Thottal Thodarum

Mar 4, 2009

உலக சினிமா- No Country For Old Men(2007 )

225வது பதிவு..

51U1qJ70-ML._SS400_

டெக்ஸாசின் புறநகர் பகுதியில் வசிப்பவன் மோஸ். ஒரு நாள் அவன் மான் வேட்டையாடி, அதை எடுப்பதற்கு போய் பார்த்த இடத்தில் போதை பொருள் பரிமாற்றஙக்ள் நடக்கும் போது இரு கோஷ்டிகளுக்கு இடையே பிரச்சனையாகி, எல்லோரும் இறந்து கிடக்க, போதை பொருட்களும், இரண்டு மில்லியன் டாலர் பணமும் கேட்பாரற்று கிடக்க, மோஸ், பணத்தை எடுத்து கொண்டு “எஸ்” ஆகிறான்.

அந்த பணத்தையும், சரக்கையும் தேடி வருகிறான் ஆண்டன் சிகுர், என்கிற சைக்கோபாத் கில்லர். அவனிடம் இருக்கும் வித்யாசமான ஒரு ஆயுதத்தை கொண்டு வகை தொகையில்லாமல் கண்டமேனிக்கு போட்டு தள்ளுகிறவன், அவனுக்கு போலீஸும் ஒன்றுதான், மற்றவர்களும் ஒன்றுதான். அவன் அறிமுகமாகும் காட்சியிலேயே  அவனுடய குரூரத்தையும், வெறியையும், போலீஸ் ஸ்டேஷனில் ஆபிசரை கைவிலங்கால் கழுத்தை நெறித்து கொல்லும் காட்சி ஒன்றே போதும்.
51TYDE2mc L._SS400_

இந்த பிரச்சனையை தொடரும் ஆபீஸர் டாம் (டாமி லீ ஜோன்ஸ்) என்று ப்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆபிஸர் பணத்தை எடுத்த மோஸின் மனைவியிடம் போய் எப்படியாவது அந்த பணத்தை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறு அவனின் கணவனிடம் சொல்ல சொல்கிறார், அப்படி செய்யாவிட்டால் நடக்கும் விபரீதங்களுக்கு யாரும் பொருப்பல்ல என்கிறார்.

பணத்தை வைத்து கொண்டு அலையும் மோஸை அவனுடய பணப்பையில் இருக்கும் ட்ரான்ஸ்மிட்டரை கொண்டு ஆண்டன் கண்டுபிடித்துவிட, அவனிடமிருந்து தப்பித்து மோஸ் ஓடுகிறான். ஒரு கட்டத்தில் மோஸை கண்டுபிடித்து அவனை கொல்கிறான். அடுத்ததாய் அவனுடய மனைவியின் வீட்டில் போய் ‘உன் கணவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் உன்னை கொல்ல போகிறேன் என்று சொல்லிவிட்டு அவனை கொல்வதா வேண்டாமா என்று ஹெட் ஆர் டைல்ஸ் போட்டு பார்க்க சொல்ல, அவள் மறுக்கிறாள். இறக்கிறாள்.
51hLxGdboRL._SS400_

படம் முழுவதும் ரத்தம் ஆறாய் ஓடுகிறது ஆனால் துளி கூட பரபரப்பு இல்லாமல், பிண்ணனி இசையே இல்லாமல் நம்மை கதைக்குள் நடமாடவிட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜோல் கோன்/ இதன் கோன் இரட்டையர்கள்.

ஆண்டனாக வரும் ஜேவியர் பார்டெமின் நடிப்பும், அவருடைய, பாடி லேங்குவேஜும், பார்வைகளும் படம் பார்க்கும் நம் வயிற்றுக்குள் கத்தி.

படம் பூராவும் தெரிய்ம் வயலன்ஸை வெறும் சஜஸ்டிவான காட்சிகளினாலேயே காட்டியிருக்கும் உத்தி, காட்டினால் கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. குறிப்பாக, போலீஸ்காரனை கைவிலங்கிட்டு கொல்லும் காட்சியில் அவர் இறந்தவுடன் அவரின் பூட்ஸ்கால்களால் இறப்பதற்கு முன் போராடிய போராட்டத்தை, தரையில் இருக்கும் கீறல்கள் மூலம் காண்பிப்பது, அதே போல் மோஸின் ம்னைவியை கொல்லும் காட்சியில் துப்பாக்கி சத்ததிற்க்கு பதிலாய் ரோட்டில் சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளின் ராடலிங் ஓசையை வைத்தே நம்மை சில்லிட வைக்கிறார்கள்.

எனக்கு முடிவுதான் பிடிக்கவில்லை. ஆனால் அந்த கார் ஆக்ஸிடெண்ட் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் சூப்பர். எடுத்திருக்கும் விதத்துக்காகவே கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

நாவலாய் வந்து பின்பு திரைபடமாக வெளிவந்த இந்த படம் சென்ற வருடம் சிறந்த படம், இயக்குனர், சிறந்த துணை நடிகர், திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி, ஒலி எடிட்டிங் என்று அஸ்கர் விருதுகளை அள்ளிய  படம்
Blogger Tips -கொத்து பரோட்டா பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

நையாண்டி நைனா said...

ஒரு மீ த பஸ்டு போட்டுக்குறேன், போய் பதிவை படிச்சிட்டு வரேன்

Raj said...

க்ளைமாக்ஸ் சொன்னதுக்கு நன்றி. கடைசி காட்சியில என் DVD சரியா ஓடாம நின்னுருச்சி.

நையாண்டி நைனா said...

/*மோஸை அவனுடய பணப்பையில் இருக்கும் ட்ரான்ஸ்மிட்டரை கொண்டு ஆண்டன் கண்டுபிடித்துவிட*/

/*ஆபிஸர் பணத்தை எடுத்த மோஸின் மனைவியிடம்*/

பணத்தை எடுத்தவன் மோஸை, என்று ஆபிசருக்கு எப்படி தெரிகிறது?

/*படம் பூராவும் தெரிய்ம் வயலன்ஸை வெறும் சஜஸ்டிவான காட்சிகளினாலேயே காட்டியிருக்கும் உத்தி, காட்டினால் கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே*/

நேரடியாக காட்டினால் அந்த தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமோ?

அம்புட்டுதான்.

butterfly Surya said...

ரத்த ஆறா..?? அருவியாய் ஒடும். ரொம்ப வன்முறை. அதானால் பதிவு எழுதாம சாய்ஸல விட்டுட்டேன்.

கேபிளார் 225க்குன்னு போட்டு தாக்கிட்டார்.

வாழ்த்துகள்.

butterfly Surya said...

என்ன டிஸ்கிய காணும்.????

Not For Kids ன்னு டிஸ்கிய போடுங்க..

நையாண்டி நைனா said...

/*Not For Kids ன்னு டிஸ்கிய போடுங்க..*/

அப்ப நாலாம் பார்க்க கூடாதா?

தராசு said...

225 க்கு வாழ்த்துக்கள் அண்ணே.

Indian said...

Super movie.

I like the ambience provided by the locations of 'New Mexico' state. The texture of the movie would showcase USA an older time, something of 70's or early 80's.

The opening scenes where Moss is hunting is too good.

It deserves the Oscars it won.

Indian said...

Congrats for 225.

Vidhya Chandrasekaran said...

டிவிடி வந்துடுச்சா?

Cable சங்கர் said...

//டிவிடி வந்துடுச்சா?//

வந்து வருஷங்கள் ஆச்சு.. வித்யா..

Cable சங்கர் said...

//Congrats for 225.//
மிக்க நன்றி இந்தியன்.. உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//அப்ப நாலாம் பார்க்க கூடாதா?//

நானே தெரியாம பாத்துட்டேன். நைனா..

Cable சங்கர் said...

//225 க்கு வாழ்த்துக்கள் அண்ணே.//

நன்றி தராசு அண்ணே.. உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//ரத்த ஆறா..?? அருவியாய் ஒடும். ரொம்ப வன்முறை. அதானால் பதிவு எழுதாம சாய்ஸல விட்டுட்டேன்.

கேபிளார் 225க்குன்னு போட்டு தாக்கிட்டார். //

நன்றி வண்ணத்து பூச்சியாரே.. மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும், டிஸ்கி போட மறந்துட்டேன்.

Cable சங்கர் said...

//பணத்தை எடுத்தவன் மோஸை, என்று ஆபிசருக்கு எப்படி தெரிகிறது? //

எல்லாத்தையும் நானே சொல்லிட்டா படம் யாரு பாக்குறது..?

Cable சங்கர் said...

//க்ளைமாக்ஸ் சொன்னதுக்கு நன்றி. கடைசி காட்சியில என் DVD சரியா ஓடாம நின்னுருச்சி.//

நன்றி ராஜ்..உங்க பின்னூட்டத்துக்கு

sanswas said...

உங்கள் விமர்சனங்கள் அருமையாய் இருக்கிறது..

Anonymous said...

நானும் முன்னாடியே பார்த்துப்புட்டு தலையைப் பிச்சுக்கிட்டு ஒரு பதிவைப் போட்டுத் தொலைச்சிருக்கேன்..

வித்தியாசமான இயக்குநர்கள்தான் இவர்கள்..!

Cable சங்கர் said...

அப்படியாண்ணே.. ஒண்ணும் பிரியலையா என்ன..?

Cable சங்கர் said...

நன்றி சான்சுவாஸ்

ஷண்முகப்ரியன் said...

படம் பார்த்து விட்டேன்.உங்கள் விமரசனத்தை உங்கள் கருத்துக்காகப் படித்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள்,ஷங்கர்.

பாலா said...

//நானும் முன்னாடியே பார்த்துப்புட்டு தலையைப் பிச்சுக்கிட்டு ஒரு பதிவைப் போட்டுத் தொலைச்சிருக்கேன்..//

இதுல தலைய பிச்சிக்க என்ன இருக்கு தல..? ஒரு பத்துவாட்டி.. என்ன மாதிரி இந்த படத்தை திரும்ப திரும்ப பாருங்க...!! சரியா போய்டும்.

-----------

ரொம்ப சின்னதா.. விமர்சனம் போட்டுட்டீங்க சங்கர். டெக்னிகலா உங்களை விட வேற யாரும் படங்களை விமர்சிக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. படங்களை... அறிமுகப்படுத்துற அதே நேரத்தில்.. இது மாதிரி கொஞ்சம் டெக்னிக்கயும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்..!! அட் லீஸ்ட் வார்த்தைகளையாவது..!!

கத்துகிட்டா.. நாங்க வேற யாருகிட்டயாவது பேசும்போது... நாங்களே கண்டுபிடிச்ச மாத்ரி ஜெர்க் விட்டுக்கலாம் பாருங்க..! :-)))))

பாலா said...

ஊப்ஸ்ஸ்.. மறந்துட்டேன்..!!

225- நாட் அவுட்க்கு வாழ்த்துகள்..!! 2250 ஆகட்டும்...! ஒரு பெரிய விழா எடுத்துடுவோம்.

Prabhu said...

படம் ஆஸ்கார் வாங்கினப்பயே பாக்க நினைச்சேன். இப்போ பாக்குறேன். இதே ஆட்கள் எடுத்த Burn after reading பாத்தீங்களா? அது எப்டி? கிடைக்கும்போல இருக்கு. பாக்கலாமா, நல்லாருக்கா? என்ன இயக்குனரே!

தமிழ் அமுதன் said...

யூத் விகடனில் இந்த பதிவு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

அக்னி பார்வை said...

நல்ல படம் தான் ஆனால் சரி ஸ்லோ

Rafiq Raja said...

முதல் முறையாக ஒரு படத்தை கேபிள் சங்கருக்கே முன்பே பார்த்து விட்ட திருப்தி எனக்கு. இந்த படம் ஆஸ்கார் விருதை வாங்கியவுடன் இதை தருவித்து பார்த்தேன்,

கொலைஞனின் ஆர்பாட்டம் இல்லா கொலை காட்சிகளை தத்ரூபமாக கோரமே இல்லாமல் காட்டி இருப்பது இயக்குனர்களின் திறமை. அதிலும், காரோட்டியை வழியில் மடக்கி காஸ் பைப்பை வைத்து அவர் தலையில் துளை போடும் காட்சி என்றும் நினைவில் நிற்கும் ஒன்று.

கடைசி வரை பண பையுடன் ஓட்டம் பிடிக்கும் ஹீரோ போன்ற கதாபாத்திரம், திடீரென்று இறந்து விட்டதாக பிண்ணோட்டத்தில் காட்டபட்டது தான் சப்பென்று முடிந்து விட்டது. அதற்கு சிகரம் வைத்தாற் போல ஆக்ஸிடென்டில் கால் முறிந்த பின்பும் அக்கறையே இல்லாமல் நடந்து செல்லும் காட்சி அறுமை.

படத்தை நினைவு கூற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி சங்கரே,

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

முரளிகண்ணன் said...

கேபிள் சார் நல்ல அறிமுகம் படத்துக்கு.

225 க்கு வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

//கேபிள் சார் நல்ல அறிமுகம் படத்துக்கு.

225 க்கு வாழ்த்துக்கள்.//

நன்றி முரளி..

Cable சங்கர் said...

//முதல் முறையாக ஒரு படத்தை கேபிள் சங்கருக்கே முன்பே பார்த்து விட்ட திருப்தி எனக்ககு//

ஹா..ஹா.. என்ன ஒரு சந்தோஷமய்யா. இருக்கட்டும்,, இருக்கட்டும்.. மிக்க நன்றி ரஃபீக் ராஜா.. ரொம்ப நாளைக்கு பிறகு வருகிறீர்கள். மிக்க நன்றி

Cable சங்கர் said...

//நல்ல படம் தான் ஆனால் சரி ஸ்லோ//

ஆமாம் அக்னி.. ஆனா ரொம்ப ரசிச்சி பார்த்தா.. திரும்ப திரும்ப பார்க்க தோணும். நன்றி அக்னி.

Cable சங்கர் said...

//யூத் விகடனில் இந்த பதிவு

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!//

நன்றி ஜீவன்.. உஙக் தகவலுக்கும், வருகைக்கும்.

Cable சங்கர் said...

//படம் ஆஸ்கார் வாங்கினப்பயே பாக்க நினைச்சேன். இப்போ பாக்குறேன். இதே ஆட்கள் எடுத்த Burn after reading பாத்தீங்களா? அது எப்டி? கிடைக்கும்போல இருக்கு. பாக்கலாமா, நல்லாருக்கா? என்ன இயக்குனரே!//

நன்றி பப்பு... இன்னும் அந்த படம் பார்கலை.. பார்த்துவிட்டு சொல்கிறேன்.

Cable சங்கர் said...

//படம் பார்த்து விட்டேன்.உங்கள் விமரசனத்தை உங்கள் கருத்துக்காகப் படித்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள்,ஷங்கர்.//

மிக்க நன்றி சார்..

Cable சங்கர் said...

//ரொம்ப சின்னதா.. விமர்சனம் போட்டுட்டீங்க சங்கர். டெக்னிகலா உங்களை விட வேற யாரும் படங்களை விமர்சிக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. படங்களை... அறிமுகப்படுத்துற அதே நேரத்தில்.. இது மாதிரி கொஞ்சம் டெக்னிக்கயும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்..!! அட் லீஸ்ட் வார்த்தைகளையாவது..!!

கத்துகிட்டா.. நாங்க வேற யாருகிட்டயாவது பேசும்போது... நாங்களே கண்டுபிடிச்ச மாத்ரி ஜெர்க் விட்டுக்கலாம் பாருங்க..! :-)))))//

டெக்னிகலா எழுதணும்னுதான் நினைச்சேன்.. முக்கியமா ஒளிப்பதிவு அதிலும், ஓப்பனிங் சீன்ல மானை வேட்டையாடுற இடம் துல்லியம். அதே போல் படத்தின் மூடை எந்தவிதத்திலும் கெடுக்காமல் இருக்கும் லைட்டிங். துல்லியமான வெறும் எபெக்ட்டை வைத்தே பிண்ணனி இசை அமைத்திருப்பது.., ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படத்திற்க்கு இல்லாத ஒரு எடிட்டிங், என்று சொல்லிக் கொண்டே போகலாம். போரடிச்சிருசுன்னா என்ன செய்யறதுன்னுதான் நிறுத்திட்டேன். இனி வரும் பதிவுகளில் எழத விழைகிறேன். அப்புறம் மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும், கருத்துக்கும்

Anonymous said...

வணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. உங்களோட ௨௨5 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.நான் இந்த படம் பாக்கல ஆனா உங்க விமர்சனம் படிச்சதில படம் பார்த்த உணர்வு. நேர்த்தியான விமர்சனம் ஸார். அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்

Cable சங்கர் said...

//வணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. உங்களோட ௨௨5 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.நான் இந்த படம் பாக்கல ஆனா உங்க விமர்சனம் படிச்சதில படம் பார்த்த உணர்வு. நேர்த்தியான விமர்சனம் ஸார். அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்//

நன்றி ஜெமினி.. நான் ஏதோ எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எழுதறேன். நான் ஒன்ணும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை தலைவா..

Kumaran said...

Superb post, iam enjoying ur all blogs... keep posting more interesting topics

Cable சங்கர் said...

// Superb post, iam enjoying ur all blogs... keep posting more interesting topics

Post a Comment //

thank you crazytamil.

T.V.ராதாகிருஷ்ணன் said...

விமரிசனம் அருமை

உண்மைத்தமிழன் said...

http://truetamilans.blogspot.com/2008/03/blog-post_11.html

இதுதான் நான் எழுதின விமர்சனம்..!

Anonymous said...

In the movie Mosai was not killed by cigur. In the scene where Cigur was about to kill a guy in a gas station and asking him to toss a coin to take the decision was really good. That conversation was too good. Have you seen "Death proof", Like to read your review.

Cable சங்கர் said...

//விமரிசனம் அருமை//

மிக்க நன்றி.. சார்..

Cable சங்கர் said...

//In the movie Mosai was not killed by cigur. In the scene where Cigur was about to kill a guy in a gas station and asking him to toss a coin to take the decision was really good. That conversation was too good. Have you seen "Death proof", Like to read your review.//

டெத்புரூப் பார்த்துவிட்டேன். கண்டிப்பாய் எழுதுகிறேன்.

Benny said...

என்னை உறைய வைத்த thriller படம் இது.
கே.ச சார், ஜாவியர் பார்டமின் நடிப்பைப் பார்க்க - The sea inside (http://www.imdb.com/title/tt0369702/) பாருங்கள். படுத்துக்கொண்டே ஜெயிப்பது போல், படித்த்க்கொண்டே நடிப்பில் பின்னியிருப்பார்.

Subash said...

ஆஸ்கார் கிடைத்ததென கேள்விப்பட்டதும் பார்த்த படம். ஆரம்பத்தில் ஏயேனாதானோவென பார்க்கத்துவங்கி அப்படியே அதற்குள் ஒன்றிவிட வைத்த படம். படத்தில் மிகவும் பிடித்தது ஒளிப்பதிவும் லைட்டிங்கும்தான். அடுத்து எந்த உணர்ச்சியும் காட்டாமல் வரும் வில்லன்.
நல்ல விமர்சனம். நன்றிகள்

Subash said...

225ம் பதிவிற்கு வாழ்த்துக்கள்.