Thottal Thodarum

Aug 30, 2013

நடு நிசிக் கதைகள் -2

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர்

நடு இரவில் மேற்கு மாம்பலத்தில் உள்ள உதவி இயக்குன நண்பரை அவரின் அறையில் விட்டு விட்டுப் போக எண்ணி வழக்கமான ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமான ரோடு என்றால் போலீஸ் செக்கிங் இல்லாத ரூட். வழக்கமாய் இரவு நேரங்களில் லேக் வியூ ரோடு சந்திப்புக்களில் செக்கிங் இருக்கும் அதனால் அதற்கு முன்பே போஸ்டல் காலனியில் புகுந்து ஜூவன் ஸ்டோரின் வழியாய் அவர்களுக்கு முன்னால் உள்ள தெருவில் போய் சேர்ந்துவிடுவோம். இது நாள் வரை எல்லாம் சுகமாகவே போய்க் கொண்டிருந்த வேளையில் விதி விளையாடியது.


கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும் எங்களின் வழக்கமான ரோட்டின் முனையில் எதிர்பாராமல் கொத்தாய் போலீஸ் நண்பர்கள். யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் வேகமாய் ஓட்டியதன் விளைவு அவர்களுக்கு மிக அருகில் நாங்கள். வண்டியை திருப்பினால் நீண்ட கழி நம் உதவி இயக்குனரின் முதுகை பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதால் நேர்மையாய் வண்டியை அவர்களை நோக்கி ஓட்டினேன். குண்டான பெண் இன்ஸ்பெக்டரும், அப்ரசண்டி ஒல்லிப்பிச்சான் பெண் கான்ஸ்டபிள் நான்கைந்து தடித்த ஆண் அதிகாரிகள் இருந்தார்கள். வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆண் போலீஸ்காரர்கள் வேறு சில பைக் பார்ட்டிகளுடன் பிசியாய் இருந்ததால் பெண் இன்ஸ்பெக்டர் அருகே வந்தார். கிட்டே வந்து முகர்ந்து பார்க்க வாய்ப்பு கொடுக்க விரும்பாமல், “ ஆமாம் மேடம் “ என்று வண்டியை ஆப் செய்து விட்டு உஷாரய் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அதை பார்த்து சிரித்தபடி “எங்க வேலை செய்யுறீங்க?” 

நண்பர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனரின் பெயரைச் சொன்னார். நானும் டெம்ப்ரவரியாய் அவரின் அஸிஸ்டெண்ட் ஆனேன். சினிமாக்காரங்க நீங்க ஆ வூன்னா எங்களையெல்லாம் கிழிச்சு தோரணம் கட்டுறீங்க நீங்க ஒழுக்கமா இருக்க வேணாம்? என்றார்.

”எங்கங்க மேடம். வேணாம் சார்.. போலீஸ் பிடிக்கும்னு சொன்னா எங்க கேக்குறாரு டைரக்டர். அவரு டிஸ்கஷனையே பத்து மணிக்கு மேலத்தான் ஆரம்பிக்கிறாரு. கூட இருக்கலைன்னா வேலை போயிரும். இருந்தா உங்க கிட்ட மாட்ட வேண்டியிருக்கு. எங்க பொழப்பு நாய் பொழப்பாயிருச்சு மேடம்” என்று நண்பர் சீரியஸாய் புலம்ப ஆரம்பித்தார். அவர் அழுததன் காரணம் இயக்குனரிடம் அன்றைக்கு வாங்கின அட்வான்ஸ் காசு இருந்ததுதான். எங்கே தண்டம் அழுவிடுவோமென்ற பயம். பார்ட்டிக்கு என் காசு காலி.

இன்ஸ்பெக்டர் சிரித்தார். டைரக்டரின் பேரைச் சொல்லி “போலீஸையெல்லாம் சொங்கிங்கன்னு சொல்றா மாதிரி படமெடுக்கிறாரே உங்க டைரக்டர் அவர் கிட்ட சொல்ல மாட்டீங்களா? நாங்க எப்படியெல்லாம் கஷ்டப்படுறோம்னு.” 

“எங்க மேடம் கேட்குறாரு.. அவரு ஆபீசுல உக்காந்து சரக்கடிச்சிட்டு மட்டையாயிடுறாரு.. அவருக்கு போலிஸா? சட்டமா என்ன தெரியும். திரும்பினா வீடு கொட்டுவாயில மாட்டிக்கிட்டோம்”

நான் அமைதியாய் இருந்தேன். “வண்டி பேப்பரையெல்லாம் காட்டுங்க” என்றார் என்னிடம். எடுத்துக் காட்டினேன். 

“இனிமேலாச்சும் இந்த மாதிரி நடந்துக்காதீங்க. நாங்க டிடி டீம் இல்லை, அத்தோட உங்களைப் பார்த்தா பூச்சியா இருக்கிங்க.. அதனால விடறேன். உங்க டைரக்டர்கிட்ட சொல்லுங்க இனிமேலாச்சும் போலீஸுலேயும் நல்லவங்க இருக்காங்கன்னு” என்று நகர எத்தனித்தார்.

“மேடம் வழக்கமாய் இதுக்கு முன்னாடி தெருவில இல்லை நிப்பாங்க. இன்னைக்கு ஏன் இங்க நிக்கிறீங்க?” என்று கேட்டேன்.

“ரூட் பார்த்துத்தான் வர்றீங்க போல.. அது ஒண்ணுமில்லை. இந்த ரோடுல நேத்து ஒரு கொலை நடந்திருச்சு. அதான்”  என்றார் சீரியஸாய்.

“சொன்னா தப்பா நினைச்சிக்காதீங்க மேடம். கொலைகாரனை வீட்டு பக்கத்திலேயே தேடுனா எப்படி கிடைப்பான்?. நாலைஞ்சு தெரு தள்ளி தேடலாமில்லை” என்றேன். 

”உங்களையெல்லாம் போகவிடறதே தப்பு.. ஓடுரு” என்றார் அவர்.
கேபிள் சங்கர்


Post a Comment

5 comments:

Unknown said...

i think u edited the screen play accordingly to write in blog. As the event is not realistic as your team is shown as brave people when compared to police

Cable சங்கர் said...

நோ எடிட்டிங் மகேஷ். பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கிறது. போலீஸ்னா பயந்து போக வேண்டிய அவசியம் இல்லை. தே ஆர் ப்ரெண்ட்லி.. ஆல்வேஸ்.

Unknown said...

Sir Thanks for your reply. I am glad that you replied quoting my name. I too belong to saidapet area. I regularly follow your site and your foot steps in to saapadu kadai.I liked your article regarding your trip to andhra to watch viswaroopam.Thanks

Unknown said...

சார் ஏற்கனவே இதேகதையை சொன்ன மாதிரி ஞாபகம்.எதற்க்கும் ஒரு முறை பழைய பதிவை செக் பண்ணவும்.

'பரிவை' சே.குமார் said...

நானும் இது போன்ற போலீசைப் பார்த்திருக்கிறேன்...