Thottal Thodarum

Aug 24, 2012

ஆச்சரியங்கள்

மீண்டுமொரு சின்ன பட்ஜெட் படம். அது அவர்களின் விளம்பரங்களிலேயே தெரிந்தது. பல சின்ன பட்ஜெட் டிஜிட்டல் படங்களைப் பார்த்து சலித்துப் போன நேரத்தில் ஆச்சர்யமாய் வந்திருக்கும் படம்.


நான் எங்கிருக்கேன்? எப்படி இங்கே வந்தேன்? என்பது போன்ற வழக்கமான கேள்வியோடு ஆஸ்பத்திரியில் ஆரம்பிக்கிறது படம். வாழ்க்கையை த்ரில்லோடு, பரபரப்போடும் வாழ ஆசைப்படும் இளைஞன் கடவுளிடம் தன் விண்ணப்பத்தை வைக்க, ஒரு போதை நாள் நள்ளிரவின் போது கடவுள் போனில் வந்து நாளையிலிருந்து உன் வாழ்க்கை படு திரில்லாய், பரபரப்பாய் ஆகும் என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். அந்தக் காலுக்கு பிறகு நட்க்கும் விஷயங்கள் நிஜமாகவே அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதை ஒரு சுவாரஸ்ய திரில்லராய் சொல்லியிருக்கிறார்கள்.முடிவில் ஒரு ட்விஸ்டும் வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்விகள் உங்களுக்கு தோன்றினாலும் அதை படம் பார்த்தபின் புரிந்து கொள்வீர்கள். இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.

உலக சினிமாவில் சொல்லப்படாத கதை என்று எல்லாம் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அப்படி ஏதும் இல்லை என்றாலும் எடுத்துக் கொண்ட கதையை தொய்வில்லாமல்,  ஒரு பாடல் கூட இல்லாமல் படு சுவாரஸ்யமாய் கொண்டு சென்றிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். 
கதாநாயகன் தமனின் தோளில்தான் மொத்த படமுமே. அதை ஓரளவுக்கு உண்ர்ந்து செய்திருக்கிறார். பார்த்தவுடன் எரிச்சலைடைய வைக்காத விதத்திலேயே இவரின் நடிப்பு ஓகே லெவலை தாண்டிவிட்டது. கதாநாயகியாய் அட்டக்கத்தி அண்ணி ஐஸ்வர்யா. மிக இயல்பாய் நடித்திருக்கிறார்.  மகாநதி சங்கர் படத்தின் முக்கிய வில்லன். நிறைய பேசியே  வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டராய் வந்து, கதையில் மேலும் திருப்பதைக் கொடுக்கும் தமனின் காதலி மங்களின் கேரக்டர் சுவாரஸ்யம்.  நடுநடுவே காமெடிக்கு என்று ஹீரோவின் நண்பர்களாய் வரும் கனாக் காணும் காலங்கள் சீரியலில் வரும் நடிகரும், ஒரு குண்டுப் பையனும் ஒரிரு காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

கணேஷ் ராகவேந்திராவின் பின்னணியிசை வெகு சுமார். கேனான் 7டியில் கணேஷ் பகவத்தின் ஒளிப்பதிவு ஓகே. எழுதி தயாரித்து இயக்கியவர் ஹர்ஷவர்த்தன். கமல் நடத்திய திரைக்கதை பட்டறையில் பயின்றவர். அந்தப் பட்டறைக்கு பிறகு எழுதப்பட்ட திரைக்கதைதான் இப்படம் என்றார். படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலிருந்து பரபரப்பு ஆரம்பமாகிவிடுகிறது. அப்போது ஆரம்பித்த விறுவிறுப்பை கடைசி வரை மெயிண்டெயின் பண்ணியது பாராட்டுக்குரியது. குறிப்பாய் அண்ணனின் மரணம், காதலியின் துரோகம், வில்லன்களினால் வரும் ப்ரச்சனை,  போன்றவை சுவாரஸ்யமான ட்விஸ்ட். அதே நேரத்தில் அப்பா, அத்தை கேரக்டர்களில் நாடகத்தனம் அதிகம். அண்ணனின் ப்ரச்சனைக்கு தம்பியை மிரட்டும் தாதாவாக வரும் மகாநதி சங்கர் கேரக்டரை வைத்து, பின்னப்படும் பிரச்சனை. அதனால் ஏற்படும் சிக்கல்கள், என்று சுவாரஸ்யம் குறையாமல் கதை சொல்லியதில் ஜெயித்திருக்கிறவர். மேக்கிங்கில் பட்ஜெட் காரணமாய் பேசியே பாதி விஷயங்களை கன்வே செய்திருப்பது குறையாக இருக்கிறது. காதல், காமெடி, குத்துபாட்டு என்று வழக்கமான கதைக்களனுக்குள் போகாமல் வித்யாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். ஃபேண்டஸியான களனுக்கு லாஜிக்கலான பல விஷயங்களை வைத்து பின்னி மெருகேற்றிய கதைக்கு, விஷுவலான மேக்கிங் குறையாய் தெரிந்தாலும் வரவேற்க்கப்பட வேண்டிய முயற்சியே. முக்கியமாய் க்ளைமாக்ஸ் ட்விஸ்டு படு சுவாரஸ்யம்.

கேபிள் சங்கர்


Post a Comment

14 comments:

மதுரை சரவணன் said...

GOOD REVIEW... NOW A DAYS MOST OF UR CLIENTS WATCH THE MOVE ON THE BASIS OF UR REVIEW..

வெண்பூ said...

அவ்வ்வ்... என்ன‌ வியாதி இது.. க‌தைய‌ ப‌டிக்குற‌ப்ப‌வே அதே மாதிரியான‌ ஹாலிவுட் ப‌ட‌ம் எதாவ‌து நினைவுக்கு வ‌ருது... மைக்கேல் ட‌க்ள‌ஸோட‌ "The Game" ப‌ட‌ம் பாத்திருக்கீங்க‌ளா கேபிள்? :)

Cable சங்கர் said...

ரிஷிமூலம் நதிமூலம் ஆராயப்படாது.:))

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல விமர்சனம்.சினிமா பார்ப்பது போல இருந்தது

நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

rajamelaiyur said...

நல்ல முயற்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்

rajamelaiyur said...

இன்று
வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

arul said...

good review

துருவன் said...

சேட்டன் பகாத் ன் ONE NIGHT @ CAL CENTER நாவலில் வரும் THEME இது. .ஆனால் அதில் அந்த அழைப்புக்கு பின் தன்னம்பிக்கை வரும். .
இதில் திரில்லர் வருது. .

அந்த நாவலை விளம்பரப் படுத்திய அதே வாசகங்களை கொண்டே இந்த படத்திற்கும் விளம்பரம் போட்டிருந்தார்கள். .
..
above average. .

MCX Wintrade said...

gud review

பழூர் கார்த்தி said...

பரவாயில்லை.. வழக்கமாய் மரத்தை சுற்றிப் பாடும் காதலில்லாமல் இந்த மாதிரி, மதுபான கடை மாதிரியான புதிய கதைக் களங்கள் தமிழ் சினிமாவுக்கு நல்லதே!

mohansathishkumar said...

Impressed by your review asusual..It has been driving force for me to watch low budget movies in theater..Let me know, in which theater it is running..

Anonymous said...

amount of risk you take by watching all the films has to be appreciated.

Sathish said...

Excelent Movie- Thanks to cable for you review..

solvefingertip.net said...

I want 18 age review sir....