Thottal Thodarum

Jun 1, 2010

குற்றப்பிரிவு – திரை விமர்சனம்

Kutra_Pirivu_J_104329f
ஒரு நல்ல போலீஸ், ஒரு கெட்ட போலீஸ் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் தான் படம். தெலுங்கில் போலீஸ், போலீஸ் என்கிற பெயரில்  வெளியான மொழி மாற்றுப் படம்.
 kutrappirivu-wallpaper06 நல்ல போலீஸ் ஸ்ரீகாந்த, கெட்ட போலீஸ் பிரிதிவி ராஜ், ஸ்ரீகாந்துக்கு போலீஸ் வேடம், மனிதர் மெனக்கெட்டிருக்கிறார். பாடி லேங்குவேஜிலும்,  கொஞமாய் பேசும் டயலாக் டெலிவரியிலும். பிரிதிவிராஜ் பற்றி கேட்கவே வேண்டாம். ஒரு தீவிரவாதியை கைக்குள் வைத்துக் கொண்டு எல்லாவிதமான கிரிமினல் வேலைகளையும் செய்து பணம் சம்பாதிப்பதையே வேலையாய் செய்பவர். இவருக்கு இடஞ்சலாய் ஸ்ரீகாந்த் உள்ளே வர, ஒரு கட்டத்தில் அவரை கொல்ல முயற்சி நடக்கிறது. அம்முயற்சியில் உலக சினிமா வழக்கம் போல அவருடய காதலி கமலினி முகர்ஜி கொல்லபட, பின்னர் வெகுண்டெழுந்து பிரிதிவிராஜை கண்டு பிடிக்கிறார். க்ளைமாக்ஸ்.

மொழி மாற்று படம் என்று உணரப்படாத வகையில் படமாகக்கியிருக்கிறார்கள். ஸ்ரீகாந்தின் நடிப்பு நிச்சயம் பாராட்டக்கூடிய ஒன்றே. அதே நேரத்தில் அவரது சாக்லெட் பேபி முகம் அவர் நடிக்க முயற்ச்சிக்கிறார் என்பதை வெளிக்காட்டவும் செய்கிறது. பிரிதிவிராஜ் ஒரு தேர்ந்த நடிகர். சரியாக தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். கமலினிமுகர்ஜி வருகிற நேரம் கொஞ்சமே என்றால நிறைவு.
kutrappirivu-wallpaper14 ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், எல்லாமே தேவையான அளவு.. பிண்ணனி இசை படத்தில் விழும் தொய்வை நிறைய இடங்களில் சரி செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இயக்குனர்  மன்மோகனின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் பெரிய அளவில் திருப்பங்கள் இல்லாததால் ஒரு  மாதிரி நேர் கோட்டில் ஓடிக்கொண்டேயிருப்பது சலிப்படைய வைக்கிறது. பிரிதிவிராஜின் தங்கை கேரக்டரை முக்கியமான இடத்தில் பயன் படுத்தியிருப்பது நல்ல திருப்பம்.

குற்றப்பிரிவு- க்ரைம் சீன்

கேபிள் சங்கர்
Post a Comment

35 comments:

KULIR NILA said...

Prithviraj and Shree kanth itharku munnarum idhe pol oru padathil Nadhithurikirargal Idhu Police store.

Adhu Oru Water project Story Prithvi Finance Company owner

Adhulayam Prithvi Semaya Nadichuruppar Villanaga

Cable Sankar said...

அது கனா கண்டேன்.. தமிழ் படம்.. குளிர் நிலா..

கோவி.கண்ணன் said...

//இயக்குனர் மன்மோகனின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் பெரிய அளவில் திருப்பங்கள் இல்லாததால் ஒரு மாதிரி நேர் கோட்டில் ஓடிக்கொண்டேயிருப்பது சலிப்படைய வைக்கிறது.//

சேசிங்க் சீனில் போலிஸ் ஜீப்பில் போகும் போது யூ டேர்னோ கூட இல்லையா ?

:)

அதிஷா said...

படம் நல்லாருக்கா இல்லையா?

butterfly Surya said...

கேபிள்,,விமர்சனம் எங்கே.. மூணு போட்டோ போதுமா..?

கே.ஆர்.பி.செந்தில் said...

//ஒரு நல்ல போலீஸ், ஒரு கெட்ட போலீஸ் //

???????...

ப்ரியன் said...

சென்ற வாரம்தான் பார்த்தேன் பெரிய திருப்பங்கள் ஏதும் இல்லை என்றாலும் , நன்றாகவே இருக்கிறது.ஓவர் பில்டப் , பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் ஒரு படம்.போலீஸ் படம் என்று சிங்கம் போய் நோந்தவர்கள் தாராளமாக இதைப் பார்க்கலாம்.

செந்தழல் ரவி said...

கெடப்பது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை என்பது போல மறுபடி ஒரு திரை விமர்சனத்தோடு வந்துவிட்டீர்கள்.

ஏடிஎம் கார்டு கொடுத்தவர் என்பதால அவரது ஆபாச ஆணாதிக்க வெறி தெரியவில்லையா கேபிளாரே ?

உங்கள் கருத்து என்ன ? அப்படியே மறந்துடலாமா ?

ப்ரியன் said...

வலை உலகில் ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் அதைப் பற்றியே பேச வேண்டுமா?! வேற ஒன்றைப் பற்றி பேசவோ / எழுதவோ கூடாதா?! என்ன பேசுறீங்க ரவி?!

Phantom Mohan said...

போலீஸ் பட வரிசையில் இதும் ஒரு வெற்றிப்படம்! ஸ்ரீகாந்த், ப்ரித்வி இருவரின் நடிப்பும் சூப்பர்.

////////////////
இயக்குனர் மன்மோகனின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் பெரிய அளவில் திருப்பங்கள் இல்லாததால் ஒரு மாதிரி நேர் கோட்டில் ஓடிக்கொண்டேயிருப்பது சலிப்படைய வைக்கிறது.
////////////////////

புதிய இயக்குனருக்கு, இயக்குனராக முயற்ச்சிக்கும் நீங்கள் இவ்வாறு கூறுவது அழகல்ல. தட்டிகொடுங்கள்!

செந்தழல் ரவி said...

---வலை உலகில் ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் அதைப் பற்றியே பேச வேண்டுமா?! வேற ஒன்றைப் பற்றி பேசவோ / எழுதவோ கூடாதா?! என்ன பேசுறீங்க ரவி---

கூவத்தில் நீந்திக்கொண்டு அட நாத்தமே வரலை என்று நடித்துக்கொண்டு பின்னால் கிடைக்கும் ஆதாயத்துக்காக அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் கள்ள மவுனம் சாதிப்பவர்களைத்தான் நான் கேள்விகேட்டேன்.

அவர்கள் என் நன்பர்கள் என்பதால் கேள்வி கேட்க எனக்கு முழு உரிமையும் உள்ளது. உங்களுக்கு என்ன போச்சு பிரியன் ?

ரமி said...

செந்தழல் ரவி said...
//
கூவத்தில் நீந்திக்கொண்டு
//

உங்களுக்கு வலை ஒரு கூவம்.

எங்களுக்கு வலை ஒரு உலகம்

So we have things to do.

ரமி said...

I request to read everyone who need.

http://www.greatestdreams.com/2010/06/blog-post.html

செந்தழல் ரவி said...

ரமி. உங்கள் புரிதல் சரியல்ல என்று நினைக்கிறேன்.

ஒட்டுமொத்த வலையையும் சொல்லவில்லை. குழந்தையை கூட விட்டு வைக்காத ஆணாதிக்கம் பிடித்த பன்றிகள் மேயும் இடத்தை தான் கூவம் என்றேன்.

ப்ரியன் said...

நீங்கள் கேட்ட தொனி அப்படி இல்லையே ரவி.அந்த பிரச்சனைப் பற்றி பேசாமல் நீங்கள் எப்படி திரைவிமர்சனம் போடலாம் என்பதுபோலத்தான் இருந்தது அதனால்தான்.

ரமி said...

//
நீங்கள் கேட்ட தொனி அப்படி இல்லையே ரவி.அந்த பிரச்சனைப் பற்றி பேசாமல் நீங்கள் எப்படி திரைவிமர்சனம் போடலாம் என்பதுபோலத்தான் இருந்தது அதனால்தான்.
//

You catch my point.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சேசிங்க் சீனில் போலிஸ் ஜீப்பில் போகும் போது யூ டேர்னோ கூட இல்லையா ?
//

appa anna thoonkiruppaaru. hi hi

மின்னுது மின்னல் said...

ஐ நான் பார்த்துட்டேன்

ddd said...

பெண்களின் பாவாடை தூக்கி ரவி. இப்போது நர்சிம்மை என்ன செய்யலாம் என்கிறாய். அல்லது உன்னால் தான் என்ன செய்ய முடியும். சும்ம இப்படி பதிவில் போய் டவுசரை இறக்கி சொறிந்துகொள்ள மட்டுமே உன்னால் முடியும். வேறெதற்கும் பயன்படாத இந்த அநாவசிய செயல் எதற்கு.

ஆனால் ஒன்று நீ தான் கார்பரேட் பாவாடை தூக்கி. பெண்களின் நலனுக்காக எப்படி எல்லாம் பாடு படுகிறாய்.

ஹாலிவுட் பாலா said...

எழவு... எவனெவனுக்கோ என்னென்ன பிரச்சனைன்னா... சாருவுக்கு ஒரு பிரச்சனையாம்..!!!

///
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).
///////

http://charuonline.com/blog/?p=594


இதுல நர்சிம்மையும்.. லிஸ்டில் சேர்த்திருக்கார்.

கொடுமையடா சாமி.

ஜோதிஜி said...

பாலா நாரதர் கலகம் நன்மைக்கே?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஹாலிவுட் பாலா said... //
போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்//
தல பாத்துட்டென் செம காமெடி

ஹாலிவுட் பாலா said...

ஹி.. ஹி.. கலகமெல்லாம் ஒன்னுமில்லீங்க.

யார் யாரெல்லாம்.. இதை வெளியிட்டு, இந்த எதிர்ப்பை ஆயிரம் பேருக்கு எட்ட வைக்கப் போறாங்கன்னு... மீ த வெய்ட்டிங்.

கார்த்திக்கேயன் ரெடியா இருந்துக்கங்க. :)

இராமசாமி கண்ணண் said...

ஹாலி பாலி நாரதர் கலகம் நன்மையில் முடியுமா :-).

ஹாலிவுட் பாலா said...

அடப்பாவிகளா.. கலகமில்லைன்னு சொல்லியும் விட மாட்டேங்கறீங்களே! :) :) :)

Cable Sankar said...

பாலா ப்ரீயா இருக்கியா..?

ஹாலிவுட் பாலா said...

சங்கர்.. இந்த செல்லில் இப்ப இந்தியா கால் பண்ண முடியாது. வீட்டுக்குப் போனதும்.. கால் பண்ணுறேன்.

kanagu said...

தெலுங்கு டப்பிங் படத்த எல்லாம் பாக்குறது ரொம்ப கஷ்டம் அண்ணா... :( :(

படம் பரவாயில்ல அப்டின்னு சொல்லி இருக்கீங்க... நான் தெலுங்குலேயே சப்-டைட்டில் போட்டு பாத்துகுறேன்... :)

சி. கருணாகரசு said...

நம்பி பார்க்கிறேன்.... நன்றி.

VSP said...

Maanja velu is pending......

Dinesh said...

செந்தழல், உங்களுக்குள பிரச்சினை எதுனா இருந்தா அத கேபிள் அன்னனுக்கு மெயில் அனுப்பியோ இல்லை சாட் பன்னியோ பேசிக்கிங்க. இது அவரு தொழில் பன்ற இடம். இங்கே இந்த மாதிரி கருத்துக்களை பதியாதீர்கள்.

Dinesh said...
This comment has been removed by the author.
Anonymous said...

//கெடப்பது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை என்பது போல மறுபடி ஒரு திரை விமர்சனத்தோடு வந்துவிட்டீர்கள்.

ஏடிஎம் கார்டு கொடுத்தவர் என்பதால அவரது ஆபாச ஆணாதிக்க வெறி தெரியவில்லையா கேபிளாரே ?

உங்கள் கருத்து என்ன ? அப்படியே மறந்துடலாமா ?//

இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. பதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டங்களை தயவு செய்து நீங்களாவது நீக்குங்களேன் சங்கர் சார். வெறுப்பாக இருக்கிறது.

Anonymous said...

இந்தப்படம் பார்த்தேன். ப்ரித்விராஜ் அருமையான நடிகர். ஸாட்லி மலையாளப் படங்களில் ஒரே ஆக்சன் ரோல் பண்ணிட்டிருக்கார். தமிழில் கொஞ்சமாவது செலக்டிவ்வாக இருக்கார். அவர் தமிழில் நல்ல படங்கள் பண்ண வேண்டும். நிற்க, இரண்டு வில்லன்களைப் பார்த்து நான் பயந்திருக்கிறேன். ஒன்று கில்லியில் பிரகாஷ்ராஜ். மற்றது கனா கண்டேன்ல ப்ரித்விராஜ். இரண்டு பேருக்கும் கண் அவ்ளோ பயங்கரமாக இருக்கும். தமிழ் டப்பிங் ஓரளவு பரவாயில்லை.

Cool Boy கிருத்திகன். said...

Not Bad Film