மின் மிகை

இன்னைய பேப்பர்ல +2 தேர்வு ரிசல்ட் வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க காலை எட்டு மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழகம் எங்கும் மின் தடை செய்யக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டாங்களாம். மக்கள் நலனின் அக்கரை கொண்ட தமிழக அரசின் முதல்வர் உடனடியாய் அவங்க 12 மணிவரைக்கும் கேட்டதை 1 மணி வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி மக்கள் நல அரசுன்னு ப்ரூவ் பண்ணியிருக்காங்கன்னு மின் துறை அமைச்சர். நத்தம்..(அவருதானே இப்பவும்) புளங்காகிதம் அடைஞ்சிருக்காரு.

சென்னைக்கு வெளியே இருக்கிறவங்க எல்லாம் சென்னையில் மட்டும் என்ன ஸ்பெஷல் அவங்களுக்கு மட்டும் ரெண்டு மணி நேரம்னு காண்டாகிட்டு இருந்ததுக்கு இந்த கோடை ஆரம்பத்திலிருந்து பெரும்பாலான நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடையும், குறிப்பாய் இரவு நேரங்களில் வோல்டேஜ் பிரச்சனைகள், அல்லது ஒரு பேஸ் இருந்தால் இன்னொரு பேஸ் போவது என்று பேஸ் மாற்றுவதற்கு ஷிப்ட் போட்டு ஆப்பரேட்டர் வைத்து தூங்க வேண்டிய நிர்பந்தத்தில் சென்னை இருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் ஆப்பரேட்டருக்கு வேலையில்லாத அளவில் ஒரு மணி வரை சுத்தமாய் கட் செய்துவிடுகிறார்கள். கேட்டா கேபிள் எரிஞ்சிருது. லைன் ப்ராப்ளம், ஹெவி லோட், என்று ஆயிரம் காரணங்கள். எங்கள் ஏரியாவில் வருடங்களாகவே கொஞ்சம் ஹெவி யூசேஜ் இருக்கிற காரணத்தால் அண்டர்க்ரவுண்ட் கேபிள் தொடர்ந்து எரிந்து போய்க் கொண்டேயிருக்கும். தனியாய் ஒரு ட்ரான்ஸ்பார்மர் போட்டால்தான் இந்த ஏரியா லோட் தாங்கும் என்று சொன்னார்கள். நாங்கள் எங்கள் தெருவின் அசோசியேஷன் சார்பாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறோம் வருஷம் ஆனதே தவிர ட்ரான்ஸ்பார்மர் வந்ததாய் தெரியவில்லை. தேவையில்லாத வேலை பளு, ப்ரச்சனைகளை தவிர்க்க அதற்கு மாற்று நடவடிக்கைகளை விட்டு, மராமத்து வேலைகளை மட்டுமே செய்வது வீண் செலவு.  ஏதோ என்னால முடிஞ்சது புலம்பத்தான் முடியும். இதை ஏன் சொல்றேன்னா.. பேஸ்புக், ட்வீட்டர், வலைப்பூ எல்லாத்தையும் அரசு கண்காணிக்குதாம். ஒரு வேளை இதை கண்காணிச்சு தகவல் சொல்லி சரி பண்ணாங்கன்னா.. ராத்திரி கொஞ்சம் நேரமாவது நிம்மதியாய் தூங்குவோம். 

இந்த ஊர்ல புது அனல் மின் நிலையம். 600 மெகாவாட் மின்சாரம், இந்த ஊர்ல 1500 மெகாவாட் மின்சாரம் அப்படி இப்படின்னு  ஆட்சிக்கு வந்ததிலேர்ந்து  சொல்லிட்டேயிருக்காங்க. தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமா ஆக்கிக் காட்டுறேன்னு சொன்னாங்க முதல்வர். இப்படி இவங்க சொன்ன அறிக்கை மெகாவெட்டை கூட்டிப் பார்த்தா நிச்சயம் இப்பவே மிகையாத்தான் வருது.

Comments

maxo said…
Same blood - Yesterday multiple power cuts - today atleast an hour of unscheduled shutdown and so on
என்ன சார் 2 நாளைக்கு இப்படி பீல் பண்றீங்க ,நாங்கலாம் 2 வருசமா இத தானே அனுபவிக்கரோம் , இன்னும் ஒரு 2 ,3 மாசம் இப்படி தான் இருக்கும் அப்புறம் எங்கள மாதிரி உங்களுக்கும் பழகிடும் .
Arul uk said…
Enna basu appa sariye aavaathaa?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.