ரொம்ப நாளாச்சு தமிழ்ல ஹாரர் படம் பார்த்து.. அதிலும் நம்ம பி.சி, மாதவன், பிக் பிக்சர்ஸ் என்று பெரிய தலைகள் எல்லாம் ஒன்ணு சேர்ந்திருக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுது.. அந்த எதிர்பார்பை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணியிருக்காங்னுதான் சொல்லணும்.
புதுசா தன் மனைவி, அண்ணன், அண்ணி, அவர்களின் இரண்டு குழந்தைகள், தங்கை, அம்மா என்று எட்டு பேர் கொண்ட கூட்டு குடும்பம் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13பி என்கிற ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள்.
ஆனால் மாதவன் மனதில் மட்டும் ஒரு சின்ன கிலேசம் ஏற்படுகிறது.. அதிலும் அந்த லிப்ட் மேட்டரிலிருந்து, அதன் பிறகு செல்போனில் அவரை எடுக்கும் போட்டோ.. என்று ஆரம்பித்து,, அவர்கள் வீட்டில் மட்டுமே வரும் ‘யாவரும் நலம்’ என்கிற சீரியலில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே அவருடைய வாழ்கையிலும் நடக்கிறது. முதலில் நம்ப மறுக்கும் அவர், பின்னால் நடக்கும் சம்பவங்கள் மூலம் விஷயம் உறுதியாக. தன் போலீஸ் நண்பன் மூலம் சால்வ் செய்ய முயல்கிறார். நிஜமாகவே பேய் இருக்கிறதா..? எதனால் இவருடய வீட்டை மட்டும் தாக்குகிறது,? பேய்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறாரா..? என்பது தான் க்ளைமாக்ஸ்.
படம் ஆரம்பித்ததிலிருந்து நம்மை ஒருமாதிரி தயார் படுத்திவிடுகிறார்கள். அந்த லிப்ட் காட்சி, குருடருடன் வரும் நாய் வீட்டினுள் நுழைய மறுக்கும், காட்சி, என்று கொஞ்சம், கொஞ்சமாய் நம்மை உருவேத்தி, படம் முடியும் போது நம்மை சீட்டு நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.
மாதவன் உணர்ந்து செய்திருக்கிறார்.. மொத்த படத்தையும், தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டு, அவருக்கு எப்படி பதை, பதைப்பு கூடுகிறதோ.. அது போலவே கூடவே நம்மையும் சேர்ந்து டென்ஷனாக்கி விடுகிறார். நீது சந்திரா, சரண்யா, என்று பாத்திரமறிந்து சரியாய் செய்திருக்கிறார்கள்.
படத்தின் உயிர்நாடி பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஹாரார் படங்களுக்கான வித்யாசமான கோணங்கள், லைட்டிங், படம் முழுவதும் விரவி வரும் மஞ்சள் டிண்ட் என்று மொத்த படத்தையும் பிரகாசிக்க செய்கிறார்.
குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொருவர். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.. இவரும் தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார்.
சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்.. இம்மாதிரியான படங்களுக்கு பாடலகள் ஒரு மிகப் பெரிய தடை.. நல்ல வேளை சில பாடல்களை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பிண்ணனி இசை பரவாயில்லை..
விக்ரம் கே.குமாரின் திரைக்கதை பெரிய அளவில் நம்மை கட்டி போடுகிறது.. படத்தின் கதையமைப்பு, தெலுங்கில் வந்த A Film By Aravind என்கிற படத்தை ஞாபக படுத்தினாலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். சில இடங்களில் வசனங்கள் வித்யாசமாகவும், இயல்பான நகைச்சுவையுடன், இருக்கிறது. குழந்தை கலைந்து சிசிச்சை பெறும் மனைவி மாதவனிடம்
“ ஐயம் சாரி.. மனோ..”
“எதுக்கு சாரி.. இதுக்கு தண்டனையா நூறு குழந்தை பெத்துக்க போறே”
சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன் போன்ற டெரர் படங்களை பார்த்து ஹாரர் ஆகியிருக்கும் நேரத்தில் நிஜ ஹாரர் படம.
யாவரும் நலம் – எல்லோருக்கும் நலமே..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அதெல்லாம் Horrible இது Horror..
அப்படியா>>>>.......... சொல்லவேயில்லை
ஒரு சீன் நல்லாருக்கு. ஆனால் அதைமீறி படத்தின் திரைக்கதை.. என்னை கவர்ந்துவிட்டது..
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
அட இது நல்லாருக்கே. நன்றி
அப்ப படம் நல்லா இருக்கு சொல்லுங்க
கண் தெரியாத தாத்தா-நாய்-லிஃப்ட் மேட்டர் ஏற்கனவே ஒரு ஆங்கிலப்படத்தில் வந்திருக்கு.
ஒரு காட்சியாவது சுடாம... படம் எடுக்க மாட்டேங்கறாங்களே...!!!! இருந்தாலும்.. நலமாக இருக்கட்டும்.
இது போன்ற விமர்சனத்தை தவிர்க்கலாமே.....
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் "இசை எனக்கு பிடிக்கவில்லை" என்று குறிப்பிடலாமே.....?
எல்லாருக்கும் எல்லாமும் தெரியாது..என்பதுதானே நிதர்சனம்.....
நீங்களும் படம் எடுக்கப் போறதா கேள்விப் பட்டேன்...உண்மையெனில் வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே...
இப்ப பண்ற தப்பு எல்லாம் அப்போ Weapon மாதிரி வந்து தாக்கும் பாசு....
இப்ப பண்ற தப்பு எல்லாம் அப்போ Weapon மாதிரி வந்து தாக்கும் பாசு....//
நிஜமாவேண்ணே.. நீங்களே படம் பாருங்க.. ஹிந்தியில கலக்குற ஆள் ஏன் தமிழ்ல எடுபடமாட்டேங்குறாரு..தெரியல..
கண் தெரியாத தாத்தா-நாய்-லிஃப்ட் மேட்டர் ஏற்கனவே ஒரு ஆங்கிலப்படத்தில் வந்திருக்கு.
//
நிறைய தமிழ் படத்திலேயே வந்திருச்சு பாலா.. ஆப்பம் யார் வீட்டிலேர்ந்து வந்தா என்ன..? நல்லாருக்கா.. இல்லையான்னுதான் பாக்கணும்னு எங்க அப்பத்தா சொல்லியிருக்கு..
Taklassu
நல்லவேளையாக ஐட்டம் நம்பர் பாடல் ஒன்றை கடைசி டைடில் கிரடிட் ஓடும் போது போட்டு விடுகிறார்கள். படத்தின் முக்கியமான கட்டங்களில் போட்டு தம்மடிக்க டைம் கொடுக்கவில்லை.
படத்தில் வரும் சில லாஜிக் சொதப்பல்கள்.
1. 1977-78 ல் சென்னை தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பைத் துவங்கவில்லை. ஆகவே தமிழில் செய்தி வாசிப்பது தவறு.
2. அந்த நாயுடன் வரும் குருடர் ஃபேலிமிலி ஆல்பம் மாதவனுக்குக் கிடைக்கப்பெற்றவுடன் காணாமல் போய்விடுகிறார். ஏன்? மேலும் அவர் டி.வி சீரியலில் வருவதேயில்லை. மாதவனின் மற்ற குடும்பத்தாருடன் அவர் interact செய்வதேயில்லை. பொதுவாக பார்வையற்றவர்கள் சக ஃப்ளாட் உரிமையாளர்களை நன்கு பரிச்சயம் செய்துவைத்திருப்பார்கள்.
13 என்ற எண்ணிற்கு இந்தியக்கலாச்சாரத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அமேரிக்க/மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் அது முக்கியம். ஆகவே, ஆவியை 13 ஆம் எண்ணுடன் சேர்ப்பது இங்கு பலருக்குப் புரியாது.
நிச்சயமாய் பார்கலாம் வண்ணத்துபூச்சியாரே..
என்ன அண்ணே...! முன்னால குமுதம் விகடன் தான் உங்கள பாத்து காப்பி அடிக்கிறதா போலம்புவீங்க...! இப்போ தினமலரும் ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே...!
தினமலரின் பஞ்ச் - யாவரும் நலம் : அனைவருக்கும் நலம்..!
http://cinema.dinamalar.com/View_Vimarsanam.aspx?id=70&FlimName=யாவரும்-நலம்
எப்படியோ.. நம்மளை கவனிக்கிறாங்க அதுவே பெரிசு..
இல்லை.. இது இரண்டு லேங்குவேஜூகளில் எடுக்கபட்ட படம் அனானி.
:) :)
தமிழில் ???