விக்னேஷும், ஏதேதோ செய்து கொண்டுதானிருக்கிறார். வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடித்து கொண்டுதானிருக்கிறார் ஆனால் ஒன்றும் சொல்லும்படியாய் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வரிசையில் ஈசாவும் வந்திருக்கிறது.
சுடலைஈசா என்கிற ஒரு அனாதை உப்பளத்தில் வேலை பார்க்கிறான். மணிகட்டில் முட்டை தூக்கும் கம்பியோடு அலைகிறான் தனியனாய் இருக்கும் ஒருவனை கொலை செய்கிறான். கொலை செய்தவனை தன்னுடய் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மனைவியிடம் காட்ட, அவள் வெறி கொண்டு கையில் ஒரு கத்தியை எடுத்து இறந்தவனை மேலும் குத்துகிறாள். ஈசா ஒரு விதமான எக்ஸ்செண்ட்ரிக் ரியாக்ஷனோடு ஓங்காரமாய் ஆரவாரமாய் சிரிக்கிறான். இப்படி ஆரம்பிக்கும் படம் இடைவேளையின் போது கொஞ்சம் ஜெர்க்காகத்தான் செய்கிறது. பின்பு ப்ளாடாகி விழுந்துவிடுகிற்து.
விக்னேஷ் அதிக பட்சமாய் இரண்டு பக்கத்திற்கு மேல் வசனம் பேசவில்லை. தேவையில்லாமல் இவரின் கேரக்டரை பிதாம்கன் விக்ரம் போலவும், காட்டாமல், கோபக்காரனாகவும், காட்டாமல் இரண்டும் கெட்டானாக காட்டியிருப்பதால் அவரின் மேல் எந்தவித உணர்வும் வரமாட்டேன் என்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பேக் வாட்டரில் வாழைமட்டை பாலத்தில் நடக்கும் சண்டை காட்சி சூப்பர். அந்த ச்ண்டை காட்சி படமாக்கப்பட்ட விதமும், நடித்த விக்னேசுக்கும் சபாஷ்.
சில சமயங்களில் அர்சனா போல இருக்கிறார் புதுமுகம் லக்ஷணா.. பல காட்சிகளில் பெரிதாய் நடிப்பதற்கு ஏதுமில்லை என்றாலும் கதை இவரைச் சுற்றி நடப்பதால், ஒரு ஈர்ப்பு இவரிடம் இருக்கவே செய்கிறது. ஓங்குதாங்கான உயரமும், அந்த வியர்வை உப்பு மினுமினுப்பும், வாளிப்பும். . அதிலும் அந்த முதலிரவு காட்சியில் விக்னேஷிடம் அவர் முயக்கம் காட்டும் காட்சியில்… ம்ம்ம்.
சிஙகம் புலி, லொல்லுசபா மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் காமெடி செய்கிறன் என்ரு நம்மை கொல்லுகிறார்கள். இதில் மனோகருக்கும், பாஸ்கருக்கும் இரண்டு அட்டு பிகர்களுடன் ஒரு முழுநீள ரீமிக்ஸ் பாட்டு வேறு முடியலடா சாமி.
வழக்கமான பழிவாங்கும் கதைக்கு தூத்துக்குடி, கடல், லோக்கல் ஆட்கள், உப்பளம் பேக்ரவுண்டை என்று வைத்து கொஞ்சம் வித்யாச படுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாகணேசா. ஆரம்ப காட்சிகளிலும், இடைவேளை வரையிலும் சீராக சென்ற ஒரு லைன், இடைவேளைகு பிறகு அழுத்தமில்லாத லவ் ட்ராக்கினாலும், விக்னேஷின் கேரட்டரைஷேஷனில்னாலும் பொத்தென விழுந்து விடுகிறது. விக்னேஷ் ஏன் வித்யாசமாய் சிரிக்க வேண்டும், முதலிரவு முடிந்து எழுந்தவுடன் கிங்காங் போல மார்தட்டி கத்த வேண்டும்? ஏன் ஒரு சில காட்சிகளில் பிதாமகன் விக்ரம் போல நடக்க வேண்டும்.? என்று ஏகப்பட்ட வேண்டும்கள்.? க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்ட்ர், ஸ்டண்ட் மாஸ்டர் என்று அனைவரது உழைப்பும் தெரிகிற்து.
ஈசா – கடவுளூக்கே வெளிச்சம்
டிஸ்கி:
ப்டத்துக்கு சம்பந்தமில்லாத கதாநாயகி லக்ஷணாவின் படம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அந்த கடைசி போட்டோ போட்டதுலதான் நீங்க யூத்துன்னு நிரூபிக்கறீங்கண்ணே.
//
இந்த கொடுமையெல்லாம் எப்படி பார்த்திங்க?
நீங்க ரொம்ப பாவம் ஜி,,,,
ஓக்கே ரைட்டு.
//மனோகருக்கும், பாஸ்கருக்கும் இரண்டு அட்டு பிகர்களுடன் ஒரு முழுநீள ரீமிக்ஸ் பாட்டு வேறு முடியலடா சாமி.//
ஏதோ ‘குரு நம்ம ஆளு’ல ரீமிக்ஸ் வொர்கவுட் ஆயிட்டு.... இதுக்காக இனி வரும் பாஸ்கர் படத்துல எல்லாத்துலயும் ரீமிக்ஸ் வரும் போல இருக்கே! நல்லா இருந்தா சரிதான்.
---
விமர்சனத்துக்கு நன்றிண்ணே.
விமரிசன்ம் எல்லாம் சரிதான்.
அந்த கடைசி போட்டோ போட்டதுலதான் நீங்க யூத்துன்னு நிரூபிக்கறீங்கண்ணே.
//
@கேபிள்
அண்ணே தராசு செம காமெடி பண்றாரு இல்ல...
தலை.. நேற்று மட்டும் ஏழு படம் ரிலீஸ் ஆகியிருக்கு போல..
டிஸ்கியை போட்டு கலக்கிட்டிங்க..
என் அண்ணா ஏன் சொந்த செலவில் சோகத்தை தேடிக்கொள்ள வேண்டும்?
ஏன் எங்களையெல்லாம் விமர்சனம் செய்து, பார்ப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டும்?
இப்படி எனக்கும் பல வேண்டும்கள்...
பிரபாகர்.
சார், சார் இந்த பொண்ணு நல்லா இருக்கு சார். இதையே நம்ம படத்துலையும் போட்டுடுங்க. நான் வேணும்னா சம்பளம் இல்லாமலே ’நடிச்சு‘ தரனே.
படத்தில கடைசி fight நல்லாயிருக்கு.
என்னா ஒத்துமை தலவா...
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
என்ன இருந்தாலும் சேலைதான் சூப்பர்!
12:45 PM//
ஐயா திருவாரூரே..உங்க பிளாக் பார்த்தேன்..கமெண்ட் போட முடியலை..வேர்டு வெர்பிகேஷன்லாம் தேவையா?சரி .பண்ணுங்கயா..
அப்படியெல்லாம் சொல்ல முடியாது ராம்ஜி.. சில சமயம் சேற்றில் செந்தாமரைகள் கிடைக்கும்
//
சரிடா ரவி.. போய் பாருடா.. நல்லாருந்தா சொல்லுடா.. என்னட்டா சரியாடா..
யோவ் தண்டோரா.. எனக்கு பின்னூட்டம் போடுன்னா இன்னொருத்தருக்கு போடறீங்களா..? :)
என்ன இருந்தாலும் சேலைதான் சூப்பர்!
//
அதான் சொல்லியிருக்கிறேனே பரிசல். சும்ம்ம ஆஅ ஆ கும்முனு இருக்காஙக் லக்ஷனா..
அது உங்க இஷ்டம்..நவநீதகிருஷ்ணன். நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
மிக்க நன்றி டம்பிமேவி.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
ஒழுங்குமரியாதையா நம்ம கப்பத்தை என் அக்கவுண்டல் கட்டிருங்க..
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
உங்க பாராட்டுக்கு அளவேயில்லை கலையரசன்.
படத்தில கடைசி fight நல்லாயிருக்கு.
என்னா ஒத்துமை தலவா...
//
எலலாம் தானா அமையுறதுதான் அசோக்
நன்றி கோலிப்பையன்.
//
நான் ஏற்கனவே என் நண்பர் படத்துக்கு ரெகமண்ட் செய்துவிட்டேன். பாலாஜி.. ஆம்பளை “நடிக்க” நாஙக காசு தர்றதில்லை.. வாங்கிதான் பழக்கம்.
ஏன் எங்களையெல்லாம் விமர்சனம் செய்து, பார்ப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டும்?
இப்படி எனக்கும் பல வேண்டும்கள்...
பிரபாகர்.
//
:)
தலை.. நேற்று மட்டும் ஏழு படம் ரிலீஸ் ஆகியிருக்கு போல..
டிஸ்கியை போட்டு கலக்கிட்டிங்க..
//
நம்ம கிட்ட வர்றவங்களுக்கு ஏதாவதுஇன்ரஸ்டாக எதுவும் வேண்டாமா.? அதுக்கு தான் இந்த படம்.
அண்ணே தராசு செம காமெடி பண்றாரு இல்ல...
//
இப்படிதான் தராசண்ணே.. நிறைய பேருக்கு பொறாமை.. ஜெட்லி மாதிரி
---
விமர்சனத்துக்கு நன்றிண்ணே//
என்னது குரு என் ஆளுல வொர்கவுட் ஆயிடுச்ச்சா.. போங்க பாஸ் உங்க காமெடி உணர்வுக்கு அளவேயில்லை..
அந்த கடைசி போட்டோ போட்டதுலதான் நீங்க யூத்துன்னு நிரூபிக்கறீங்கண்ணே.
//
:)
நீங்க வேற... எந்திரிச்சு ஓடலாம்னு முடிவு பண்ணிட்டோம்... இது வந்ததால இன்னும் கொஞ்ச நேரம் ஒக்காந்து இருந்தோம். ஏண்டா போனோம்னு ஆகிப்போச்சு. இந்தக் காமிடி மட்டும் இல்லனா கூட்டிட்டுப் போனவன் நாராயிருப்பான்.
---
அந்த படத்துக்கு அப்புறம்தான் உங்க தன்னலமற்ற சேவையே புரிந்தது.
நீங்க வேணா பாருங்க, என்னைக்காவது ஒரு நாள் விக்னேஷும் ஒரு பெரிய ஹீரோவா வர்ற போறாரு. அப்ப பாருங்க....
---
அந்த படத்துக்கு அப்புறம்தான் உங்க தன்னலமற்ற சேவையே புரிந்தது.
//
அந்த படத்தில் பாஸ்கரின் காமெடி கொஞ்சம் நல்லாத்தான் இருக்கும்
நானும் அந்த நம்பிக்கையில்தான் ரிலீஸான ஏழு படஙக்ளில் இந்த படத்தை பார்த்தேன். அவரை போலவே நானும் ஏமாந்தேன். நிச்சயமாய் அவரின் முயற்சிக்கு பெரிதாய் வரவேண்டியவர்தான். என்னவோ தெரியவில்லை.. சரியான கதையை தெரிவு செய்ய முடியவில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா. சேது படத்தில் முதல் முதலில் நடித்தவர் விக்னேஷ் தான்.
தெரியும் ஸார், விக்னேஷ், இயக்குனர் பாலா எல்லோரும் ஒரே ரூமில் தங்கியிருந்தவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் விக்னேஷ் நடித்த (?) போது சேது படத்திற்கு வேறு ஏதோ பெயர் ? தினத்தந்தியில் வந்த விளம்பரம் இன்று கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. படத்தின் பெயர்தான் மறந்துவிட்டது.
விமரிசன்ம் எல்லாம் சரிதான்.
அந்த கடைசி போட்டோ போட்டதுலதான் நீங்க யூத்துன்னு நிரூபிக்கறீங்கண்ணே.//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........ரைட்டு நடக்கட்டும்
இது புதிய தகவலாக இருக்கிறதே,ஷங்கர்!
இந்த அங்கிள்ஸ் தொல்லை தாங்கமுடியலப்பா! இந்த வயசுல உமக்கு தேவையா ஓய்!
இதுல பரிசில் வேற்!
///என்னது குரு என் ஆளுல வொர்கவுட் ஆயிடுச்ச்சா.. போங்க பாஸ் உங்க காமெடி உணர்வுக்கு அளவேயில்லை..////
என்னது குரு என் ஆளுல்ல ரீமிக்ஸா? எனக்கு நெஜமாவே தெரியாதுங்க! எ.கொ.ச. இது?
// நீங்க வேணா பாருங்க, என்னைக்காவது ஒரு நாள் விக்னேஷும் ஒரு பெரிய ஹீரோவா வர்ற போறாரு. அப்ப பாருங்க....
உண்மைதான் Kavi..
முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கதுல அருண் விஜயைக்காட்டிலும் விக்னேஷ் கொஞ்சம் மேல் தான்..
எந்த ஒரு சினிமா பின்புலமும், ஆதரவும் இல்லாம, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கிட்டத்தட்ட 15 வருஷமா இவர் போராடிக்கிட்டு இருக்கார்.. விரைவில் வெற்றி அடைய வாழ்த்துவோம்..
லக்ஷணா புதுமுகம் இல்ல சங்கர். சிவகாசி ல விஜயோட தங்கச்சி. திருமகன் (S.J.Surya) படத்துல 3 ல ஒரு ஹீரோயின் ( நொண்டியா வருவார்).
பாஸ் information is wealth.(இப்பதான் பாய்ஸ் படத்துல செந்தில் காமெடி பார்த்தேன்)
சங்கரு தம்பி!
நீ ஒரு
தங்கக் கம்பி!
அதுமட்டுமா நீ
கம்பி சங்கரு (Cable Sankar)
எப்படி? நாமளும் கவிதை எழுதிட்டம்ல்?
ஆஸ்கார் ப்ரைஸ் எப்ப?
ஆமாம் கீத்
//
:(
ஆமாம் சார்.. முதல் ஒரு ஷெட்யூல் அவர் தான் ஹீரோ.. பிறகுதான் விக்ரம்
//முட்டை தூக்கும் கம்பியோடு அலைகிறான்// முதலில் அதென்ன முட்டையைத் தூக்கும் கம்பின்னு கொஞ்சம் முழிச்சேன்.. ஹிஹி..
அப்புறம் பொதுவில் யாரையும் மட்டமாக பேசுவது எனக்கு பிடிக்காது எனினும் இந்த விக்னேஷ் விஷயத்தில் என்னால் முடியலை. இவர்லாம் நடிக்கலைன்னு யாரு அழுதா? சகிக்கலை..
ஹி..ஹி.. சரி பண்ணிறலாம்.
/அப்புறம் பொதுவில் யாரையும் மட்டமாக பேசுவது எனக்கு பிடிக்காது எனினும் இந்த விக்னேஷ் விஷயத்தில் என்னால் முடியலை. இவர்லாம் நடிக்கலைன்னு யாரு அழுதா? சகிக்கலை.//
எனக்கும் பிடிக்காது இருந்தாலும் மிக தீவிரமாய் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருப்பவர், கொஞ்சம் கான்ஷியஸாக கதைகளை செலக்ட் செய்ய தெரியவில்லை என்பது வருத்தமே..