Thottal Thodarum

Mar 2, 2015

கொத்து பரோட்டா- 2/03/15

Bench Talkies No.1
ஆங்கிலத்தில், இந்தியில், ஏன் மலையாளத்தில் கூட குறும்படங்களின் தொகுப்பாய் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் குறும்படம் இயக்கியவர்களை இயக்குனர்களாய் கொண்டாடும் தமிழகத்தில் இன்று வரை குறும்படங்களை தொகுப்பாய் அமைத்து படம் வெளியானதில்லை. ஏற்கனவே பாலசந்தர் அவர்கள் ஒரே படத்தில் இரண்டு கதையை கொடுத்திருந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சி ஒரே படத்தில் ரெண்டு கதைகளை வைத்து படம் எடுத்திருந்தார். குறும்படங்கள் இயக்கி, தயாரித்து, அதன் மூலமாய் உடனடியாய் திரைப்படம் இயக்க வாய்ப்புக்காகத்தான் பல பேர் குறும்படம் எடுக்கிறார்கள். ஆனால் குறும்படத்திற்கென்று தனி மார்கெட், அதன் மூலம் வருமானம் என்று ஒர் வழியுள்ளதை இன்னும் நிறைய பேர் கண்டறிய முயலவே இல்லை. இன்றளவில் ஏவிஎம்மிலோ, ஆர்.கே.வியிலோ குறும்படம் எடுத்துவிட்டு, யூ டியூப்பில் போடுவதை தவிர்த்து பத்து பைசா காசு பார்க்க முடியாமல் தொடர்ந்து கோடம்பாக்க கனவுடன் வளைய வருகிறவர்களுக்கு அதை பணமாக்க, குறும்படங்களை காசு கொடுத்து பார்க்கை வைக்க முயலுங்கள் என்று அடிக்கடி நான் பங்கேற்கும் மேடைகளில் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.  அதை கார்த்தி தன் வெற்றியின் பங்காய் அதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த, ஆறு இயக்குனர்கள் இயக்கிய குறும்படங்களை ஒன்றாய் தொகுத்து பெஞ்ச் டாக்கீஸ் என்கிற பெயரில் ஒர் திரைப்படமாய் வெளிவர இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தன்னுடய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலமாய் அதை முதலடி எடுத்து வைத்திருக்கிறார். சத்யம், பிவிஆர் போன்ற தியேட்டர்களில் வருகிற மார்ச் 6 தேதி முதல் சென்சார் சர்ட்டிபிகேட்டுடன் ஒரு முழு நீள திரைப்படமாய் வெளியாகிறது. குறும்படங்களை யூட்யூபிலும், இலவச ப்ரிவியூக்களிலும் அவரவர் குழுவிற்கான ஆதரவு தரும் இளம் குறும்பட ஆர்வலர்களும், வித்யாச சினிமா விரும்பிகளும், இம்மாதிரியான முயற்சிக்கு கொடுக்கும் ஆதரவாய் திரையரங்குகளில் சென்று பார்த்தால் நிச்சயம் அடுத்தடுத்து இன்னும் நல்ல முயற்சிகளுக்கு ஏதுவாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@

சென்ற வாரம் ஓலா கேப் பற்றி எழுதியதை பல பேர் பாராட்டியும், சில பேர் அதன் சர்வீஸை குறை கூறியும் எழுதினார்கள். என்னைப் பொறுத்தவரை பொதுச் சேவை புரியும் நிறுவனங்களில் முழுக்க, முழுக்க, கஸ்டமர் சர்வீஸில் திருப்தியாய் கொடுக்க எவராலும் முடிவதில்லை. அதுவும் கஸ்டமருக்கு மரியாதையே இல்லாத இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமேயில்லை எனும் நிலையில் கிடைத்த நல்ல விஷயங்களைக் கொண்டு அவர்களைப் பாராட்டினால்தானே அடுத்து மேலும் பல நல்ல விஷயங்களை அவர்களால் செயல்படுத்த முடியும் என்கிற சுயலாபத்தில் தான் எழுதப்பட்டதே தவிர, ஓலாவின் கொள்கை பரப்பு செயலாளராக அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு விஷயம் சமீபத்தில் ஓலாவில் நடந்த ஒரு சிறு குழப்ப விஷயத்தை அவர்களின் கஸ்டமர் கேருக்கு சொல்லி அதை ஒரிரு மணி நேரங்களில் சரி செய்து கொடுத்தார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அனேகன்
கே.வி.ஆனந்த், தனுஷ் காம்பினேஷன். ஹாரிஸின் டங்கா மாரி வேறு அதகள ஹிட், முன் ஜெமத்துக் கதையா, அல்லது சயின்ஸ் பிக்‌ஷனா? இல்லை ஹலூசினேஷனா என்று பட்டி மன்றம் வைக்கும் அளவிற்கு திருநெல்வேலி அல்லா கொழ கொழ. வழக்கமான மசாலாவைத் தவிர பெரிதாய் ஏதும் எதிர்பார்க்காமல் போயிருந்ததால் ஏமாற்றம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் ஏமாற்றமும், கொஞ்சம் தனுஷுக்காகவும், அல்லது நெஞ்சம் மறப்பதில்லை, மகதீரா குழப்படியினாலும், பிடிச்சிருந்திச்சா இல்லையான்னு முடிவெடுக்கிறதுக்குள்ளே.. படம் முடிஞ்சிருச்சு.  பிடிச்சது கார்த்திக், தனுஷ். பிடிக்காதது எத்தனையோ கோடி செலவு செய்து படமெத்திருக்கிறார்கள். நாலு நல்ல விக் வாங்கியிருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
காக்கிசட்டை
டாணா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படம். சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் அந்தஸ்துக்கு உயர்த்த முயற்சி செய்த படம். என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமாய் வரும் ஒரு சில பஞ்ச், அண்ணாச்சியின் சுவாரஸ்யங்களைத் தவிர வேறேதுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Bandipottu
அல்லரி நரேஷ் ஒர் தில்லாலங்கடி பார்ட்டி. எத்தையாவது செய்து ஆட்டைய போடுவதில் வல்லவர். அவரிடம் கதாநாயகி வந்து தன் அப்பாவை ஏமாற்றிய மூவரைப் பற்றிச் சொல்லி, அவரக்ளை பழிவாங்க வேண்டும் என்று கேட்கிறார். அவரும் ஏதும் கேட்காமல் மூவரையும் பழிவாங்கி, ஹீரோயினுடன் காதலும் கொண்டு, தான் ஏன் இவர்களை பழிவாங்கினேன் என்று காரணமும் சொல்கிறார். கதையாய் கேட்டபோது அட சுவாரஸ்யமாய் இருக்கிறதே என்று யோசித்த லைன். படமாய் பார்க்கும் போது டிபிக்கல் ஓல்ட் டைப் தெலுங்கு மசாலாதான். அங்காங்கே வரும் ஒரிரண்டு காட்சிகளைத் தவிர.
@@@@@@@@@@@@@@@@@@@
Qissa
2013  ஆண்டு, ஜெர்மன் மற்றும் என்.எப்.டி.சியின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம். நிறைய வெளிநாட்டு பட விழாக்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஒர் பஞ்சாபியின் கதை. அவனுக்கு பிறக்கும் நான்காவது பெண் குழந்தையை அவன் பெண்ணாய் ஏற்றுக் கொள்ளாமல் ஆண்மகனாகவே வளர்க்கிறான். அவனுக்கு பயந்து அவனது குடும்பமும் அப்படியே நடத்துகிறது. ஏன் ஊரே கூட அதை நம்புகிறது. இது அவளை ஆண் என்று நினைத்து காதலிக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது ப்ரச்சனையாகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் தான் ஒரே குழப்படியாய் இருக்கிறது. பாராட்ட வேண்டிய அம்சம் என்றால் இர்பான் கான் மற்றும் திலோத்தமாவின் நடிப்புத்தான். அபாரமான நடிப்பு. பல இடங்களில் வெறும் கண்களால் மட்டுமே பல விஷயங்களை கடத்துகிறார்கள். பின் வரும் காட்சிகளில் மகளால் திருமணம் செய்யப்பட்ட, பெண்ணின் செக்ஸுவல் ப்ரச்சனைக்காக, அவளை மாமனாரே கற்பழிக்க முற்பட, அவரது பெண்ணே அவரை சுட்டுக் கொல்கிறாள். பின்பு வரும் காட்சிகள் எல்லாம் ஒரே வழவழ, குழகுழவென சுழன்றியடிக்கிறது. செத்து போன இர்பான் ஆவியாய் வருகிறார். ஒரு காட்சியில் தன் பெண்ணை அப்படியே தன் ஆவிரூப உடம்பினுள் இறக்கி, அப்பா உடம்பில் பெண் மீண்டும் ஆணாகிறார். புரியலைன்னா.. புரிஞ்சா மாதிரி வாவ்.. குட்.. சம்திங் லைக் இல்யூஷன். மேஜிக்கல் ரியலிசம் என்று எத்தையாவது சொல்லி, பாராட்டித் தொலைந்தால் தப்பித்தீர்கள். இல்லாட்டி என்ன பெரிய பெரிய படமெல்லாம் பார்த்து பாராட்டியிருக்கு உனக்கு புரியலைன்னா எப்படி என்ற கேள்வி வந்திரும் ஸோ.. குஸ்ஸா.. அட்டகாசம், அற்புதம். எக்ஸ்ட்ராடினரி.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A trucker who has been out on the road for two months stops at a brothel outside Atlanta. He walks straight up to the Madam, drops down $500 and says, "I want your ugliest woman and a grilled cheese sandwich!" The Madam is astonished. "But sir, for that kind of money you could have one of my prettiest ladies and a three-course meal." The trucker replies, "Listen darlin’, I’m not horny – I’m just homesick."
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: