Thottal Thodarum

Aug 7, 2013

Ship Of Theseus


ஒரு சின்னப் படம், ரிலீஸாகி ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருப்பது சாதாரணமில்லை. அதுவும் வெகுஜன படமல்லாமல் கலைப்படமாய் இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. மூன்று தனித் தனி கதைகள். ஆனால் அவையனைத்துக்கும் ஒர் இணைப்பு இருக்கிறது. அது தான் இந்தப் படத்தைப் பற்றி பேச வைக்கிறது.


அலியா கார்னியா இன்பெக்‌ஷனால் கண் பார்வை பறி போனவள். பார்வை பறி போயிருந்தாலும் அவளது பேஷன் போட்டோகிராபி. அதுவும் கருப்பு வெள்ளை படங்கள் எடுப்பதில் சமர்த்தி. அவளுக்கு கண் தானம் மூலமாய் பார்வை கிடைக்கிறது. பார்வை வந்தபின் அவளால் படமெடுக்க முடியவில்லை. தன் வேலையை சிலாகிக்க முடியவில்லை.

இன்னொரு கதையில் ஜெயின் துறவி ஒருவர். ஈ, எறும்புக்கு கூட தொல்லை தராதவர்கள். மிருகங்களை வதைத்து மருந்து தயாரிப்பதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டு அலைபவர். அவருக்கு லிவர் சிரோஸிஸ் வருகிறது. மிருகங்களை வதைத்து கண்டு பிடிக்கப் பட்ட ஆங்கில மருந்துகளை உபயோகிக்க மாட்டேன் என்ற கொள்கையை கடுமையாய் பாவித்து, மிக மோசமான விளைவுகளை சந்திக்கிறார். பின்பு என்ன ஆனது?

மூன்றாவது கதையில் ஸ்டாக் மார்கெட் ஜாதி ஆள். மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவன். ஆஸ்பத்திரியில் ஒரு பெண் அழுவதை பார்க்கிறான். அவளுடய கணவன் இந்த ஆஸ்பத்திரியில் உடல்நலம் சரியில்லாத போது அட்மிட் ஆனதாகவும், அந்த நேரத்தில் அவனுடய் கிட்னியை திருடி வேறொருவருக்கு பொருத்திவிட்டதாகவும், இனி அவன் என்ன செய்யப் போகிறான் என்று அழுகிறாள். ஒரு வேளை தனக்கு கொடுக்கப்பட்ட் கிட்னி அவனுடயதாய் இருக்குமோ என்று பயந்து விசாரணை செய்ய, தனக்கு அவனுடய கிட்னியை பொருத்தவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறான். இன்னொரு பக்கம் அவனை தொடர்பு கொண்டு உன்  கிட்னியை பொருத்தியவனை கண்டுபிடித்து கிட்னியை திரும்பப் பெறுவோம் என்று கிட்னி பெற்றவனை தேடி கண்டுபிடித்து கேஸ் போடுகிறான். ஆதன் பின்பு நடந்தது என்ன? என்பது இன்னொரு கதை. 

இந்த மூன்று கதைகளும் வெவ்வேறு களங்களில்  பயணித்தாலும், எல்லாரும் ஒன்று சேரும் விஷயம் க்ளைமாக்ஸில் சொல்லப்படுகிறது.  இவர்கள் மூன்று பேருக்கும் பொருத்தப்பட்ட உறுப்புகள் ஒருவரிடமிருந்தே பெறப்பட்டது என்பதுதான். சரி...உறுப்பு தானம் பற்றிய படம் தானே இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது என்று கேட்பீர்களானால், அதற்கான பதிலிருக்கிறது. பார்வையில்லாத போது வாழ்கையை ரசித்த பெண், கண் பார்வை வந்ததும், அதன் மேல் ஈடுபாடு இல்லாம்ல போகும் ஐரணி. கோர்டு கேஸுக்காக அதிகாலையில் எழுந்து நட்ந்தே கோர்ட்டுக்கு வரும் துறவி. புசிக்கும் பழத்தை கூட மரத்திலிருந்து  உலுக்கியதை உண்ணாதவர். லிவர் ட்ரான்ஸ்ப்ளேண்டுக்கு ஒத்துக் கொள்வது. பணம் மட்டுமே பிரதானமாய் இருந்த ஷேர் ப்ரோக்கர் அநியாயமாய் கிட்னி திருடப்பட்டு அநாதரவாய் நிற்பவனுக்கு உதவ போக, முப்பதாயிரம் ரூபாய் கிட்னிக்கு ஆறரை லட்சம் ரூபாய் தருபவனை கேஸ் போட்டு ஒண்ணும் கிழிக்க வேண்டாமெனும் போது அடையும் அதிர்ச்சி என வாழ்க்கையின் முரண்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.

உறுத்தாத பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவு, கொஞ்சம் ஆங்காங்கே இழுவையாய் இருந்தாலும், சமயங்களில் எஃபெக்டிவாய் இருக்கும் பின்னணியிசை. ஸ்டைக்கிங் அலியா, துறவியாய் வரும் நீரஜ், ஸ்டாக் ப்ரோக்கராய் வரும் ஷோகம் ஷா என எல்லோருமே கேரக்டராய் வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாய் துறவியாய் வரும் நீரஜ் கிட்டத்தட்ட பதினேழு கிலோ நிஜமாகவே இளைத்திருக்கிறார். அவ்வளவு வியாதியிலும், அவர் முகத்திலிருக்கும் தேஜஸ் குறையவேயில்லை. எழுதி இயக்கியவர் ஆனந்த் காந்தி. மூன்று கதைகளையும் வெவ்வேறு களங்களில் சொன்னவர் படமாக்கிய முறைகளில் மட்டும் ஒரே விதமான ஸ்டேடிக் ஷாட்களாகவும், நெடிய லெந்தி ஷாட்களாகவுமே பாவித்திருப்பதும், என்ன தான் விஷுவலாய் சில ஷாட்கள் நன்றாக இருந்தாலும் சில இடங்களில் நம்மை தூக்கத்தில் சொக்கத்தான் வைக்கிறது. படம் நெடுக பரபரப்பாய் ஏதும் நிகழவில்லை, பத்து செகண்டுக்கு மாறும் காட்சிகள் இல்லை. ஆடை அவிழ்ப்போ, ட்ராமாவோ இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது கொடுக்காத பாதிப்பு வீட்டிற்கு வந்தது நம் மனம் பூராவும் வியாபித்து,  அசை போட, அசை போட புதுப் புது அர்த்தங்களை, உணர்வுகளை  நமக்குள் ஆக்கிரமிக்க செய்கிறது இந்தப்படம். வாழ்கையின் முரண்களோடு, அதன் போக்கில் பயணித்தோ, அல்லது எட்ட நின்று நிதானித்து  பார்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு பேரனுபவம். மற்றவர்கள் கொஞ்சம் தூர நின்று கொள்வது நல்லது.
கேபிள் சங்கர்


Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை...

குரங்குபெடல் said...

"ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருப்பது சாதாரணமில்லை "


அண்ணே இது ரொம்பவே ஓவர் . . .


ஊர்ல போஸ்டர் கூட காணோம் . .

எங்கயோ ஒரு சோவோ ரெண்டு சோவோ ஓடுது

நெட்ல நாலு பேர் எழுதுனா ஊரெல்லாம் னு


ஆகிடுமா


ரசிகன் வெளியில இருக்கான் குமாருன்னு நீதானே அண்ணே அன்னிக்கு சொன்னிங்க