Thottal Thodarum

Jun 5, 2009

Prayanam - Telugu Film Review

202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

ரெண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்க முடியுமா..? முடியும் என்று ஒருவன் முயற்சி செய்கிறான். அந்த பெண் அவனை காதலித்தாளா..? இல்லையா..? என்பதுதான் கதை. அருமையான நாட். முடிந்தவரை இயல்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் அய்தே, அனகோகுண்டா ஒக்க ரோஜூ, ஒக்கடுண்ணாடு இயக்குனர் சந்திர சேகர யேலெண்டி.

துருவ் உலக சுற்றுலாவுக்காக மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல மலேசிய ஏர்போர்ட்டில் அவன் நண்பர்களுடன் வருகிறான். அதே ஏர்போர்ட்டில் ஹரிகா ம்லேசியாவில் படித்த தெலுகு பெண் தனக்கு மாப்பிள்ளை பார்க்க, தன் தோழியுடன் இந்தியாவுக்கு செல்கிறார். துருவுக்கு ஹரிகாவை பார்த்தவுடன் காதல் பற்றி கொள்ள, அவர்களுக்குள் இரண்டு மணி நேர இடைவெளியே உள்ளது. துருவ் அவளை அந்த இரண்டு மணி நேரத்தில் இம்ப்ரஸ் செய்ய படும் அவஸ்தையை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.

துருவுடன் வரும் 7அப் மாடல் நண்பன் இரண்டு மணிநேரத்தை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு ப்ளான் சொல்லி ஷெடியூல் போட்டு கொடுப்பதாகட்டும், ஹரிகாவின் தோழியிடம் அவர் பயப்பட்டு அவரிடமிருந்து தப்பிக்க அவர் படும் பாடாகட்டும் நல்ல நகைச்சுவை. அதே போல் துருவுடய இன்னொரு நண்பர் ஒரு நீக்ரோ குழந்தையிடமிருந்து சாக்லெட்டை எடுத்து காண்பிக்க, துருவ் அவனுக்கு கொடுத்தது என்று எண்ணி அதை சாப்பிட்டு விட, கருப்பன் அவரை துரத்தோ துரத்தென்று துரத்துவதும், அங்கே வரும் பிரம்மானந்தத்தை அவரின் நண்பர் என்று நினைத்து அவரை படத்தின் கடைசி வரை துறத்துவதும், சினிமா கதை சொல்கிறேன் என்று துப்பாக்கி, பாம், தீவிரவாதி என்று பேசி ஏர்போர்ட் போலீஸிடம் மாட்டும் கொண்டு அவஸ்த்தைபடுவது , துருவும் அவரின் நண்பர்களும் பேசிக் கொள்ளும் ஒன்லைனர் என்று படம் பூராவும் தூவி விடப்பட்ட நகைச்சுவை.

துருவ்வாக மனோஜ், துறுதுறுவென இருக்கிறார். கன்னங்குழிய சிரிக்கிறார். இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஹரிகாவாக வரும் பாயல் கோஷ், சுமாரான அழகுடன், அமைதியாய் வலம் வருகிறார். இன்னும் கொஞ்சம் அழகான பெண்ணாய் பிடித்திருக்கலாம். அவருடய பாடிகார்ட் போல வரும் அவரத் தோழி நல்ல இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்.

மகேஷின் பிண்ணனி இசையும், காட்சிகளூடே வரும் பாடல்களும் ஓகே. சர்வேஷின் கேமரா குறை ஒன்றுமில்லை.

இம்மாதிரியான ஒரே இடத்தில் நகரும் திரைக்கதையில் தொய்வு விழாமல் கதை சொல்வது கஷ்டம்தான். சந்திரசேர யேலட்டியின் திரைக்கதை முதல் பாதியில் ஆங்காங்கே தொய்கிறது, இரண்டாவது பாதியில் சூடு பிடிக்கிறது. வாயால் ரோஜாப்பூவின் இதழை ஊதிக் கொண்டே போக, நடுவில் கதாநாயகியை நுழைத்து அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் கவிதை. அதே போல் உண்மையான காதலை புரிந்து கொள்ள துருவின் நண்பன் நடத்தும் டெஸ்டில் துருவின் டயலாக்குகளை வீஷூவல் செய்திருக்கும் காட்சியும் அருமை. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

பிரயாணம் – ஹைகிளாஸ் மல்டி ப்ளக்ஸுக்கு மட்டும்.

Technorati Tags: Telugu film review,Prayanam


நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

17 comments:

முரளிகண்ணன் said...

அப்போ எங்களுக்கில்லே.

Dr.Sintok said...

eipoluthu ellam telugu padamum hindi padam pola colourfulla eruku...nice.
hero kuda alaga erukangga...:))
can i get this movie in net with subtitle??? :)
malaysiavil telugu padam thiraiku varathu...:((

நையாண்டி நைனா said...

Present Annaa.

Ashok D said...

இரட்டை சதத்திற்கு
இனிய வாழ்த்துக்கள்

மணிஜி said...

இன்னைக்கு “மாயாண்டி குடும்பத்தார்”தானே

butterfly Surya said...

நன்றி.

வடபழநி, தி.நகர் & பாண்டி பஜார் முழுவதும் இன்று நிறைய "ஆரம்பம்" போஸ்டர்கள் பார்த்தேன்.

உங்களுக்கு ""டைட்டா ""
வேலை இருக்கு...

வாழ்த்துகள்.

Truth said...

பாகுந்தன்ன மாட்ட! அய்தே ச்சூடச்சண்டாரா?

FunScribbler said...

இந்த படத்த ஜெயம் ரவிய தமிழ்ல பண்ண சொல்லலாமே! எப்போதும் அவர் தானே பண்ணுவாரு... அதான் சொன்னேன்...ஹிஹிஹி...:)

Cable சங்கர் said...

//அப்போ எங்களுக்கில்லே.//

யாரு சொன்னது..?

Cable சங்கர் said...

//eipoluthu ellam telugu padamum hindi padam pola colourfulla eruku...nice.
hero kuda alaga erukangga...:))
can i get this movie in net with subtitle??? :)
malaysiavil telugu padam thiraiku varathu...:((

/
நெட்டில் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் சப் டைட்டிலோடு கிடைக்குமா என்று தெரியவில்லை.. சிண்ட்டாக்

Cable சங்கர் said...

நன்றி அசோக்.

Cable சங்கர் said...

//இன்னைக்கு “மாயாண்டி குடும்பத்தார்”தானே//

போட்டுட்டா போச்சு..தண்டோரா

Cable சங்கர் said...

//நன்றி.

வடபழநி, தி.நகர் & பாண்டி பஜார் முழுவதும் இன்று நிறைய "ஆரம்பம்" போஸ்டர்கள் பார்த்தேன்.

உங்களுக்கு ""டைட்டா ""
வேலை இருக்கு...

வாழ்த்துகள்.

//

வேலை வரணும் வண்ணத்து பூச்சியாரே..

Cable சங்கர் said...

//பாகுந்தன்ன மாட்ட! அய்தே ச்சூடச்சண்டாரா?

//

ச்சூடச்சூ..

ஷண்முகப்ரியன் said...

கதையும் புதிதாக இருக்கிறது.அதனை அரிமுகப் படுத்திய தங்கள் விமர்சனமும் அழகாக இருக்கிறது,ஷங்கர்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஜெயம் ரவி நடிப்பாரா தல?

sankarkumar said...

thanks for ur review.
i like to watch this movie