Thottal Thodarum

May 27, 2013

கொத்து பரோட்டா -27/05/13

சமீபகாலமாய் திரையுலக செய்திகளும், சில பல சிறு விமர்சனங்களும் எஸ்.கே என்கிற பெயரில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். என்ன கேபிள் சங்கர் சினிமா ரிப்போர்ட்டர் ஆகிவிட்டாரா? என்று கூட சில பேர் கேள்வி கேட்டார்கள். இனி வரும் காலங்களில் நான் எழுதும் விஷயங்கள் மட்டுமில்லாமல் நம் தளத்தின் கண்டெண்டுக்காக ஒரு குழுவும் பயணிக்க இருக்கிறது. எனவே அவர்களுடய செய்திகள், கட்டுரைகளும்  பெயர்களுடன் இடம் பெரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@அமெரிக்காவில் டீச்சராய் பணிபுரியும் கர்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்கு மூன்று வாரங்கள் இருக்கும் போது தீடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மயங்கி விழுந்தவரை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்த போது அவரது நாடித்துடிப்பு அடங்கி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரை காப்பாற்ற சிசேரியன் செய்து குழந்தையை காப்பாற்றிய விநாடியில் ஒர் ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. தாயின் இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டதாம். ஒரு தாய் தன் உயிரைக் கொடுத்து குழந்தைக்கு உயிர் கொடுப்பாள். இங்கோ ஒரு குழந்தை தன் பிறப்பின் மூலமாய் தன் தாய்க்கு உயிர் கொடுத்திருக்கிறாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் நான் என் உதவியாளர் சுரேஷும் சவுகார் பேட்டையில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றோம். பேச்சு கிரிக்கெட் சூதாட்டம் பற்றிப் போனது. இனிமேல் சூதாட்டம் நடக்காது கொஞ்ச நாளைக்கு என்று இன்னொரு நண்பர் சொன்ன போது. அட அதெல்லாம் இல்லைங்க.. அது பாட்டுக்கு வேற ஒரு க்ரூப்புக்கு இன்னும் ரகசியமா நடந்திட்டுத்தான் இருக்கும். எனக்கு தெரிஞ்ச தகவலைச் சொல்றேன். என்று அன்றைக்கு நடந்த மேட்சில் 135 ரன்க்குள் சுருட்டி விடுவார்கள். பைனலில் எப்படியும் மும்பையும், சிஎஸ்கேவுக்கும் தான் இருக்கும் மும்பைதான் கோப்பையை வெல்லும் என்று சொன்னார். அவர் ஏதோ ஒரு அனுமானத்தில் சொல்லியிருப்பார் என்று சொன்னாலும் இன்றையை ஸ்பாட் பிக்ஸிங் காலத்தில் உண்மையிருக்கவும் வாய்பிருக்கிறது @@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமாவில் பாடல் வெளியீட்டு விழா என்பது கிட்டத்தட்ட மஞ்சள் நீராட்டு விழாவுக்கு இணையான விஷயம். படம் ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது வியாபாரத்துக்கு தயார் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே இவ்விழாக்கள் பயன்படுகிற நாளாகிவிட்டது. ஏனென்றால் டிஜிட்டல் பைரஸியினால் ஆடியோவினால் லாபமில்லை என்றாலும், ஒரு கோடியும், ரெண்டு கோடியும் வாங்கிக் கொண்டுத்தானிருக்கிறார்கள். பிகாஸ் ஆஃப் தேர் ப்ராண்ட் நேம். சரி அதை விடுங்க, சத்யம், கமலா, தமுக்கம் மைதானம், Y.M.C.A, மலேசியா, சிங்கப்பூர், ரேடியோவில், டிவியில் லைவ் என பல விதங்களில் ஆடியோ வெளியீட்டு விழாக்களை நடத்தி மக்களின் கவனத்தை கவர்ந்த தயாரிப்பாளர்கள் இப்போது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாய் சுவிட்சர்லேந்தில் ஜெனிவா நகரில் லிப்ரா ப்ரொடக்‌ஷன் ரவீந்தர் சந்திரசேகரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் நளனும் நந்தினியும், சுட்டகதை, வேந்தர் மூவிஸின் தில்லுமுல்லு, மற்றும் அவர்கள் வெளியீட்டில் ஹிட்டடித்த எதிர்நீச்சல் படத்தின் வெற்றி விழாவையும் வருகிற 1 ஆம் தேதி நடந்தவிருக்கிறார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அங்கிருக்கும் மக்களிடையேவும், இங்கே தமிழ் சினிமா உலகிலும் ஏற்பட்டிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவிட்சர்லேந்து பயணப்படவிருக்கிறேன். மீட் யூ கெய்ஸ் இன் ஜெனீவா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிரிக்கெட் சூதாட்டம் ஐ.பி.எல்லை விட பரபரப்பாய் இருக்கிறது.  அங்க தொட்டு, இங்க தொட்டு, சி.எஸ்.கேவையும் அது விட்டு விடவில்லை. குருநாத் மெய்யப்பனின் கைது, பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனின் கேரியரை ஒர் ஆட்டு ஆட்டியிருக்கிறது. சூதாட்டம் ஒருபுறம் இருந்தாலும், இந்த ப்ரச்சனைகள் வெளியே வருவதற்கு காரணமே  வட இந்திய, தென்னிந்திய முக்யஸ்தர்களின் பவர் போட்டித்தான் என்கிறார்கள். ஸ்ரீசாந்தின் கைதுக்கு பின் விண்டுவுடன் யார் யார் எங்கே போயிருந்தார்கள் என்றெல்லாம் விஷயங்களை சேகரித்தும், டோனியின் மனைவி விண்டுவுடன் மேட்ச் பார்த்த படங்களையும் மல்லு மீடியா ஆட்கள் வெளிக் கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார்கள். போகிற போக்கில் யார் யார் எல்லாம் கைதாவார்கள். எந்தந்த அணிகள் மொத்தமாய் ஐ.பி.எலை விட்டு போகப் போகிறது போன்ற விஷயங்கள் சூடேற்ற போகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்ரீசாந்தை கோர்ட்டுக்கு அழைத்துவந்த போது ஹரீஷ் என்ற எட்டாம் வகுப்பு மாணவன், கோர்ட் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது, அவர் அருகில் வந்து கிசுகிசுப்பாக “ஏன் ஸ்பாட் பிக்ஸிங் செய்தீர்கள்?” என்று கேட்டிருக்கிறான். அவர் “நான் செய்யவேயில்லை” என்று சொல்லிவிட்டு, எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தாராம். நாயகன் க்ளைமாக்ஸ் வசனம் நியாபகம் வருகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற மாபெரும் லெஜெண்டுகளைப் பற்றி யோசிக்கும் போது டீபால்டாய் உடன் நினைவுக்கு வருகிறவர் டி.எம்.எஸ். அவர் அவர்கள் இருவருக்கும் பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அற்புதமான பாடகர். தமிழை தமிழாய் பாடாத பாடகர்கள் இருக்கும் காலத்தில் நற்தமிழில் பாடிய வித்தகர். சினிமா பாடல்கள் ஆகட்டும், முருக பக்தி பாடல்கள் ஆகட்டும், அவரது குரலால் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்து சென்றவரின் மறைவு க்கு என் அஞ்சலிகள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பெரும் பணமும், புகழும் புழங்குமிடத்தில் மது, மாது, சூது இவை கவ்வியே தீரும்.#கருடபுராணம்

very old wine is served in tumblers #Aurangazeeb
 • விகடனில் உதயகுமாரிடம் நிதி வசூல் பற்றி கேட்ட கேள்விக்கு அவரது பதில் சற்றே நெருடலாய்த்தான் இருக்கிறது

  ஒரு மோசமான உறவின் தோல்விதான் இன்னொரு முறை காதலில் விழ பயமுறுத்துகிறது.
  • Thillu Mullu Got "U" Certificate with no cuts from censor with lot of appreciation
   • உன் உள்ளுணர்வை நம்பு. அதை செயல்படுத்துவதற்கு முன் அது உன் உள்ளுணர்வா? இல்லை பயமா? என்று உறுதி படுத்திக் கொள்#Translation
    • நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டாலும் ஏன் நடக்கிறது என்று தெரிந்து கொள்வது கஷ்டமான விஷயம் என்றே தோன்றுகிறது.
     @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

     சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...1. மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் - தேசிய நெடுஞ்சாலை2. பச்சை மற்றும் வெள்ளை கலர் இருந்தால் - மாநில நெடுஞ்சாலை3. நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் - மாவட்ட சாலையாம்.#நன்றி வெங்கட்ராம்@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
     அடல்ட் கார்னர்
     5,000 men were asked to? complete a survey on what they liked best about " Oral Sex ?'' a.. 3% liked the warmth. b.. 4% enjoyed the sensation. c.. 93% appreciated the silence
     கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

குரங்குபெடல் said...

"மீட் யூ கெய்ஸ் இன் ஜெனீவா. "


" கொஞ்சம் ஓவர்தான் "


அப்டின்னு சொல்வாங்களே


அது இதான் அண்ணே . .

Alexis JO. said...

வணக்கம் பாஸ், அப்படியே நம்ம ஊர் ( பிரான்ஸ்) பக்கமும் ஒரு 2,3 நாள் வரலாமே.contact/joalexis2010@gmail.com

suresh said...

Apdiyae namma ooru west Indies pakkamum konjam varalamey,...