Thottal Thodarum

Apr 24, 2019

2018 – ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -4


கள்ளச்சிரிப்பு
கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் ஜீ5 தயாரிப்பில் வெளியான தமிழ் வெப் சீரீஸ். ஒரு வருஷம் தான் என்கிற அக்ரிமெண்டோடு வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்யும் பெண். ஆக்ஸிடெண்டலாய் தன் கணவனை கொலை செய்து விடுகிறாள். அதன் பின்னால் நடக்கும் கதைதான் இந்த சீரீஸ். இப்படி நேரிடையாய் சொன்னால் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. எனவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவர்களிடையே திருமணத்திற்கு பிறகும் உறவு இருக்கிறது. அப்பாவும் மகளுக்கும் புரிந்துணர்வு கிடையாது. அம்மாவிடம் பெண் தேவையேயில்லாமல் மாஸ்ட்ருபேஷன் பற்றி சைகையோடு பேசுவாள். கொலை செய்து விட்டு, ரொம்பவே பழக்கமானவள் போல நடந்து கொள்வாள். அவ்வப்போது பொருந்தாத இடங்களில் ‘ஓத்த’ ஃபக்’ போன்ற வசை வார்த்தைகளை அப்பனிடமே சொல்வாள். போன்ற பற்பல சுவாரஸ்யங்கள் வைத்திருப்பதாய் நினைத்திருந்தாலும், நிஜத்தில் கள்ளக்காதலனாய் நடித்தவரின் நடிப்பும். நான் லீனியரில் சொல்லப்பட்ட திரைக்கதையைத் தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஒன்றுமில்லை.
அமெரிக்க மாப்பிள்ளை
பெயரைப் பார்த்ததும் சபா டைப் நாடகத்தின் மறுவடிவமாக இருக்குமோ என்று யோசித்தபடிதான் பார்க்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தனமான டயலாக்குகள். கொஞ்சம் ரசனையான விஷுவல் என ஆரம்பித்ததும் ஓக்கே.. என்று தொடர்ந்த சீரீஸ். அமெரிக்காவிலிருந்து வரும் ஒர் இளைஞனுக்கு பெண் பார்க்க விரும்புகிறார்கள். அவனுக்கு அதை அவாய்ட் செய்ய எதையாவது சொல்ல வேண்டும் என்று தான் ஒரு “கே” என்று சொல்கிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு யார் அந்த பையன் என்று கேட்க, அவன் தன் நண்பனை சொல்லிவிடுகிறான். அதன் பின் என்ன ஆகிறது? ஏன் அவன் தன்னை கே என்று சொன்னான்? என சில பல ஈஸி டிவிஸ்டுகளோடு அலசுகிறார்கள். இந்தி, ஆங்கிலத்தை பொறுத்தவரை கே பிரச்சனைகளை அவர்கள் ஒர் பிரச்சனையாகவே பார்ப்பதில்லை. அதை தாண்டி வந்துவிட்டார்கள். இங்கே அது இன்னும் தொடப்படாத, முகம் சுளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இக்கதையிலும் உயர் ஜாதி குடும்பம். அவர்கள் ஏற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் தான் என்றாலும் அதை எப்படி அணுக வேண்டும். எப்படி இந்த பிரச்சனையை டீல் செய்கிறார்க்ள் என்பதை சுவாரஸ்யமாய் அதே நேரத்தில் வாத்தியார்த்தனமாய் இல்லாமல் ப்ரசெண்ட் செய்தது பாராட்டுகுரியது.
Mana Mugguru Love Story
சென்ற வருட பிக்பாஸ் ஹிட்டுக்கு பிறகு நவ்தீப் பிரபலமானவராய் வலம் வந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யப் டிவி ஆப்பின் தெலுங்கு வெப் சீரீஸ். வழக்கம் போல முக்கோணக் காதல் கதைதான். பணக்கார முதலாளி. அழகிய குழப்பமான பெண். துறு துறு மிடில் க்ளாஸ் இளைஞன் என டெம்ப்ளேட் காதல் கதை கேரக்டர்கள் தான். பட் அதை பிரசண்ட் செய்த விதத்தில் தான் இந்த வெப் சீரீஸ் சுவாரஸ்யத்தை தந்தது.

காதல் கதைகளில் என்னத்த பெருசா என்கிறவர்களுக்கு தெலுங்கு மக்களின் சினிமா ரசனையை கருத்தில் கொண்டு அதிலிருந்து மெல்ல வெளியே கொண்டு வர மகா பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலர் செய்கிற இம்மாதிரி முயற்சிகள் வரவேற்க்கப்பட வேண்டியவை. கொஞ்சம் ஆர்.பி.சவுத்ரி காலத்து கதைகளன் தான் என்றாலும் அழகிய  நாயகிகள் எப்போதுமே சுவாரஸ்யம். அதிலும் ப்ளீஸிங் விஷுவல்ஸோடு வரும் போது நிச்சயம் ஒரு முறை ஜஸ்ட் லைக் தட் பார்க்கலாம் என்கிற வகை சீரிஸ்
பல சீரிஸ்களில் இருக்கும் பிரச்சனை வெளிநாட்டு சீரிஸ்களில் வரும் பெண் கேரக்டர்களை அடிப்படையாகக் கொண்டு கேரக்டர்களை வடிவமைப்பது. அங்கே அவர்களது வாழ்வியல் வேறு. நிறைய விஷயங்களுக்கு காரணம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்திய படங்களைப் பொறுத்த வரை குடும்பம் சார்ந்த அமைப்பு தான் பெரும்பாலும் எனவே ஒவ்வொரு கேரக்டர் செய்யும் செயல்கள் எந்தவிதத்தில் நியாயம் அல்லது தவறு என்பதற்கான விளக்கம் தேவை.  உதாரணமாய் இந்திய அளவில் சீரியல் கில்லர் கதைகள் ஏன் அவன் சீரியல் கில்லர் ஆனான் என்கிற நியாயமான விளக்கம் சொல்லாத படங்கள் என்னதான் டெக்னிக்கலாய் அதிரிபுதிரி செய்திருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டதேயில்லை. காரணம் நம் நாட்டின் குடும்ப அமைப்பு. என்னதான் நாலு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தத்தாரியாய் போய்விட்டான் என்றாலும் ஏதோ ஒரு வகையில் கரித்துக் கொட்டிக் கொண்டாவது  அவனை ஆதரித்துக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்பு. அவன் சீரியல் கில்லர் ஆக ஒரு லாஜிக்கல் காரணம் தேவை. அப்படியில்லை என்றால் அது இந்திய அளவில் படங்களில் மட்டுமல்ல. சீரீஸ்களுக்கு ஒத்து வராது. எங்கிருந்தாவது சுடுகிறவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று.



Post a Comment

No comments: