Thottal Thodarum

May 21, 2013

நேரம்


70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர்
வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் வேறு வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். சரி ப்ரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி அஜாக்கிரதையா இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்திருக்க, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.


நன்றி கார்டு போட ஆரம்பிக்கும் போதே அட என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அமெரிக்காவில் எவனோ ஒருவன் குசு விட்ட குண்டு, இந்தியாவில் உள்ள வெற்றியின் கம்பெனிக்கு கேயாஸ் தியரி  வெடியாக வெடிக்கும் அனிமேஷன் காட்சிகளில் அடேடே என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். வட்டி ராஜா கேரக்டரையும், சின்ன வயது காதலியைப் பற்றி சொல்லுமிடத்தில் அட அட அட என இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஏற்பட்ட அத்துனை அனுபவமும், மெல்ல, மெல்ல, சுருதி குறைந்து நீண்ட சேஸிங், ஹைஸ்பீட் சேஸிங் என்று சேஸிங்கில் பலவிதம் என்று எஸ்டாபிளிஷ் செய்து இடைவேளை விடும் போது கொஞ்சம் சொங்கித்தான் போகிறோம். 

கதாநாயகி நஸ்ரியா அழகாய் இருக்கிறார். நடிக்கத்தான் வாய்ப்பில்லை. நவீன் வெற்றியாக வருகிறார். நடிப்பில் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. நடிப்பில் பெயர் தட்டிப் போகிறவர்களில் முதன்மையானவர் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, சூது கவ்வும் படத்தில் பார்த்தவர்களுக்கு இதில் அப்படியே உட்டாலக்கடியாய் சீரியஸ் வில்லன் பாத்திரம். பாடிலேங்குவேஜ், மேக்கப் என்று எல்லாவற்றிலும் நல்ல வித்யாசம். இன்னொருவர் தம்பி ராமையா. ஆங்காங்கே பேசி கிச்சு கிச்சு மூட்டுகிறார். நாஸ்ர் கேரக்டர் சுவாரஸ்யம் என்றாலும் எதற்கு என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்த ஆசம்.. அட்டகாசம். போலீஸ்காரர் ஜான் விஜய்க்கும், தம்பி ராமையாவிற்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் வசனமெழுதிய பிரவீனுக்கு பெயர் வாங்கித் தரும்.

ஆனந்த் சந்திரனின் ஒளிப்பதிவு தெளிவு. முக்கியமாய் சேஸிங் காட்சிகளில் நல்ல ஓட்டம். 5டி,7டி கேமராக்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம் டெக்னிக்கலாய் நல்ல அவுட்புட்டில் வந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. இசை ராஜேஷ். டைட்டில் காட்சி பின்னணி இசையும், முதல் பாடலும், க்ளைமாக்சில் வரும் சேசிங் இசை பழைய க்ளாஸிக்கல் பீத்தோவன் இசை க்ளாஸ். 

எழுதி, எடிட்டி, இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். டைட்டில் கார்டில் குவாண்டின் டோரண்டினோவின் பிரபலமான வாசகத்தையும், கமல், ரஜினி, மோகன்லால், மம்முட்டி என்று நன்றி லிஸ்டு போடும் போதும், ஆரம்ப கேயாஸ் தியரி காட்சிகளிலும்,  வட்டி ராஜா, அவனின் அல்லக்கைகள்,  க்ளாஸிக்கல் இசை பிரியரான சப் இன்ஸ்பெக்டர், ரவுடிகளுக்கு லைட் அவுஸ், என்பது போன்ற பெயர்களை கொடுத்து கவனிக்க வைத்தது. நாசர் மற்றும் அவரது தம்பியின் கேரக்டர் என மிகத் தீவிரமாய் ஒரு வித்யாசமான அனுபவத்தை தர வேண்டும் என்ற இண்டென்ஷன் சரியாக இருந்தாலும்,முதல் பாதி ஸ்லோ மோஷன் திரைக்கதையாலும், குறும்படத்தை திரைப்படமாக்க செய்த முயற்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நேரம் உச்சமடைந்திருக்கும்..
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

pavithran said...

Mr.Shankar, Dont underestimate any film like this without knowing anything. Indha padam tamilnadu and kerala rendulayum hit. as well as everyone commented as good.

ungalukku thaan ellam theriyum engindra ninaipai first delete pannunga. unga padam varattum lets see wat good u have done.

Thanks

arul said...

thanks for review

ராஜன் said...

hi, hi...hi.(for First Comment!)

Vijayan Sundaram said...

Mr.Pavithran..dont blabber about hit / flop within 2-3 days of release.. Mr. Sankar has been reviewing movies fairly accurately... Jus bcos you have seen it or has a DMK family connection a movie cannot be good..

Unknown said...

athu ennakae வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர்? vellayae illa apparam eppadi சாப்ட்வேர் இன்ஜினியர்.... :)