Thottal Thodarum

Sep 28, 2009

”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு

DSC00333 DSC00334


சில மாதங்களுக்கு பிறகு பதிவர் சந்திப்பு நேற்று நடந்தது.அலைகடலென திரண்டு வாரீர் என்று சொன்னது.. அடை மழை என்று புரிஞ்சிடுச்சு போலருக்கும் கூட ஆரம்பித்து ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் மழை பிச்சிகிச்சு. இருந்த ஓரே மரத்தின் அடியில் ஆயிரம் பேர். தொப்பலாய் நினைந்தபடி, இதற்கு பேசாமல் மழையிலேயே நின்றிருக்கலாம்.

மீண்டும் மழை நின்றவுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.. பதிவர் முரளிகண்ணன் அண்ணன் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு, சிறுகதை பட்ட்றை, சிறுகதை போட்டி ஆகியவற்றை சிறப்பாக நடத்தியதற்காக நன்றியும், சிங்கை நாதனுக்கு சென்னையில் இருந்து நிறைய பதிவர்கள் உதவியதற்காகவும், அதை முன்னிருந்து ஒருமுனை படுத்திய நர்சிமுக்கும், புதியதலைமுறை வார இதழில் பதிவுலகிலிருந்து பத்திரிக்கையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும், அதிஷா,லக்கிலுக் ஆகியோரை பாராட்டியும், அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்குள் வந்தமைக்காகவும், நான்கு லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியதற்காகவும் எனக்கும் ஒரு வாழ்த்தும், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆரம்பிக்கும் “அகநாழிகை” இதழ் வெற்றி பெற வாழ்த்தியும் ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கும் போது அவர் பின்னால் மேகங்கள் திரண்டன, இடி இடித்தது..


வ்ந்திருந்த பதிவர்கள் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டார்கள். பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டதது மகிழ்ச்சியாகவே இருந்தது. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அடை மழை பெய்ய..மீண்டும் அதே மரம், ஆயிரம் பேர், தொப்பலாய்.. அரை மணி நேரம் கழித்து நண்பர் அதியமான் சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் நிற்க, வழ்க்கப்படி டீக்கடையில் தொடர்ந்தது.


பீச்சுல பதிவர் சந்திப்பு வச்சா மழை வருது. அதனால ஏதாவது ஒரு க்ளோஸ்டு இடத்தில் அடுத்த சந்திப்பை நடத்தலாமா என்று ஒரு யோசனை. உங்களீன் மேலான ஐடியாக்களை அள்ளி விடுங்கள்.
DSC00327 DSC00328
ஊர்சுற்றியும், மழை வருமோ என்ற கவலையுடன் அதிஷா, ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம்

DSC00329 DSC00330
ஆருடம் சொன்ன அதியமான், எவனோ ஒருவன், வெங்கிராஜா, நிலாரசிகன்

DSC00331 DSC00332
நிலாரசிகன்,அடலேறு ராஜராஜன்
DSC00335 DSC00336

மேங்கங்கள் புடைசூழ முரளிகண்ணன், மணிஜி (எ)தண்டோரா, காவேரிகணேஷ்
DSC00337 DSC00338

எவனோ ஒருவன், நிலாரசிகன், சரவணன், முரளிகண்ணன்


DSC00339 DSC00340

பதிவர் ஜனா, வந்திருந்த ஒரே பெண் பதிவர் அமுதா கிருஷ்ணன்,
DSC00342 DSC00343
முதல் மழையில் நினைந்த காந்தியும், கே.ரவிஷங்கரும்


DSC00345 DSC00346


அகநாழிகை பொன்.வாசுதேவன், டம்பிமேவி, காவேரி கணேஷ்.

இவர்களை தவிர போட்டோவில் அகப்படாத டோண்டு, டாக்டர் புருனோ, சுகுணாதிவாகர், நர்சிம், பைத்தியக்காரன், பட்டர்ப்ளைசூர்யா, வளர், ஆகியோரை தவிர மழையில் பார்க்க முடியாமல் போன இன்னும் சில பதிவர்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்ப்போம்.

டிஸ்கி:

விட்டு போனவஙக் கோச்சிக்காம சொன்னீங்கன்னா சேர்த்துடலாம்.


Post a Comment

44 comments:

Venkatesh Kumaravel said...

சந்தித்துக் கொண்டதில் மகிழ்ச்சி. அகநாழிகை பொன்.வாசுதேவன் அண்ணனின் சிறுபத்திரிக்கைக்கு வாழ்த்து தெரிவித்ததையும் சேர்த்துவிடுங்கள்.

Thirumalai Kandasami said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

Thirumalai Kandasami, 10:38 AM

Good work Shankar,I excepted a Auto because some producers are very anger but you escaped.. Congrats

//

haa..haa..haa..

எம்.எம்.அப்துல்லா said...

Thirumalai Kandasami, 10:38 AM

Good work Shankar,I excepted a Auto because some producers are very anger but you escaped.. Congrats

//

haa..haa..haa..

shortfilmindia.com said...

/Thirumalai Kandasami, 10:38 AM

Good work Shankar,I excepted a Auto because some producers are very anger but you escaped.. Congrats

//

ஏன் தலைவரே.. எடுத்திட்டீங்க.. ஆட்டோவுக்கெல்லாம் பயப்படுறவனா நானு..?

பின்னூட்டத்தை ரி ரிலீஸ் செய்த அண்ணன் அப்துலலாவுக்கு நன்றி..

கேபிள் சஙக்ர்

Jana said...

பறவாய் இல்லை ஒருவகையில் நாம், கௌதம் வாசுதேவ மேனனை முந்திவிட்டோம். "சென்னையில் ஓர்நாள் மழையில்...."
தாங்கள் உட்பட பல நண்பர்களை சந்திக்க கிட்டியமையும், பல விடயங்கள் பற்றி பேசி பலவற்றை அறிந்து, கருத்துக்களை பகிரக்கிடைத்தமையினையும், பெரும்பேறாகவே கருதுகின்றேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

சந்திப்புக்கும் சாதிச்சதுக்கும் வாழ்த்துக்கள் தல

துளசி கோபால் said...

கொட்டும் மழையிலும், சரியா அஞ்சரைக்கு காந்தி சிலை எதிரே இருந்தேன். காரில் இருந்தபடியே ஒரு நிமிஷம் ..... அஞ்சலி (காந்திக்குத்தான்)

இந்த மழையில் சந்திப்பு நடக்கச் சான்ஸே இல்லைன்னு திரும்பிப்போயிட்டேன்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...

பித்தனின் வாக்கு said...

பரவாயில்லை பீச்சுலயே வையுங்க, அப்பிடியாது சென்னைக்கு மழை வரட்டும். ஆமா பட்டாணி சுண்டல், மிளகாய் பஜ்ஜி எல்லாம் யாரு சப்பளை. ஆயிரம் பேருனு சொல்லிட்டு 10 பேரு போட்டா போட்டுருக்கு.

Ashok D said...

தலிவா.. நல்லா மழைல மாட்டிகிட்டேன்.. அப்புறம் எங்க பதிவர் ச்ந்திப்பு நடக்கபோதுன்னு.. T.Nagarleye ஒரு நல்ல பாரா பார்த்து செட்டிலாயிட்டேன்.

அப்புறம் மழைக்கு எங்க ஒதுங்கினிங்க.

kanagu said...

நேத்தைக்கு என்னால வர முடியல... சில வேலைகள்... :(

சந்திப்பு வெற்றிகரமாக நடந்தற்கு என் வாழ்த்துக்கள்.. :)

Kumky said...

படங்கள் நல்லா வந்திருக்கு தலைவரே...பேரெல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தா இன்னும் அருமையா இருக்கும்...பாருங்க.

அதென்ன பதிவர் சந்திப்பு என்றாலே தவறாமல் மழையும் கலந்துகொள்கிறது..?

ஜானி வாக்கர் said...

சார், எங்க தலை "ஆதி" படம் எங்கே?

கிடுகுவேலி said...

இணையத்தால் இணைந்த இதயங்கள்..உங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழவும் உங்கள் பிணைப்பு மேலும் இறுகவும் வாழ்த்துக்கள்...!!

iniyavan said...

அண்ணே,

என்ன விவாதம் நடைப் பெற்றது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

ஜெட்லி... said...

மழை மற்றும் பூஜையால் வரமுடியில அண்ணே....

☀நான் ஆதவன்☀ said...

பார்க்கும் போதே ஜில்லுன்னு இருக்கு கேபிள் சங்கர் :)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... பெயர்கள் சரியாக அலைன் ஆகவில்லை அதைக் கொஞ்சம் சரி பாருங்க.

ஆஹா... நான் இல்லாமப் போயிட்டேனே..

இரும்புத்திரை said...

அண்ணா என்ன பதிவர் சந்திப்புல வடிவேலு வந்தாராம் சொல்லவே இல்ல

மேவி... said...

nalla irukku ji


unga photovai kannom???


நீங்க த்ரிஷா உடன் ரகசியமாய் டூயட் பாடின போட்டோ என்கிட்டே இருக்கே

ஹி ஹி ஹி ஹி ஹி ஹ

க.பாலாசி said...

பதிவர் சந்திப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். அந்த வாய்ப்பினை ஏற்படுத்தி வெற்றிகரமாக அதை அரங்கேற்றிய உங்களுக்கு பாராட்டுக்கள்...

அந்த இனிமையான சந்திப்பின் புகைப்படங்களையும் போட்டு எங்களையும் ரசிக்கவைத்த உங்களுக்கு எனது நன்றிகள்...

Anonymous said...

மழை நேரதுல ஒரு நல்ல சந்திப்பு, ஆனா என்ன நிறையா பேசமுடியாம போய்ருச்சு அது தான் ஒரே வருத்தம்

குசும்பன் said...

//எவனோ ஒருவன்,//

என்ன அண்ணாச்சி சந்திப்புக்கு வந்து போட்டோவுக்கு எல்லாம் போஸ் கொடுத்த ஒருவரை இப்படியா சொல்வது?:))))

ஹி ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சது நாராயண நாராயண!!!

குசும்பன் said...

//மேங்கங்கள் புடைசூழ முரளிகண்ணன்//

நல்லவேளை முரளிகண்ணன் என்று போட்டீங்க, நான் என்ன டா, உன்னைபோல் ஒருவன் கமல் மாதிரி இருக்கே, இவரு எங்க அங்க போனாருன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். மொட்டை மாடியில் நிற்கும் கமல் மாதிரியே இருக்காரு!

ஷண்முகப்ரியன் said...

சதித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்,ஷங்கர்.
பதிவர் சந்திப்பிற்கு முன்னால் இந்த சந்திப்பின் அமைப்பாளர்களின் சந்திப்பு அவசியம் என்று நினைக்கிறேன்.
மூன்று முறை இந்த சந்திப்பில் கலந்து கொண்டபின்னரும் உங்களைத்தவிர நான் வேறு யாரையும் சந்திக்க முடிய வில்லை என்பதுதான் எனது அனுபவம்.

சந்தியுங்கள், உண்மையாக.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னோட வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

குகன் said...

மழைனால என்னால வர முடியல்ல... :(

Romeoboy said...

அது என்ன "அடலேறு ராஜராஜன்" ???

Beski said...

இதையும் படிங்க...

http://www.yetho.com/2009/09/blog-post_28.html

Beski said...

ஹலோ குசும்பன்,

நம்ம பேரே அதான். அப்படியே நீங்க நாராயணா போட நெனச்சாலும் முடியாது. நீங்கள் சொல்லும் எல்லாமே குசும்பாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவுபடித்திக்கொள்கிறேன்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அண்ணே என்னையெல்லாம் ஆட்டத்துக்கு சேக்கமாட்டீங்களே

Cable சங்கர் said...

@வெங்கிராஜா
ஆட் செஞ்சாச்சு ராஜா

@திருமலை கந்தசாமி
நன்றிங்கோ

@ஜனா
உங்களைசந்தித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

@துளசி கோபால்
அடபாவமே.. உங்களை பார்காம மிஸ் பண்ணிட்டமே.. நாங்க..

@பித்தன்
வச்சிட்டா போச்சு

Cable சங்கர் said...

@அசோக்
அது சரி.. சந்திப்பு முடிஞ்ச வுடனே செய்யறத, முன்னாடியே செஞ்சிட்டீங்க

@கனகு
பரவாயில்லை.. அடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வாங்க

@எவனோ ஒருவன்
என்னது அது ஒரு மாதிரியா சிரிப்பு?

@கும்கி
ஏதோ ப்ராப்ளம் ரைட்டர்ல பாக்கிறேன். அட ஆமாமில்ல

@ஜானிவாக்கர்
அவரு லேட்டா வந்திருக்காரு

@கதியால்
நன்றி

Cable சங்கர் said...

@உலகநாதன்
விவாதமா.. மழை எப்ப நிக்கும்னுதான்.. வேற என்ன?

@ஜெட்லி
அடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வரவும்
@நான் ஆதவன்
நன்றி

2இராகவன் நைஜிரியா
பாத்துடறேன்ணே..

@அரவிந்த்
சொல்லவேயில்ல

@டம்பிமேவி
யோவ் அதை யார்கிட்டேயும் சொல்லாதேன்னு எவ்வளவு வாட்டி சொன்னேன்.?

Cable சங்கர் said...

@பாலாஜி
உங்கள் பாராட்டு பதிவர்கள் அனைவரையுமே சாரும்
நன்றி

@அடலேறு
ஆமாம் அடுத்த முறை நிச்சயம் வந்துருங்க

@குசும்பன்
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா

@குசும்பன்
:)

Cable சங்கர் said...

@ஷண்முகப்பிரியன்
சார்.. நீங்க்ள் சொல்வது புரிகிறது.. அதை சரிகட்ட வேறு ஒரு இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்

@ஸ்டார்ஜான்
நன்றி

@குகன்
பரவாயில்லை அடுத்த தடவை வந்துவிடவும்

@எவனோ ஒருவன்
படிச்சிட்டேன்

@கிறுக்கல் கிறுக்கன்
அப்படி எப்பவாவது சொன்னோமா?

Unknown said...

நல்ல தலைப்பு.ஈரத்தோடு ஈரமாக(சூட்டோடு சூடாக)போட்டப் பதிவுக்கு நன்றி.

Kartook said...

vasagargalai maranthutinga cable :)

Cable சங்கர் said...

/நல்ல தலைப்பு.ஈரத்தோடு ஈரமாக(சூட்டோடு சூடாக)போட்டப் பதிவுக்கு நன்றி//

வருகைக்கு நன்றி தலைவரே.. உங்க மொபைல் வேணும்..:)

Cable சங்கர் said...

/vasagargalai maranthutinga cable :)//

அதெப்படி மறக்க முடியும் நிலவன்.. மழை காரணமாய் நிறைய பேரை நினைவில் வைக்க முடியவில்லை
உங்க்ள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

ISR Selvakumar said...

அடுத்த சந்திப்பிலாவது கலந்து கொள்வேன் என்ற ஆசை மற்றும் நம்பிக்கையுடன், அடாது பெய்த மழையிலும் விடாது நடந்த சந்திப்புக்கு வாழ்த்துகள்.

ISR Selvakumar said...
This comment has been removed by the author.
ஸ்ரீ.கிருஷ்ணா said...

அத்தனை நண்பர்களையும் புதுசா பார்த்தால கொஞ்சம் மரதுடுசி அவங்க முகம் உங்க பதிவுல பார்த்து எல்லோரும் நினைவு படுத்த முடியுது நன்றி தல ....

அக்னி பார்வை said...

தல போட்டோ சூப்பர்,