Thottal Thodarum

Jun 6, 2013

Hang Over -3

உலகெங்கும் பாஸ்ட் அண்ட் புயூரியஸ் 6 வசூலில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும், விமர்சகர்களிடையேயும், பாக்ஸ் ஆபீஸிலும் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட் தான் கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ரீலீஸான நாள் முதல் ஹவுஸ்புல்லாத்தான் போகிறது.


வழக்கமாய் யார் திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் பார்ட்டிக்கு போய் மட்டையாகி ப்ரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள் இம்முறை வேறு மாதிரி. ஆலனின் பொறுப்பற்ற தன்மையால் நொந்து போன அவனின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போக அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு எடத்திற்கு அழைத்துப் போக நண்பர்கள் மூவரும் முடிவெடுக்கிறார்கள். போகிற வழியில் நால்வரும் கடத்தப்பட்டு, நண்பனும் மச்சினனுமானவனை ஹாஸ்டேஜாக பிடித்து வைத்துக் கொண்டு, கடத்தல்கார தாதா தான் கொள்ளையடித்து வந்த 40 மில்லியன் தங்க கட்டிகளை ஆலனின் நண்பனாகிய டோனி என்கிற சைனீஸ் கொள்ளையடித்துவிட்டதாகவும், அவனிடமிருந்து தங்கத்தையும், அவனையும் தங்களிடம் ஒப்படைக்கவில்லையென்றால் மச்சினன் கொல்லப்படுவான் என்று சொல்லிவிடுகிறான். பின்பு எப்படி டோனியை கண்டுபிடித்து, மச்சினனை மீட்கிறார்கள்? ஆலன் பொறுப்பானவனாய் மாறினானா? என்ற கதையை சிரிக்க, சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கமான நான்கு பேர் குழு என்றாலும் கில்லியாய் சிக்ஸரடிப்பது ஆலன் கேரக்டர் தான். ஒட்டகசிவிங்கியை வாங்கி வந்து பாலத்தின் மீது மோதி சாகடித்தற்காக அவனின் அப்பா 42 வயசாகியும் ஒண்ணுக்கும் பிரயோஜனமில்லாமல் இருக்கிறாயே என்று கத்த, நடுவில் திருத்தி “42 இல்லை 43 என்று சொல்லுமிடத்திலாகட்டும், அப்பா செத்து போய் மயானத்தில் அவருக்காக ஓபரா ஸ்டைலில் பாடி, அப்பா கடைசியாய் என்னிடம் பேசிய வார்த்தை நீ மாறக்கூடாது என்பதுதான் அவரது ஆசையை காப்பாற்றுவேன் என்று சொல்லுமிடம், எல்லோரும் சீரியசாய் ப்ரச்சனையில் பேசிக் கொண்டிருக்கும் போது சூதுகவ்வும் பகலவனாய் பசிக்குது சாப்பாடு தேடுங்க என்று சொல்லுமிடம், க்ளைமாக்ஸில் லாஸ்வேகாஸில் ஒரு அடகுக்கடைகாரியிடம் காதல் கொண்டு வழியுமிடமாகட்டும், ஆலனில்லையேல் படமில்லை. மனுஷன் அப்பாவியான முகத்தையும் பாடி லேங்குவேஜை வைத்து கலக்கு கலக்கென கலக்குகிறார்.
டோனி இவர்கள் மூன்று பேரை வைத்து கடத்தல்கார தாதாவின் மீதி பாதி தங்கத்தையும் அபேஸ் பண்ணும் இடம் அட்டகாசமான ஐடியா. கொஞ்சம் சீரியஸாய் யோசித்தால் லாஜிக் என்ற விஷயம் நிறைய இடத்தில் இடிக்கும். அதையெல்லாம் மறந்துவிட்டு, சீனுக்கு சீன் வரும் ஒன்லைனர்களையும், பிற்பாதியில் ஆங்காங்கே தொய்ந்து போனாலும், சிரிக்க சிரிக்க போகும் திரைக்கதையால்  இங்கிலீஷ் சூது கவ்வுமாய் இருக்கிறது இந்த ஹாங் ஓவர் 3 காமெடி கலாட்டா
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

rajamelaiyur said...

தமிழில் டப் பண்ணி வருமா ? ஹீ .. ஹீ ஹிந்தி தெரியாது