ஜப்பானில் சுமார் 350 கோடி ரூபாய் பணம் மக்களிடையே கிடைத்திருக்கிறது. அதை பத்திரமாய் அவர்கள் போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா? பூகம்பத்தின் போது பல லட்சம் பேர்களின் வீடுகள் நாசமடைந்து அழிந்து போனது. அதை சீரமைக்கும் போது அந்ததந்த வீடுகளில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் அந்நாட்டு மக்கள் போலீஸார் வசம் ஓப்படைத்தனர். இதைத் தவிர, நகைகள், விலையுர்ந்த பொருட்களும் உண்டு. விபத்தில் அடிபட்டு கிடக்கும் ஆட்களிடம் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாய் அவர்களிடமிருக்கும் உடைமைகளை அள்ளிக் கொண்டு போகும் போலீசும், மக்களும் உள்ள நம் நாட்டில் இது ஒரு ஆச்சர்யமான, அதிசயமான விஷயமே.
###########################################
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மக்களிடையே எப்படி இவ்வளவு ஆதரவு கிடைத்தது என்று யோசித்து ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறது காங்கிரஸ் அரசு. வெளிநாட்டு சதியாம். நண்பர் ஒருவர் சொன்னார் ஆமாம் சோனியா வெளிநாட்டுகாரங்க தானே என்று.
############################################
தத்துவம்
சில சமயம் நம் வாழ்க்கையின் அத்தனை கதவுகளும் மூடப் பட்டுவிட்டதாகவே தோன்றும். ஆனால் எல்லாம் மூடப்பட்ட கதவுகள் அடைக்கப்படுவதில்லை. கதவை மெல்ல அழுத்தித் திறக்கும் கைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கதவை திற காற்று நிச்சயமாய் வரும்.
அவனால் செய்ய முடியுமென்றால் உன்னாலும் நிச்சயமாய் செய்ய முடியும் - எவனாலும் செய்ய முடியாது என்றால் நிச்சயம் நீ செய்ய வேண்டும்.-ஜப்பானிய பழமொழி.
அவனால் செய்ய முடியுமென்றால், அவனே செய்யட்டும், யாராலும் செய்ய முடியாது என்றால் “ஆணியே புடுங்க வேண்டாம்” விட்டுருங்க.- நம்மூர் பழமொழி.
விவாதிப்பதை விட வளைந்து கொடுத்து போவது நல்லது.
அர்த்தமுள்ள மெளனம், அர்த்தமில்லாத வார்த்தையை விட சிறந்தது.

ப்ளாஷ்பேக்
நம்ம ஊர் சத்யராஜுக்கு சரியான போட்டி கொடுக்ககூடிய ஆள் தெலுங்கு மோகன் பாபு. ஒரு சமயங்களில் இவர் சத்யராஜ் தமிழில் செய்த மலையாள படங்களின் ரீமேக்கை தெலுங்கில் செய்திருக்கிறார். சில தமிழ்படங்களில் கேனத்தனமான வில்லன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் வெர்சடைலான நடிகர்களில் முக்கியமானவர். தெலுங்கில் இவரது டயலாக் டெலிவரிக்காகவே படம் பார்பவர்கள் அதிகம். அமைதிப் படை திரைப்படம் ஹிட்டானவுடன் எம்.தர்மராஜு.எம்.எல்.ஏ என்று தெலுங்கில் ரீமேக்கினார்கள். மிகப் பெரிய ஹிட். பாலக்கோலில் அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்த போது இந்த பாடலுக்கு கிடைத்த ஆரவாரம் அபாரம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எஸ்.பி.பி. ரொம்பவும் ரசித்து உற்சாகமாய் குரலில் நடித்து பாடியிருப்பார். எஸ்.பி.பியின் உற்சாக குரலுக்காகவே இப்பாட்டை விரும்புவீர்கள்.
############################################
புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை அறிவித்ததும் யாருமே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.எல்லா எதிர்கட்சிகளும் அதை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் வரவேற்று விட்டன. ஏன் திமுக தலைவரே வரவேற்று ”நான் வாழும் வீட்டையே எனக்கு பிறகு மக்களுக்கு மருத்துவமனைக்காக எழுதிக் கொடுத்திருக்கிறேன்.நான் கட்டிய கட்டிடத்தை மருத்துவமனையாக்குவதையா எதிர்ப்பேன்” என்று சொல்லும் அளவிற்கு நிலமை ஆகிவிட்டது. ஆனால் அக்கட்டிடத்தை மருத்துவமனை ஆக்குவதற்கு குறைந்த பட்சம் உடனடி தேவையாய் 60-70 கோடிகள் செலவு செய்யப் பட வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரி விஷயம் தனி என்று சொல்கிறார்கள். எது எப்படியோ சினிமா ஷூட்டிங்கிற்க்கு விடாமல் மக்களுக்கு உருப்படியாய் செய்ய திட்டம் போட்டதே பெரிய விஷயம்.நானும் பாராட்டுறேன்.ம்ஹும் வேற வழி. எய்ம்ஸ் மாதிரியாமில்ல..
###########################################
காமெடி
கார்க்கி, ஆதி, பரிசல் ஆகியோர் சேர்ந்து கலாய்த்திருக்கும் இந்த ரீமிக்ஸ் படம். செம காமெடி. தளபதி படத்திலிருந்து ஒரு முக்கிய காட்சியை கார்க்கி வசனமெழுதி, பேசி, ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே லேசான புன்னகையை தவழ விடும் படம். மம்முட்டிக்கு ஆதியின் குரல் வந்தவுடன் நான் விழுந்து விழுந்து சிரிக்கலானேன். செம..காமெடி. கார்கியின் வசனங்கள் படு சுவாரஸ்யம். நீங்களும் பார்த்து சிரியுங்கள்.
#############################################
என்னவோ தமிழ் சினிமா ஆட்சி மாறியவுடன் தேனும் பாலும் ஓடும் என்பது போல சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாறி.. சமீபம் வரை தெய்வதிருமகளும், காஞ்சனாவும்தான் ஓடிய படங்களாய் இருக்கிறது மற்ற படங்கள் எல்லாம் போட்ட பணத்தில் போஸ்டர் ஒட்டிய காசு கூட வரவில்லை என்கிறார்கள். குறைந்த பட்ச முதலீட்டில் படம் எடுப்பவர்கள் எல்லாம் சாட்டிலைட் ரைட்ஸ் விற்று ஒரு முப்பது சதவிகித முதலீட்டை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. எல்லாம் படங்களையும் அடி மாட்டு ரேட்டுக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள்.
###############################################
மை கார்னர்”ழ” கபேயில் நடந்த ஜுகல்பந்தியும், கச்சேரியும்.
திருமணமான ஜோடி ஒன்று செக்சாலஜிஸ்ட் டாக்டரை பார்க்க போனார்கள்.
டாக்டர் பொண்டாட்டியிடம், 'உங்க பிரச்சனை என்ன?' என்று கேட்டார்.
பொண்டாட்டி, 'இவருக்கு செக்ஸ் பண்றப்போ எல்லாம் சீக்கிரமா விந்து வந்துடுது டாக்டர்..' என்று சொன்னாள்.
டாக்டர் புருஷனிடம், 'இது தான் உங்க பிரச்சனையா?' என்று கேட்டார்.
புருஷன், 'அது அவ பிரச்சனை டாக்டர்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை' என்று சொன்னான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்###############################################
மை கார்னர்”ழ” கபேயில் நடந்த ஜுகல்பந்தியும், கச்சேரியும்.
##################################################
அடல்ட் கார்னர்திருமணமான ஜோடி ஒன்று செக்சாலஜிஸ்ட் டாக்டரை பார்க்க போனார்கள்.
டாக்டர் பொண்டாட்டியிடம், 'உங்க பிரச்சனை என்ன?' என்று கேட்டார்.
பொண்டாட்டி, 'இவருக்கு செக்ஸ் பண்றப்போ எல்லாம் சீக்கிரமா விந்து வந்துடுது டாக்டர்..' என்று சொன்னாள்.
டாக்டர் புருஷனிடம், 'இது தான் உங்க பிரச்சனையா?' என்று கேட்டார்.
புருஷன், 'அது அவ பிரச்சனை டாக்டர்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை' என்று சொன்னான்.
Comments
"டாக்டர்" புரட்சித்தலைவி வாழ்க!
குறும்படம் அருமை.
The building was designed to be the legislative assembly with associated facilities. A hospital building - that too a super speciality hospital- needs a totally different plan and facilities. More money will be spent on demolitions and rebuilding. It will be difficult to conceal many new installations without structural changes. It is not clear if J has consulted the medical specialists and building specialists on the conversion proposal before she made the announcement in the assembly.
J stated in reply to Court's queries that the building was not ready fully and that had administrative problems by having the ministers and the secretaries 2 km away from each other. That is the reason for her choosing to operate from St. George Fort. If it is so, court shall ask her to complete the building as planned and move in there as early as possible.
She can always build a super speciality hospital elsewhere (even advisable if she agrees with MK's proposal to use old, now vacated, prison compound ).
It is the public's money that is being wasted by doing away with the projects / schemes brought forth by the previous government and worse that it may be followed by future governments as well.
Let us hope some advisers can give J some sane advises and also hope she listens.
Appreciate your readers' comments on above.
-R. Jagannathan