ஒரு நல்ல மசாலா படம் பார்த்து என்றார். விசா ஸ்டாலில் ஒரு பெண் என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு, கிளம்பும் போது அருகில் வந்து கேபிள் சங்கர்தானே? என்று கேட்டுவிட்டு அரை மணி நேரம் பேசிவிட்டுச் சென்றார். என் கதைகள் அனைத்தையும் படித்திருக்கிறார். பொட்டி தட்டும் வேலையில் இருக்கிறார். பேசிய அரை மணி நேரத்தில் மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தாவை பற்றி இருபது நிமிஷம் பேசினார். க்டந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கண்காட்சி மேலும் புத்துணர்வை கொடுத்திருக்கிறது. நானும் கொஞ்சம் பிரபலம் தான் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெயமோகனின் சில கட்டுரைகள், ஒரிரு சிறுகதைகள் என்று அவ்வப்போது இணையத்தில் படித்திருக்கிறேன். இப்போது தான் உலோகம் வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். த்ரில்லர் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மெதுவாய்த்தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாய் அந்த ஈழப் பின்னணி நிச்சயம் வரும் காலத்தில் கொஞ்சமேனும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இல்லை ஏற்பாடாவது செய்வார்கள். இருந்தாலும் ஒரு புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறார் ஜெ.மோ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தினம் ரெண்டு புத்தகம் என்று என் கலெக்ஷன் ஆரம்பித்திருக்கிறது. ஜொ.மோவின் உலோகம், நரசய்யாவின் கடலோடி, தலைவனின் கரையெல்லாம் செண்பகப்பூ, கம்ப்யூட்டர் கிராமம், சிவந்த கைகள், ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, என்று லிஸ்ட் தொடர்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்காட்சியில் நண்பர் தாமு தன் நண்பருடன் வந்திருந்தார். மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். 1930களிலிருந்து ஆங்கில கிளாசிக் படங்களை கலெக்ட் செய்து வைத்திருக்கிறாராம். என்னுள் இருக்கும் சினிமாக்காரன் முழித்துக் கொண்டான். நிறைய பழைய க்ளாசிக் படங்களை பற்றி பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நண்பரே.. ஒரு நாள் உங்க வீட்டிற்கு ஒரு விசிட் இருக்கிறது. உங்கள் டிவிடியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதே போல நண்பர் பதிவர் சிவகுமாருடன் நடந்த சீரியஸான சினிமா பற்றிய கேள்விகள் அதற்கான தர்க்கங்கள் என்று பேசிய விஷயங்கள் இருவருக்கும் உபயோகமாய் இருந்தது. தான் கேட்க வேண்டியதை மிகத் தெளிவாக கேட்டு, சில சமயம் சொல்லி அசத்தினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தோழியும் அவரது கணவரும் வந்திருந்தார்கள். மாலையில் பா.ராவின் கிழக்குக்கு போட்டியாய் ஒரு பெரிய ஜமா 176 நடைபாதையில் ஓடியது. வந்திருந்த பெரும்பாலான கூட்டம் மால்களில் விண்டோ ஷாப்பிங் போல வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு போனது மிகவும் வருத்தமான விஷயம். இரண்டு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. வந்த கும்பலில் அட்லீஸ்ட் ஒரு 75ஆயிரம் பேர் ஆளுக்கு நாற்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே பெரிய தொகை கிடைக்கும் என்று கார்க்கி ஸ்டாடிஸ்டிக் ரிப்போர்ட் சொன்னார். கடைசி நாள் அன்று கேட்போம். கிழக்கில் புதிய பதிப்பாய் வந்திருக்கும் சில சுஜாதாவின் புத்தகங்கள் விசா பதிப்பகத்தில் கொஞ்சம் சல்லிசாக கிடைகிறது. உ.த. கரையெல்லாம் செண்கப்பூ கிழக்கில் சுமார் 130 விசாவில் 85. மீனாட்சியிலும் நாளை முதல் கிடைக்குமென்றார்கள். நிறைய பேர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தார்கள். சிங்கப்பூரிலிருந்து ராஜ்குமார், சவுதி அரேபியாவிலிருந்து நண்பர் ஒருவர் என்று பல புது முகங்களை இன்று சந்திக்க நேர்ந்தது. புஷ்பா தங்கதுரையின் கதைகள் பழைய பதிப்புகள் பத்து, இருபது ரூபாய்க்கு முழு நாவலே பூம்புகாரில் கிடைக்கிறது. பேயோனின் புதிய புத்தகம் ஆழியில் வெளியாகியிருக்கிறது. லக்கி வாங்கியிருக்கிறார். உயிர்மையில் பார்த்திபன் வந்திருந்தார். சுத்தி எஸ்கார்டெல்லாம் நின்றிருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து எஸ்.ரா வந்திருந்தார். அவரை சுற்றி ஒரு இருபது பேர்களாவது நின்றிருந்தார்கள். ஒருவர் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். சாருவும் அரங்கிலிருந்தார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாளை மாலை பதிவர். கவிஞர்.நேசமித்ரனின் “கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” என்கிற கவிதை நூலை உயிர்மையில் வெளியிடப் போகிறார்களாம். அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்க நண்பர் நேசமித்ரன் சார்பாய் அழைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Comments
One small request /No One Killed Jessica/ Vimarsanam vendum...
Glad that my friend is becoming a VIP.
அதிகரித்து வருகிறது என்று நினைக்கிறேன்
கிடைக்கும் தல...
ஆகா! இத ஆட்டோ பின்னாடியே எழுதலாமே! சூப்பர் பாஸ்!
http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html
இது பற்றி ஒரு தனிப்பதிவே போட்டிருக்கலாம் அண்ணா.
நரசய்யாவின் 'கடலோடி' எங்கே கிடைக்கும்?
நன்றி!
நீங்க என்ன வாசகர் கூட்டமே வச்சிருக்கீங்க,உங்கள ஒரு நாளைக்கு 100 கைகள் கை குழுக்குதாமே.
மென்மேலும் பெரிய பிரபலமாக வாழ்த்துக்கள் அண்ணா.
நல்ல நேரத்துல போட்டிங்க அந்த வொர்க் ஃப்ர்ம் ஹோம் விளம்பரத்த .
இத்தனைக்கும் உங்களது இரண்டு புஸ்தகங்களையும் காசு தந்து வாங்கிருக்கேன் :))))))))
பதிவு நல்லாயிருக்கு
பிறகு பாரதி பதிப்பகத்தில் சுஜாதா நாவலொன்று ரூபாய் 25 /= க்கு கிடைக்கிறது ...1970 களில் வந்தது
நன்றி..
@ஷண்முகா
பார்க்கணும்
@இராமசாமி
நன்றி
@எல்.கே
நன்றி தலைவரே
@மோகன் குமார்
ஹி..ஹி.. நன்றி
@ஜி.ராஜ்மோகன்
யாருக்கு? :))
@சே.குமார்
நன்றி
@ஜீ
போட்டுட்டாபோச்சு.. நன்றி எஸ்.எம்.எஸ் பார்வர்ட் செய்தவர்
@கிருபா
நிச்ச்யம பார்க்கிறேன்
@ஜனா
ஆமாம் ஜனா
@இ.சி.ஆர்
176 ஆண்டாள்திரிஷக்தி புக் செல்லர்ஸிடம் கிடைக்கிறது..
@காவேரி கணேஷ்
இதில என்னவோ இருக்கு..?
@ஜோசப் பால்ராஜ்
வொர்க் பர்ம் ஹோம் மேட்டர் தெரிந்து தான் தேடிப் போட்டேன்
@முஹம்மது யூசுப்
சும்மா.... சரி உங்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
@செ.சரவணக்குமார்
நன்றி
@டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன்
@கார்க்கி
அஹா.. வடை போச்சே
@ராகின்
நன்றி தலைவரே வாங்கிடறேன்.
கா..கா..கா...
"ப்ளாக் வச்சுருக்கவன் எல்லாம் ப்ளாக்கர். எழுதுறவனெல்லாம் ரைட்டர் கிடையாது" :))))
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன் //
>>> அடுத்த கலைஞர் நீங்கதான்....