Thottal Thodarum

Jul 6, 2013

சிங்கம்-2

ஏகப்பட்ட எதிர்பார்பு. அதை விட ஏகப்பட்ட விளம்பரமென்று அமர்களத்தோடு வெளியாகியிருக்கிற படம். போன பார்ட்டில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாய் உட்டாலக்கடி செய்து, ஸ்பெஷல் டூட்டியில் ரகசியமாய் ஜாயின் செய்து என்.சி.சி ஆபீஸாராய் வலம் வரும்  இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  என்.சி.சி அதிகாரியாய் இருந்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கள்ளக்கடத்தலை கண்காணித்து வருகிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு முக்கியமான நிலையை சமாளிக்க, மீண்டும் போலீசாய் வந்து எல்லாரையும் மூன்றடி எகிறி பாய்ந்தடித்து எப்படி வெற்றி கொள்கிறார் எனபது தான் கதை.கதை என்று பார்த்தால் ஏதும் புதிதில்லை. சூர்யாவுக்கு ஏற்கனவே செட்டான ரோல். அதனால் சிறப்பாக நடித்தார் என்பதை சொல்வது சரியான விஷயமாய் இருக்காது. படம் நெடுக அவரது உழைப்பு தெரிகிறது. ஹன்சிகா +2 மாணவியாம். அதை விடுத்துப் பார்த்தால் முதல் பாதியில் இருக்கும் பில்லப்புகளுக்குத்தான் பயன்படுத்தபட்டிருக்கிறார். அனுஷ்கா சில காட்சிகளில் அழகாக இருக்கிறார். சிலதில் ம்ஹும். சந்தானம் ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். “வயசுல பிகர் வர்றதும் வயசான சுகர் வரதும் சகஜம் தானே”. முதல் பாகத்தில் வந்த விவேக்கும் இரண்டாம் பாகத்தில் இருக்கிறார். அவர் ரேஞ்சுக்கு ஆங்காங்கே வாய்ஸோவரில் பஞ்ச் அடிக்கிறார்.  அனுஷ்காவும், சூர்யாவும் மாற்றி மாற்றி வெட்கப்பட்டதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, வயர்லெஸை ஆன் செய்துவிட்டு சூர்யாவிடம் விவேக் வெட்கப்பட்டதைப் பற்றி பேச, வயர்லெஸ்ஸில் ‘யார் வெட்கப்பட்டது?” என்று கேட்டுமிடம் செம. வில்லன்களாய் வழக்கம் போல ஆட்கள். எக்ஸ்ட்ராவாக ஒரு ஆப்பிரிக்க வில்லன் வேறு. பொதி மாடு மாதிரி எந்த விதமான் ரியாக்‌ஷனும் இல்லாமல் வருகிறார். ரகுமான் மட்டும் கொஞ்சம் ஓகே.  சற்றே குண்டான அஞ்சலி வேறு கெட்ட ஆட்டம் போடுகிறார்.

ப்ரியனின் ஒளிப்பதிவு படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப வேகமோ வேகம். எடிட்டிங்கும் நன்றாகவே இருக்கிறது. இசை என்று வரும் போதுதான் சத்தம் காதை கிழிக்கிறது. பாடல்களாகட்டும், பின்னணியிசையாகட்டும் செவுலு அவுலு ஆகிறது.

படத்தின் பெரிய பலம் ஹரியின் திரைக்கதை. படத்தின் முதல் அரை மணி நேரம் மொக்கையாய் ஃபீலிங். என்.சி.சி. ஹன்சிகாவின் இம்மெச்சூர் காதல் என்று தந்தியடித்துக் கொண்டிருந்த திரைக்கதை சூர்யா மீண்டும் பதவிக்கு வந்து போலீஸ் அதிகாரியானதும் சும்மா வில்லில்லிருந்து புறப்பட்ட அம்பாய் போனது இடைவேளை வரை. கலவரத்தை அடக்கும் விஷயம். செல் போன் ஜாமரை வைத்து பெண்ணை காப்பாற்றும் மேட்டர். ச்காயத்தை ரகுமானுடன் பேசிக் கொண்டே அங்கே போட்டுத் தள்ளும் காட்சி என அதிரிபுதியாய் பறக்கிறது. ஆனால் அதற்கு பிறகு டார்கெட் வில்லன்களை பிடிக்கிறேன் என்று ஆப்பிரிக்க வில்லன் வரை அலையும் விஷயங்கள் எல்லாம் பர பரவென இருந்தாலும் ஒட்டவில்லை. அப்புறம் என்னப்பா.. அதான் ஆச்சுல்ல.. சீக்கிரம் முடிங்க என்று கொட்டாவி விட வைக்கிறது. முதல் பாகத்தில் வில்லன் பிரகாஷுக்கு இருந்த பவர் மூன்று வில்லன்கள் வைத்தும் இல்லாமல் இலக்கில்லாத் ஏவுகணையாய் சூர்யா ஓடிக் கொண்டும், பேசிக்கொண்டும், பாய்ந்து அடித்துக் கொண்டும் இருப்பது வெறும் காத்து மட்டும் வரும் பைப்பை அடிப்பது போல இருக்கிறது.


Post a Comment

13 comments:

maruthamooran said...

////வெறும் காத்து மட்டும் வரும் பைப்பை அடிப்பது போல இருக்கிறது.////

என்னமோ போங்க கேபிள்ஜி... உங்களால மட்டுந்தான் இப்படியெல்லாம் பஞ்ச் வைக்க முடியும்.

Unknown said...

Superb movie..All must watch..

Unknown said...

Superb entertainment movie..Nice film..All must watch.

kanavuthirutan said...

Nice review... i think the movie is worth to see...

'பரிவை' சே.குமார் said...

சிங்கம் 2 ஆஹா... ஒஹோ என்று வரும் விமர்சனங்களுக்கு இடையே ஒரு அருமையான விமர்சனம்.

வாழ்த்துக்கள் கேபிள் ஜி.

Raj said...

Mokkai telugu & hindi padangalai thookki kondadureenga. Tamilla eppadi eduthalum kalaikiringa.

Unga padam varattum. Paaaaaarrrrrpom.

Unknown said...

A

Unknown said...

Nenga work pana kalakallpu movie German language la vanda soul kitchen movie oda copy paste nengalam review pantradu nallava iruku

குரங்குபெடல் said...

3 நடிகைகளின் அங்கங்களை நம்பி படம் எடுத்துள்ள

இயக்குனரும் நாயகனும் டிவி பேட்டிகளில்

ஆஸ்கார் ரேஞ்சுக்கு அளப்பது

சந்தானம் காமெடியை மிஞ்சுகிறது

Unknown said...

தில்லு முல்லுவை ரசிச்சு பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பா சிங்கம் பிடிக்காது.

ஆமா தில்லு முல்லு சூப்பர் ஹிட் தானே?

Unknown said...

"thottal thodarum" varattum tamil cinamevai ulaga level ku kondu povom....
S

PARTHASARATHY RANGARAJ said...

good movie, good entertainer, value for money

Unknown said...

சிங்கம் மற்றும் சிங்கம் 2 இந்த ரெண்டு படமும் சூப்பர் அது மட்டுமில்லை இந்த 2படமும் எங்கள் பக்கத்து ஊரில் எடுத்தது இன்னும் சிறப்பம்சம்