Thottal Thodarum

May 6, 2013

கொத்து பரோட்டா -06/05/13

சென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்டும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்திருந்தார்கள். பெரும்பாலும் உதவி இயக்குனர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். முக்கியமாய் நீயா நானாவில் தலைப்புகளை தேடுவது, பின்னணி உழைப்புகளூக்காக இண்டர்ன்ஷிப் எடுத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்திருந்த இரண்டு பாதிரிமார்கள் அவர்களுடய சபை சார்ந்த ரேடியோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். இன்னும் சில பேர் புதிய தலைமுறையில் புதிய தொலைக்காட்சியாய் வர இருக்கும் “புதுயுகம்” சேனலில் வேலை பார்த்திருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு  இண்டர்ன்ஷிப் செய்திருந்தாலும் அவர்களுக்கு பெரிய எக்ஸ்போஷர் ஏதும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாய் அறிந்து கொண்டவர்கள் தான் அதிகம். இரண்டு மாணவர்கள் ஒர் சினிமா தயாரிப்பு கம்பெனியில் உதவி இயக்குனர்களாய் பணிபுரிந்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு சூட்டிங் நடக்கும் போது போட்டோ மட்டுமே எடுத்துவிட்டு வந்துவிட்டார் போல.. இன்னொருவர் காஸ்ட்யூம் கண்டின்யுட்டி பார்த்திருக்கிறார். ஆனால் அதை பற்றி மிகத் தெளிவாக பேசினார். பெரும்பாலான் காலேஜ் ப்ராஜெக்டுகளில் வெளியே கிடைக்கும் சர்டிபிகேட்டும், ப்ராஜெக்டும் டெம்ப்ளேட்டாய்தான் இருக்கும். இங்கு வந்ததில் சிலது விதிவிலக்கு. என்னுடன் இன்னொரு எக்ஸாமினராய் வந்திருந்த சத்தியம் டிவி ஜி.எம். சுவாமிநாதன்   மூன்று பேருக்கு அவரது சேனலில் வேலை வாய்ப்பு அளித்தார்.  
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



என் ட்வீட்டிலிருந்து
ரெண்டு மூணு கோடியில் எடுத்திருந்தா படம் ரீலீஸுக்கு முன்னாடியே சூப்பர் ஹிட் படமாயிருக்கும்.12 கோடியாம் #மூன்று பேர் மூன்று காதல்

என்னைக்காச்சும் டிவில பார்க்கும் போது நல்லாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு கேட்போம். # மூன்று பேர் மூன்று காதல்

ரெண்டு நாளா இம்சை செய்து வந்த ஜலதோஷம். நேற்று என்னை மட்டையாக்கிவிட்டது. மாலையிலிருந்து இன்று காலை வரை ப்ளாட்.:(

டிவிட்டர், பேஸ்புக்கை காவல் துறை கண்காணிக்குதாம். அலர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் டா ஆறுமுகம்

பட விமர்சனம் போட்டா போலீஸு பிடிக்குமா? அவனவனுக்கு அவனவன் கவலை.:)

நல்ல உறவுகள் எதிர்பாராமல் தான் ஆரம்பமாகும்.

எவனொருவன் வாழ்கைக்கு நீ தேவையாய் இருக்கிறாயோ அவனே உன் வாழ்க்கைக்கு தேவையானவன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ட்ரைலர் டைம்
கலகலப்புக்கு பிறகு இயக்குனர் பத்ரியுடன் இணைந்து வசனத்தில் வேலை பார்த்திருக்கும் படம். மாபெரும் ஹிட் படத்தின் ரிமேக்கில் வாய்ப்பளித்த இயக்குனர் பத்ரிக்கு என் நன்றிகள். பல. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஃதே படத்திற்கும் கிடைக்குமென்று நம்புகிறேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபகாலமாய் வரும் தமிழ் படங்களில் பேஸ்புக்கிலிருந்தும், டிவிட்டரிலிருந்தும் பலரின் ஸ்டேடஸுகளையும், ட்விட்களையும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு விதத்தில் இது சந்தோஷமாய் இருக்கிறது. இண்டெர்நெட்டுல எழுதுறவஙக்ளையெல்லாம் யாருக்கு தெரியும் என்கிற நிலை மாறி, வித்யாசமான சிந்தனைகளுக்கு இண்டெர்நெட்டில் வழியுண்டு என்று தேடி வந்திருப்பதும், அதை பயன்படுத்துவதை வைத்து உற்சாகப் படலாம். சமீபத்திய கேடி பில்லா கில்லாடி, ரங்காவில், சூரியின் வண்டியில் வரும் மாமனார் கிஃப்ட் மேட்டரும், கெளரவம் படத்தில் ஈமெயில் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க சொல்லும் வசனமும் ஆதாரம். இதைத் தவிர, படம் முழுக்க நிறைய பஞ்ச்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.எது எப்படியோ சாதாரணனின் வாக்கும் மேடையேறுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஜண்ணாவின் ட்ரைலர் வெளிவந்த மாத்திரத்தில் மரண வெறியில் லட்சக்கணக்கில் ஹிட்டடித்தது. நேற்று புதிய பாடல் டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். ட்ரைலரில் தனுஷின் ஹிந்தி  நன்றாக இருந்ததாய் ஹிந்தி நன்கு அறிந்தவர்கள் பாராட்டினார்கள். தனுஷின் திறமைக்கு நிச்சயம் பெரிய உயரத்துக்கு போவார் என்பது என் அனுமானம். இவரது மரியான் ட்ரைலரும் விஷுவலி சூப்பர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்A visiting professor at Florida State University is giving a seminar on the supernatural. To get a feel for his audience, he asks: "How many people here believe in ghosts?" About 90 students raise their hands. "Well that’s a good start. Out of those of you who believe in ghosts, do any of you think you’ve ever seen a ghost?" About 40 students raise their hands. "That’s really good. I’m really glad you take this seriously. Has anyone here ever talked to a ghost? 15 students raise their hands. "That’s a great response. Has anyone here ever touched a ghost?" Three students raise their hands. "That’s fantastic. But let me ask you one question further.....Have any of you ever made love to a ghost?" One student in the back raises his hand. The professor is astonished. He takes off his glasses, takes a step back, and says, "Son, all the years I’ve been giving this lecture, no one has ever claimed to have slept with a ghost. You’ve got to come up here and tell us about your experience." The redneck student replies with a nod and a grin, and begins to make his way up to the podium. The professor says, "Well, tell us what it’s like to have sex with a ghost." The student replies, "Ghost? Damn..... From back there I thought you said ’goats’!" 

Post a Comment

10 comments:

Unknown said...

ட்ரைலர் சூப்பர் ஆனா படம் பழைய படத்த விட நல்லா இருக்கணுமே

எனது தளத்தில் http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_6.html

Ponchandar said...

"Ghost" ------ "Goat" -------

சூப்பர் . . . . . ஹ..ஹ...ஹ...ஹா...

ரமேஷ் வைத்யா said...

superb as usual

பிரியமுடன் பிரபு said...

தனுஷின் ஹிந்தி படம் பெயர் "ரான்ஜனா" (in English 'Raanjhanaa'). நீங்க படத்தோட பேர தவறா போட்டிருக்கீங்க..

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

குரங்குபெடல் said...

தில்லு முல்லு முன்னோட்டம்

எரிச்சல் ஊட்டும் விதத்தில் உள்ளது . . .




ஆனாலும் வாழ்த்துக்கள்

Unknown said...

Congrats! for the directorial venture and wishing you all the best
-Surya

தருமி said...

அடப் பாவி ... சாரி .. இது அந்த ‘ஆட்டுக்காரனுக்கு’ ...!

ரிஷபன்Meena said...

இயக்குனராக வெற்றி பெற வாழ்த்துக்கள்

Dino LA said...

சூப்பர்