சைவ உணவகங்களில் பல இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான கடைகளில் வழக்கமான தோசை, இட்லி போன்றவைத்தான் இருக்கும். அதில் என்ன ஸ்பெஷலாய் இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தை உடைத்த உணவகம் நெல்லை சைவ உணவகம்.
சென்னையில் வடபழனி, ஆற்காடு ரோடு, பரணி ஹாஸ்பிட்டல் எதிரில் சிறியதாய் ஒரு மரத்தின் பின்னால் உடைந்த போர்டு ஒன்று இருக்கும். கொஞ்சம் தேடித்தான் சாப்பிட வேண்டும். பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல் போன்ற அயிட்டங்கள் தான் கிடைக்கும். ஆனால் சுவைத்துப் பார்த்தால் நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். முக்கியமாய் அவர்கள் ஊற்றும் சாம்பார், மற்றும் சட்னி அட்டகாசமாய் இருக்கும்.
முன்பு மதிய நேரத்தில் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது நிறுத்தி விட்டதாய் சொன்னார்கள். இரவு ஒன்பது மணிக்கே கடையை ஏறக்கட்டி விடுகிறார்கள். நல்ல சுவையான, நியாயமான விலையில் உள்ள உணவை சாப்பிட விரும்பினால் நீங்கள் நெல்லை சைவ உணவகத்திற்கு நடையை கட்டுங்கள். சுவைக்கு நான் கியாரண்டி.
கேபிள் சங்கர்
Comments
vaazhga ungal pani ! ! !
இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?
ஆனால், பாரம்பரியச் சுவை உள்ள கடைகள் எல்லாம் மூடப்பட்டுகொண்டு வருகின்றன.
And right next to 'Veettu Tea' stall. Do visit once and review it. Their 'ennai dosai' is excellent !