Thottal Thodarum

Sep 16, 2009

கன்னி குறும்பட முயற்சி..??

குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டால், சுகர் வந்த ஆளின் இனிப்பு ஆசை போல், எதையாவது பார்த்துவிட்டால், படித்துவிட்டால் கை அரிக்க ஆரம்பித்துவிடும், அதுவும் கையில் கேமரா ஓசியில் கிடைத்துவிட்டால் என் மாதிரியான ஆட்களை கையில் பிடிக்கவே முடியாது. ப்ரொபஷனலாய் படம் எடுக்க குறைந்த பட்சம் சில, பல ஆயிரங்கள் ஆகும் அந்த காலத்தில்,2007 என்று நினைக்கிறேன். மிக குறைந்த செலவில் நிறைந்த இன்பம் போல சுமார் 250 ரூபாயில் எடுக்கப்பட்டு, பல நூறு கோடிகள் வசூலை அள்ளிய படம்..:)

இந்த படத்திற்கு பிறகு மேலும் இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும், இந்த முதல் முயற்சி ஆல் இன் ஆல் அழகு ராஜாவாய் இருந்து கொண்டு படமாய் வருவதற்குள் நுரை தள்ளிவிட்டது. அந்த அனுபவத்தை பகிரவே இந்த பதிவு.

நமக்கும் கவிதைக்கும் சில நூறு மைல்கள் தூரம் என்றாலும், ஒரு சில பேரினுடய கவிதை வரிகள் மட்டும் மறக்கவே மறக்காது. அப்படி என்னுள் மறக்கவே முடியாத வரிகள் தான் பாலகுமாரனின் இந்த கவிதை வரிகள்.

என் நண்பர் ஒருவர் உள்ளங்கையளவு ஒரு சின்ன பொட்டியை எடுத்து வந்து, இதில் வீடியோ எடுக்கலாம் என்றவுடன், உள்ளிருக்கும் குதிரை பிளிறி கிளம்ப, “வாயேன் ஒரு குறும்படம் எடுத்து பார்ப்போம’ என்று கேமராவை ஆட்டையை போட, நண்பர்.. ஆடி மாசம் என்பதை மறந்து போய், “ஒரு கல்யாணம் இருக்கு அதை கவர் பண்ண்னும்” என்று வீடியோ கேமரா மேன் ரேஞ்சுக்கு பீல் பண்ணி எஸ்கேப் ஆக, ‘ சரி.. என்னைக்கு கேமரா ஃப்ரி என்று சொல்லுங்க அன்னைக்கு ஷூட்டிங் வச்சுப்போம் என்று விடாத் கருப்பு போல தொடர, ஒரு ஞாயிறை பிக்ஸ் செய்து கொண்டு எஸ்கேப் ஆனார்.

அந்த ஞாயிறுக்குள் குறைந்த பட்சம் ஒரு 30 போனாவது பண்ணியிருப்பேன். ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், “ஸ்க்ரிப்ட் ரெடி ஆயிட்டே இருக்கு” “ஒன் லைன் புல்லா ரெடியாயிருச்சு” ‘ரொம்பவே நல்லா வந்திருக்கு” என்று ஒரே விஷயத்தை வேறு வேறு விதமாய் சொல்லி பில்டப்பை ஏற்றி கொண்டிருக்க, அந்த சுப யோக சுப தினமும் வந்தது,

என் காருக்கு 5 லிட்டர் கேஸை நிரப்பிக் கொண்டு, குறும்படம் என்றதும் கேமராமேன்களின் லொகேஷனான, மாஹாபலிபுரம் பீச்சு காரை விட, ஒரு நண்பன் ஒருவனை ஹீரோ என்று பில்டப் பண்ணி அவனையும் கூட காரில் ஏற்றியாகிவிட்டது. எனக்கு டயலாக் இருக்கா என்று நிமிஷத்துக்கு ஒரு முறை பின் சீட்டிலிருந்து கேட்டு கொண்டே வந்தான். ஒரு உதவியாளர். பக்கத்தில் கையடக்க கேமராவை எடுத்துவரும் கேமரா ஓனர்.. முன் பக்க சீட்டில் உட்கார வைத்து ஏசி ப்ளோவையெல்லாம் அவர் பக்கம் திருப்பி ரொம்ப குளிர்ந்து போய், சில்லிட்டிருக்க, லொகேஷனும் வந்தது..

கேமராவை அவரிடமிருந்து வாங்கியதுதான்.. அதற்கு அப்புறம்.. அவரை மனுஷனாய் கூட மதிக்கவில்லை.. சும்மா வளைத்து வளைத்து, நடக்க, நிற்க, உட்கார, பராக்கு பார்க்க, என்று சுட்டு தள்ளிக் கொண்டிருந்த போது, மிகப் பெரிய பிரச்சனை, கேமராவின் பேட்டரி காலி ஆகிவிட, அதுதான் காரணமா என்று அறிய அந்த கையடக்க கேமராவை நான் பிரித்தாய, அதை பார்த்து கேமரா ஓனருக்கு கண்ணில் ரத்தம் வடிந்தது. கடைசியில் பாட்டரிதான் பிரச்சனை என்று முடிவு செய்து, பாட்டரி போட்டால் வேலை செய்யவிலலை. வேறு எந்தவிதமான் பேட்டரியும், அதற்கு செட் ஆகாததால், வேறு வழியில்லாமல் சூட்டிங்கை, பேக் அப் செய்து கொண்டு, வ்ந்துவிட்டோம்..

நான் படமெடுக்க முயற்சி செய்த பில்டப்பை பார்த்து நெகிழ்ந்துபோன, கேமரா ஓனர், வேணும்னா நாளைக்கு கேமரா தர்றேன் ஆனா மகாபலிபுரம் எல்லாம் வர முடியாது.. பெசண்ட் நகர் வரைக்கும் வேணா கேமரா எடுத்துட்டு வருவேன் என்று சொல்ல. கண்டின்யூட்டி பற்றி கவலை படாமல் எடுத்து முடித்துவிட்டு.. நானே எடிட்டிங், கட்டிங், ஒட்டிங், டப்பிங், மிக்ஸிங், பார்பது உட்பட என்று விஜய டி.ராஜேந்திரை போல அசுர உழைப்பு, உழைத்து இந்த வீடியோவை உருவாக்கினேன்.(ம்க்கும்.. எடுத்த லட்சணத்தை பார்த்தா தெரிய போவுதுனு நீங்க மொனகறது கேட்குது)

இந்த படத்திற்கு வரும் எல்லா புகழும் கேமரா கொடுத்த என் ந்ண்பனுக்கே.. இப்ப கூட ஊர்லேர்ந்து வந்தா கேட்பான் “ என்னடா என் கேமராவில எடுத்த படத்துக்கு எப்படி ரெஸ்பான்சுன்னு..” அதனாலதான் எல்லா புகழும் அவனுக்கே..



டிஸ்கி
இது என்னுடய முதல் அன்ப்ரொபஷனல் முயற்சி.. ஸோ.. எல்லா கேனத்தனங்களும்
இருக்கும்.. இதற்கு பிறகு எடுத்த படங்கள் மட்டும் ப்ரொபஷனாலா எடுத்தியான்னு கேட்குறது எனக்கு தெரியுது.. ஹீ..ஹீ.ஹீ

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

38 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

music fantastic relation with film

தருமி said...

நாளையேனும் சீக்கிரம் வா ..

இருவரும் சேர்ந்து
அதைப் போலவே
மண் போடுவோம் ..

பாலா said...

எனக்கு அந்த கவிதை வரிகளை விட.. பின்னணி இசை ரொம்ப.. ரொம்ப பிடிச்சிருந்தது சங்கர்.

குறும்படம்... பெரும்படமாக வாழ்த்துகள்..!!

பாலா said...

லைட்டிங்-எடிட்டிங் எல்லாம் ஒரு மாதிரி, Following டைப்-ல தெரிஞ்சது.

வந்தியத்தேவன் said...

அந்தப் புல்லாங்குழல் இசை அருமையோ அருமை. அவரின் தவிப்பை இன்னும் கொஞ்சம் அதிகமாக காட்டியிருக்கலாம். இடையிடையே ஒன்றிரண்டு ஜோடிகளைப் பார்த்து அவர் பெருமூச்சு விடுவதுபோலும் காட்டியிருக்கலாம். மற்றும் படி மெளனம் பேசியது.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

படத்தை பார்த்தபோது என்றோ நான் எழுதிய மொக்கை ஒன்று ஞாபகம் வந்தது,

காத்திருக்க வைத்தேன் எனக்காக
அன்று நீ என் காதலன்,
காத்திருக்க வைக்கிறாய் உனக்காக
இன்று நீ என் கணவன்.

சங்கர் அண்ணே நீங்கள் சங்கரை விட பெரிய ஆளாக வாழ்த்துக்கள்.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

படத்தை பார்த்தபோது என்றோ நான் எழுதிய மொக்கை ஒன்று ஞாபகம் வந்தது,

காத்திருக்க வைத்தேன் எனக்காக
அன்று நீ என் காதலன்,
காத்திருக்க வைக்கிறாய் உனக்காக
இன்று நீ என் கணவன்.

சங்கர் அண்ணே நீங்கள் சங்கரை விட பெரிய ஆளாக வாழ்த்துக்கள்.

தராசு said...

ஆரம்ப கட்டத்தில் கடல் இரைச்சல் அந்த இனிமையான இசையை அமுக்கி விட்டுருது அண்ணே,

இசை சூப்பர். அந்த கடைசியில் கவிதை சொல்லும் கணீர் குரல் காரருக்கு வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

தலைவரே நான் ரெடி.. எப்போ ஷூட்டிங் போகலாம்?

நர்சிம் said...

கடைசியில் கவிதையை தவிர்த்திருக்க வேண்டுமோ?

யோ வொய்ஸ் (யோகா) said...

அழகான இசையோடு கூடிய இந்த குறும்படம் ஒரு ஹைக்கூ போன்று இருந்தது. வாழ்த்துக்கள்

வால்பையன் said...

கேமாரவை நான் குறை சொல்ல மாட்டேன்!
ஆனால் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்!

ஒற்றை பொருள்களை குறிப்பால் அதிகம் காட்டி உணர்த்திருக்கலாம்!
ஒற்றை பட்டம் கடைசியில் வந்தது பெரிதாக கவனத்தை கவரவில்லை!

லைட்டிங் ரொம்ப அவசியம்!

நையாண்டி நைனா said...

படத்தை மாலையில் தான் காண முடியும்.
பார்த்து விட்டு சொல்கிறேன்.

தமிழ் அமுதன் said...

இந்த குறும் படம்! உங்கள் திறமையை கூறும் படம்!!

அருமை!!!

பிரபாகர் said...

நிறைய எதிர்பார்ப்போடு பார்க்க ஆரம்பித்தேன். அண்ணன் கொஞ்சமும் ஏமாற்றவில்லை. வாய்ஸ் ஒவரில் அண்ணனின் குரலை கேட்டவுடன் நேரில் பேசுவது போல் சந்தோஷமாயிருந்தது, ஆனாலும் கவிதையை காட்டியதோடு மட்டும் விட்டுவிட்டு மௌனமாயிருந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து தலைப்பே மௌனமே என்பதால்...

நல்ல முயற்சி அண்ணா...

பிரபாகர்.

அக்னி பார்வை said...

:)))))))))))))

:)))0

நாஞ்சில் நாதம் said...

:))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Super Hit!

திருக்கந்தர் said...

good but bgm keettaaal isaignani varuthapadapokiraar

Mahesh said...

அருமை சார்.... நல்லா வந்துருக்கு.

Thamira said...

முதல்னு நம்ப முடியாத மாதிரி இருந்தது பாஸ்.! சிறப்பு.. இருப்பினும் கிளைமாக்ஸில் வேற ஏதோ எதிர்பார்த்தேன். அவரது ஃபீலிங்ஸ் லவர் வர லேட்டாவது போலில்லாமல் லவரே இல்லாதது போல இருந்தது.

shortfilmindia.com said...

@பிரியமுடன் வசந்த

நன்றி

இசையை பொறுத்த வரை நன்றியோ நன்றி இளையராஜாவுக்கு.

Cable சங்கர் said...

@tharumi

மிக்க நன்றி.. உங்க பின்னூட்டம் நல்லாருக்கு

@ஹாலிவுட் பாலா
அதுக்கு காரணம் ராஜாதான். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

நீஙக் சொன்னது போல் லைட்டிங்கில் ஒன்றும் செய்யவில்லை அது அவெய்லபிள் லைட்டிங்தான். பட் எடிட்டிங், ஷாட்ஸ் எல்லாமே ஒரு பாலோயிங் ஸிங்கில் தான் படப்பிடீக்க பட்டது..

Cable சங்கர் said...

!@வந்தியத்தேவன்

மிக்க நன்றி

@கிறுக்கல் கிறுக்கன்

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

@தராசு
வேணுமின்னே பண்ணியது அண்ணே.. மெல்ல, மெல்ல கடலின் ஆர்பரிப்பையும் மீறி இசை அரவனைக்கும், அவனின் வெறுமையை..

அட கண்டுபிடிச்சிட்டீங்களே.. நன்றி

Cable சங்கர் said...

@கார்க்கி

போயிடவேண்டியதுதான்

@நர்சிம்
கவிதை படத்துக்கான விளக்கம் தான். முதல் படமாய் இருந்தகாரணத்தினால் சில பல தவறுகள் ஆர்வத்தில் இருக்கத்தான் செய்யும். இப்போது மூன்று குறும்படஙக்ள செய்துவிட்ட பிறகு இதை எடுத்தால் வேறு வர்ஷன் வரும்

Cable சங்கர் said...

@யோ
நன்றி

@வால்பையன்

அந்த கேமராவில் அவ்வளவுதான் வரும் தலைவரே.

முதல் முயற்சியில் செய்தது..

ஆமாம் அவெய்லபில் லைட்டிங்கிள் பவுன்ஸ் போர்டு கூட இல்லாமல் எடுத்தது..

Cable சங்கர் said...

@ ராம்

நன்றி

@நையாண்டி நைனா

பார்த்துட்டு சொல்லுஙக்

@ ஜீவன்
மிக்க நன்றி

@பிரபாகர்
மிக்க நன்றி பிரபாகர்

@அக்னிபார்வை
நன்றி

Cable சங்கர் said...

@நாஞ்சில் நாதம்

நன்றி
@நெல்லை எஸ்.ஏ. சரவணக்குமார்
நன்றி

@திருகந்தர்

ஏன் தலைவா..அ வர் அடிச்ச மீயூசிக் தானே.. அதுக்கு எதுக்கு வருத்தப்படனூம்

@மஹேஷ்
நன்றி

@ஆதி

மிக்க நன்றி ஆதி..

அகநாழிகை said...

கேபிள்,
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த கேமிராவில் இவ்வளவு வந்ததே பெரிய விஷயம். கவிதையோடு ஒட்டியிருந்தது படம் என்பது ஆறுதலான விஷயம். முதல் முயற்சி என்று தெரிவித்திருந்தீர்கள். சரிதான், தவழ்ந்து எழுந்துதானே நடக்க முடியும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

கா.கி said...

கவிதையான படம். கொன்னுடீங்க...
மறுபடியும் இங்க தம்பட்டம் அடிக்க ஆசைப் படுகிறேன்,
என்னோட குறும் படத்தையும் பார்த்து கமெண்டுங்கோ. pls....

http://creativetty.blogspot.com/2008/12/part-3.html

சில்க் சதிஷ் said...

யூத் எடுத்த யூத் படம்

கலக்கல் குட்டிமா

முடிவிலி said...

அருமை ... ரொம்ப நல்லா இருக்கு ... பின்னணி இசை தனிமையின் மௌனத்தையும் காத்திருப்பின் தவிப்பையும் அழகாக சொல்லி இருக்கிறது ....

Anonymous said...

good effort....

Sanjai Gandhi said...

//ஓட்டை தமிழ்மணத்திலும்//

என்னது? ஓட்டைத் தமிழ்மணமா? ஏன் இந்த கொலைவெறி கேபிள்ஜி :))

அருண் said...

முதல் திரைப்படத்திலேயே மௌனமா?,அருமை.வெள்ளித்திரையில் உங்கள் பெயரைக்கான ஆர்வமாயிருக்கிறேன்.

Gopes said...

Music Nalla iruku... Mathapadi padam innum konjam rasikum padi irukanum

SelvamJilla said...

ji, padam super. i thoroughly enjoyed myself and shared your film with my friends on shortfundly. check http://www.shortfundly.com. It will help you to get more views to your short film video. http://www.shortfundly.com/video/15319/mounamee-shortfilm-by-cable-sankar/