Thottal Thodarum

Mar 20, 2009

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம். என்கிற தாரக மந்திரத்தை சொல்லி மீண்டும் ஓட்டு கேட்கிறது திமுக. இவர்கள் என்னத்தை சொன்னார்கள், என்னத்தை செய்தார்கள் என்று கேட்பவர்கள் நிறைய பேர்.

சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, இலவச டிவி, கேஸ்ஸ்டவ், இலவச மனை, என்று ஆரம்பம் எல்லாமே நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாவிதமான விநியோகங்களிலும் குளறுபடி, இந்த கலர் டிவி விஷயத்துல பல பிரச்சனை வந்து கடைசியா ரேஷன் கார்டு வச்சிருக்கிற எல்லாருக்கும் டிவினு சொல்லியிருக்காங்க.. ஆனா எத்தனை பேருக்கு இது வரைக்கும் கொடுத்திருக்காங்கன்னு சரியா சொல்ல முடியல.. ஏன்னா எனக்கு தெரிந்து பல பேருக்கு கலர்டிவி கொடுக்கவேயில்லை ரேஷன் கார்டு இருந்தும். கேட்டா அதுக்கு சரியான பதிலில்லை.

அடுத்து கேஸ் ஸ்டவ் பல பேருக்கு கொடுக்கபடவேயில்லை. சரி இதெல்லாம் நம்ம சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள். இவர்களுடய ஆட்சி இன்னும் சில ஆண்டுகாலம் இருப்பதால் அதற்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்று நம்புவோமாக.

ஆனால் கலைஞர் அரசு தனது சுயநலத்துக்காக போடப்பட்ட சட்டங்கள் எத்தனை.. அவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் அதாவது தனி தியேட்டர்களில் அதிகபட்ச விலை ரு.50,  ம் மல்டிப்ளக்ஸ் எனப்படும் உணவகங்களுடனான  அடுக்கு திரையரஙகங்களூக்கு அதிகபட்ச விலை ரு.120 என்று. ஆனால் அதெல்லாம் காற்றோடு போய்விட்டது. பல சென்னை தியேட்டர்களில் அதிகபட்ச விலை ரு.70க்கும் 80ரூபாய்க்கும்  விற்க்படுகிற்து. விலையை ரகசியமாய் கூட விற்பதில்லை போர்டு போட்டே விற்கிறார்கள். ஆனால இதை யாரும் கேட்பதில்லை.  ஆனால் வேற்று மொழி போடும் தியேட்டரில் இந்த சட்டம் சரியாய் அமுலாகிறது. உதாரணம் கேசினோ இங்க அதிகபட்சவிலையும் 50தான் குறைந்த பட்ச விலையும் 50தான்.

மாறன் ப்ரதர்ஸை எதிர்பதற்கு கலைஞர்டிவி ஆரம்பித்ததால் அதற்கு படஙக்ள் தேவையிருந்ததால் இந்த சட்டமெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. தளர்ந்து போய்விட்டது. இதனால் பாதிக்கபட்டது பொதுமக்களே அன்றி அவரகள் இல்லை. அதே போல் மக்களின் வரி பணத்தில் ஆரம்பிக்க பட்ட அரசு கேபிள் நிறுவனம். இது வரை எத்தனையோ கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கபட்டது. இப்போது இவர்கள் சேர்ந்துவிட்டதால். அந்த திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. அப்போது அதற்கு செலவு செய்த பணம் இவர்கள் சொந்த பணம் இல்லையே.? இருந்திருந்தால் விட்டிருப்பார்களா?

இதற்கு பிற்கு சட்டகல்லூரி மாணவர்கள் பிரசசனை, ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது வக்கீல் போலீஸ் மோதல், இலங்கை தமிழர் என்று பல பிரச்சனைகளை இரும்பு கரம் கொண்டு அடக்காமல் தினமும், கடிதம் மட்டுமே எழுதி கொண்டிருப்பது பரம்பரை திமுக காரனுக்கு கூட அதிருப்தியாய்தான் இருக்கிறது.

இதோ நாட்டின் பணவீக்கம் 0.44 சதவிகிதம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அத்யாவசிய பொருட்களின் விலையிலோ, ஹோட்டல் சாப்பாட்டின் விலையிலோ, மற்ற பொருட்களின் விலைவாசியிலோ, எந்த விதமான மாறுதல்களையும் கொண்டுவர இதுவரை தமிழக் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கம் ஏறிய போது அதனால் தான் விலைவாசி உயர்வு என்று சொல்லிய அரசு, இப்போது இறங்கிய பிறகு விலைவாசியை குறைக்க முற்படாதது ஏன்?

இப்படி பல ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளுடன் தேர்தலை சந்திக்கப்போகும் திமுக காரன்.
Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

30 comments:

Vadielan R said...

"இப்படி பல ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளுடன் தேர்தலை சந்திக்கப்போகும் திமுக காரன்."

நல்லா குத்துனிங்க கேபிள் சங்கர்

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

Vadielan R said...

நாந்தான் பர்ஸ்ட்டு

Cable சங்கர் said...

//நாந்தான் பர்ஸ்ட்டு
//

நன்றி வடிவேலன்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்

பாலா said...

போடுங்கய்யா.. ஓட்டு.. ‘கேபிள்’ சின்னத்த பார்த்து..!

தராசு said...

//இப்படி பல ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளுடன் தேர்தலை சந்திக்கப்போகும் திமுக காரன்.//


தலைவரே, கடைசியில நச்சுனு முடிச்சீங்க

SurveySan said...

இன்னும் ஸ்ட்ராங்கா, புள்ளி விவர அட்டவனையுடன், உ.தமிழன் ஸ்டைலில் இதையெல்லாம் எடுத்து சொல்லணும். :)

www.narsim.in said...

தேர்தல் கலகலகல..க்கல்

ttpian said...

இந்தியா ஜனனாயக முலாம் பூசப்பட்ட நாடு௯5% சதவிகிதம் சர்வாதிகாரமும் 5 % சதவிகிதம் ஜனனாயகமும் கொன்ட,பிரமினர்கலின் பின்புற முன்டன்கலால் ஆன நாடு!
எனக்கு அவமானமக உள்ளது!

ttpian said...

புது விளையாட்டு!
தொப்புலிள் பம்பரம் விடுவது:
தேவையான பொருட்கள்
அரை /அல்லது முக்கால் கிழம்
பழய பம்பரம்
தொப்புல்(அ)சுகன்யா
பழய அரை ஙான் கவுறு
னாட்டு/வெளினாட்டு சரக்கு

நையாண்டி நைனா said...

அண்ணே வணக்கம்,

தங்களுக்கு உடல்நலம் பற்றி அநேகம் பேரு கேட்டிருந்தனர். இப்போ எப்படி இருக்கிறது.

ஓய்வு வேண்டும் என்றால் எடுத்துகொள்ளவும்.

"எனக்கு பழைய பன்னீர்செல்வம்.I.P.S ஆயிட்டு வேணும்" என்று சொல்வார் திலகன் சத்ரியன் படத்தில். அதுபோல் நீங்கள், உங்களின் உற்சாகம் மற்றும் துள்ளலோடு வேண்டும்.

பதிவை பற்றி:

இந்த பதிவிற்கு நான் ஒன்றும் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை.
இந்த தேர்தலை சந்திக்கபோகும் திமுக காரர்களும், மக்களும் தீர்ப்பு கொடுக்கட்டும்.

***************************************
/*இன்னும் ஸ்ட்ராங்கா, புள்ளி விவர அட்டவனையுடன், உ.தமிழன் ஸ்டைலில் இதையெல்லாம் எடுத்து சொல்லணும். :)*/

உலகிற்கு ஒரு சூரியன் போதும். பூமிக்கு ஒரு இமயம் போதும்.
அதுபோல பதிவுலகிற்கு ஒரு உண்மைத்தமிழன் போதும்.

சிம்பா said...

வணக்கம் அண்ணா....

அரிசியை பற்றி மட்டும் தி.மு.க அரசிடம் பேசக்கூடாது.. என் என்றால் அவங்க தான் ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் குடுக்கறாங்களே... அந்த அரிசியை மாடு கூட திங்காது என்பது வேற விஷயம்..

காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் குடுத்தாலும் குடுத்தாங்க நல்லபடியா விறகு அடுப்புல சமையல் செஞ்ச ஆளுங்களை இதுக்கு பழக்கி மற்று சிலிண்டர்க்கு நாயா அலையை விட்டுடாங்க...

இவங்க டி,வி குடுத்து கரெண்ட் எ புடிங்கீடாங்க... இனி வேற என்ன வேணும்..

திண்டுக்கல் பக்கம் போனா இலவச பட்டா நிலம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்...

Vidhya Chandrasekaran said...

நச்:)
ஆட்டோ வருமா?

முரளிகண்ணன் said...

சைதை கேபிளாரே, வாழ்த்துக்கள்

அத்திரி said...

//இதோ நாட்டின் பணவீக்கம் 0.44 சதவிகிதம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அத்யாவசிய பொருட்களின் விலையிலோ, ஹோட்டல் சாப்பாட்டின் விலையிலோ, மற்ற பொருட்களின் விலைவாசியிலோ, எந்த விதமான மாறுதல்களையும் கொண்டுவர இதுவரை தமிழக் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கம் ஏறிய போது அதனால் தான் விலைவாசி உயர்வு என்று சொல்லிய அரசு, இப்போது இறங்கிய பிறகு விலைவாசியை குறைக்க முற்படாதது ஏன்?//

நல்ல நச் கேள்வி... பணவீக்க்கம் அதிகமாயிருக்கும்போது விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம் அப்படினு மத்திய அரசும்,மாநில அரசும் சப்பை கட்டு கட்டிச்சி...இப்ப வாய் மூடி மவுனமா நிக்குது........ இதுதான் ராச அரசியல் தந்திரமோ?

Cable சங்கர் said...

//நல்ல நச் கேள்வி... பணவீக்க்கம் அதிகமாயிருக்கும்போது விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம் அப்படினு மத்திய அரசும்,மாநில அரசும் சப்பை கட்டு கட்டிச்சி...இப்ப வாய் மூடி மவுனமா நிக்குது........ இதுதான் ராச அரசியல் தந்திரமோ?//

ராச தந்திரம் இல்லைன்னே.. நம்ம மக்களோட மறதிய நம்பி அவங்க ஆடுற ஆட்டம்.

Cable சங்கர் said...

//சைதை கேபிளாரே, வாழ்த்துக்கள்//

நன்றி அடையார் முரளிகண்ணன்.

Cable சங்கர் said...

//தங்களுக்கு உடல்நலம் பற்றி அநேகம் பேரு கேட்டிருந்தனர். இப்போ எப்படி இருக்கிறது.
//

நல்லாருக்கேண்ணே.. உங்க அன்புக்கு நன்றி நைனா..

//"எனக்கு பழைய பன்னீர்செல்வம்.I.P.S ஆயிட்டு வேணும்" என்று சொல்வார் திலகன் சத்ரியன் படத்தில். அதுபோல் நீங்கள், உங்களின் உற்சாகம் மற்றும் துள்ளலோடு வேண்டும்.//
அப்ப பதிவு நல்லாயில்லைன்னு சொல்றீங்க.. அதானே..புரியிது, புரியிது.

Cable சங்கர் said...

//நச்:)
ஆட்டோ வருமா?//

நீங்களே சொல்லி விட்டிருவீங்க போலருக்கே..

Cable சங்கர் said...

//திண்டுக்கல் பக்கம் போனா இலவச பட்டா நிலம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்...//

:(:(- போய் பார்த்துதான் தெரிஞ்சுக்கணுமா..

Cable சங்கர் said...

//உலகிற்கு ஒரு சூரியன் போதும். பூமிக்கு ஒரு இமயம் போதும்.
அதுபோல பதிவுலகிற்கு ஒரு உண்மைத்தமிழன் போதும்.//

அப்படி சொல்லுங்க நைனா.. அவர் ஒருத்தர் போதாது..???

Cable சங்கர் said...

//தலைவரே, கடைசியில நச்சுனு முடிச்சீங்க//

நன்றி தராசு.. மிக்க நன்றி.

Cable சங்கர் said...

மிக்க நன்றி சர்வேசன், நர்சிம், டிடிபியன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Ganesan said...

இதோ நாட்டின் பணவீக்கம் 0.44 சதவிகிதம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அத்யாவசிய பொருட்களின் விலையிலோ, ஹோட்டல் சாப்பாட்டின் விலையிலோ, மற்ற பொருட்களின் விலைவாசியிலோ, எந்த விதமான மாறுதல்களையும் கொண்டுவர இதுவரை தமிழக் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கம் ஏறிய போது அதனால் தான் விலைவாசி உயர்வு என்று சொல்லிய அரசு, இப்போது இறங்கிய பிறகு விலைவாசியை குறைக்க முற்படாதது ஏன்?

வடபழனி சரவண பவன்ல இன்னுமும் 40 ரூபா தான் சாப்பாடு

Anonymous said...

Good view

மோனி said...

நல்லா சிந்திக்கிறீங்க
தெளிவா சொல்லுறீங்க
ஓட்டு போட்டுடாதீங்கன்னு

அந்த தப்பை மறுபடியும் செய்வோமா ...?

Anonymous said...

//வடபழனி சரவண பவன்ல இன்னுமும் 40 ரூபா தான் சாப்பாடு//

அண்ணாச்சி எப்பவுமே காஸ்டிலிதான் அண்ணே.. ஒரு குடும்பமா ரெண்டு குடும்பமா..? காப்பாத்தணூமில்ல..

Prabhu said...

அட, ஸ்டவ்வைக் கூட விடுங்க! இந்த டீவிய வெச்சு சோத்துக்குக் கூட வழி இல்லாதவன் என்ன செய்வான்? கேட்டா இந்த டீவியால மக்கள் பொது அறிவு கூடியிருக்காம்!

Cable சங்கர் said...

//கேட்டா இந்த டீவியால மக்கள் பொது அறிவு கூடியிருக்காம்!//

இதென்ன சிரிப்பொலி சேனல் காமெடி டயலாக்கா..?

Anonymous said...

Cable,

pLease remove some widjets

it slow down the speed drastically

Anonymous said...

in 1951 - a house only
1992- 80cr
2006-17,000 cr (60,000 black)
19-channels
aircel
poongi textiles
shshayee paper mills
dinakaran 450cr
kungumam 150 cr
murasoli 90 cr
30% in tata grours
many cicima theaters in tamilnadu
4 th millionaire in asia(2001)now 2nd
oh tamilnad voters please help them to be first