தமிலிஷில் பதிவுகளை இணைக்கலாமா..?

Untitled-1

போன வாரம் நானும் டாக்டர் புருனோவும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னார். அது என்னவென்றால் நாம் நம்முடய பதிவுகளை தமிழ்லிஷில் வெளியிடுகிறோம் இல்லையா..? அதை யார் வேண்டுமானாலும் கமர்ஷியலாகவோ, நான் – கமர்ஷியலாகவோ, பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறோம் என்பது தான்.


இதை அறிந்ததும் உடனடியாக நான் அவரிடம் சார் இது ஒரு புக் மார்க் சைட்தானே அது எப்படி நாம் எவர் வேண்டுமானாலும் எடுத்தாள உரிமை கொடுப்பதாய் அமையும் என்று கேட்ட போது அவர்களது வலைதளத்துக்கே போய் கீழே உள்ள creative common public domains என்கிற லிங்கை கிளிக் செய்து காட்டிய போது, அதில் நாம் இணைக்கும் நமது பதிவுகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் வியாபாரத்துக்காகவோ, தன் சுய பயன்பாட்டுக்காகவோ பயன்படுத்தி கொள்ளலாம் என்று உரிமை உள்ளதாய் அதில் போட்டிருந்தது.

publicdomain

இதை பற்றி பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்த ரெண்டு நாட்களுக்குள், தமிழ்லிஷில் அந்த லிங்க் எடுக்கப்பட்டுவீட்டது. மருத்துவர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் அவர்கள் விளக்கம் அளித்து, அதை எடுத்துவிட்டதாய் சொல்கிறார்கள். இதே போல் தான் மற்ற புக்மார்க தளங்களும்.

அந்த லிங்கில் என்னதான் அமெரிக்க சட்டப்படி என்று போட்டிருந்தாலும், நம் ஊரில் காப்பிரைட் என்பதே காமெடியான விஷயமாய் இருக்கும் பட்சத்தில் இதை பற்றி வேறு யாராவது, ஏன் தமிலிஷிலோ, Ntamil, தளத்திற்க்கு உரிமையாளர்கள் இதற்கான தெளிவான விளக்கத்தை அளிப்பார்களா..? இல்லையென்றால் நாம் அனைவரும் தமிலிஷிலோ, மற்ற புக் மார்க் தளங்களில் இணைப்பதற்க்கு யோசிக்கத்தான் வேண்டும்.


டிஸ்கி:

இதையேன் தமிலிஷிலும், Ntamilலிலும் இணைத்தேன் என்று கேட்பவர்க்ளுக்கு, அவர்களுக்கு தெரிந்தால் தானே நமக்கு விளக்கம் கொடுபார்கள் அதற்காகத்தான். அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பல பதிவர்களில் ஒருவன்.
Blogger Tips -பட்டாளம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

இது தொடர்பாக நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு வந்த பதில்
--

புருனோ அவர்களுக்கு,

வணக்கம் . தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி.

//Can some one give a link to my blog
If so will my content be placed under CopyLeft//

இல்லை. பகிரப்படும் இணைய பக்கங்களில் (External Web Links) உள்ள எழுத்துக்களுக்கு Tamilish -க்கு உரிமை கிடையாது.

பகிரப்படும் இணையப்பக்கம் பற்றி Tamilish உறுப்பினர் அளிக்கும் விளக்கத்தை உபயோகிக்கும் உரிமை Tamilish - க்கு உண்டு.

உறுப்பினர்கள் அளிக்கும் External Link - களில் , உள்ள ஆக்கங்களுக்கும் Tamilish - க்கும் எவ்வித உரிமை கிடையாது. அது அந்தந்த தள உரிமையாளர்களின் காப்புரிமை.

ஆனால் தளத்தில் பகிருகின்ற உறுப்பினர் கொடுக்கின்ற இணைய பக்கம் பற்றிய விளக்கம் (Description), Tamilish -இல் அவர் அளிக்கின்ற மறுமொழி (Comments) போன்றவற்றை உபயோக படுத்தி கொள்ள Tamilish -க்கு உரிமை உண்டு.

சுருங்க சொல்ல வேண்டும் என்றால் Tamilish - இல் தோன்றுகின்ற எழுத்துகளுக்கு தான் உபயோகபடுத்தும் உரிமையே தவிர அங்கு இடப்பட்டுள்ள External Link -இல் உள்ள எழுத்துகளுக்கு Tamilish -க்கு எந்த உரிமையும் கிடையாது.

உங்களுக்கு இந்த விளக்கம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் குழப்பங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும். பதில் அளிக்கிறேன்.
அதற்கு நான் அளித்த பதில்
--
2. பகிரப்படும் இணையப்பக்கம் பற்றி Tamilish உறுப்பினர் அளிக்கும் விளக்கத்தை உபயோகிக்கும் உரிமை Tamilish - க்கு தேவையா என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

//இது Tamilish -இல் தோன்றுகிறது. இதை உபயோகிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. இது இடுகையை பகிர்பவரின் சொந்த கருத்தாக இருக்க வேண்டும். //

இனி விளக்கம் என்ற இடத்தில் நான் என்ன எழுதுவேன் என்றால் (இதே கட்டுரையை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்) “கல்லூரியில் நடந்த சம்பவம். மேலும் விபரங்கள் அறிய” என்று மட்டும் எழுதிவிட்டு கட்டுரையின் முக்கிய பகுதியை வெட்டி ஒட்டுவதை தவிர்த்து விடுவேன்

இப்படியே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு முகப்பு பக்கத்தில் “மேலும் விபரங்கள் அறிய” என்று மட்டும் தான் இருக்கும்
இந்த விஷயம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாம போச்சே! தங்கள் தகவலுக்கு நன்றி!

நம்மல யாரு Mail ID & any account open பண்ணும் போடு Terms & Conditions பட்டுச்சு பார்த்துட்டு I Agree அழுத்துறோம்
//சுருங்க சொல்ல வேண்டும் என்றால் Tamilish - இல் தோன்றுகின்ற எழுத்துகளுக்கு தான் உபயோகபடுத்தும் உரிமையே தவிர அங்கு இடப்பட்டுள்ள External Link -இல் உள்ள எழுத்துகளுக்கு Tamilish -க்கு எந்த உரிமையும் கிடையாது.//

அப்படியென்றால் public domainலில் இருக்கும் உரிமை தமிலிஷினுடயது கிடையாதா..? அப்படியானால் அவர்கள் ஏன் இதை இணைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல். இவர்கள் எடுத்துவிட்டாலும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இதை பற்றி தெரிந்தவர்கள் உபயோகபடுத்தலாமில்லையா..?
//இப்படியே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு முகப்பு பக்கத்தில் “மேலும் விபரங்கள் அறிய” என்று மட்டும் தான் இருக்கும்//

சரியாக சொன்னீர்கள் புருனோ.
நுட்பமான பிரச்னை, கண்டுபிடித்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்..
பாலா said…
//நம்மல யாரு Mail ID & any account open பண்ணும் போடு Terms & Conditions பட்டுச்சு பார்த்துட்டு I Agree அழுத்துறோம்//

அருமையான கேள்வி. பலமுறை பட்டாலும் எனக்கு படிச்சி பார்க்கனும்னு தோணியதே இல்லை. ஆனா க்ளிக் பண்ணும்போது பழசெல்லாம் மனசில் ஓடும்.

இந்த விசயத்தை கையெலெடுத்த ப்ரூனேவிற்கும், ‘கேபிள்’ சங்கருக்கும் எங்கள் ஆதரவு....! ஒரு 50 வோட்டு போடுங்கப்பா..!!
ஓட்டு போட்டாச்சிங்கோ

(கலர் டீவி எப்போ ...)
//இந்த விஷயம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாம போச்சே! தங்கள் தகவலுக்கு நன்றி! //

இந்த பதிவுக்கான முழு கிரெடிட் புருனோவுக்கே.. அவர் மட்டும் சொல்லவில்லை என்றால் எனக்கு தெரிந்திருக்காது.. இனிமேலாவது நாம் கண்டிப்பாய் படித்து பார்த்துவிட்டு அக்ரி செய்ய வேண்டும் ஷங்கர்.
//இந்த விசயத்தை கையெலெடுத்த ப்ரூனேவிற்கும், ‘கேபிள்’ சங்கருக்கும் எங்கள் ஆதரவு....! ஒரு 50 வோட்டு போடுங்கப்பா..!!//
நன்றி.. பாலா.. உங்களுக்கு தெரிந்து பப்ளிக் டொமைனில் போட்டிருப்பது போல் அமெரிக்காவில் உரிமையுள்ளதா என்று தெரிவிக்கவும்.
//நுட்பமான பிரச்னை, கண்டுபிடித்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்..//

நன்றி அறிவே தெய்வம்.. நிறைய பதிவர்கள் மிக அருமையாக பதிவெழுதுகிறார்கள். அவர்களின் எதிர்கால ஐடியா இதையெல்லாம் புத்தகமாய் வெளியிடும் ஆசை கூட இருக்கலாம் இல்லையா..
பாலா said…
//உங்களுக்கு தெரிந்து பப்ளிக் டொமைனில் போட்டிருப்பது போல் அமெரிக்காவில் உரிமையுள்ளதா என்று தெரிவிக்கவும்.//

நிச்சயம் பார்த்துட்டு சொல்லுறேன் சங்கர். 1-2 அட்வகேட்களை தெரியும். அவங்களையும் முடிஞ்சா கேட்டுப்பார்க்கிறேன்.
Jackiesekar said…
யோவ் நீங்களும் ஏதாவது நோண்டிக்குனுதான்யா இருக்கிங்க
ஏதோ பெரியவங்க சொல்றீங்க கேட்டுக்குறோம்....
//ஏதோ பெரியவங்க சொல்றீங்க கேட்டுக்குறோம்....//

அது...
//யோவ் நீங்களும் ஏதாவது நோண்டிக்குனுதான்யா இருக்கிங்க//

நல்லதை சொன்னாலும் திட்றாய்ங்கய்யா...
தகவலுக்கு நன்றி
ஹ்ம்ம் தமிழ்மணத்துல என் பதிவ சேர்த்துகறதே பெரிய விஷயம். இதுல இது வேறயா?
Anonymous said…
shocking...
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி

கேட்டுக்குறோம்.

புருனோவுக்கும், உங்களுக்கும் நன்றி
Hi Shankar/Burono,

You did a great job. Thanks a lot for bringing the awareness...
பாலா said…
சங்கர்.. ஒரு பதிவை போஸ்ட் பண்ணியிருக்கேன். அதை தமிழிஷ்-ல கனெக்ட் பண்ணுறதா வேணாமா? ஹா.. ஹா.. ஹா..?!!!

என்னோட எழுத்தெயெல்லாம் இன்னும் காப்பிரைட் ரேஞ்சிற்கு வரலை..! இன்னொன்னு... என் ஏரியாக்கு படிக்க வர்ற கொஞ்சூண்டு பேரும் அங்க இருந்துதான் வர்றாங்க. ஒரே கன்பீஜ்..!
butterfly Surya said…
இதென்ன கலாட்டா..??

கண்ண தொறக்கணும் சாமி..

கேபிளுக்கு ஜெய் ஹோ..
Admin said…
This comment has been removed by the author.
Suresh said…
acho sami intha kutthu veraya nanba ... hmmm avnaga copy rights type panna sombari pattukittu copy past pani irupanga vera sitela irunthu athan entha mathiri agi pochu
முக்கியமான பிரச்சினையை ஆராய்ந்த, தெளிவு படுத்திய ஷங்கருக்கும்,டாக்டர்.புருனோ சாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதைப் பாருங்க :

http://blog.tamilish.com/pakkam/81
அண்ணே இதுக்கெல்லாம் உங்கள மாதிரி,புருனோசார் மாதிரி சரக்குள்ள ஆளுங்க கவலைப்பட வேண்டிய விஷயம். என் பதிவையெல்லாம் யாரும் எடுத்து எங்கேயும் போட மாட்டேங்குறாங்களேன்னுதான் கவலை எனக்கு

:)
//இதைப் பாருங்க :

http://blog.tamilish.com/pakkam/81///

பார்த்தால்

//தமிழிஷில்(tamilish.com) இடுகை இடுவோர் இணைக்கப்படும் பக்கம் பற்றி விளக்கம் (Description) அளிக்கும் போது அந்த பக்கம் பற்றி உங்கள் சிறிய விமர்சனத்தை அளியுங்கள். அவை உங்கள் சொந்த கருத்தாக உங்கள் உரிமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்//

எனவே நான் ஏற்கனவே கூறியபடி
விளக்கம் என்ற இடத்தில் நான் என்ன எழுதுவேன் என்றால் (இதே கட்டுரையை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்) “கல்லூரியில் நடந்த சம்பவம். மேலும் விபரங்கள் அறிய” என்று மட்டும் எழுதிவிட்டு கட்டுரையின் முக்கிய பகுதியை வெட்டி ஒட்டுவதை தவிர்த்து விடுவேன்

இப்படியே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு முகப்பு பக்கத்தில் “மேலும் விபரங்கள் அறிய” என்று மட்டும் தான் இருக்கும்
Unknown said…
புருனோ சார், ஒரு சந்தேகம். பொதுவாகவே செய்தி ஓடையில் (RSS Feed) நமது பதிவுகளை இடும்போதே அது மற்றவர்களும் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது போல தானே? செய்தி ஓடையில் கொடுத்திருக்கும் படைப்பினை மற்றவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்ல முடியுமா?
நன்றி ராஜா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
//அண்ணே இதுக்கெல்லாம் உங்கள மாதிரி,புருனோசார் மாதிரி சரக்குள்ள ஆளுங்க கவலைப்பட வேண்டிய விஷயம். என் பதிவையெல்லாம் யாரும் எடுத்து எங்கேயும் போட மாட்டேங்குறாங்களேன்னுதான் கவலை எனக்கு
//

ஆனாலும் ரொம்பத்தான் வார்றீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தூயா,
முரளிகண்ணன்
ஜ்யோவரம்சுந்தர்,
ஷங்கர்,
ஷ்ண்முகப்பிரியன்
சுரேஷ்,
வண்ணத்து பூச்சியார்,
ஹாலிவுட் பாலா,
அக்னிபார்வை,
வித்யா,
ஜுர்கேன்க்ருகேர்
ஆகியோருக்கு.
//புருனோ சார், ஒரு சந்தேகம். பொதுவாகவே செய்தி ஓடையில் (RSS Feed) நமது பதிவுகளை இடும்போதே அது மற்றவர்களும் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது போல தானே?//

என்றால் அவர்கள் அந்த இடுகையை வாசித்துக்கொள்ளலாம். அல்லது அதில் ஒரு வரியை “நீங்கள் கூறியதாக மேற்கோள் காட்டலாம்”

ஆனால் அதை அச்சிட்டு புத்தகமாக வெளியிட முடியாது.

இது வலைத்தளம், செய்தியோடை எல்லாவற்றிற்கும் பொது தான்

செய்தியோடையில் வெளியிட்டாலேயே காப்புரிமை கிடையாது என்பது தவறான கருத்து

உதாரணமாக பா.ராகவனின் டாலர் தேசம் புத்தகத்தை நான் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்

1. அதை வாசிக்கலாம்
2. ஒரு இடுகையில் “டாலர் தேசம் புத்தகத்தில் 34ஆம் பக்கத்தில் பாரா என்ன சொல்கிறார் என்றால்” என்று ஒரு வரி மேற்கோள் காட்டலாம்

அதை விடுத்து டாலர் தேசம் - புருனோ என்று புத்தகம் அச்சிட முடியாது

//செய்தி ஓடையில் கொடுத்திருக்கும் படைப்பினை மற்றவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்ல முடியுமா?//

உறுதியாக சொல்லாம். செய்தியோடை என்பது தகவல் பரிமாற்றத்தில் ஒரு அங்கம்

செவிவழி
கல்வெட்டு
செப்பு தகடு
பனையோலை
பட்டுத்துணி
காகிதம்
வன்தகடு
செய்தி
சுவரொட்டி
இணையதளம்
அஞ்சல்
வலைப்பதிவு
குறுஞ்செய்தி

என்று எந்த விதத்தில் தகவல் பரிமாறப்பட்டாலும் காப்புரிமை ஒன்று தான்

செய்தியோடையில் வெளியிட்டால் அதை மற்றவர்கள் “காப்புரிமை இல்லாமல் பயன்படுத்தலாம்” என்பது தவறான தகவல்
biskothupayal said…
biskothupayal@gmail.com

பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.

உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Unknown said…
//என்றால் அவர்கள் அந்த இடுகையை வாசித்துக்கொள்ளலாம். அல்லது அதில் ஒரு வரியை “நீங்கள் கூறியதாக மேற்கோள் காட்டலாம்”//

நன்றி. நீங்கள் மேற்கூறியபடி செய்யாமல் இடுகையைப் பயன்படுத்தினால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க காப்புரிமை சட்டத்தில் இடம் இருக்கிறதா? காப்புரிமை என்பது நமது வலைத்தளத்தின் அடிப்பகுதியில் ஒரு வரியில் சொல்லிவிடுவதால் மட்டுமே காப்புரிமை செய்யப்பட்டதாகுமா அல்லது முறைப்படி பதியப்பட வேண்டுமா?
From Wikipedia : The 1886 Berne Convention first established recognition of copyrights among sovereign nations (இந்தியாவும் இதில் அடக்கம்), rather than merely bilaterally. Under the Berne Convention, copyrights for creative works do not have to be asserted or declared, as they are automatically in force at creation. In these countries, there is no requirement for an author to "register" or "apply for" a copyright, or to mark his or her works with a copyright symbol or other legend. As soon as a work is "fixed", that is, written or recorded on some physical medium, its author is automatically entitled to all copyrights in the work, and to any derivative works unless and until the author explicitly disclaims them, or until the copyright expires.

http://en.wikipedia.org/wiki/List_of_countries_party_to_the_Berne_Convention
// நமது வலைத்தளத்தின் அடிப்பகுதியில் ஒரு வரியில் சொல்லிவிடுவதால் மட்டுமே காப்புரிமை செய்யப்பட்டதாகுமா அல்லது முறைப்படி பதியப்பட வேண்டுமா?//

நீங்கள் காப்புரிமை செய்யப்பட்டது என்று சொல்லாவிட்டால் கூட அந்த காப்புரிமை உங்களுக்கு தான்

நீங்களாக காப்புரிமை இல்லை என்று கூறினால் தான் அதை மற்றவர்கள் பயன்படுத்த முடியும்

எதாவது சந்தேகம் உள்ளதா
Unknown said…
//எதாவது சந்தேகம் உள்ளதா//

முற்றிலும் தீர்ந்தது, நன்றி.
///ராஜா said...

//எதாவது சந்தேகம் உள்ளதா//

முற்றிலும் தீர்ந்தது, நன்றி.///

ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறேன்..

ஆனாலும் டாக்டர் ஸார் இது ரொம்ப லேட்டான நடவடிக்கை.. நாங்கதான் தூஙகுறதுக்காகவே அவதாரம் எடுத்திருக்கோம்.. நீங்களும் அப்படி இருக்கலாமா..?!
ரவி said…
அண்ணே சீரியசா சொல்லுங்க. உங்க மொக்கையை எல்லாம் காப்பி கூட அடிப்பாங்களா என்ன ?

* உ.தா >> இந்த பதிவு
//அண்ணே சீரியசா சொல்லுங்க. உங்க மொக்கையை எல்லாம் காப்பி கூட அடிப்பாங்களா என்ன ?

* உ.தா >> இந்த பதிவு//

அண்ணே இது நான் எழுதுற பதிவுகளுக்கு இல்லைண்ணே.. உங்களை மாதிரி நல்லா எழுதறவங்களுக்காக.. தான் இத சொல்றேன். ஏதோ கேள்விபட்டேன் உங்கள மாதிரியான பெரும் பதிவர்களுக்க்கு உதவ்ட்டுமேன்னுதான்.. ஹி.. ஹி.. நம்ம பதிவோட தகுதி பத்தி நமக்கு தெரியாதா..? நீங்க வேற் தனியா சொல்லணுமா என்ன..?
ரவி said…
test
ரவி said…
இதுல ஒரு காமெடி என்னன்னா, "காப்பியில்லாமல் உலகம் இல்லை". எல்லோரும் வலைப்பதிவு வெச்சு எழுதுறாங்கன்னு தானே நீங்க ஆரம்பிச்சீங்க ? அது காப்பிதானே ? ஏன் புண்ணாக்கு மண்டி வெக்குறது :))))). வாழ்க காப்பி.