Thottal Thodarum

Sep 29, 2009

கொத்து பரோட்டா -29/09/09

நேற்று சன் டிவியிலும், ஜீதமிழ் சேனலிலும் சுப்ரமணீயபுரம் படத்தை ஒளிபரப்பினார்கள். எனக்கு தெரிந்த தகவல்களின்படி அந்த படத்தின் உரிமை ஜீதமிழ் சேனலே சுமார்45 லட்சத்துக்கு வாங்கியதாய் சொன்னார்கள். ஆனால் எப்படி ஒரே நாளில் அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் ஒளிபரப்ப முடியும்? இதன் பின்னால் உள்ள உள்குத்து என்ன என்றே புரியவில்லை.. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று விளம்பர படுத்தும் காலம் போய், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் இரண்டு சேனல்களில் என்று விளம்பர படுத்தும் காலம் போலிருக்கிறது.
*************************************************************************************
செவிக்கினிமை
ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்..

அதே போல் அவரின் இளவல் யுவனின் இசையில் “யோகி” படத்தில் வரும் தீம் மீயூசிக் இசை தொகுப்பில் வரும் சாரங்கி.. ம்ம்ம்.. நெகிழ வைக்கிறது.. ஸ்பெல்பவுண்ட்..
************************************************************************************
சாப்பாட்டு கடை
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..
*************************************************************************************
குறும்படம்
இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தேன். நண்பர் பதிவர் கே.ஆர்.பி.செந்திலும் இதை ரிகமெண்ட் செய்தார்.. மிக வித்யாசமாய் உருவாக்கப்பட்ட படம்.. பாருங்களேன்.

*************************************************************************************
ஏஜோக்
ஒரு பெண் அவளது காதலனுடன் செக்ஸ் முடிந்து படுத்திருக்க, அவன் அவளது கணவனது நெருங்கிய நண்பன். அப்போது போன் அடிக்க, பெண் போனை எடுத்து பேசுகிறாள்.. “ஓ...அப்படியா..?” “நல்லது” “அப்ப நலலா சந்தோஷமா எஞாய் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க்” “ நைட் ஆகுமா” “ஓகே பரவாயில்லை” “நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க” என்று தொடந்து பேசிவிட்டு போனை வைத்து விட ஆர்வம் தாங்காமல் காதலன், “யார் போன்ல?” என்று கேட்க, அவள் “ வேறு யாருமில்லை. என் புருஷந்தான்.. நீங்களும் அவரும் ஜாலியா மகாபலிபுரம் பீச்சில குளிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு. அதான் ஜாலியா இருங்கன்னு சொன்னேன்” என்றாள்.

ஜோக்
நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருக்க, அவர் வீட்டுக்கு சென்றான். விருந்தளித்தவர் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவியை, ‘ஹனி” “டியர்’ “ஸ்வீட் ஹார்ட்” என்று செல்லம் கொஞ்சியே அழைப்பதை பார்த்துவிட்டு.. “ திருமணமாகி இவ்வளவு வருஷம் கழித்தும் இவ்வளவு அன்போடு, செல்லமாய் அழைக்கிறீர்களே..? அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆச்சர்யபட, “அவளுடய பேர் மறந்துவிட்டது் அதனால்தான் அப்படி கூப்பிடுகிறேன் என்றார்.
*************************************************************************************
இன்று ஒரு தகவல்
ஊர் இருக்கும், ஆனா வீடு இருக்காது, கடல் இருக்கும் ஆனா தண்ணியிருக்காது அது என்ன..?
வேர்ல்ட் மேப்

ங்கொய்யால.. யார்ரா அவன்..?
*************************************************************************************
இந்த வார கவிதை..???
காதல் v/s நட்பு

காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!
*************************************************************************************

டிஸ்கி: நானும் ஒரு கவிதை உருப்படியா எழுதுற வரைக்கும் இந்த இம்சை தொடரும்..

Post a Comment

57 comments:

Sukumar Swaminathan said...

அந்த குறும்படம் சான்ஸே இல்லை... அட்டகாசம் போங்க....

Muthukumar said...

கவிதை..???

Jana said...

கொத்துபரோட்டா அருமை..."எங்கே நீ சென்றாலும்" உண்மையில் அருமை....அப்புறம் என்பதிவுப்பக்கம் ஒருஎட்டு வாங்க, உங்களுக்கு தெரிந்த ஒருவர் அங்கே உள்ளார்...

அமர பாரதி said...

கொத்து அருமை. "ஏ" ஜோக் தான் டாப்.

Muthukumar said...

wow!!! short film super!!!

ராஜராஜன் said...

என்ன பாஸ் வர வர கொத்துபரோட்டா பெருசாகிடே போகுது..

கவிதை ??? விடுங்க நான் அந்த கான்செப்ட்க்கு இனி வரமாட்டேன் .. ஏன்னா நானும் கவிதை எழுத அரமிசுட்டேன்ல ....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

\\\ ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்.. ///

ராஜா ராஜா தான் ...

குடுகுடுப்பை said...

சாப்பாட்டு கடை
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..//

சாப்பாட்டுக்கு மட்டும் தனியா ஒரு கொத்து புரோட்டா போடுங்க சார். சாப்பிடுவது மட்டுமே என் வாழ்வின் நோக்கம், படிக்கும்போதே ஆள இழுக்குது.

pappu said...

ரொம்ப சாப்பாடப் பத்தி போடாதீங்க சார். ராத்திரி நேரம் எச்சி ஊறுனா எங்க போய் நிக்குறது! போய் தண்ணி குடிச்சிட்டு வந்துதான் பின்னூட்டம் போட வேண்டியதா இருக்கு!

pappu said...

ஏற்கனவே போட்ட படம் தான இது! ஏன் சங்கர் கவிதயெல்லாம் எழுதி கொல்லுறீங்க! ச்சே... ரொம்ப கெட்டு போயிட்டீங்க! கவித எழுதாம இருக்குறதால உங்கள காமிச்சு நாங்களாம் எஸ்கேப் ஆயிட்டிருந்தோம்! இப்ப நீங்களுமா? இந்த துரோகத்தை எதிர்பார்க்கல!

இராகவன் நைஜிரியா said...

பரோட்டா ரொம்ப பிரமாதம் மாஸ்டர்.

ஏ ஜோக்...ம்.. அட்ரா சக்கை.

பிரசன்னா said...

>> "கண்ணுக்குள்ளே" - இந்த படத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னால அறிமுகப்படலம் நடந்ததா ஞாபகம்.. எங்க விமர்சனத்தையே காணும்? படம் ஊத்திக்கிச்சா?

>> சென்னை வந்தப்போ "ஒரு சோறு" கடைல நானும் சாப்பிட்டிருக்கேன்.. நல்லா இருக்கும்..
அங்க இடிஆப்பம் கூட சிக்கன் மிக்ஸ் பண்ணி நல்லா spicy-ஆ ஒரு ஐட்டம் கிடைக்கும்.. பேர் ஞாபகம் இல்ல.. அடுத்த தடவ போனா சாப்பிட்டு பாருங்க..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது..

5 நிமிஷத்துல ஆர்டர் பண்ணினது வந்துதுன்னு சொன்னது பொய்தானே.. அங்க ரொம்ப லேட் ஆகும் சங்கர்..

செ.சரவணக்குமார் said...

இப்ப சவுதியில நைட் 12:30 மணி. ஒரு மாசமா நைட் டூட்டி போட்டு கொல்றாய்ங்க ஆஃபிஸ்ல. ஜோக்ஸ் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சதுல பக்கத்து கேபின்ல இருந்தவங்க எல்லாம் அலறி அடிச்சு ஓடிவந்து என்னாச்சுன்னு கலவரத்தோட கேட்டுட்டு போறாங்க. அசடு வழியவேண்டியதாப்போச்சு. கலக்கல் கேபிள் சார். இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.

T.V.Radhakrishnan said...

அருமை

ஹாலிவுட் பாலா said...

சங்கர்...

அந்த சுப்ரமணியபுரம் மேட்டரை என்ன ரீஸன்னு நம்ம ‘வெடிகுண்டு வெங்கட்’ விலாவாரியா எழுதியிருக்கார் பாருங்க.

http://vedigundu.blogspot.com/2009/09/blog-post_26.html

ஜெட்லி said...

பரோட்டா சூப்பர் அண்ணே,,,,

பித்தன் said...

கொத்துபரேட்டா சூப்பர், ஆமா அந்த ஏ ஜோக்ல அந்த ஆளு மனைவி போன் செய்து இந்த அம்மா கூட இருக்கற வரிகளை விட்டுவிட்டிர்கள்.

இம்ம் யாருப்பா அது இரண்டு கொத்தும் ஒரு கப் சால்னாவும் கொண்டா. அப்பிடியே ஒரு வாட்டர் பாக்கெட்(எதுக்கு)

ஷண்முகப்ரியன் said...

வாழ்க்கையை அதனுடைய அத்தனை பரிமாணங்களிலும் ரசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசனை தொடரட்டும்.பெருகட்டும்,ஷங்கர்.

என். உலகநாதன் said...

கேபிள்,

அந்த குறும்படத்துல, அவன் தலையை விட்டு உள்ளே நுழைந்ததும் பார்த்தால் போலிஸ் ஸ்டேசன்.

எங்கேயோ படித்ததாக நினைவு.

தண்டோரா ...... said...

ஒரு சோறு உண்மையில் சூப்பர்.. நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்..கொத்து புரோட்டா காரம் கம்மி..ஏன்?

தராசு said...

புரோட்டா காரம் குறைவுதான்.

கவுஜ ???!!!!!!!

கலையரசன் said...

அது ஏ ஜோக்கு இல்லண்ணே! இசட் ஜோக்கு!!

தண்டோராவை வழிமொழிகிறேன்....

கிறுக்கல் கிறுக்கன் said...

கொத்து பரோட்டா சூப்ப்ப்ப்ப்பர்

யோ வாய்ஸ் (யோகா) said...

கவிச்சக்கரவர்த்தி, கவிராயர், கவி................. கேபிள் சங்கர் வாழ்க

(.....................க்குள் எது வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம்)

butterfly Surya said...

அளவான காரம். நிறைந்த சுவை. கொத்து..கும்முன்னு இருக்கு..

க.பாலாஜி said...

ரெண்டு ஜோக்குமே நல்லாருக்கு தல.

//காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!//

காதலியை விட
அவள் தங்கை அழகு
என்கிறார்கள்.
அட அறிவாளிகளே...
அவள் தங்கை என்றாலே
இன்னொரு காதலிதானே...

பின்னோக்கி said...

அண்ணன் கேபிள் சங்கருக்கு இந்த இளைய பதிவர் குடுக்கும் ஒரு சின்ன விருது

”திருகேபிள்சங்கரகூடப்பராசப்பகவிராயர்”

பயமில்லாதவன் said...

Very Nice

எவனோ ஒருவன் said...

ஒரு சோறு பற்றி இன்றிரவுதான் பதிவிட வேண்டுமென்றிருந்தேன், படங்கள் கூடத் தயார்... ஆனால் முந்தி விட்டீர்கள்.

கொத்து அருமை.
(ஏ ஜோக் எல்லாம் பழசா இருக்குற மாதிரியே தோனுது, ஏதாவது புதுசா புடிங்க ஜி)

D.R.Ashok said...

சுவை.

பாலாஜி கவித சூப்பரு.

இப்படி நீங்க கவித எழுதி மக்கள பயமுறுத்னா.. அப்புறம் நாங்க சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சுடுவோம் அம்புடுதேன்.

டம்பி மேவீ said...

thala kavithai enakku konjam puriyala

ராஜா | KVR said...

சங்கர் சார், விடுமுறைக்கு சென்னை வரும்போது ஒருசோறு உணவகத்தைப் பார்த்திருக்கேன், ஆனா டேஸ்ட் எப்படி இருக்குமோன்னு சந்தேகத்திலே உள்ளே போனதில்லை. சொல்லிட்டிங்கள்ல நம்ம ஸ்பெஷல் சுக்காவை டேஸ்ட் பண்ணிடுறேன். ஆட்டுக்கால் சூப் & மூளை மசாலா எங்கே நல்லா இருக்கும்ன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்

அபுஅஃப்ஸர் said...

குறும்படம் டாப்

ஆசை மனிதனை எந்தளவிற்கு கொண்டுசெல்கிறது என்பது....

sivakumar said...

Film Super Sankar . ASAI then "The Block Hole" .

கே.ஆர்.பி.செந்தில் said...

திரு. சங்கர் அவர்களுக்கு,
ஏற்கனவே பார்த்திருந்தாலும் நல்ல படைப்பு என்பதற்காக மீண்டும் பதிவேற்றிய உங்களுக்கு என் நன்றிகள்..

கதிர் - ஈரோடு said...

குறும் படம் அருமை

நன்றி

Varadaradjalou .P said...

இந்த குறும்படத்தை முன்பே பார்த்திருக்கிறேன் (கிட்டதட்ட ஒரு வருடம் முன்பு).

சூப்பர் படம்

கொத்து பரோட்டா ஓ. கே.

ஜீவன் said...

குறும்படம் அருமை ..! நன்றி ..!

சந்ரு said...

கொத்து பரோட்டா சுவை அதிகரித்துக்கொண்டே வருகின்றது...

Guru said...

Cable Sir,
unga pokkisham cheranukuu eluthina thirantha madal dinamani kadhiril velivandhirukkirathu vaazthukkal
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Kadhir&artid=129237,

எவனோ ஒருவன் said...

கேபிள்ஜி, இதோ நீங்க சொன்ன ஒரு சோறு...

http://www.yetho.com/2009/09/blog-post_29.html

Cable Sankar said...

@sukumar

பிடிச்சிருந்தா சரி..

@முத்துகுமார்

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நிறுத்திடுவேனா..? அவஙக்ள நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்

@ஜனா
பார்த்துட்டேன் ஜனா

2அமர பாரதி
நன்றி

@முத்து குமார்
நன்றி

@ராஜராஜன்
அப்படியா..
ஏதோ என்னை பார்த்து உஙக்ளுக்கு கவிதை எழுத ஆரம்பிக்கனூம்னு தோணிச்சே..:)

Cable Sankar said...

@ஸ்டார்ஜான்
ஆமாம் ஸ்டா

@குடுகுடுப்பை

அவ்வளவுதான் நம்மை ஓச்சுருவாஙக்

@பபபு

வாரத்துக்கு ஒண்ணு போட்டா அதுவே ரொம்பவா..

@பபபு

இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா..?

@

Cable Sankar said...

@இராகவன் நைஜிரிய
நன்றிண்ணே

@கண்ணுக்குள்ளே

என்ன எழுதறதுன்னே தெரியல..

ட்ரை பண்ணுறேன்.. 5 நிமிஷத்துல சாதாரணமா வந்தது கிடையாது.. அன்னைக்கு வந்திருச்சு அதனாலதான் டைம் போட்டேன்

@சரவணகுமார்
ரொம்ப நன்றி
@ராதாகிருஷ்ணன்

நன்றி

Cable Sankar said...

@ஹாலிவுட் பாலா
படிச்சிட்டேன். எனக்கும் தெரியும், பதிவா போடணும்னு நினைச்சேன்.. அதுக்குள்ள முந்திட்டாரு. வெடிகுண்டு

செந்தில் நாதன் said...

parotta super...

Cable Sankar said...

@ஜெட்லி
நன்றி

@பித்தன்
திருப்தியா இருந்திச்சா

@ஷண்முகப்பிரியன்

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்

@உலக நாதன்
உங்க கதையிலயா.. தலைவரே..?

Cable Sankar said...

@தண்டோரா

ஆமாம். அப்படியா சொல்றீங்க..?

@தராசு
தண்டோராவும் அதைத்தான் சொல்றாரு..

@கலையரசன்
நீஙக்ளுமா

@கிறுக்கல் கிறுக்கன்
நன்றி

@யோ
ஆனாலும் என்னை ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. ஏதோ நீஙக் ஆசைப்பட்டு கொடுத்ததுனால இண்டஹ் படட்டதை வாங்கிக்கிறேன்

Cable Sankar said...

@பட்டர்ப்ளை சூர்யா
ந்ன்றி

@பாலாஜி

பாருஙக்.. என் கவிதையை??? படிச்சிட்டு ஒரு கவிதை வருதுன்னா.. அதுக்கு என்ன அர்த்தம்.. அவ்வளவு நல்ல கவிதை நம்முதுன்னு..தானே

:)

@பின்னோக்கி
நீங்களும் என்னை ரொம்பத்தான் பாராட்டுறீங்க..:)

2பயமில்லாத்வன்

நன்றி

@எவனோ ஒருவன்
ஜோக் பழசா இருக்கா.. கைவசம் இருந்தா கொடுத்து உதவறது..?:)

@அசோக்
நன்றி
எல்லாம் நம்ம கவிதை இன்ஸ்பிரேஷந்தான்..?:)
ரைட்டு.. ஸ்டார்ட் மீசிக்

Cable Sankar said...

@ராஜா
இந்த முறை வரும் போது கண்டிப்பா மறக்காம அங்க போங்க அங்க போகும்போதும் எனக்கும் போன் பண்ணீ கூப்ட்டு போங்க.. கண்டிப்பா எழுதறேன்/

Cable Sankar said...

@டம்பிமேவி

என்னது புரியலையா.? அப்ப நான் பின்நவீனத்துவ கவிதை கூட எழுத ஆரம்பிச்சிட்டேனா..?

@அபுஅஃப்ஸ்ர்
நன்றி

Cable Sankar said...

@சிவகுமார்
ஆமாம்..
@கே.ஆர்.பி. செந்தில்
உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. நீங்கள் ஞாபக படுத்தாவிட்டால் எனக்குள் ஸ்டைரைக் ஆகியிருக்காது.
@வரதராஜுலு

நன்றி

@ஜீவன்
மிக்க நன்றி தலைவரே

@சந்ரு
மிக்க நன்றி

@குரு

தலைவரே அந்த லிங்கில் ஏதும் இல்லியே.? உங்களிடம் காபி ஏதாவது இருக்கிறதா.
@எவனோ ஒருவன்

பார்த்துட்டேன்
@செந்தில்நாதன்

நன்றி செந்தில்

Krishnan said...

ஒரு சோறு நல்ல உணவகமா ?
பஞ்ச காலத்தில் கூட அவிங்க்ய போடுற சோத்த விட நிறையவும் சுவையாவும் கிடைக்கும். சென்னைக்காரங்களை சுலபமா ஏமாத்தலாம் போல இருக்கு.
இதுக்கு முன்னாடி நிசமாவே நல்ல இருக்குற அண்ணா நகர் தலப்பாக்கட்டி பிரியாணிய புளிசோறுன்னு சொன்னீங்க. உங்கள் பதிவை படிப்பவனா ஒன்னு சொல்றேன். தினம் காலையில் பல் தேய்க்கும் பொழுது நாக்க நல்லா வழிங்க. அப்போதான் நல்ல சுவை தெரியும்.

மங்களூர் சிவா said...

குறும்படம் : பேராசை பெருநஷ்டம்
:)

Cable Sankar said...

/ஒரு சோறு நல்ல உணவகமா ?
பஞ்ச காலத்தில் கூட அவிங்க்ய போடுற சோத்த விட நிறையவும் சுவையாவும் கிடைக்கும். சென்னைக்காரங்களை சுலபமா ஏமாத்தலாம் போல இருக்கு.
இதுக்கு முன்னாடி நிசமாவே நல்ல இருக்குற அண்ணா நகர் தலப்பாக்கட்டி பிரியாணிய புளிசோறுன்னு சொன்னீங்க. உங்கள் பதிவை படிப்பவனா ஒன்னு சொல்றேன். தினம் காலையில் பல் தேய்க்கும் பொழுது நாக்க நல்லா வழிங்க. அப்போதான் நல்ல சுவை தெரியும்.
///

கிருஷ்ணன் பஞ்ச காலத்தில் நீங்கள் எவ்வளவு சாப்பிடுவீர்க்ள் என்று எனக்கும் தெரியாது.. எனக்கு அது போதும்.. அவனவன் சுவை அவனவனுக்கு. கிருஷ்ணன்.. பசில சாப்டா ருசி அறியாதுன்னு சொல்வாங்க.. பின்னூட்டத்திலேயே பஞ்சத்தை பத்தி பேசற் உங்களுக்கு ருசி பத்தி வேற ஒரு அபிப்ராயம் இருந்திச்சின்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..:{

Cable Sankar said...

ந்ன்றி சிவா

Krishnan said...

//கிருஷ்ணன் பஞ்ச காலத்தில் நீங்கள் எவ்வளவு சாப்பிடுவீர்க்ள் என்று எனக்கும் தெரியாது.. எனக்கு அது போதும்.. அவனவன் சுவை அவனவனுக்கு. கிருஷ்ணன்.. பசில சாப்டா ருசி அறியாதுன்னு சொல்வாங்க.. பின்னூட்டத்திலேயே பஞ்சத்தை பத்தி பேசற் உங்களுக்கு ருசி பத்தி வேற ஒரு அபிப்ராயம் இருந்திச்சின்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..:{//

கேபிள் சார் நான் சும்மனாச்சும் கருத்து சொன்னேன். நீங்க அதை சீரியசா எடுத்துக்கிட்டீங்களா ? மன்னிக்கவும். உங்களை மாதிரி நக்கல் பண்ண முயற்சி பண்ணி பல்பு வாங்கிட்டேன்.