Thottal Thodarum

May 7, 2013

மூன்று பேர் மூன்று காதல்

டைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலமும் நிலம் சார்ந்த இடமும் என்று மூன்று ஜியோகிரபிகல் வேறு பாடு வேறு.

விமலின் காதல் வழக்கமான வசந்த பட காதல் போல பேசியே மாய்ந்து அது காதலா இல்லை கத்திரிக்காயா என்று புரிபடுவதற்குள் முற்றிப் போய் புட்டுக் கொள்கிறது. விமல் வழக்கம் போல வாய்க்குள்ளேயே பேசுகிறார். டைட் க்ளோசப் காட்சிகள் வேறு. ஹீரோயினை அறிமுகப்படுத்தும் முன் பாலசந்தர் பாணியில் ஒளித்து வைத்து அவள் ஒர் பேரழகி என்று பில்டப் செய்து படத்தில் காட்டியவுடன்  தியேட்டர் மொத்தமும் “ப்பா.. “ என்று கத்தி அடுத்த வார்த்தை சொல்லியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. உணர்வில்லாத வள வள காதல் என்று சொல்லப்பட்ட கதை.

இரண்டாவது காதல் முட்டம் பகுதியில் சேரனுக்கும், பானுவுக்குமிடையே நடக்கும் உணர்வு போராட்டம் என்றே சொல்ல வேண்டும். சேரனின் கேரக்டரைஷேஷனும், பானுவின் கேரக்டரைஷேஷனும் அருமை. அவர்களுக்குள் உண்டாகும் மெல்லிய காதலும், அதை வெளிப்படுத்த முடியாமல் பானு படும் பாடும். அவரது நடிப்பும் வாவ்.. செம. சேரனின் நடிப்பும் ந்ன்றாகவே இருந்தது. சரியான காஸ்டிங். இந்த எபிசோடில் எங்கே நெகிழ்ந்து விடுவோமோ என்ற உருக வைத்திருக்கிறார்கள். என்னம்மா நடிக்குதுப்பா இந்த பொண்ணு.

மூன்றாவது காதல் நீச்சல் கோச் அர்ஜுனுக்கும் அவரது மாணவிக்குமிடையே நடக்கும் ஆசிரிய மாணவி உறவுக்கு மீறிய காதல். அதை மிக நாசுக்காகவே கையாண்டிருக்கிறார்கள். அர்ஜுனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அதை உணர்ந்து சிறப்பாகவே செய்துள்ளார். மாணவியாய் நடித்தவரின் நடிப்பும் ஓகே தான் என்றாலும் , இவர்களிடையே இருக்கும், கோச் மாணவி உறவுக்கான முக்யத்துவமா? அல்லது இவர்களின் காதலுக்கான முக்யத்துவமா என்று ஆழமாய் சொல்ல் முடியாமல் ஒலிம்பிக், போட்டி, 51 செகெண்ட், காதலியின் வெற்றி அர்ஜுனை எழுந்து நடமாட வைத்துவிடும் என்ற காதல் என நிறைய இடங்களில் மிக்ஸ்ட் உணர்வுகளினால் இன்வால்வ் ஆக முடியாமல் போகிறது. அர்ஜுன் படுத்தபடியே நடிக்கும் காட்சியில் க்ளாஸ்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட். அதை மிக அழகாய் மாண்டேஜ்களாய் இயக்குனர் உபயோகித்திருக்கிறார். ஸ்டாப் த பாட்டு மூலம் தன் பையனை அறிமுகம் செய்திருக்கிறார். லாங் வே டு கோ. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தினேஷின் ஒளிப்பதிவைத்தான்.  மூன்று விதமான காதலுக்கு மூன்று விதமான டோனை பயன்படுத்தியதுமில்லாமல். முட்டம் பகுதி கதையில் கிட்டத்தட்ட நிறைய ஷாட்களில் பானுவின் நடிப்பை அருமையாய் உள்வாங்கி நமக்களித்திருக்கிறார்.

எழுதி இயக்கியவர் வஸந்த். மூன்றும் தனித்தனி காதல் கதைகளாய் போய்விட்டதால் உணர்வு ரீதியாய் படத்தோடு ஒன்ற முடியாதது ஒரு குறையென்றால், சேரன் - பானுவின் கதையில் இருக்கும் அழுத்தம், மற்ற கதைகளில் இல்லாமல் போனதால் சுவாரஸ்யமில்லாமல் போகிறது. வஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை  விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.
கேபிள் சங்கர்


Post a Comment

4 comments:

arul said...

வஸ்ந்தின் படங்கள் படம் தியேட்டரில் பார்க்கும் போது ஏற்படும் உணர்வை விட டிவியில் போடும் போது அட ஓகேயாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு ஒரு கேள்வி வரும் அது இந்த படத்துக்கும் வரும்.

true words sankar anna

Nondavan said...

கடைசி லைன் - சத்தியமான வார்த்தை...

Ramya Mani said...

Vikatanla vimarsanam padithathum romba kevalamaa irukku polanu nenachen. Unga vimarsanam padithathum, sari oru tharam paakalaamo nu nenakka vechuteenga. Kadaisi varigal romba nijam :)

Anonymous said...

எனக்கென்னவோ இந்தப்படத்தை டிவியில் பார்க்கும் போதும் அந்த உணர்வு வராது என்றே தோன்றுகிறது.