Thottal Thodarum

Jun 29, 2013

Balupu

 ரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை விடுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.


பெரிய உட்டாலக்கடி கதையெல்லாம் இல்லை. வழக்கமான பாட்ஷா கதைதான் அதில் ஒரு சின்ன ட்விஸ்டோடு, கொடுத்திருக்கிறார்கள். ரவி தேஜாவுக்கு டெய்லர் மேட் ரோல். மிக அநாயசமாய் நடித்துவிட்டு போகிறார். இவரிடம் ப்ரம்மானந்தம் படும் பாடு இருக்கிறதே அது செம காமெடி. ரவிதேஜாவுக்கு ரெண்டு கெட்டப். முதல் பாதியில் ஃபுல் ஷேவ் ரவியாகவும், இரண்டாம் பாதியில் தாடியுடன் ரவுடியாகவும் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கம் போல. இவரின் எல்லா படங்களிலும் காமெடி பெரிய அளவில் கை கொடுக்கும் இதில் அஃதே. ஸ்ருதி அழகாய் இருக்கிறார். நன்றாக ஆடுகிறார். பார்ஃபி டால். இரண்டாம் பாதியில் வரும் அஞ்சலிக்கு கொஞ்சம் நல்ல கேரக்டர். அதை அவர் தன் வழக்கம் போல சிறப்பாக செய்து இறக்கிறார். கலக்கலான பர்பாமென்ஸ் என்றால் அது ப்ரகாஷ்ராஜும், ப்ரம்மானந்தமும்தான். ப்ரகாஷ்ராஜின் ரெண்டு பார்ட் கேரக்டரைஷேஷனும்,அதற்கான நடிப்பு லாஜிக்கலாய் நம்ப முடியாவிட்டாலும் க்ளாஸ். ப்ரம்மா.. என்னா ஒரு பேசியல் ரியாக்‌ஷன்கள். மனுஷன் க்ளைமாக்சில் மீண்டும் ஒரு முறை ஐ.பி.எல் டீம் மியூசிக்கை போட்டு ஆடும் இடம் அட்டகாசம்.

தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணியிசையில் ஆங்காங்கே ஓகே என்று சொல்ல வைக்கிறார். ஜெயனன் வின்செண்டின் ஒளிப்பதிவு நச். கோனா வெங்கட்டின் கதை வசனத்தில் கதையில் பெரிய புது மேட்டர் இல்லாவிட்டாலும் வசனங்களில் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டேயிருக்கிறார்.
திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் கோபிசந்த மல்லினேனி. டெம்ப்ளேட் கதையில் வழக்கம் போல இரண்டாம் பாகம் வந்தவுடன் ரவுடியிடம் போட்டி என்று போய்க் கொண்டிருந்த பாட்சா கதையில் நாயகன் கதையை நுழைத்து, செண்டிமெண்டையும் தூக்கி போட்டு அடித்து ஒரு விதமான குழப்ப மசாலாவை தூவி, இரண்டரை மணி நேரத்திற்கு நம்மை உட்கார வைத்துவிட்டார். அதிலும் க்ளைமாக்ஸில் வில்லனின் இரண்டாவது பையனின் ஆவி தன் உடம்பில் புகுந்து விட்டதாய் ரவி தேஜா ஆட்டம் காட்டுமிடம் சுத்த லாஜிக்கில்லாததனம் என்றாலும் வேற என்ன பண்ணுவது என்று இயக்குனர் மிரண்டுபோயிருப்பது தெரிகிறது. வெறும் மொக்கை காமெடி மசாலா பட விரும்பிகளுக்கு மட்டும்
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Thozhirkalam Channel said...

தெலுங்கு படத்துல லாஜிக்கா..? ம்ம்ம் ரொம்பதான் எதிர்பார்க்குறீங்க...

'பரிவை' சே.குமார் said...

தெலுங்குப் படத்தில லாஜிக்கெல்லாம் எங்கண்ணா இருக்கு... நாலு ஆட்டம் நாலு சண்டை... நடுவுல கொஞ்சமாய் ஆந்திரக் காரம் அம்புட்டுத்தான்...

Raj said...

We want A(R)NNAKODI..