Thottal Thodarum

Apr 22, 2019

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3


2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3
நிலா நிலா ஓடிவா
பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ் வெப் சீரீஸ். ரொம்ப நாளாகவே இந்தியிலும், தெலுங்கிலும் கால் பதித்திருந்த வியூ எனும் ஸ்டீரிமிங் ஆப் தமிழில் ஆட்டத்தை ஆரம்பித்த சீரீஸ். ஒரு ட்ராகுலா பெண்ணுக்கும் நார்மலான இளைஞனுக்குமான காதல். ட்ராகுலா கூட்ட பிரச்சனை. அந்த ட்ராகுலாக்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசர் ஒருவர் அந்த ட்ராகுலாக்களை அழிக்க ஒர் தனிப்படை அமைக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியான ட்ராகுலாவுக்கும் பிரச்சனை வருகிறது பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. கதைக்களன் என்னவோ சுவாரஸ்யம் தான். ட்ராகுலாவாக நடித்த அழகு சுனைனாவும், ஸ்மார்ட் அஸ்வின் காக்கமானுவும் நடித்திருந்தாலும் மகா மொக்கையான காட்சிகள். சக்திமான் காலத்து சிஜிக்கள். காமெடி எனும் பெயரில் கருப்பு பெண், அசமந்த உதவியாளன். கொஞ்சமே கொஞ்சம் கூட மெனக்கெடாத திரைக்கதையமைப்பு. தூர்தர்ஷன் காலத்து படமாக்கல் என எல்லாமே சொதப்பல் தான். நந்தினியிடமிருந்து பெரிதும் எதிர்பார்த்தேன்.

இதே ஆஃப்பில் கேங்ஸ்டர் டைரி, கல்யாணமும் கடந்து போகும், மெட்ராஸ் மேன்ஷன், போன்ற அபத்த குறும்பட அந்தாலஜி சீரீஸ்களும், 403 போன்ற வெகு சுமார் இளைஞர்களுக்கான சீரீஸ் என்கிற பெயரில் எப்போதும் யாராவது கஞ்சா அல்லது சரக்கு பற்றி பேசிக் கொண்டோ, அல்லது பாவித்துக் கொண்டோ இருக்கிறார்கள். ஆண்கள் வீடுகளில் தொடை தெரியவும், பெண்கள் பின்புட்டம் தெரியும்படியான டைட்ஸில் காட்சியளிப்பது, சில கிஸ்சிங் காட்சிகளைப் பார்க்கும் போது லைட்டாக சுஸ்தாக வாய்ப்பிருக்கிறது. அதற்கு மேல் தொடர்வது போதை அதிகமானால் ஏற்படும் குமட்டலுக்கு சமம்.

Behind Closed doors
சென்ற ஆண்டில் நான் பார்த்த தரமாக, எழுதப்பட்ட, படமாக்கப்பட்ட, நடிக்கப்பட்ட வெப் சீரீஸ் அந்தாலஜி. மொத்தம் 12 பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒர் கதை. பெரும்பாலும் உரையாடல்களாகவே காட்சியமைக்கப்பட்ட கதைகள். சிங்கிள் மதருக்கும், டீன் ஏஜ் பையனுக்கும் இடையே ஆன உரையாடல். நிச்சயம் ஆன பெண் கொடுக்கும் பார்ட்டியில் விருந்தினராக வரும் ஒர் இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலும், அந்த உரையாடல் பாடலாய் மாறுவதும் அருமையான உணர்வு. ஒர் பெண்ணின் இன்னாள் காதலன் நெருங்கிய நண்பன். இருவரும் சேர்ந்து அவளுக்கு பிறந்தநாள் ஆச்சர்யத்தை கொடுக்க முனைந்து கொண்டிருக்கும் போது நண்பன் அவளுக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று சொல்லிக் கொண்டே வர, காதலனுக்கு சந்தேகம் வருகிறது. அதன் பின் நடக்கும் விஷயம் படு சுவாரஸ்யம். அதே போல பெட்ரோல் பங்கில் வேலைப் பார்க்கும் சற்றே குள்ளமான காதலன். ஒரு கேக் ஷாப்பில் வேலை செய்யும் ஓங்கு தாங்கான பெண்ணுக்கிடையே ஆன காதல். தனிமை. தனிமையின் உச்சத்தில் கொடுக்கப்பெறும் முத்தம் என க்யூட் மொமெண்டுகள் அடங்கிய சீரீஸ்.  மாமனாருக்கும் வரப்போகும் மாப்பிள்ளையும் ஒன்றாய் தண்ணியடிக்க ஆர்மபித்து பேச, அதன் முடிவு என பல சுவாரஸ்ய வாழ்க்கை முரண்கள். உறவுகளின் நெருக்கம், நெருக்கத்தினால் வரும் புழுக்கம் என குட்டிக் குட்டி கதைகளாய் தரமாய் விரிகிறது. பார்கவ் ப்ரசாத் இந்த சீரீஸின் எழுத்தாளர். நவீன் பல எபிசோடுகளை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் பார்த்த தரமான தமிழ் வெப் சீரீஸ் என பரிந்துரைப்பேன்.

கரண்ஜீத்கவுர் -சொல்லப்படாத கதை
நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை கதை. அவரை வைத்தே எடுக்கப்பட்டது. கரண் ஜீத் கவுர் எப்படி சன்னி லியோன் ஆனார். எதனால் போர்ன் நடிகையாக மாறினார். எது அவரை அந்த துறைக்கு துறத்தியது? போன்ற பல கேள்விகளுக்கான பதில் இந்த வெப் சீரீஸில் இருக்கிறது. நாயகியாய் சன்னி லியோனே நடித்திருப்பதால் சொல்லப்படும் காட்சிகளில் நம்பகத்தன்மையின் மேல் கேள்வி இருந்தது. ஆனால் போகப் போக தான் ஏன் இந்த துறையில் ஈர்க்கப்பட்டேன் என்பதற்கான கதையில் வழக்கம் போல கொஞ்சமே கொஞ்சம் குடும்ப ஏழ்மை போன்ற டெம்ப்ளேட் விஷயங்கள் இருந்தாலும், தன்னுடய ஆசை. காதல். காதலன் தன்னை பயன்படுத்திக் கொண்டது. அம்மாவின் குடிப் பிரச்சனை. தம்பியின் அன்பு. இத்தொழில் கொடுக்கும் பணம், புகழ் போன்றவற்றின் மீதான விருப்பம். என பல உண்மைகளை வெளிப்படையாய் சொன்னதும். ஒரு டிவி  இண்டர்வியூவில் தான் அவமானப்படுத்தப்பட்டதை உணர்ந்து அந்த பேட்டியிலேயே அந்த அவமானத்தை டீல் செய்த விதத்தை அடிப்படையாய் வைத்து சொல்லப்பட்ட திரைக்கதை. சன்னி லியோனின் நடிப்பு, என திருப்திகரமான ஹிந்தி வெப் சீரீஸ். தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஜீ 5 ஆப்பில் பார்க்க முடியும்.
மேலும் தொடரும்.


Post a Comment

No comments: