Thottal Thodarum

Oct 14, 2013

கொத்து பரோட்டா - 14/09/13

Gravity
விண்வெளியில் உள்ள சாட்டிலைட்டை ரிப்பேர் செய்ய  போன மூன்று பேர், பூமியைப் போலவே விண்வெளியிலும் நாம்  சாட்டிலைட்விட்டு, போட்டிருக்கும் சாட்டிலைட் கார்பேஜுகளால் ஏற்படும்  புயலில் மாட்டிக் கொண்டு தாய்கலத்திலிருந்து விடுபட்டவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே கதை.  ஏற்கனவே இது மாதிரி நிறைய கதைகளில், அப்பல்லோ 13 போன்ற படங்களில் வந்த விஷயம் தான் என்றாலும், அதை எடுத்த விதம் வாவ்.. அதுவும் 3டியில்.. மறக்க முடியாத ஒர் அனுபவம். மூன்று நடிகர்கள். அதில் ரெண்டு பேர் பாதி படத்திற்குள் காலி. மிச்சமிருக்கிற சாண்ட்ரா புல்லக்கை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் மிதந்தால் நாம் மிதந்து, அவர் பல்டி அடித்தால் நாமும் அடித்து, அவருக்கு மூச்சு முட்டினால் நமக்கு முட்டி.. அவர் தீயில் மாட்டிக் கொண்டு வெந்தால் நாம் வெந்து.. வாவ்..வாவ்..  படம் ஆரம்பிக்கும் ஷாட் ஒன்றே போதும் இவர்களின் டெக்னாலஜி பிரில்லியன்ஸை பாராட்ட.. மொத்த தியேட்டரும் பின் ட்ராப் சைலன்ஸில் பார்த்தார்கள். Being there  என்பதற்கு ஒர் சிறந்த உதாரணம் இந்த படம். ஐமேக்ஸில் பார்த்தவர்கள் பாக்யவான்கள். Don't Miss
@@@@@@@@@@@@@@@@@@@@@@@



ஆயுத பூஜை
எடிட்டிங் வேலைக்கு பைக்கை எடுத்துப் போன போது பார்த்தவர்கள் எல்லோரும் கேட்டகேள்வி “ என்ன வண்டி கழுவி பூஜை போடலையா?” என்பதுதான். என் நினைவு தெரிந்து நான் பூஜைக்காக வண்டி கழுவியதேயில்லை. அன்றைக்கு கழுவ சென்றால் க்யூ, பூஜைக்கு என்று பத்து ரூபாய் மாலை நாற்பது ரூபாய்க்கு வாங்கி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே படுகிறது எனக்கு. அதுவும் குடிப்பதற்கே விலை கொடுத்து வண்டி வண்டியாய் தண்ணி வாங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் அராஜகமாய் படுகிறது. பண்டிகைகள் எல்லாவற்றிக்கும் பின்னால் ஒர் வணிகம் இருக்கிறது என்பது என் அனுமானம். பண்டிகைகளில் படைக்கப்படும், சமைக்கப்படும், விஷயங்கள் எல்லாமே அந்தந்த பருவ நிலைகளில் பயிராகும், விளையும் பொருட்களாக இருக்கிறது. விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த, பணப்புழக்கம் அதிகமாக ஏற்படுத்தப்பட்ட விஷயம் தான் இந்த பண்டிகைகள்.
@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
தமன், அருந்ததி, பாலாஜி, சிங்கப்பூர் துரைராஜ், ரஞ்சனுடன் ஒர் முக்கியமான கதாபாத்திரத்தில் வின்செண்ட் அசோகனும் இணைகிறார். பழகுவதற்கு மிக இனிமையான நண்பர். வருகிற 16 ஆம் தேதி முதல் 30 ஆம்தேதி வரை பாண்டியில் தொட்டால் தொடரும் படப்பிடிப்பு தொடர்கிறது. முழுக்க, முழுக்க ஆக்‌ஷன் ப்ளாக்குகளுக்காக செல்கிறோம். 
@@@@@@@@@@@@@@@
புயல்
ஒடிசா, ஆந்திர கரையோர புயல் பற்றிய செய்திகள் லைவ் என்று இருக்கிற சேனல் எல்லாம் அலறிக் கொண்டிருக்க, நட்ட நடு ராத்திரியில் எல்லா டிவி சேனல்களையும் பார்த்துக் கொண்டே வந்த போது தமிழ் சேனல்கள் ஒன்றையும் காணோம். ஆங்கில சேனல்களில் எல்லோரிடமும் ஒரே விதமான கவரேஜ்கள். கிட்டத்தட்ட பக்கத்து பக்கத்தில் நின்று கொண்டு பேசி எடுத்திருப்பார்கள் போல.. ஒரு சேனலில் வைட்டில் ஒரு டெம்போ ட்ராவலர் கவிழ்ந்திருந்தால் அடுத்த சேனலில் காம்பேக்டில் அதே டெம்போ கவிழ்ந்திருக்கிறது. என்னத்த சொல்ல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமாவில் பத்திரிக்கையாளர் அந்தணனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவரது விமர்சனங்களும், இவரது எழுத்துக்களில் இருக்கும் நகைச்சுவையும், துள்ளல் நடை இவருக்கே உரித்தான ஸ்டைலாகும். இதற்கு முன் வேறொரு இணையதளத்தில் எட்டிட்டராக இருந்தவர் தற்போது newtamilcinema.com என்றொரு இணையதளத்தை துவங்கியிருக்கிறார். கூடவே இவரது பாங்காங் பயண அனுபவத்தொடர் வேறு. சுவாரஸ்யத்திற்கு கேட்கவா வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டு நாள் முன்னால் தான் சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் தியேட்டரில் சவுண்ட் சரியில்லாமல் படம் நிறுத்தப்பட்டு, டிக்கெட் பணத்தை வாபஸ் பெற்றதை பற்றி எழுதியிருந்தேன். அடுத்த ஷோவில் அதே சவுண்ட்டோடு படம் ஓட்டியிருக்கிறார்கள். இம்மாதிரியான மொக்கை தியேட்டரில் படம் போடுவதை விநியோகஸ்தர்கள் தவிர்க்க வேண்டும். அடிப்படை வசதியில்லாத தியேட்டர்களினால் படம் பற்றிய கருத்து மோசமாகுமே தவிர நல்லதாக அமையாது.
@@@@@@@@@@@@@@@@@@
சினிமா வியாபாரம்
சின்ன படங்களின் தொடர் வெற்றி காரணமாய் சமீபத்தில் நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம், தயாரிப்பாளர், அவரிடமிருந்து பர்ஸ்ட் காப்பி வாங்கிய தயாரிப்பாளர், அவரிடமிருந்து விலைக்கு வாங்கி விற்ற மொத்த விநியோக உரிமை பெற்றவர் ஆகியோருக்கு நல்ல லாபமாக இருந்த படம். மொத்த விநியோகஸ்தரிடமிருந்து வாங்கிய ஏரியா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு பெருத்த அடியை கொடுத்திருக்கிறது.  செங்கல்பட்டு ஏரியாவை சுமார் ஒன்னரை கோடி கொடுத்து வாங்கியவருக்கு குறைந்தது ஐம்பது சதவிகிதம் நஷ்டமாகும் என்று சொல்கிறார்கள். சின்னப் படங்களின் வியாபாரம் சின்னதாய் இருக்கும் வரை எல்லாமே நல்லது.
@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
எத்தேசையாய் சன் லைப் சேனல் பார்த்துக் கொண்டிருந்தேன். சுமைதாங்கியில் வரும் “என் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?” என்கிற பாடல் ஒளிபரப்பானது. ஸ்ரீதரின் படமென்று நினைக்கிறேன். எத்தனை வைட் ஷாட்கள். உயரத்திலிருந்து கிழே ஃபேன் செய்யப்பட்டு கீழேயிருக்கும் கதாநாயகியை சேர்க்கும் உத்தி, படிக்கட்டுக்களில் கீழே தேவிகாவும், மேலே ஜெமினியும் நிற்க, இருவரும் மாற்றி மாற்றிப் பாட, கேமரா படிகளிடையே போய் போய் வந்தது.. கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு நிறையத்தான் செய்திருக்கிறார்கள் அந்த காலத்தில். ஒளிப்பதிவாளர் அநேகமாய் வின்செண்டாத்தான் இருக்க வேண்டும். வாவ்..
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ஒரு பெண்ணுக்கு அவள் வாங்கும் தக்காளி பழுக்கவேயில்லை என்பது கவலையாயிருக்க, உடனிருந்தவள் அதுக்கு ஒரு சாங்கியம் இருக்கு என்றாள். என்ன என்று ஆர்வத்துடன் கேட்க “காய்கறியெல்லாம் எடுத்து பின்கட்டுல வச்சி, உடம்புல ஒட்டு துணியில்லாமல் அதை சுத்தி வந்து டான்ஸ் ஆடுனா அடுத்த நாள் பழுத்துரும்” என்றாள். அதை நம்பி அவளும் காய்கறிகளை வைத்து இரவு நிர்வாண நடனமாடினாள். அடுத்த நாள் தோழி ஆர்வமாய் “என்ன தக்காளி பழுத்திச்சா?” என்று கேட்க, பெண்: அது பழுக்கலை ஆனா வெள்ளரிக்கா மட்டும் நீட்டமா ஆயிருக்கு என்றாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Guru Prasath said...

When it is Sridhar it is almost always Vincent.

sarav said...

Dear Cable Ji,
the last movie i saw in SSR pankajam was Mask of Zorro . despite the fact that i stay very near to it i never visited that theatre thereafter. for this quality, the money spent we will download the movie and watch it in our home theatre conveniently. With all these loopholes , they shout that people are not coming to theatres First , they should have good sound system, Seating and other basic amenities. Second they should not stop people from bringing snacks even they stop water bottle oh my god

jbarani said...

14/10/13...

Unknown said...

ஆயுத பூஜை தேவையற்ற சடங்குதான் ...சினி பீல்ட்டில் எடுத்ததற்கு பூஜை போடுவார்களே ,எப்படி சமாளிக்கிறீர்கள் ?
ஜோக்காளியின் ஆயுத பூஜையை க்ளிக்கிப் பாருங்க >>>http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_14.html

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை...

Saran said...

See
http://www.tamil.chellamuthu.com/2013/10/blog-post.html?m=1

Unknown said...

No cable sir...You got it the otherway around... the festivals were there and it has been commercialized.... and show me a field that has not been commercialized.... cine/sports are worst of commercialization of dance/song/drama arts... will u leave it?