Thottal Thodarum

Sep 25, 2009

திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும், அலெக்ஸா ரேங்கிங்கில் 93,714 கொடுத்த அன்பு சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ..


ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை..

ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது.

அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இயல்பான ஸ்லாப்ஸ்டிக் காமெடி.. குழந்தையின் தாய் தகப்பனை தேடி பிடிகக் அலைய, காணாமல் போனவள் ஒரு டுபாக்கூராய் இருக்க, அவள் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்க, ஒரு பக்கம் ஒரிஜினல் அப்பா அம்மா அலைய, அக்ரிமெண்ட் கிடைககாமல் மெளலி டென்ஷனாகி இருக்க, அவரிடம் உண்மையை சொல்லாமல் காரிய முடிக்க முயலும் ரூபா, அஜ்மல் ஜோடி, இதற்குள் அவர்களுக்குள் உண்டாகும் காதல். என்று ஒரே ஜாலிதான்.

அஜ்மலுக்கு மிக இயல்பாய் காமெடி வருகிறது.. பொறுப்பில்லாத ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். அதே போல் ரூபா மஞ்சரி. முதல் காட்சிகளில் பார்க்கும் போது சுமாராய் இருப்பவர், படம் முடியும் போது அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. அவ்வளவு இயல்பான கேர்ள் நெக்ஸ்ட் டோர் இம்பாக்ட்.. இவருக்கும் ரியாக்‌ஷன்கள் இயல்பாய் வந்து உட்காருகிறது.

மெளலி தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிருபித்து காட்டுகிறார். டென்ஷனான நேரட்த்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள், ஆளை தவிர பேரை எப்போதுமே மாற்றி, மாற்றி சொல்லும் அவரின் கேரக்டர் அருமை.

தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர்.. அருமையான பேக்ரவுண்ட் கலர்ஸ், துல்லியமான ஒளிப்பதிவு என்று கலக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் பாடல்கள் ஓகே. ஜில்லுனு வீசும் பூங்காற்று பாடல் மட்டும் நல்ல மெலடி.

கதை, திரைகதை,வசனம், எழுதி இயக்கி இருக்கும். ஜே.எஸ்.நந்தினிக்கு முதல் படம்.. பார்த்தால் தெரியவில்லை. மிக இயல்பான டயலாக்குகள், ஒன்லைனர்கள், ஆர்டிஸ்டுகளிடம் வேலை வாங்கியிருக்கும் பாங்கை பார்த்தால் நிச்சயம் தெரியவில்லை.. ஆரம்பித்த முதல் பத்து நிமிஷத்துக்கு வழக்கம் போல இரண்டு பேருக்கான ஈகோ க்ளாஷ் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, குழந்தையை கொண்டு வந்து திருப்பத்தை ஏற்படுத்தி, அதற்கப்புறம் ஸ்பீடுதான்.

ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை தொங்கினாலும் பின்னால் வரும் சில காட்சிகள் அதை ஈடு கொடுத்து சரி செய்து விடுகிறார். குழந்தை திருடி நர்ஸை தர்ட் டிகிரி மெத்தடில் விசாரிக்கும் காட்சி செம ரகளை.. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமெடி கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டார். அந்த குழந்தைக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள் .. ஸோ... ஸோ.. ஸ்வீட்..

திரு திரு துறு..துறு...- Go For It…

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

38 comments:

ஹாலிவுட் பாலா said...

ஆஹா... டிவிடி.. வரட்டும்!!! :) :)

இப்படி பேரை மாத்தி மாத்தி கூப்பிடுறது... தெனாலி-ல கூட வருதே!

Cable Sankar said...

/ஆஹா... டிவிடி.. வரட்டும்!!! :) :)

இப்படி பேரை மாத்தி மாத்தி கூப்பிடுறது... தெனாலி-ல கூட வருதே!
//

ஆமாம்பாலா.. பட் இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் பீல் குட் மூவி..

பிரியமுடன்...வசந்த் said...

lady directora சார்?

நல்ல விமர்சனம்....

பிரியமுடன்...வசந்த் said...

தமிழிஷ் ஓட்டுபொட்டிய காணோமே...

T.V.Radhakrishnan said...

நல்ல விமர்சனம்....

எவனோ ஒருவன் said...

நன்றி, பாத்துடலாம்.

கடைசி வரை அந்த குழந்தை படத்தைப் போடவே இல்லையே?

ஹாலிவுட் பாலா said...

////
தமிழிஷ் ஓட்டுபொட்டிய காணோமே...
//////////

சங்கர்.. இன்னுமா இது சரியாகலை???

ஃப்ரீயா இருக்கும்போது buzz பண்ணுங்க..!!

gulf-tamilan said...

ம்!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

படத்த பாத்துட்டு யாரும் திரு திருன்னு முழிக்காம இருந்தா சரிதான் ...

இராகவன் நைஜிரியா said...

உங்க விமர்சனத்தைப் படிச்சுட்டு ஒரு பெரு மூச்சுதான் விட முடியுது. சரி அடுத்த முறை ஊருக்கு வரும்போது இந்த படத்தின் டிவிடியும் வேண்டும்.

kanagu said...

apave nenachen... indha padam konjam nalla irukkum.. athaye solliteenga.. seekram paakanum anna :))

Behindwoods la indha padathayum kilichitanunga :(( enna than ethirpaakuranga nu theriyla??

paradise said...

I like your blog.
Very unique and fantastic pictures.
Wow...

Please visit:

http://baliromanticparadise.blogspot.com

Have a great time.
Keep blogging.

VISA said...

பறவாயில்லையே கதை நல்லா இருக்கே. ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு கதை கேட்டு.கூடவே விமர்சனமும் ஜெட் வேகத்தில் செம ஸ்பீடு. தூள் தலை.

செந்தில் நாதன் said...

படம் துறு..துறு..னு இருக்கும் போல.. பார்த்துருவோம்!!! நன்றி கேபிள்!!

ஜெட்லி said...

அப்போ பார்த்துருவோம்.....

மங்களூர் சிவா said...

கொஞ்ச நாளா நிறைய படம், நல்லா பாக்கிற மாதிரியே வருதே. நல்லதுக்கில்லையே
:))))))))))))))))

பார்த்துடுவோம்.

தராசு said...

//@Cable Sankar, 12:31 AM

/ஆஹா... டிவிடி.. வரட்டும்!!!

இப்படி பேரை மாத்தி மாத்தி கூப்பிடுறது... தெனாலி-ல கூட வருதே!
//

ஆமாம்பாலா.. பட் இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் பீல் குட் மூவி..//

அப்ப எங்க உலக நாயகன் நடிச்ச தெனாலி, "Feel bad movie" யா???

எப்பூடி, கோத்து விட்டுட்டம்ல...

ராஜன் said...

படம் பார்த்துருவோம்..... நன்றி கேபிள்...!!

butterfly Surya said...

குட். உங்களுக்கும் தான்.

பட்டிக்காட்டான்.. said...

//.. அப்ப எங்க உலக நாயகன் நடிச்ச தெனாலி, "Feel bad movie" யா???

எப்பூடி, கோத்து விட்டுட்டம்ல...//

மறுபடியும் முதல்ல இருந்தா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

மெட்ராஸ்காரன் said...

Sankar Sir,

You said 3 movies shot in Red 1 camera..I know Unnai Pol Oruvan is one and this movie is the other one..Which one is the second?

ராஜராஜன் said...

நேத்து நான் தியேட்டர் வரைக்கும் போய்டேன் .. அப்பறம் உங்க நியாபகம் வந்துச்சு இன்னைக்கு எப்படியும் உங்க விமர்சனம் வந்துடும் அத படிச்சிட்டு அப்பறம் படம் பார்க்கலாம் என்று முடிவு பண்ணி வந்துட்டேன்.

ரைட் நாளைக்கு போய்டுறேன்.

pappu said...

நல்லாருக்கும்னு எதிர்பார்த்தேன். கொஞ்சம் காமெடி, லவ் மூவின்னு நெனச்சா, குழந்தைய கொண்டு வந்து வித்தியாசமா ஆயிடுச்சே! குட், பாத்துருவோம்!

பின்னோக்கி said...

http://nalayanayagan.blogspot.com/2009/09/blog-post_6102.html

:-)))

Cable Sankar said...

@பிரியமுடன் வசந்த
ஆமாம்.. நன்றி எங்க ரொமப் நாளா ஆளையே காணம்?

@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்

@எவனோ ஒருவன்
குழந்தை படத்தை கேட்குற ஆளை பாரு..:)

Cable Sankar said...

@ஹாலிவுட் பாலா
ஆமாம் பாலா இன்னும் சரியாகல.. நிச்சயமா கூப்பிடறேன்

@கல்ப் டமிலன்
நல்லாருக்கா..இல்லையா..?

@ஸ்டார்ஜான்
உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்குதுங்க

@இராகவன் நைஜீரியா
வாங்கி வச்சிட்டா போவுது..இதோட மூணாவது டிவிடி

@கனகு
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை, எதிர்பார்ப்புகள்

Cable Sankar said...

@பாரடைஸ்
நன்றி பாரடைஸ்

@விசா
நன்றி. பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க

@ஜெட்லி
நிச்சயம்

@மங்களூர் சிவா
அதுக்குள்ள கண் போடாதீங்க..

Cable Sankar said...

@தராசு..
ஊர்ல இருந்தாலும் வில்லங்கம் செய்யறதுக்கு உக்காந்து யோசிக்கிறாய்ங்கபா

@ராஜன்
நன்றி

@சூர்யா
நன்றி

@பட்டிக்காட்டான்
பாருங்க..அந்தாளை..

Cable Sankar said...

@மெட்ராஸ்காரன்
முதல்படம் அச்சமுண்டு, அச்சமுண்டு, உன்னை போல் ஒருவன், திரு, திரு,துறுதுறு..

@ராஜராஜன்
போய் பாருங்க

@பப்பு
பாத்திட்டு சொல்லுங்க

@பின்னோக்கி
பாத்தேன் பின்னோக்கி.. செம காமெடி.. இதுக்கு அவரு என் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கலாம்.. செம காமெடி..

அக்னி பார்வை said...

vazhthukkal

குசும்பன் said...

//ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். //

:))))))))))) மாத்தி சொல்லாம இருந்தீங்களே?:))

யோ வாய்ஸ் (யோகா) said...

நீங்களே சொல்லீட்டீங்க இனி கட்டாயம் பார்த்திட வேண்டியது தான்..

கோவி.கண்ணன் said...

//நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும், அலெக்ஸா ரேங்கிங்கில் 93,714
//

வாழ்த்துகள் தல

Truth said...

நல்லாருக்கும் போல இருக்கே... பாத்திட வேண்டியது தான்.

Cable Sankar said...

@அக்னிபார்வை
நன்றி
@குசும்பன்

நல்ல வேளை

@யோ வாய்ஸ்
நிச்சயம்பாருங்க

@கோவி.கண்ணன்
நன்றி அண்ணே

@ட்ரூத்
ஆமாம்பாருங்க

கள்வன் said...

//தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்..

1.UPO
2.TTTT (Thiru thiru, thuru thuru)
3. Edhu boss????

kumar said...

1. அச்சமுண்டு அச்சமுண்டு
2. உன்னை போல் ஒருவன்
3. திரு திரு துறு துறு

selvakumar said...

i also liked this movie....but i felt still this movie can be taken in much better way..thy can give more importance to child character and reducing the unwanted romantic scenes ....